Home > 2014 > June (Page 2)

யார் முட்டாள் ? யார் புத்திசாலி ? MONDAY MORNING SPL 48

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார் "ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால்

Read More

“உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்” – தந்தையர் தின சிறப்பு பதிவு !

தன் மகனை சந்திக்க கிராமத்தில் இருந்து ஒரு தந்தை சென்னை வந்தார். முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த மகன், சென்னையில் ஒரு வெற்றிகரமான பிசினஸ் புள்ளி. மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தான் அவன். பிறந்ததிலிருந்தே தன் கிராமத்திலேயே தனது வாழ்க்கையை கழித்துவிட்ட தந்தைக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. புரியவும் புரியாது. "அதனால் என்ன? நான் என் மகனுடனும் அவன் குடும்பத்துடனும் சில நாட்கள் கழிக்கவே வந்திருக்கிறேன். வெளியே போய் யாருடன்

Read More

மகா அனுஷத்தன்று ஒரு மகானுபவம் !

வேதமந்திரங்களை அதுவும் சதுர்வேத மந்திரங்களை சமீபத்தில் நீங்கள் எப்போது கேட்டிருப்பீர்கள்?  அதை கேட்கக்கூடிய பாக்கியம் நமக்கு சமீபத்தில் கிடைத்தது. மகா பெரியவாவின் ஜெயந்தியை முன்னிட்டு ஜூன் 12 வியாழன் அன்று மயிலை பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் 'மகா பெரியவா மகிமை' சொற்பொழிவை கேட்க சென்றிருந்தோம். திரு.சுவாமிநாதன் அவர்களின் சொற்பொழிவுகள் சென்னையில் எப்போது எங்கே நடைபெற்றாலும் கூடுமானவரை கலந்துகொள்ள முயற்சிப்போம். அதுவும் மகா அனுஷம் வேறு. குருவின் பெருமையை

Read More

எல்லாம் அறிந்த கடவுளை தினமும் வணங்க வேண்டுமா? Rightmantra Prayer Club

கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் விளக்கிக் கொண்டிருந்த குரு, தினமும் கடவுளை வணங்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். "கடவுள்தான் எல்லாம் அறிந்தவராயிற்றே. அவரை தினமும் வணங்க வேண்டுமா? நமது பிரார்த்தனையை சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா? எப்போதாவது வணங்கினால் போதாதா?" என்று கேட்டான் அன்றைக்கு அவருடைய உபன்யாசத்தைக் கேட்க வந்த ஓர் இளைஞன். துறவி அவனுடைய கேள்விக்கு நேரடியாக பதில் தராமல், தன் முன்னே பளப்பள என மின்னும் பித்தளை சொம்பு ஒன்றை வைத்தார். அந்த

Read More

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

நேற்று முன்தினம் வைகாசி விசாகத்தன்று ஏதாவது ஒரு முருகன் கோவில் செல்ல விரும்பினோம். பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலில் வரும் ஞாயிறு நடைபெறும் உழவாரப்பணியின் போது, தீபம் ஏற்ற ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மேடை ஒன்று நம் தளம் சார்பாக வாங்கித் தருவதாக கூறியிருப்பது தெரிந்ததே. அதை ஆர்டர் செய்யவும் மாடல் பார்க்கவும் பாரிமுனை செல்லவேண்டியிருந்தது. பாரிமுனை சென்றால் கந்தகோட்டம் முருகனை தரிசித்துவிடலாம் என்பது நம் ப்ளான். நண்பர் குட்டி சந்திரனுக்கு ஃபோன்

Read More

நடிகரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்பு முனை! மகாபெரியவா ஜெயந்தி SPL 2

மனித வாழ்க்கையே விசித்திரமானது. எங்கே, எப்போது, யார் மூலம் திருப்பு முனை ஏற்படும் என்றெல்லாம் தெரியாது. நாம் மிக மிக முக்கியமான சந்திப்பாக நினைப்பது வெகு சாதாரணமாக பத்தோடு பதினொன்றாக போய்விடும். வெகு சாதாரணமாக நினைப்பது மிகப் பெரிய திருப்பு முனையை  ஏற்படுத்திவிடும். மஹா பெரியவா அவர்கள் மீதும் நாம் எப்போதுமே பெரு மதிப்பு வைத்திருந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நமக்கு அவரை பற்றிய அதிகம் தெரியாது. அவர் புரிந்த

Read More

பக்தையை காப்பாற்றிய மரிக்கொழுந்து – மகாபெரியவா ஜெயந்தி SPL 1

இன்று வைகாசி அனுஷம். மகா பெரியவாவின் அவதார ஜெயந்தி. பெரியவா, தான் வாழ்ந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய, நிகழ்த்தி வரும் அற்புதங்களுக்கு அளவே இல்லை.  தனது ஞான திருஷ்டியினால் எத்தனையோ முறை பக்தர்களை வரவிருக்கும் ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார். அத்தகைய அற்புதங்களுள் சுவாரஸ்யமான ஒன்றை பார்ப்போம். அபார கருணாஸிந்தும் ஞானதம் ஸாந்தரூபிணம்! ஸ்ரீ சந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்!! அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமா இருக்கும் எடுத்துக்கோ! பெரியவாளை

