Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > ஏதாவது அதிசயம் நடந்தாதான் என் வாழ்க்கை மாறும்னு சொல்றவரா நீங்க? கண்டதும் கேட்டதும் (8)

ஏதாவது அதிசயம் நடந்தாதான் என் வாழ்க்கை மாறும்னு சொல்றவரா நீங்க? கண்டதும் கேட்டதும் (8)

print
நாம் படித்த, கேட்ட, உணர்ந்த விஷயங்களின் தொகுப்பு இது. ஒருவகையில் நொறுக்குத் தீனி. ஆனால் உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இதில் உள்ள நல்ல விஷயங்களை படிக்க மட்டுமல்ல… பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி!!

1) யார் முட்டாள் ?

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.

Diamondஅதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ”இந்த கல்லை எனக்கு கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள்” என்றான்.

உடனே பிச்சைக்காரன் “அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக்கொள்” என்றான். அதற்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ”ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன். இல்லை என்றால் வேண்டாம்” என்றான்.

பிச்சைக்காரன் “அப்படியானால் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலேயே இருந்துவிட்டு போகட்டும்!” என்றவாறே நடக்கலானான்.

வைர வியாபாரி, எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்

அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டான் .

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய்“ என்றான்.

அதை கேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “யார் முட்டாள்? எனக்கு அதன் மதிப்புத் தெரியாது. அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன். மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை. எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன். அதன் மதிப்புத் தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்…!“ என்றவாறே நடக்கலானான்.

ஓஷோ : “இப்படித்தான் நம்மில் பலர் மிகச் சிறிய மகிழ்வுகளுக்காக விலைமதிப்பற்ற நேரத்தை இழக்கிறோம்!”

Osho stories in tamilஓஷோ அடிச்சாரு பாருங்க சிச்ஸர். இந்த கதையோட நீதி ‘பேராசை பெருநஷ்டம்’ என்பதல்ல. மதிப்பறியாமல் நேரத்தை வீணடிப்பது தான் ஒருவர் உண்மையில் செய்யும் மிக மிகப் பெரிய நஷ்டம்.

இதை மண்டே மார்னிங் ஸ்பெஷலில் அளிக்க வேண்டியது. இருப்பினும் இந்த பகுதியில் ஒரு கெத்தான கதை இருக்கவேண்டும் என்று இங்கே தந்திருக்கிறோம். ஓஷோ… சொன்ன இந்த கதை திரும்ப திரும்ப படித்து மனதில் இருத்தவேண்டிய  ஒன்று. நம் அனைவரிடமும் இறைவன் ஏற்றத் தாழ்வில்லாமல் அளித்திருக்கும் ஒரே செல்வம், நேரம் தான். அதை ஒருவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதை வைத்து தான் அவர் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

உங்கள் லட்சியம் என்ன? உங்கள் லட்சியத்திற்கு உங்கள் நேரம் ஒத்துழைப்பது உண்டா? நீங்கள் உங்கள் நேரத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள்? உங்கள் கனவுகளுக்காக நீங்கள் உழைக்கிறீர்களா? அல்லது வேறு யாரோ தங்கள் கனவுக்கு உழைக்க உங்களை வேலைக்கு வைத்து சம்பளம் கொடுத்து வருகிறார்களா? சிந்திப்பீர்!.

2) கோத்திரம் என்றால் என்ன?

கோயிலில் அர்ச்சனைக்குக் கொடுக்கும்போது, நமது பெயர், நட்சத்திரம் ஆகியவற்றுடன் கோத்திரம் குறித்தும் கேட் கின்றனரே… கோத்திரம் என்றால் என்ன? நமது கோத்திரம் என்ன என்பதை எப்படி அறிவது? – அ. யாழினி பர்வதம், சென்னை-78

கோத்திரம் என்றால் ‘வம்சம்’ என்று பொருள். குறிப்பிட்ட வம்சத் துக்கு (பரம்பரைக்கு) மூல வேராக திகழும் – அதாவது அந்த வம்சத்தைத் தோற்றுவித்த வரின் பெயரையே, கோத்திரப் பெயராக கொள்வர். வாழையடி வாழையாக வளர்ந்து ஓங்கிய மனித இனத்துக்கு ஒரு முன்னவர் உண்டு. அவரை நாம் நினைக்க வேண்டாமா?

