Home > 2013 > October (Page 2)

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி! – UNSUNG HEROES 3

நம் தளத்தில் நாம் அளித்து வரும் UNSUNG HEROES தொடரின் மூன்றாவது அத்தியாயம் இது. நம்மை சுற்றியுள்ள நிஜ ஹீரோக்களை அடையாளம் கண்டு அவர்களது சேவைகளை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதே இந்த தொடரின் நோக்கம். கிராமப்புற மறுமலர்ச்சி இன்றி ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கமுடியாது. என்றைக்கு நம் நாட்டில் கிராமங்கள் அனைத்தும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறுகிறதோ அன்றைக்கே நாம் 'முன்னேறிய நாடு' என்று

Read More

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஆண்டவன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்திலும் நிச்சயம் ஏதேனும் நீதி ஒளிந்திருக்கும். சற்று சிந்தித்து பார்த்தால் அது புரியும். ஆனால் ஒரு நிகழ்வு அதிக பட்ச நீதிகளை நமக்கு உணர்த்தியது என்றால் அது இந்த பதிவில் நீங்கள் படிக்கப்போகும் நிகழ்வாகத் தான் இருக்க முடியும். படித்தவுடன் என்னையுமறியாமல் அழுதேவிட்டேன். நீங்களும் கண் கலங்குவீர்கள் என்பது உறுதி. இந்த சம்பவத்தில் வருபவர்களை போன்று நமக்கும் ஆத்யந்த பக்தி இருக்குமானால் நிச்சயம் நாமும் ஒருநாள் அவனருள்

Read More

“ஒரு நாள் நிச்சயம் விடியும்; அது உன்னால் மட்டுமே முடியும்!” – கலாம் காட்டும் வழி! ABDUL KALAM B’DAY SPL

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரி திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் (October 15) இன்று. பதவியால் பெருமை பெற்றவர்களிடையே பதவிக்கே பெருமை சேர்த்தவர் திரு.கலாம். இந்த இனிய நாளில் அவர் இன்றும்

Read More

எஜமானராக இருப்பதும் அடிமையாக இருப்பதும் நம் கை(வா)யில் ! Monday Morning Spl 15

ஒரு பெரியவருக்கு அவரது பக்கத்து வீட்டில் இருந்த ஒரு இளைஞன் மேல் ஏதோ ஒரு அதிருப்தி. அது நாளடைவில் வெறுப்பாக மாறியது. வருவோர் போவோரிடமெல்லாம் அந்த இளைஞனை பற்றி குறை கூறி வந்தார். அந்த இளைஞன் என்னவோ தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் இருந்து வந்தான். ஆனாலும் பெரியவருக்கு அவன் மீது துவேஷம். இப்போதெல்லாம் வம்புக்கு இழுப்பவர்களைவிட தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக போய் கொண்டிருப்பவர்கள் மீதும்

Read More

திருவாசக சித்தர் தாமோதரன் ஐயாவின் ‘முற்றோதல்’ அடுத்து வெண்ணந்தூர் மற்றும் மதுரையில் ! முழு தகவல்கள் !!

மாணிக்கவாசகர் சொல்ல இறைவன் எழுதிய பெருமை வாய்ந்த திருவாசகத்தை காலை முதல் மாலை வரை அமர்ந்து முழுவதும் ஓதும் 'முற்றோதல்' நிகழ்ச்சியை பலர் அவ்வப்போது நடத்திவந்தாலும் திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் கூட்டத்தின் சிவத்திரு.தாமோதரன் ஐயா அவர்கள் நடத்தும் முற்றோதலுக்கு தனிச் சிறப்பு உண்டு. சிவபெருமான் வண்ணத்துப்பூச்சி வடிவில் வந்து அமர்ந்து கேட்ட முற்றோதலாயிற்றே அவருடையது! காலை ஊர்வலம் முடித்துவிட்டு வந்து அமர்ந்தால் மாலை முடியும் வரை எழுந்திருக்காமல் அவர் பாடும் விதம்

Read More

அம்பிகை வளர்த்த அறங்கள்! Rightmantra Prayer Club

மனிதகுலத்துக்கு தான் வலியுறுத்தும் அறச்செயல்களை, புண்ணிய காரியங்களை தானே முன்னின்று செய்து, நமக்கு சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றனர் நாம் வணங்கும் தெய்வங்கள். அவதாரங்களின் நோக்கம் தீமையை ஒழிப்பது மட்டுமில்லை. இதுகூடத்தான். அதாவது தான் சொல்வதை தானே முன்னின்று செய்து காட்டுவது. அம்பிகை தனது பல்வேறு அவதாரங்களில் முப்பத்திரண்டு வகை அறங்களை வளர்த்த செய்தியைக் கச்சியப்பரின் தமிழ்க் கந்த புராணம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘தர்ம வர்த்திநீ ’- தர்மத்தை வளர்ப்பவள். தேவி, அறங்களைப் பேணி

Read More

மாணவர்கள் மத்தியில் அறிவியில் ஆர்வத்தை தூண்டும் ஒரு அரும்பணி – UNSUNG HEROES 2

நமது UNSUNG HEROES தொடரின் இரண்டாவது அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தின் ஹீரோ செய்து வரும் சேவையை பற்றி கேள்விப்பட்டால், இப்படியெல்லாம் கூட சேவை செய்ய முடியுமா???? எத்தனை பெரிய விஷயம்... எவ்வளவு முக்கியமான விஷயம்... என்கிற வியப்பு தான் மேலிடுகிறது. ஏதோ நாமே முன்னின்று செய்வதை போன்று சந்தோஷம் ஏற்படுகிறது. நாம் ஏற்கனவே ஒரு பிரார்த்தனை பதிவில் கூறியபடி, நம் நாட்டில் பல பள்ளிகளில் அறிவியல் ஆய்வுக்கூடங்களே இல்லை. ஆய்வுக்கூடங்கள்

