Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > அலாவுதீனின் அற்புத விளக்கு செய்த வேலை!

அலாவுதீனின் அற்புத விளக்கு செய்த வேலை!

print
கென்யாவை சேர்ந்த செவ்லின் செவ் என்கிற இளம்பெண்ணுக்கு சீனாவுக்கு சுற்றுலா போகவேண்டும் என்று கொள்ளை ஆசை. ஆனால் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவளால் ஆசை தான் பட முடிந்தது. எனவே, தான் சீனாவுக்கு சுற்றுலா கிளம்புவது போலவும், அங்கே சுற்றிப் பார்ப்பது போலவும், சீனப் பெருஞ்சுவர் மீது நின்றுகொண்டிருப்பது போலவும் போட்டோஷாப் செய்து முகநூலில் வெளியிட்டு தனது ஆவலை தணித்துக்கொண்டார்.

Sevlyn

Sevlyn 2மிகவும் மோசமாக ‘வெட்டி ஒட்டியது’ போன்று இப்புகைப்படங்கள் போட்டோஷாப் செய்யப்பட்டிருந்ததால் அந்த காரணத்தினாலேயே பிரபலமாகி முகநூலில் பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

பதிலுக்கு பலர் செவ்லினின் புகைப்படங்களை தாங்களும் போட்டோஷாப் செய்து, “நீ இன்னும் போகவேண்டிய இடங்கள்” என்று குறிப்பிட்டு கிண்டலடித்தனர். அதில் தாஜ் மஹால், வெள்ளை மாளிகை, விண்வெளி இப்படி பல இடங்கள் அடக்கம்.

========================================================

Don’t miss these articles…

அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!

========================================================

செவ்லின் இவ்வாறு சீனாவுக்கு போக ஆசைப்பட்டு போகமுடியாமல் போட்டோஷாப் செய்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை முகநூலில் பார்த்த நைரோபியை சேர்ந்த (கென்யாவின் தலைநகர்) பிரபல தொழிலதிபர் சாம் கிச்சுரு என்பவர், செவ்லினின் சீன சுற்றுலா கனவை நனவாக்க முன்வந்திருக்கிறார்.

பயணத்தை ஸ்பான்சர் செய்துள்ள தொழிலதிபர் சாம் கிச்சுரு
பயணத்தை ஸ்பான்சர் செய்துள்ள தொழிலதிபர் சாம் கிச்சுரு

“உங்களுக்கு உண்மையிலேயே சீனா செல்ல ஆர்வம் இருக்கும் பட்சத்தில் நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறி, விமான டிக்கெட், சீனாவில் தங்குவதற்கான செலவு உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்வதாக செவ்லினிடம் கூறியிருக்கிறார்.

“இது செவ்லினுக்கு மட்டும் தான் பொருந்தும். மற்றவர்களும் இது போல போட்டோஷாப் செய்து நான் அந்த பயணத்தை ஸ்பான்சர் செய்வேன் என்று எதிர்பார்க்கவேண்டாம்” என்று கூறியிருக்கிறார் உஷாராக.

சாம் கிச்சுருவின் இந்த உதவிக்கும் பரந்த மனப்பான்மைக்கும் செவ்லின் நன்றி தெரிவித்திருக்கிறார்.

செவ்லினிடம் பாஸ்போர்ட் இல்லை. எனவே முதலில் தனது பிறப்பு சான்றிதழுக்கு அப்ளை செய்து அதை பெற்றவர், தற்போது பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றுக்கு அப்ளை செய்திருக்கிறார். சாம் கிச்சுருவையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து இது தொடர்பான முன்னேற்றங்களை எடுத்து கூறியிருக்கிறார்.

Sevlyn 3

இது குறித்து சாம் கிச்சுரு கூறியபோது, “என் நண்பர்களின் உதவியுடன் இதை செய்யவிருக்கிறேன். நானும் செவ்லின் போல ஒரு DREAMER தான். அதனால் எனக்கு DREAMER களை மிகவும் பிடிக்கும்! அவர் கனவு நனவாவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி!” என்றார்.