ரகுவம்சத்தில் உதித்தான் ராமர்; யதுவம்சத்தில் தோன்றினார் கிருஷ்ணர்; குருவம்சத்தில் தோன்றினார்கள் கௌரவர்கள்; விஸ்வாமித்திரருக்கு கௌசிக கோத்திரம். தங்களது கோத்திரம் என்ன என்பது தெரியாதவர்கள், வீட்டுப் பெரியவர்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

​தமிழ்செல்வி ஞானப்பிரகாசம் @ வள்ளுவன் பார்வை மின்மடல்

3) மகள் பூப்பெய்தியதை மருத்துவர்களுடன் விழா எடுத்த தாய்!

மென்பொருள் பொறியாளராக பணியாற்றுபவர், புவனேஸ்வரி வாசு. இவரது மகள், சில நாட்களுக்கு முன், பூப்பெய்தினார். வழக்கமாக மத, ஜாதி சடங்குகளின் படி, மகளின் பூப்பெய்தல் நிகழ்வை கொண்டாட இவர் விரும்பவில்லை.”எனக்கு இதுபோன்று நிகழ்ந்தபோது, என்னுள் பல கேள்விகள் எழுந்தன. உடல் மற்றும் மன ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்த என் சந்தேகங்களுக்கு, யாரும் பதில் சொல்லவில்லை; விழா மட்டும் நடந்தது.”இதுபோன்றதொரு, நிலை என் மகளுக்கு மட்டுமல்ல, பிற இளம் பெண்களுக்கும் ஏற்படக் கூடாது என்பது என் விருப்பம். அதனால், பூப்பெய்துவதால் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் குறித்து, இளம்பெண்களும், ஆண்களும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக, மருத்துவர்களைக் கொண்ட விழாவை, மகள் பூப்பெய்தல் விழாவாக நடத்துகிறேன்,” என்றும் விளக்கம் அளிக்கிறார்.

Nature

சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில், இன்று மாலை நடக்கும் இந்த விழாவில், மகப்பேறு மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், பொது மருத்துவர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

விழா குறித்து, மருத்துவர் நாகராஜ் குப்புராஜ் கூறியதாவது: “முந்நுாறுக்கும் மேற்பட்ட, இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை விழாவுக்கு அழைத்துள்ளோம். கேள்வி, பதில் வடிவத்தில், விழா நடக்கும். இளைஞர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு மருத்துவர்களிடம் பதில் பெற்றுக் கொள்ளலாம். இன்றைய உலகில், அனைத்துப் பொருட்களும், ரசாயன கலவையாக மாறிவருகிறது. அதனால், இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யும் பொருட்களை உட்கொள்ள அறிவுறுத்துகிறோம்.இதற்காக, தினை மற்றும் கேழ்வரகில் செய்த உணவை, விழாவில் பங்கேற்போருக்கு வழங்க உள்ளோம்.” இவ்வாறு, அவர் கூறினார்.

– தினமலர் (12/07/2015) செய்தி

தன் காதல் மனைவி மற்றும் குழந்தையுடன் நிக்
தன் காதல் மனைவி மற்றும் குழந்தையுடன் நிக்

4) ஏதாவது அதிசயம் நடந்தாதான் என் வாழ்க்கை மாறும்னு சொல்றவரா நீங்க?

‘ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்ந்து உன் துன்பமான வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் எனக் காத்திருக்கிறாயா… எந்த அதிசயமும் இதுவரை நிகழவில்லையா? எனில், நீயே அந்த அதிசயமாக மாறிவிடு!’

இன்று உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கைப் பேச்சாளராகக் கருதப்படும் நிக் வ்யூஜெஸிக், அடிக்கடி உச்சரிக்கும் உத்வேக வரிகள் இவை. Tetra-Amelia Syndrome என்ற குறைபாட்டுடன் பிறந்தவர் நிக். புரியும்படி சொல்வது என்றால், பிறக்கும்போதே இந்த குறைபாடுள்ளவர்களுக்கு இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இருக்காது.

