Home > ரைட்மந்த்ரா நிகழ்ச்சிகள் (Page 4)

இனிதே நடைபெற்ற நம் நவராத்திரி (ஆண்டு) விழா!

நம் தளம் சார்பாக வாரியார் சுவாமிகளின் வாரிசுகளான வள்ளி-லோச்சனா சகோதரிகளின் 'நவராத்திரி பாடல்கள்' சிறப்பு நிகழ்ச்சி அன்னை விசாலாட்சியின் அருளால் நேற்று மாலை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் மிக மிக சிறப்பாக நடந்தேறியது. வாசகர்கள் பலர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தார்கள். பொதுமக்களும் இறுதி வரை ஆவலுடன் அமர்ந்து கேட்டு,  பிரசாதம் பெற்றுச் சென்றனர். இந்நிகழ்ச்சியை நாம் சென்ற சனிக்கிழமை 27 ஆம் தேதியன்றே திட்டமிட்டிருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். தமிழகத்தில்

Read More

நம் தளம் சார்பாக வாரியார் வாரிசுகள் பங்குபெறும் நவராத்திரி பாடல் நிகழ்ச்சி – அனைவரும் வருக!

நம் தளம் சார்பாக நாளை 27 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு வாரியாரின் இசை வாரிசுகளாக விளங்கும் அவரது கொள்ளுப் பேத்திகள் வள்ளி, லோச்சனா அவர்களின் பாடல் நிகழ்ச்சி நடைபெறும். சென்ற மாதம் நமது தளத்தின் பேட்டிக்காக அவர்களை சந்தித்தபோது அவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்கிற நமது விருப்பத்தை அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தோம். அதற்கு அவர்கள், நவராத்திரியின்போது குழந்தைகளை ஏதேனும்

Read More

‘என் குழந்தைகளுக்கு இப்படியா?’ கதறி அழுதவரிடம் மகா பெரியவா சொன்னது என்ன?

நாம் இது வரை சந்தித்த சாதனையாளர்களுள் மிக மிக எளிமையான ஒருவர் மதுரா டிராவல்ஸ் திரு.வீ.கே.டி. பாலன் அவர்கள் என்றால் மிகையாகாது. நமது பாரதி விழாவிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்புற செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். மகா பெரியவா அவர்களை பற்றி பாலன் அவர்களின் கருத்து என்ன? அவரை பற்றி ஏதேனும் பேசியிருக்கிறாரா அல்லது எழுதியிருக்கிறாரா என்கிற சந்தேகம் நமக்கு இருந்துகொண்டு வந்தது. என்ன ஆச்சரியம்... அடுத்த சில நாட்களில் அதற்கு

Read More

ஆலய தரிசனம் & சாதனையாளர் சந்திப்பு – நம் திருவாரூர், கோவிந்தபுரம், திருக்கடவூர் பயணம்!

ரைட்மந்த்ரா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நெருங்கிய நண்பர் ஒருவரின் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள வியாழன் இரவு (பிப்ரவரி 6) பொள்ளாச்சி கிளம்புகிறோம். இது போன்று BREAK  நமக்கு கிடைப்பது மிகவும் அபூர்வம் என்பதால் இந்த பயணத்தை அப்படியே நமது தளத்திற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதை தொடர்ந்து இறையருளால் ஆலய தரிசனம், சாதனையாளர் சந்திப்பு உள்ளிட்ட நமது தளத்தின் முக்கிய அம்சங்களை இந்த பயணத்தில் ஏற்பாடு

Read More

ரைட்மந்த்ராவின் புத்தாண்டு / ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்!

நாம் ஏற்கனே கூறியபடி, வரும் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளோம். அன்று ஹனுமத் ஜெயந்தியும் வருவதால் கூடுதல் சிறப்பு. டிசம்பர் 31, செவ்வாய் கிழமை இரவு 8.00 மணிக்கு நங்கநல்லூர் நிலாச்சாரலில் பார்வைத்திறன் சவால் கொண்ட மாணவிகளுக்கு ஸ்பெஷல் டின்னர் ஸ்பான்சர் செய்து அவர்களுடன் நேரம் செலவழிப்பது. தவிர அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தரும்படி நம் வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதுவும் அவர்களிடம் அன்று ஒப்படைக்கப்படும். மார்கழி மாதம் என்பதால்

Read More

மகனின் கல்வி உதவி – தாய் அடைந்த சிவலோகப் பதவி!

பாவ புண்ணிய கணக்குகளை இறைவன் நிர்வகிக்கும் விதமே அலாதி தான். அவற்றை ஒரு வரையறைக்குள் கொண்டுவரவே முடியாது. இன்னது... இப்படித் தான்.... இவ்வளவு புண்ணியம் என்று எந்த சூழ்நிலையிலும் சொல்ல முடியாது. புண்ணியமானது செய்பவர் என்ன செய்கிறார் என்பதைவிட எந்த சூழ்நிலையில் செய்கிறார், யாருக்கு செய்கிறார் என்பதை பொறுத்தே கணக்கிடப்படும். மேலும் செய்யக்கூடிய நேரமும் மிக மிக முக்கியம். எனவே உதவிகளை தேவையறிந்து விரைந்து செய்யவேண்டும். காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின்

Read More

எல்லாப் புகழும் இறைவனுக்கே! துணை நின்ற பெருமை உங்களுக்கே!!

என்றைக்கு எமது எழுத்துக்கள் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கும் ஆன்மீக எழுச்சிக்கும் கடுகளவாவது பயன்படவேண்டும் என்று விரும்பி இந்த 'ரைட்மந்த்ரா.காம்' தளத்தை துவக்கினோமோ அன்றே அதன் பலனை இறைவன் கைகளில் கொடுத்தாகிவிட்டது. நமது கடமை உழைப்பது மட்டும் தான். இடையில் சில சில சஞ்சலங்கள் ஏற்பட்டபோதும் அவை யாவும் நன்மைக்கே என்று கருதி தான் இந்த தளத்தை நடத்தி வந்தோம். நல்லாரைக் காண்பதும் நன்றே நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதும்

Read More

மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

பாரதி விழாவில் எத்தனையோ நெகிழவைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் ஒன்றை தற்போது பார்ப்போம். கடந்த கந்தசஷ்டியின்போதும், அதற்கு அடுத்த நாள் நடைபெற்ற சுப்ரமணியசுவாமி திருக்கல்யாணத்தின்போதும் குன்றத்தூர் முருகனுக்கு பூக்களும் மாலையும் நாம் வாங்கித் தர விரும்பியபோது வடபழனியில் கடை வைத்திருக்கும் மணிகண்டன் என்பவர் நமக்கு பூக்களை விலை மலிவாக கொடுத்ததோடல்லாமல் நமது கைங்கரியத்தில் அவரும் பங்கேற்று மாலைகளை இலவசமாக தந்து நமக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அது குறித்து

Read More

நம்பினோர் கெடுவதில்லை! இது நான்மறை தீர்ப்பு!!

நம் தளத்தின் சார்பாக டிசம்பர் 8, ஞாயிறு மாலை நடைபெற்ற 2013 ஆம் ஆண்டு பாரதி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பாரதி விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான திரு.வீ.கே.டி. பாலன் அவர்களின் தாயார் எதிர்பாராத விதமாக சில நாட்களுக்கு முன்னர் இயற்கை எய்துவிட, அச்செய்தி நமக்கு பேரிடியாக அமைந்தது. போதாகுறைக்கு சென்னையை திடீரென்று புயல் மையம் கொண்டு பயமுறுத்த, சனிக்கிழமை முழுதும் மழை சென்னையை புரட்டி எடுத்தது. ஞாயிறும் மழை

Read More

அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

நண்பர்களே, டிசம்பர் 8, ஞாயிறு மாலை நடைபெறும் நம் தளத்தின் இரண்டாம் ஆண்டு பாரதி விழாவின் அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறோம். இதையே எங்கள் தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொண்டு அனைவரும் அவசியம் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நம் தளம் சார்பாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ஆண்டு விழாவும், டிசம்பர் மாதம் பாரதி விழாவும் நடத்தப்படும். பதிவுகள் வழியே பேசிக்கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் நேரில் பார்க்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு.