செவ்லின், கென்யாவை சேர்ந்த ஒரு ஏழை விவசாயியின் மகள். மிகவும் எளிமையானவர். லட்சியத் துடிப்பு மிக்க பாஸிட்டிவான அணுகுமுறை கொண்ட பெண்.  சீனாவுக்கு தான் செல்லமுடியாத நிலையில், தனது தோழி ஒருவரைக் கொண்டு தான் சீனாவில் இருப்பதை போல போட்டோஷாப் செய்து சில படங்கள் கேட்டதாகவும், இதன்மூலம் சீனா சென்ற திருப்தி தனக்கு கிடைக்கும் என்றும் அவர் நம்பியதாகவும் தொழிலதிபர் சாம் தெரிவித்தார்.

தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் செவ்லின் விரைவில் சீன பயணத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்திருக்கிறார்.

இவருக்கு எப்படி இது சாத்தியமாயிற்று என்று ஒரு கேள்வி கேட்டால் பலர் பலவிதமான பதிலை சொல்லக்கூடும்.

ஆனால் நாம் சொல்லப்போவது என்ன தெரியுமா?

ரொம்ப சிம்பிள். அவர் சீனா போகவேண்டும் என்று கனவு கண்டார். இந்த பிரபஞ்சம் யாரோ ஒருவர் மூலம் அதை நிறைவேற்றித் தந்திருக்கிறது. அவ்வளவே.

உங்கள் எண்ணங்களை லட்சியங்களை எல்லாம் இந்த பிரபஞ்சம் குறித்துக்கொண்டே வருகிறது. எனவே உங்கள் எண்ணங்கள் எப்போதும் உயர்வானதாகவே இருக்கட்டும்.

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று வள்ளுவர் சும்மா சொல்லவில்லை.

இந்த பிரபஞ்சமும் நீங்களும் அலாவுதீனும் அற்புத விளக்கும் போல. நீங்கள் தான் அலாவுதீன் என்றால் உங்கள் எண்ணங்களே அற்புத விளக்கு. இந்த பிரபஞ்சம் தான் அந்த பூதம். நீங்கள் எதை சொன்னாலும், “எசமான் உங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன்” என்று அதை நிறைவேற்ற பிரபஞ்சம் காத்திருக்கிறது. எனவே நல்ல லட்சியங்களை மனதில் கொண்டு நல்லவற்றையே நினைத்து நீங்கள் விரும்பும் ஒரு சூழலை உலகை கற்பனை செய்து வாருங்கள். அது நிச்சயம் நடக்கும்.

எண்ணங்களின் சக்தி குறித்து ஒரு போதும் குறைத்து மதிப்பிடவேண்டாம்.

இந்த பதிவை படிக்கும் இந்நேரம் உங்கள் கனவுகள் என்ன, உடனடி லட்சியங்கள் என்ன, நீண்ட கால லட்சியங்கள் என்ன என்று  ஒரு கணம் சிந்திக்கவேண்டுகிறோம். உங்கள் அற்பணிப்பு உணர்வை பொறுத்து அது நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும்.

Life is full of miracles. So have a positive attitude and don’t just live life, celebrate life!

========================================================

Help us to run this website… 

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. 

==========================================================

Also check :

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?

தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!

விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

உயர உயர பறக்க வேண்டுமா?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

==========================================================

[END]

5 thoughts on “அலாவுதீனின் அற்புத விளக்கு செய்த வேலை!

  1. Thank you sundhar sir for posting sunch a motivating article. tons of thanks to you.
    My dream also getting much more stronger when i read.

  2. சுந்தர்ஜி
    எனக்கு திருக்கைலாயம் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆவா.+ என் கனவு.

  3. இது முற்றிலும் உண்மை . நியாயமான ,உண்மையான கனவுகள் நிறைவேற்றபடுகின்றன காலம் மட்டுமே இதற்கு பதில் சொல்லும் ..

Leave a Reply to Nithya krishnamuthy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *