Home > 2015 (Page 25)

நேதாஜிக்கு எடைக்கு எடை பொன் கொடுத்த தமிழர்கள் – INA வீரரின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்!

இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள். இதையொட்டி இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து மீட்க நேதாஜி துவக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான திரு.முத்தப்பா (வயது 86) அவர்களை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்து ஆசிபெற்றோம். சந்திப்புக்கு நம்முடன் நம் நண்பர் முருகன் என்பவரும் வந்திருந்தார். (சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டும் இவரை சந்தித்து நாம் ஆசிபெற்றது குறிப்பிடத்தக்கது.) இவர் சொந்த ஊர் பரமக்குடி.

Read More

இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவர் – ஸ்ரீபாலாஜி எனும் மகா பெரியவா பக்தர்!!

அண்மையில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களின் கண்காட்சி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வானகரம் எங்கள் பகுதியின் அருகில் தான் உள்ளது. அதிகபட்சம் மூன்று கி.மீ. தூரம் தான். கண்காட்சி நிறைவு பெறுவதற்கு முன்னர் எம் பெற்றோரை அழைத்துச் செல்ல தீர்மானித்து வீட்டருகே உள்ள சாலையில் ஆட்டோ தேடினோம். அப்போது அந்தப் பக்கம் காலியாக வந்த ஒரு ஆட்டோவை கூப்பிட்டதில், அதன் ஓட்டுனர் "வானகரமா? ரூ.250/-

Read More

மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!

சென்ற மாத மத்தியில் நாம் நவக்கிரக தலங்களுக்கு பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்தது நினைவிருக்கலாம். சூரியனின் தலமான சூரியனார் கோவில் சென்றுவிட்டு அங்கிருந்து திருவிடைமருதூர் செல்லும் வழியில் திருமங்கலக்குடி என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்றிருந்தோம். இது நவக்கிரக பரிகாரத் தலம் இல்லை என்றாலும் தவறவிடக்கூடாத ஒரு அருமையான தலம். போகும் வழியில் இருப்பதால் அப்படியே தரிசித்துவிட்டு போய்விடலாம் என்று சென்றிருந்தோம். நாம் தரிசித்த தலங்கள் அனைத்திலும் நம் நண்பர்களுக்காகவும் வாசக அன்பர்களுக்காகவும் அர்ச்சனையும்

Read More

தை அமாவாசை – என்னென்ன செய்தால் புண்ணியம்?

நாளை ஜனவரி 20 செவ்வாய்க்கிழமை - தை அமாவாசை. அமாவாசை என்றாலே இருட்டு, கருமை என்பதே அனைவரிடத்திலும் இருந்து வரும் கருத்தாக உள்ளது. ஆனால அது மிக மிக ஒரு நல்ல நாள். நிறைந்த நாள் என்கிற பெயர் அமாவாசைக்கு  உண்டு. அருள் நிறைந்த நாள் இது. எனவே தான் 'நிறைந்த நாள்' என்று கூறுகிறார்கள். இந்து தர்மப்படி அமாவாசை தினத்தில் நம் பித்ருக்கள் தங்களின் சந்ததியினரின் வேண்டுதல்களை வழிபாடுகளை ஏற்க

Read More

மனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்? MONDAY MORNING SPL 76

சென்ற வாரம் ஒரு நாள் ஒரு வாசகர் நம்மை தொடர்பு கொண்டு, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு "அங்கு நீண்ட நாள் பணியில் இருக்கிறேன். ஆபீஸே கதியாக கிடப்பேன். என்னைப் போல என் நிறுவனதிற்கு உழைப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படியிருக்கையில், என்னுடன் பணி சேர்ந்த ஒருவருக்கு ப்ரோமோஷனும் ஊதிய உயர்வும் கொடுத்துவிட்டார்கள். என் முதலாளி ஒரு தவறை இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையே சூனியமாகிவிட்டது போல

Read More

‘திருக்குறள்’ தந்த திருப்புமுனை – திருவள்ளுவர் தின ஸ்பெஷல் !