‘வாழ்க்கையில் தனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் அமையவே அமையாது’ என்ற கவலைதான், சிறுவயதில் நிக் தற்கொலை முயற்சி செய்ய முக்கியக் காரணம். 2010-ம் ஆண்டு டெக்ஸாஸின் ஓர் இடத்தில் உரையாற்றியபோது அவளைப் பார்த்தார் நிக். கண்டதும் காதல். அன்று மேடையில் வார்த்தைகள் தடுமாறின. அந்தப் பெண்ணின் பெயர் கேனே. அவளை எப்படியாவது காதலித்தே தீர வேண்டும் எனத் தோன்றியது. மீண்டும் மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வலிய ஏற்படுத்தினார். நேசம் வளர்ந்தது. கொஞ்சம் டேட்டிங். ஒருநாள் கடலின் நடுவில் படகின் முகப்பில் ‘டைட்டானிக்’ ஜாக்கும் ரோஸுமாகத் தழுவி நின்றார்கள். அந்தப் பொழுதில் தன் காதலைச் சொல்லி, வாயால் மோதிரமும் அணிவித்தார் நிக். கேனே மகிழ்ச்சியில் திளைத்தார். ‘சில ஆண்களைப் பார்த்ததும் பாய் ஃப்ரெண்ட் ஆக்கிக்கொள்ளலாம் எனத் தோன்றும். ஆனால் நிக்கைச் சந்தித்த முதல் நொடியிலேயே இவரை கணவர் ஆக்கிக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது’ என்பது கேனேவின் லவ் மொழி. இருவரும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 2013-ம் ஆண்டு பரிபூரண ஆரோக்கியத்துடன் ஓர் ஆண் குழந்தையும் பெற்றுக்கொண்டார்கள். அதற்குப் பின் ஒரு பேட்டியில் நிருபர் ஒருவர் நிக்கிடம் கேட்ட கேள்வி, ‘நீங்கள் எப்படி குழந்தை பெற்றுக்கொண்டீர்கள்… கை, கால்கள் இல்லாமல் எப்படிச் சாத்தியமானது?’ நிக் பட்டெனக் கேட்ட பதில் கேள்வி, ‘குழந்தை பெற்றுக்கொள்ள கை, கால்கள் அவசியமா என்ன?’

முகில் @ ஆனந்த விகடன்

(நிக் பற்றிய முழு பதிவு தளத்தில் வரவிருக்கிறது. இது ஒரு முன்னோட்டமே!)

5) சூறாவளி கர்ஜனைக்கு பின், வாரியாரின் அமைதியான பேச்சு எடுபடுமா?

கடந்த 1985ல், “தினமலர்’ இதழின் இணைப்பாக, “சிறுவர் மலர்’ இதழ் வெளிவரத் துவங்கியது. மதுரையில் நடந்த துவக்க விழாவில், வாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு, “சிறுவர் மலர்’ இதழை வெளியிட்டு, சிறப்பு செய்தார். தலைமை வகித்த புலவர் கீரன், தனக்கே உரித்தான, “புயல்வேக’ பேச்சால் பார்வையாளர்களை திணறடித்தார்.

Krupanandha Variyar swamigal

இந்த சூறாவளி கர்ஜனைக்கு பின், வாரியாரின் அமைதியான பேச்சு எடுபடுமா என்று, பலர் ஆர்வமுடன் எதிர்நோக்கினர். ஆனால், வாரியார், கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், மெதுவான குரலில் பேச ஆரம்பித்தார். “இன்று, “தினமலர்’ நாளிதழில் குழந்தைகளுக்கான, “நூல்’ வெளியீட்டு விழா. “நூல்’ என்பது, இரண்டு அர்த்தங்களை உடையது. ஒன்று, நாம் படிக்கக்கூடிய புத்தகத்தை குறிக்கும்; இன்னொன்று, நூல் கயிறைக் குறிக்கும்…

