Home > மகா பெரியவா (Page 4)

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32)

சென்னை மறைமலை நகரை அடுத்து அமைந்துள்ள 'ஔஷதகிரி' எனப்படும் ஆப்பூர் நித்திய கல்யாணப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற நம் தளத்தின் உழவாரப்பணி குறித்த அப்டேட் இது. இந்த உழவாரப்பணியில் எண்ணற்ற சுவையான சமபவங்கள் நடைபெற்றதையடுத்து, இரண்டு பகுதிகளாக இந்த உழவாரப்பணி குறித்த அப்டேட்டை அளிக்கிறோம். இந்த வாரம் வெளியிடப்படும் முதல் பகுதி, உழவாரப்பணிக்கு செல்லும்போது மலையில், வழியில் அனுமனின் வழித்தோன்றல்களிடம் நாம் மாட்டிக்கொண்டு விழித்த கதை பற்றியது. இந்த கோவிலை பற்றி

Read More

அருட்பார்வை பெற்றுத் தந்த கண் பார்வை – Rightmantra Prayer Club

இது நடந்து 50 - 60 வருஷம் இருக்கும். சுவாமிநாதன்னு ஒருத்தர் சங்கர மடத்துல கைங்கரியம் பண்ணிட்டு இருந்தார். பெரியவா மேல அவருக்கு அதீத பக்தி. மரியாதை. அவருக்கு கல்யாணமாகி சில வருஷம் கழிச்சி ஒரு பெண் குழந்தை பிறந்தது. சுவாமிநாதனும் அவர் மனைவியும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஆனா அவங்க சந்தோஷம் நீடிக்கலை. குழந்தைக்கு கண்ல ஏதோ குறைபாடு. பார்வையே இல்லாம இருந்தது கண்டுபிடிச்சாங்க. "ஈஸ்வரா உன்னோட அனுகிரகத்தால குழந்தை பிறந்திருக்கேன்னு

Read More

வைத்தீஸ்வரன் பார்த்த ஏலக்காய் வைத்தியம் – குரு தரிசனம் (31)

முந்தைய 'குரு தரிசனம்' அத்தியாயம் ஒன்றில் காஞ்சிபுரத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய திரு.தாமஸ் அவர்களின் காணாமல் போன மகனை தனது அருளாசி மூலம் மகா பெரியவா மீட்டுக்கொடுத்ததை படித்திருப்பீர்கள். மேற்படி சம்பவத்திற்கு பிறகு பெரியவா மேல் தாமஸ் அவர்களுக்கு பக்தியே ஏற்பட்டுவிட்டது. (Check : "என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?") இது நடந்ததது 80 களின் துவக்கத்தில். ஒரு முறை தாமஸ் அவர்களின் மனைவி, வயிற்றில் ஏற்பட்ட திடீர் வழியால் அவஸ்தைப்பட்டு வந்தார்.

Read More

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

மகா பெரியவாவிடம் வேதம் படித்த பெருமையையுடைய திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகளை காஞ்சிபுரத்தில் அவர் இல்லத்தில் சந்தித்தபோது அவர் கூறிய பெரியவாவின் மகிமைகள் இது. சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ ? பெரியவா சின்ன காஞ்சிபுரத்தில் முகாம். பலர் வந்து ஆசிபெற்று சென்ற வண்ணமிருந்தனர். லால்குடி முன்னாள் ஜில்லா ஜட்ஜ் எல்.எஸ் பார்த்தசாரதி ஐயர் அவர்கள் தன் மனைவியுடன் அப்போது பெரியவாவை தரிசனம் செய்ய வந்திருந்தார். கடைசி நாள், பெரியவாவிடம் சொல்லிவிட்டு விடைபெற வந்திருந்தார். புறப்படுவதற்கு

Read More

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

மகா பெரியவரிடம் வேதம் படித்த பெருமையையுடைய அவரது மாணவர் திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகளை அவரது வீட்டில் சென்று சந்தித்து, கௌரவித்து நம் தளத்திற்காக பேட்டி எடுத்த நிகழ்வை சென்ற வாரம் விளக்கியிருந்தோம். திரு.சாஸ்திரிகள் அப்போது மகா பெரியவா புரிந்த அற்புதங்கள் குறித்து கூறிய நிகழ்வு ஒன்றை இதோ இங்கே தந்திருக்கிறோம். குருவின் தரிசனம், சிவபூஜைக்கு உதவி! 80 களின் தொடக்கத்தில் நடந்த சம்பவம் இது. காஞ்சியில் அப்போது திரு.தாமஸ் என்பவர் காவல்துறை கண்காணிப்பாளராக (DISTRICT

Read More

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

நம் தள வாசகர் நண்பர் நாராயணன் அவர்கள். இவர் தந்தை திரு.சாரங்கன், காஞ்சியில் ஒரு வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்போது காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கும், சங்கர மடத்துக்கும் அடிக்கடி செல்வதுண்டு. மடத்திற்கு சென்று மஹா பெரியவாவிடம் அடிக்கடி ஆசி பெற்று வருவார். அப்போது மஹா பெரியவாவின் மாணவர்களில் ஒருவருடன் நன்கு அறிமுகம் ஏற்பட்டது. நண்பர் நாராயணன் நம்மிடம் ஒரு நாள், "சுந்தர்ஜி, எனக்கு காஞ்சிபுரத்தில் மஹா பெரியவாவுடன் நெருங்கி

Read More

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

நீண்ட நாட்களாக இந்த 'குரு மகிமை' தொடருக்காக காஞ்சியில் நாம் சந்தித்து பேட்டி கண்ட - மகா பெரியவாவின் மாணவராக அவரிடம் வேதம் படிக்கும் பாக்கியம் பெற்ற ஒரு பெரியவரின் பேட்டியை -  அளிக்க வேண்டி முயற்சித்து வருகிறோம். அதோ இதோ என்று தட்டிப் போய்க்கொண்டே இருக்கிறது. சரி... இன்றைக்கு அதை அளித்தே தீரவேண்டும் என்று அமர்ந்து அந்த பதிவை தயாரித்துக் கொண்டிருந்தபோது இது கண்ணில் பட்டது. உங்களிடம் பகிராமல்

Read More

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

இந்த வார பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையில் பங்கேற்றது ஒருமறக்க முடியாத அனுபவம். இந்த வார பிரார்த்தனைக்கு போரூர் பாலமுருகன் கோவிலை சேர்ந்த திரு.துரைசாமி குருக்களை தேர்வு செய்திருந்தோம். ஜனவரி 18 அன்று பாலமுருகன் கோவிலில் நடைபெற்ற நமது உழவாரப்பணியின்போது, ஸ்வர்ணாகர்ஷன பைரவருக்கு விஷேட அர்ச்சனை செய்தோம் அல்லவா? அதை முன்னின்று நடத்தி தந்தது திரு.துரைசாமி குருக்கள் தான். வயதிலும், அனுபவத்திலும், தொண்டிலும் மூத்தவர். பல கும்பாபிஷேகங்களை தனது கரத்தினால் செய்தவர். துரைசாமி

Read More

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது நடந்தது 1976 ஆம் ஆண்டு. ஆற்காட்டில் உள்ள அப்துல் ஹக்கீம் கல்லூரியில் பி.காம் ஃபைனல் இயர் படித்து வந்தார் அந்த மாணவர். நன்றாக படிக்கக் கூடிய மாணவர் அவர் என்றாலும் கல்லூரி மாணவர்களுக்கே உரிய விசேஷ சொத்தான அரியர்ஸ் அவருக்கும் இருந்தது. கிட்டத்தட்ட நான்கு தாள்கள் அரியர்ஸ் இருந்தது. ஒரே நேரத்தில் இறுதியாண்டு தேர்வுக்கும் முந்தைய அரியர்ஸ் பேப்பர்களுக்கும் அந்த மாணவர் தயாராகிகொண்டிருந்தால் அனைத்தும் நல்லபடியாக முடித்து நாம்

Read More

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

மகா பெரியவா விஜயம் செய்த நாகங்குடி பற்றிய பதிவின் தொடர்ச்சி இது.  ஒரு வழியாக சீர்காழி – மயிலாடுதுறை சாலையில், நாகங்குடியை கண்டுபிடித்த பின்னர் ஊருக்குள் பயணம். பசுமை மாறாத விவசாய பூமி இந்த நாகங்குடி..! சிறிய கிராமம் தான் என்றாலும் தடுக்கி விழுந்தால் ஏதோ ஒரு கோவில், குளம் அந்த ஊரில் தென்பட்டது. இந்த பதிவு தொடர்புடைய முந்தைய பாகத்தை படித்துவிட்டு இந்த பதிவை படித்தால் நலம். (சாமி குத்தம்,

Read More

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

இன்று மகா பெரியவா ஆராதனைத் திருநாள். அதாவது அவர் மகாசமாதி அடைந்த நாள். அவரைப் பற்றி இந்த எளியவன் என்ன செல்வது? தேடி வந்து தடுத்தாட்கொண்ட தெய்வம் அவர். நினைத்ததை நடத்தி தரும் கருணாமூர்த்தி. அவர் கொடுப்பதிலும் கருணை இருக்கும். கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கும். பொறுமையுடன் இருந்தால் அந்த பிரவாகத்தை உணரலாம். எல்லாம் அறிந்தவர். ஆனால் ஏதும் அறியாதவர் போல இருப்பார். தர்மத்தை காக்க இராமனாக அவதரித்த ஸ்ரீமன்

Read More

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

இறைவனைப் பற்றிய அச்சமே இன்றி மனம்போன போக்கில் திரிந்து பாப காரியங்கள் செய்யும் பாபிகள் எல்லாம் சுகித்திருப்பதும், இறைவனையே சதா சர்வ காலமும் சிந்தித்து பக்தி செய்து ஒழுகி, நியாய தர்மப்படி வாழ்பவர்கள் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பதையும் அன்றாடம் காண்கிறோம். கலியின் கோலமே இதுவன்றி வேறொன்றுமில்லை. இவர்கள் உய்ய ஒரே வழி குருவை சரணாகதி அடைவது தான். அப்படி சரணாகதி அடைந்து சொத்து வழக்கு தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபட்ட

Read More

கார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்டும்? வழிகாட்டுகிறார் மகா பெரியவா!

வரும் டிசம்பர் 5, வெள்ளிக்கிழமை 'கார்த்திகை தீபம்'. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ‌ண்டாகு‌ம். எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது

Read More

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

நம் முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் இதர அலுவல்கள் காரணமாக கடந்த சில நாட்களாக பதிவெழுத நேரம் கிடைக்கவில்லை. எனவே அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துவரும் பெரியவாவின் 'நாகங்குடி அற்புதம்' தொடர்பான பதிவை முடிக்க முடியவில்லை. கூடுதல் நேரம் செலவிட்டு அதை தட்டச்சு வேண்டியிருக்கிறது. புகைப்படங்கள் வேறு எக்கச்சக்கமாக அளிக்கவேண்டியுள்ளது. எனவே பதிவை இன்றைக்கு நிறைவு செய்ய இயலவில்லை. அடுத்த வாரம் நிச்சயம் இடம்பெறும். (முடிந்தால் அடுத்த வியாழன் வரை காத்திருக்காமல்

Read More