Read More

பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும் வயிர முடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பாப்பா! அக்டோபர் 7, திங்கட்கிழமை என் வாழ்வில் மறக்க முடியாத மற்றுமொரு நாளாகிவிட்டது. திங்கட்கிழமைக்கே உரிய போக்குவரத்து நெரிசலில் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து அலுவலகம் சென்றபோது அரை மணிநேரம் தாமதமாகிவிட்டது. எங்கள் அலுவலகம்

Read More

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

சென்ற மாதம் மத்தியில் உறவினர் ஒருவரின் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள கரூர் செல்லவேண்டியிருந்தது. அது பற்றி தளத்தில் நான் கூறியிருந்ததை பார்த்த சம்பத் குமார் என்கிற வாசக அன்பர், கரூரில் உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்திற்கு சென்று வரும்படி கேட்டுக்கொண்டார். நானும் நிச்சயம் செல்வதாக அவருக்கு உறுதி கூறினேன். தமிழகத்தில் மக்கள் வசிப்பதற்கு ஏற்ற அடிப்படை கட்டுமானங்கள் சிறப்பாக அமையபெற்றுள்ள நகரங்களில் கரூரும் ஒன்று என்றால் மிகையாகாது. போக்குவரத்து வசதி,

Read More

மனிதர்கள் தரும் வெற்றியை விட இறைவன் தரும் தோல்வி 1000 மடங்கு மகத்தானது ! MONDAY MORNING SPL 14

நினைவு தெரிந்த நாளுக்கு பிறகு - பல வருடங்கள் கழித்து - 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி திருப்பதி செல்லும் பாக்கியம் கிடைத்தது. குடும்பத்தோடு சென்றிருந்தேன். கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் க்யூ வரிசையில் நின்று எம்பெருமானை தரிசித்தேன். ஐந்து மணிநேரம் போனதே தெரியவில்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியம் தான். பலப் பல வருடங்களுக்கு பிறகு போவதால் (கிட்டத்தட்ட 30 வருடங்கள்) "இதோ பகவானை நெருங்கிவிட்டோம்.

Read More

தினையளவு செய்தாலும் பனையளவு திருப்பித் தருவான் – அவன் தான் இறைவன்! Rightmantra Prayer Club

ஆலயம் மற்றும் தெய்வ வழிபாடு தொடர்பான அன்றாட செயல்களுக்கு பலன் உண்டா? ஆனால் இருப்பது போல் தெரியவில்லையே என்கிற ஆதங்கம் பலருக்கு உண்டு. அதாவது "கோவிலுக்கு அடிக்கடி செல்கிறேன். விளக்கு ஏற்றுகிறேன். கற்பூரம் கொளுத்துகிறேன். பூக்கள் வாங்கித் தருகிறேன். ஏன்.. பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் கோவிலின் தேவைகளுக்கு என்னால் இயன்றவற்றை செய்கிறேன். பல கோவில்களுக்கு கும்பாபிஷேகத்திற்கு என்னால் இயன்ற நிதியுதவி  செய்திருக்கிறேன். இதெல்லாம் வீண் தானோ என்று சில சமயம்

Read More

மகத்துவம் மிக்க மகாளய அமாவாசை – நீங்கள் செய்ய வேண்டியது என்ன? மஹாளய SPL 5

இந்த ஆண்டு மகாளய அமாவாசையை முன்னிட்டு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பசுக்களுக்கு தீவனம் வாங்கி தந்த கைங்கரியத்தை பற்றி முந்தைய பதிவில் பார்த்திருப்பீர்கள். அங்குள்ள துர்க்கா என்கிற பசுவிற்கு வேலன் என்கிற கன்று பிறந்த நல்ல செய்தியையும் படித்திருப்பீர்கள். (பசு கன்று ஈன்ற செய்தியை கேட்பதும் பார்ப்பதும் பரம பவித்திரமான புண்ணியம் நல்கும் விஷயம். ஆகையால் தான் அதன் புகைப்படங்களை அளித்தோம்!) தவிர இன்று காலை அலுவலகம் செல்வதற்கு

Read More

நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!

புண்ணியமிக்க விஷேட நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு அன்னதானம் செய்வது மட்டுமின்றி கோவில் பசுக்களுக்கு தீவனம் வாங்கி தரும் கைங்கரியத்தையும் நம் தளம் தவறாமல் செய்து வருவது நீங்கள் அறிந்ததே. நம் தளத்தின் முக்கிய பணிகளில் ஒன்று இந்த கோ-சம்ரோக்ஷனம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பசுவுக்கு அகத்திக் கீரையும் வாழைப் பழங்களும் வாங்கி தர நாம் தவறவே கூடாது. கோவிலுக்கு சென்றால் கோவிலில் கோ-சாலை இருக்கிறதா என்று

Read More

உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

இன்று காந்தி ஜெயந்தி. தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள். காந்தியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே அவரை விமர்சிப்பது ஃபேஷனாகிவரும் காலகட்டம் இது. பரவாயில்லை. அப்படியாவது காந்தியின் பெயரை நான்கு உதடுகள் உச்சரிக்கட்டும். காந்தியின் வாழ்க்கையே ஒரு முன்மாதிரி தான். மற்றவர்கள் விஷயத்தில் அப்படி அல்ல. நம் விஷயத்திலும் அது உண்மையல்ல. நாம் சொல்வது ஒன்று. செய்வது ஒன்று. 'என் வாழ்க்கையே என் செய்தி' என்று காந்தி சொன்னார். அனேகமாகக் காந்தியின் சமகாலத்தவர்களான

Read More