“ஒரு தச்சுத் தொழிலாளி, கோணலாக உள்ள மரத்தை அறுக்க, ஒரு நூல் கயிற்றில் சுண்ணாம்பு தடவி, அந்த நூலை இரு முனையிலும் இழுத்துப் பிடித்து, ஒரு சுண்டு சுண்டுவார். அந்த அடையாளத்தை வைத்து மரத்தை அறுப்பார். கோணல் நீங்கி, நேராகி, நமக்கு வேண்டிய அளவில் கிடைக்கும்…

“அதேபோல், நல்ல நூல் (புத்தகம்) படித்தால், நம் அறியாமை மற்றும் மனக்கோணல் நீங்கும். அந்த நூலின் பயன், இந்த நூலின் பயன்…’ என்று அமைதியாக, ஆனால், குழந்தைகளுக்கும் புரியும்படியாக பேசிய போது, பார்வையாளர்கள் கரகோஷம், அரங்கத்தையே அதிர வைத்தது.

– வாரமலர் @ தினமலர்

6) ‘ஓம் நம சிவாய’, ‘சிவாய நம’ இரண்டில் எது சரி?

‘ஓம் நம சிவாய’ எனப்படுவது பஞ்சாட்ஷர மந்த்ரமாகும். இதை ஒருவர் ஜெபிப்பதற்கு நியம, நிஷ்டைகள் உண்டு. குளித்துவிட்டு, சுத்தபத்தமாக திருநீறு தரித்து இறைவனின் சன்னதியிலோ பூஜையறையிலோ வேத வேள்விகளிலோ`சொல்லவேண்டிய மந்திரம் ‘ஓம் நம சிவாய’ என்பது.

ஆனால் அதையே மாற்றித் தலைகீழாக சொல்லும் ‘சிவாய நம ஓம்’ அல்லது ‘சிவாய நம’ என்பதை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம். இதற்கு நியமநிஷ்டைகள், கடுமையான விதிமுறைகள் தேவையில்லை. சரீர சுத்தியும், ஆத்ம சுத்தியும் இருந்தால் போதும்.

‘ந’ காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் ‘நம சிவாய’ என்பது ‘தூல பஞ்சாட்சரம்.’  அதைப் போன்று ‘சி’காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் ‘சிவாய நம’ என்பது ‘சூட்சும பஞ்சாட்சரம்’ எனப்படும்.

இரண்டுக்கும் பலன் ஒன்று தான். ஆனால் சொல்லவேண்டிய சூழல் தான் மாறுபடும்.

7) கடவுள் கொடுத்த வேலை; தோற்றுப்போன பூதம்!

ஒரு நாள் கடவுளிடம் ஒரு பூதம் சென்று, இந்தியாவை ஆட்சி செய்ய எனக்கு வரம் தரவேண்டும் என்று கேட்டது.

கடவுள் அந்த பூதத்தை தட்டிக்கழித்து அனுப்ப நினைத்து, “நான் உனக்கு மூன்று வேலைகள் தருவேன். அதை செய்து முடித்துவிட்டால் இந்தியாவை ஆட்சி செய்யும் வரத்தை அளிப்பேன்” என்றார்.

முதல் வேலையாக “ஆகாயத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எண்ணி வா” என்று கடவுள் கூறினார்.

உடனே புறப்பட்டுச் சென்ற பூதம், திரும்பி வந்து நட்சத்திரங்களின் எண்ணிக்கையை கூறியது. அடுத்து “இந்தியக் கடற்கரையில் உள்ள மணலை எண்ணி வா” என்றார்.

 கடையில மேலே எழுதியிருக்குற எழுத்தை பாருங்க.... ஓஹோ... குடிச்சிட்டு வாழ்க வளமுடன்னு சொல்றாங்களோ?
கடையில மேலே எழுதியிருக்குற எழுத்தை பாருங்க…. ஓஹோ… குடிச்சிட்டு வாழ்க வளமுடன்னு சொல்றாங்களோ?

பூதமும் பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டு மணலை எண்ணிவிட்டு வந்து சொன்னது.

கடைசியாக கடவுள், “இந்தியாவில் உள்ள சாதிகளையும் அரசியல் கட்சிகளையும் எண்ணி வா” என்றார்.

இந்த முறை பூதத்தால் முடியவே முடியாது என்று தான் நினைத்தார். ஆனால் கடவுளுக்கே அதிர்ச்சி தரும் விதமாக பூதம் அதையும் எண்ணிக்கொண்டு வந்தது.