Read More

ஒவ்வொரு வீட்டிற்கும் விளக்கு!

நம் ஆண்டுவிழாவிற்கு சில வாரங்களுக்கு முன்னர், தர்மபுரியை அடுத்துள்ள பேபின்னமருதஹள்ளி கிராமத்தை சேர்ந்த உதவிக் கல்வி அதிகாரி திரு.தங்கவேல் அவர்களின் கிராமப்புற கல்வி சேவை மற்றும் மது ஒழிப்பை பாராட்டி அவருக்கு நம் தளம் சார்பாக நமது ஆண்டு விழாவில் ' மகாத்மா காந்தி ரைட்மந்த்ரா விருது' அளிக்க விரும்புகிறோம் என்று திரு.ஜெ.பி. அவர்களிடம் கூறியபோது மிக்க மகிழ்ச்சியடைந்தார். (திரு.தங்கவேல் அவர்கள் அப்படி என்ன சாதித்தார்?  சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும்

Read More

தேடி வந்த தொண்டன் லட்சத்தில் ஒருவன் இந்த மதுசூதனன்!

நமது ரைட் மந்த்ரா ஆண்டுவிழாவில் நெஞ்சை நெகிழவைக்கும் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றன. வந்தவர்களே இதற்கு சாட்சி. ஒவ்வொருமுறையும் இது போன்ற விழா நடத்தி முடிக்கும்போது தளம் அடுத்த கட்டத்திற்கு செல்வது போல, மனமும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. இது போன்ற விழாக்களை நடத்தி முடிக்கும்போது எத்தனை அனுபவம், எத்தனை பக்குவம்! ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தை மதியம் 3 மணிக்கு எங்கள் கைகளில் ஒப்படைத்த பிறகு, மேடை அமைப்பு,

Read More

இது உங்கள் வெற்றி! A quick update on Righmantra Awards 2013 & Annual Day!

பல தடைகளை தாண்டி, குருவருளாலும் திருவருளாலும் ரைட்மந்த்ரா ஆண்டுவிழா மிக மிக சிறப்பாக நடந்தேறியது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வந்திருந்து நம்மை ஆசீர்வதித்தனர். வாசகர்களும் பெருந்திரளாக வந்திருந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிய்த்துக்கொண்டு பறந்து போகும் பிரமுகர்கள் மத்தியில் நிகழ்ச்சி தாமதமாக முடிந்த பின்னரும் விருந்தினர்கள் அரை மணி நேரம் கூடுதலாக செலவிட்டு மகிழ்ந்ததே நிகழ்ச்சியின் வெற்றிக்கு சாட்சி. துணை நின்ற வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. நாம் செய்ய

Read More

உங்களை நம்பி, உங்களுக்காக ஒரு விழா!

சற்று திரும்பிப் பார்த்தால் ஒரே மலைப்பாகவும் வியப்பாகவும் இருக்கிறது. சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது இந்த தளத்தை துவக்கியபோது அடுத்த ஆண்டு இப்படி ஒரு விழா எடுத்து ஆண்டு நிறைவை கொண்டாடப்போகிறோம் என்று கனவிலும் கருதவில்லை. எனக்கிருந்த ஒரே நம்பிக்கை என் உழைப்பு மீதும் இறைவன் மீதும் தான். அவனுக்காக அவன் விருப்பப்படி பணி செய்ய களமிறங்கியிருக்கிறோம், அவன் நிச்சயம் நாம் போகும் பாதையை பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை

Read More