சுமார் பதினேழு ஆண்டுகள் இருக்கும். அப்போது நாம் படிப்பை முடித்து ஒரு வரைகலை நிபுணராக பணிக்கு சேர்ந்த புதிது. நம் அலுவலகத்திற்கு ரெகுலராக வந்து செல்லும் கஸ்டமர் ஒருவர் ஒரு நாள் அவரது பணியின் பொருட்டு அலுவலகம் வந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு ஜீவாதாரமாக விளங்கக்கூடிய மிகப் பெரிய ஆர்டர்  ஒன்று அவர் கையைவிட்டு போய்விட்டது என்று சர்வசாதாரணமாக கூறினார். "என்ன சார்.... இவ்வளவு பெரிய சோகம் நடந்திருக்கு... கொஞ்சம் கூட

Read More

பத்மபீடத்தில் தவழும் பாலமுருகனுக்கு உழவாரப்பணி செய்வோம் வாருங்கள்!

எழுவகைப் பிறப்புக்களுள் மனிதப் பிறவிக்கு மட்டுமே தனிச் சிறப்பு உண்டு. பாவங்களை அனுபவித்துக் அவற்றை கழிப்பது மட்டுமின்றி அவற்றை அடியோடு துடைத்தெறியும் வாய்ப்பு இந்த மனித ஜென்மத்திற்கு மட்டுமே உண்டு. ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்தை மற்றொரு ஜென்மத்தில் தீர்த்துக் கொள்ளட்டும் என்று கருதித்தான் ஆண்டவன் மறுபடியும் மறுபடியும் நமக்கு ஜென்மத்தை அளிக்கிறான். ஒருவகையில் இது தவறு செய்கிறவனை திரும்ப திரும்ப மன்னிப்பது போலத் தான். எனவே கிடைப்பதற்கரிய இந்த

Read More

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

எத்தனையோ இசை வாத்தியங்கள் உள்ளன. ஆனால் அவற்றுக்கு எல்லாம் 'மங்கள வாத்தியம்' என்ற பெருமை இல்லை. நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் மட்டும் தான் அந்தப் பெருமை உண்டு.  சிவாலயங்களில் தினமும் விடியற்காலை இறைவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையின்போது தவில் & நாதஸ்வரம் ஆகிய மங்கள வாத்தியங்கள் இசைக்கப்படுவதுண்டு. சுப நிகழ்சிகளிலும் கோவில்களிலும் தவறாமல் ஒலித்து வந்த நாதஸ்வர இசை காலப்போக்கில் குறைந்து, இன்றைக்கு அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்த கலைஞர்களை ஆதரிக்க

Read More

தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)

முருகப் பெருமானின் 'வேல்' மீது அருணகிரிநாதரால் பாடப்பெற்றது 'வேல்வகுப்பு'. அதில் உள்ள வரிகளை முன்னும் பின்னும் மாற்றி போட்டு 'வேல்மாறல்' என்னும் கவசத்தை உருவாக்கியது வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள். அதற்கென்றே பிரத்யேக யந்திரத்தை வடிவமைத்து அதன் புகழை பரப்புவதற்கென்றே வேல்மாறல் மன்றத்தை துவக்கியது ஸாதுராம் ஸ்வாமிகள். வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளின் நேரடி சீடர் இவர். ஸ்வாமிகள் கடந்த 2000 வது ஆண்டு முக்தியடைந்துவிட்டார். அவர் தம் வரலாற்றை தற்போது பார்ப்போம். கடலை