கடைசியாக கடவுள் சொன்னார், “போய் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை எண்ணிக்கொண்டு வா” என்று.

அப்போது போன பூதம் அதன் பிறகு வரவேயில்லையாம்.

பூதத்தால் கடைசி வரை சரியான எண்ணிக்கையை தெரிந்துகொள்ள முடியவில்லை. காரணம், நாள் தோறும் அரசு புதுப் புது டாஸ்மாக் கடைகளை திறந்துகொண்டிருப்பது  தான்.

8) கொஞ்சம் சிரிங்க பாஸ் 

Lady

நண்பேண்டா!

“மாளிகைல வாழ்ந்த என் பொண்ணு எப்படி உன் கூட குடிசையில வாழ்வா?”

“நான் வேணா மாளிகைல வந்து அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்குறேன் மாமா!”

– அ.ரியாஸ், சேலம் @ குமுதம்

ஹி…ஹி…!

“ஏங்க, ஜவுளிக்கடை பொம்மை கட்டியிருக்குற அந்த புடவை அழகாயிருக்குல்ல… அதை வாங்கித் தாங்களேன்!”

“அடி.. மக்கு. பொம்மை அழகா இருக்குறதாலே அதுவும் அழகா தெரியுதுடி”

– கே. லக்ஷ்மணன், திருநெல்வேலி @ குமுதம்

அட்மின் மாப்பிள்ளை!

“மாப்பிள்ளை என்ன பண்றார்?”

“அட்மினா இருக்கார்”

“வெரிகுட். எந்த கம்பெனில?”

“நாலஞ்சு வாட்ஸ்அப் க்ரூப்புக்கு அட்மினா இருக்கார்!”

– நாட்டாமை பதில்கள் @ தினகரன் வசந்தம்

===============================================================================

9) படித்ததில் பிடித்தது!

Will Way

Example===============================================================================

10) படித்ததில் பிடித்தது பாதித்தது! 

“வறுமை ஆயிரக்கணக்கானவர்களை வதைத்திருக்கிறது என்றால், செழுமை பல்லாயிரக்கணக்கானவர்களை வதைத்திருக்கிறது.”

# கோவையில் பிளஸ் 1 மாணவி போதையில் ரகளை

===============================================================================

வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

கடந்த இரண்டு மாதங்களாக VOLUNTARY SUBSCRIPTION எதிர்பார்த்த அளவு வரவில்லை என்பதை இங்கே வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். இதே நிலை நீடித்தால் தளத்தை தொடர்ந்து நடத்துவது என்பது சிரமமே. இந்த தளத்தால் உங்களுக்கு ஏதேனும் பயனோ நன்மையோ இருப்பதாக கருதினால் வாசக அன்பர்கள் அவர்களால் இயன்ற தொகையை மனமுவந்து விருப்ப சந்தாவாக அளித்து தளம் தொய்வின்றி தொடர உதவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தினசரி குறைந்தது 5000 பேர் நம் தளத்தை பார்த்து வருகிறார்கள். ஆனால விருப்ப சந்தா செலுத்துபவர்கள் 22 – 25 பேர் தான். நமக்கு விருப்ப சந்தாவானது அதிகரித்தால் அது அலுவலக வாடகை, கரெண்ட் பில், உள்ளிட்ட நமது செலவினங்களுக்கு உபயோகமாய் இருப்பது மட்டுமல்லாமல் அது மேலும் மேலும் நமது சேவையை செம்மைப்படுத்தி பதிவுகளின் தரத்தை, வகையை உயர்த்த, நமது பணியை விரிவுபடுத்த உறுதுணையாய் இருக்கும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம். பிரதி மாதமோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது LIFE TIME சந்தாவோ அவரவர் சௌகரியத்திற்கேற்ப உதவிக்கரம் நீட்டி சேவை சிறக்க உதவுங்கள். நன்றி!!