Read More

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

முருகனின் பெயரை மூன்று முறை கூறியதற்கு கிடைத்த தண்டனை! அயோத்யா காண்டம் - குகப்படலத்தில் ஓர் அற்புதமான செய்தியை - தத்துவத்தை முன்வைக்கிறார் கம்பர். குகனுடைய நட்பை-அன்பை ராமபிரான் பெறுவதும், ராமனுடைய தெய்வ தரிசனத்தை குகன் கண்டு கொள்வதும், ராமனுடைய திருவடிப் பெருமையை - சிறப்பைப் பேசுவதும்தான் இப்படலத்தின் சாரம் மற்றும் தனிச்சிறப்பு! ""கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்'' என்று வள்ளுவப் பெருந்தகை கூறியதுபோல, இடர்வந்த காலத்தில் உற்ற நண்பனை

Read More

இன்று முழுதும் முருகன் உங்கள் சிந்தையில் இருக்கட்டும் – ‘வைகாசி விசாகம்’ சிறப்பு பதிவு 1

ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய தெய்வத்தை கொண்டாடினால் சிறப்பான வாழ்க்கை அமையும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகை திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்ரம், மாசி மகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. விசாக நட்சத்திரம் மாதம் தோறும் வந்தாலும், வைகாசி மாதத்தில் வரும் விசாகம் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் முருகப்பெருமான் அவதரித்த நாளாகும். முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் விசாகம் என்பதால், கந்தக்

Read More

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

'அம்பிகை வளர்த்த அறங்கள்' என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன்பு 'மனித குலம் செய்யவேண்டிய 32 வகை அறங்கள்' குறித்து ஒரு பதிவை அளித்திருந்தோம். அவை மிகவு சுருக்கமாக இருந்தது. அது பற்றி விரிவான ஒரு பதிவை அளிக்குமாறு அப்பொழுதே ஒரு வாசகர் கேட்டிருந்தார். அது குறித்து உரிய ஆதாரங்களை திரட்டி நேரம் வரும்போது அளிப்பதாக அவருக்கு பதிலளித்திருந்தோம். சமீபத்தில் ஒரு நாள் பல்லாவரம் சென்றிருந்தபோது, 'ஸ்ரீ பூர்ண மஹா மேரு

Read More

கால்பந்தும், கண்ணன் கையில் உள்ள குழலும்! MONDAY MORNING SPL 47

ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். பணத்தினால் பெறக்கூடிய எல்லா சுக-சவுகரியங்களும் அவனுக்கு இருந்தும் மகிழ்ச்சியின்றி இருந்தான். நிம்மதியையும் சந்தோஷத்தையும் தேடி, ஒரு ஞானியிடம் வந்தான். அவரிடம் தன் குறையைச் சொன்னான். "ஏராளமான செல்வம் படைத்த நீங்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்; எங்கு வேண்டுமானாலும் போகலாம். அப்படியிருக்க என்ன பிரச்னை?" என்று ஞானி கேட்டார். "எனக்கு, உடனடியாக மகிழ்ச்சி தேவை. அதை வாங்க முடியுமா?" என்றான் செல்வந்தன். ஞானி அவனை, கால்பந்து விளையாட்டு பார்க்க

Read More

நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!

கண்களை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகும் திரும்பிய பக்கமெல்லாம கோவில்களும் நிறைந்த அற்புதமான ஊர் குன்றத்தூர். சென்னை புறநகரில் உள்ள மிகச் சிறந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் மிக்க நகரங்களுள் குன்றத்தூரும் ஒன்று. குன்றத்தூரில் முருகன் கோவில் மட்டுமல்ல, கந்தலீஸ்வரர் கோவில், திருஊரகப்பெருமாள் கோவில்,  சேக்கிழார் கட்டிய வட நாகேஸ்வரம் எனப்படும் திருநாகேஸ்வரம் என பல புராதன கோவில்கள் உண்டு. இது தவிர, கந்தலீஸ்வரர் ஆலயத்திற்கு எதிரே சேக்கிழார் அவதரித்த

Read More

“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே!” – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

1947-ம் ஆண்டு ஆகஸ்ட்  15ம் நாள். திருவண்ணாமலை ஆசிரமத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது. அன்று பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள், பகவானை தரிசனம் செய்தார்கள். ரமண மகரிஷி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே ஒரு குரங்கு எட்டிப் பார்த்தது.  அன்றுதான் பிறந்தது போல் இருந்த ஒரு குட்டியையும் அது வைத்திருந்தது. குட்டி, தாயை இறுகப் பற்றிக் கொண்டு, அச்சத்துடன் இருந்தது. தாய்க்குரங்கு,  உள்ளே வரவேண்டும் என்று முயற்சித்தது.

Read More

ஆயிரங்காலத்து பயிர் படும் பாடு!

பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றத்தின் இரட்டை குழல் துப்பாக்கிகளில் ஒருவர்! என்ஜீனியரிங் & எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். சிறந்த எழுத்தாளர். பேச்சாளர். பன்னாட்டு வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறார். இவரது 'சிறகை விறி, பற' என்னும் தொடர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தினகரன் - ஆன்மீக மலரில் வெளியானபோது, 'ஆன்மீகச் சிந்தனையின் உச்சமே, பகிர்ந்துண்ணல் தானே' என்ற தலைப்பில் அன்ன தானத்தின் சிறப்பை விளக்கும் ஒரு அத்தியாயத்தை

Read More