Read More

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

புராண காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை "பிறவா நிலையே எனக்கு வேண்டும் இறைவா!" என்று மிகப் பெரிய அருளாளர்கள் கூட  வேண்டி விரும்பிக் கேட்கும் ஒரு சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தர் இறைவனிடம் கேட்டது என்ன தெரியுமா? "கடைத்தேறுவதற்கு கடைசி மனிதன் இந்த உலகில் இருக்கும் வரை நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க ஆசைப்படுகிறேன்!" என்பது தான். எத்தனை பெரிய வார்த்தைகள்... எப்படிப்பட்ட ஒரு சிந்தனை... எத்தனை பெரிய லட்சியம். "சுவாமி விவேகானந்தர்

Read More

நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75

ராபர்ட் வின்சென்சோ என்பவர் அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு மிகப் பெரிய கோல்ப் வீரர். மிகப் பெரிய சாதனையாளர். பல பாராட்டுக்களையும் பதக்கங்களையும் குவித்தவர். ஒரு முறை ஒரு போட்டியில் வெற்றி பெற்று பரிசுத் தொகையையும் கோப்பையும் பெற்ற பிறகு வீட்டுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் காரில் ஏறப்போன நேரம் ஒரு பெண்மணி ஓடிவந்து அவர் ரசிகை என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தன் ஒரே குழந்தை மருத்துவமனையில் சாகக் கிடப்பதாகவும் ஆப்பரேஷன் மற்றும் டாக்டர்

Read More

நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

பகவானை நேரிடையாகக் காணத் துடிப்பவர்கள் வேத கோஷம் மூலம் காண முடியும். அது தான் நம் அனைவருக்கும் ஜீவநாடி. வேதமே அனைத்து தர்மத்திற்கும் அடிப்படை அனைத்து சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. தர்மமே அனைத்து உலகத்தையும் நிலைநிறுத்தக்  கூடியது என்றும் வேத சப்தத்தால் தான் இவ்வுலகத்தை இறைவன் படைத்தான் என்றும் இவ்வுலகின் ஸ்ருஷ்டிக்கும், ஸ்திதிக்கும், வளர்ச்சிக்கும் வேதங்களே முக்கிய காரணமாக உள்ளது என்றும் உபநிஷத்துக்கள் கூறுகின்றன. இறைவனது மூச்சுக் காற்றாகவே வேதங்கள் இருந்து வருகின்றன.

Read More

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

மகா பெரியவா விஜயம் செய்த நாகங்குடி பற்றிய பதிவின் தொடர்ச்சி இது.  ஒரு வழியாக சீர்காழி – மயிலாடுதுறை சாலையில், நாகங்குடியை கண்டுபிடித்த பின்னர் ஊருக்குள் பயணம். பசுமை மாறாத விவசாய பூமி இந்த நாகங்குடி..! சிறிய கிராமம் தான் என்றாலும் தடுக்கி விழுந்தால் ஏதோ ஒரு கோவில், குளம் அந்த ஊரில் தென்பட்டது. இந்த பதிவு தொடர்புடைய முந்தைய பாகத்தை படித்துவிட்டு இந்த பதிவை படித்தால் நலம். (சாமி குத்தம்,

Read More

சனீஸ்வர பிரசாதம் பரம பவித்ரம், சர்வ மங்களம்! – சனிப்பெயர்ச்சி தரிசன அனுபவம்!

கடந்த 16/12/2014 செவ்வாய் அன்று மார்கழி முதல் நாள். அன்று மற்றொரு விசேஷம். ஆம் அன்று தான் சனிப்பெயர்ச்சியும் கூட. அன்று இரண்டு மகத்தான விஷயங்கள் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அதைப் பற்றி தான் இந்த பதிவு. நண்பர் ஒருவர் சென்ற மாத துவக்கத்தில் கொஞ்சம் தொகை அனுப்பி அதில் குறிப்பிட்ட அளவு கோ-சம்ரோக்ஷனத்துக்கு வைத்துக்கொண்டு, மீதி தொகையை ரைட்மந்த்ரா செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நாமும் பணியை முடித்துவிட்டு தொடர்புகொள்வதாக

Read More