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also check :

‘திருவண்ணாமலை கிரிவல மகிமை!’ – கண்டதும் கேட்டதும் (7)

‘ஆண்மை’ என்பது எது ? – கண்டதும் கேட்டதும் (6)

சாதனை என்பது சுலபமா? – கண்டதும் கேட்டதும் (5)

வள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன் – கண்டதும் கேட்டதும் (4)

ஒரே நாளில் ஞானம் வருமா? – கண்டதும் கேட்டதும் (3)

‘நண்டுக்கு ஏற்பட்ட வருத்தம்!’ – கண்டதும் கேட்டதும் (2)

‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)

===============================================================================

[END]

4 thoughts on “ஏதாவது அதிசயம் நடந்தாதான் என் வாழ்க்கை மாறும்னு சொல்றவரா நீங்க? கண்டதும் கேட்டதும் (8)

  1. கண்டதும் கேட்டதும் அருமையான தொகுப்பு

    ஓசோவின் கதை சிந்திக்க வைக்கிறது. நாம் நம் கனவுக்காக உழைப்போம்

    கோத்திரம் என்றால் என்ன என்பதை அழகிய விளக்கத்துடன் சொன்ன நம் வாசகி தமில்செல்விக்கு எமது வாழ்த்துக்கள்

    பூப்பெய்திய நிகழ்வை மருத்துவர்களுடன் விழா எடுத்தது வரவேற்கத்தக்க ஒன்று

    நிக் பற்றிய தன்னம்பிக்கை மனிதரின் பதிவை நம் தளத்தில் எதிர்பார்க்கிறேன்

    வாரியார் சொற்பொழிவு நெத்தியடி

    ஓம் நம சிவாய சிவாய நம – விளக்கம் அருமை

    பூதத்திற்க்கே ஆப்பு வைக்கிறது டாஸ்மாக். எங்கே செல்கிறது தமிழகம்.

    படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது

    வாழ்க வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. கண்டதும் கேட்டதும் – இனிமையான தொகுப்பு என்று சொல்ல வேண்டும்.
    முத்தான ஓஷோ வின் கதை மூலம் நேரத்தின் அவசியத்தை கூறியுளீர்.நிக்கின் அதிசயம் பற்றி மேலும் நம் தள தொடர் நோக்கி விழி வைத்து காத்திருக்கிறோம். தோற்றுப்போன பூதம் – ஆமாம் அண்ணா ..ஆமாம் என்று தலையாட்ட தான் வேண்டும். சிவ நாம விளக்கம் மிகவும் அருமை..நம் தலைவரின் மந்திரம் சொல்லி..மகத்துவம் பெறுவோம்..வாரியாரின் புலமைக்கு சிறந்த சான்று..சிறுவர் மலர் நூல் வெளியீடு விழா..
    முத்தான கதையில் ஆரம்பித்து..முத்தான மூன்று நகைச்சுவையில் முடித்து ..முத்தாய்ப்பாய் அமைந்தது கண்டதும் கேட்டதும்..

    நன்றி அண்ணா..

  3. ஓஷோ அவர்களின் கதை நம் உழைப்பின் மதிப்பை உணர வைத்தது.

    கோத்திரம் என்றால் என்ன என்பதற்கான விளக்கம் சக்திவிகடனில் வெளியான ஆன்மீக கேள்விபதிலில் இடம் பெற்றது.

    நான் அறிந்தது என்னவென்றால், குருவின்மூலமாக ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சரத்தை அறிந்து அதைக் கூறிவந்தால், நாம் பக்குவமடையும் பொழுது, நம் மனதில் சிவாயநமஓம் எனும் மந்திரம் தானாக தோன்றும். கடந்த முறை கோவை சொர்ணா சோமசுந்தரம் அம்மா அவர்களைத் தரிசிக்கச் சென்னபோது கூட அவரது மாணவரிடம் [என் கணவர்] அம்மா, “ஓம் நமசிவாய எனச் சொல்கிறாயா, சிவாய நம ஓம் எனச் சொல்கிறாயா?” எனக் கேட்டார்கள்.

    நிக் அவர்களின் வாழ்க்கை நிச்சயம் நமக்கு உத்வேகத்தைத் தரும்.

    குழந்தைகளை எப்படி வளக்கவேண்டும் என்பதைக் கூறிய படம் அருமை.

    பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.

Leave a Reply to Kavitha Nagarajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *