ராட்சத கடல் நண்டு ஒன்று கரையில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அதன் அழகிய கால் தடத்தை அது ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தது. அதன் மகிழ்ச்சியை குலைக்கும் விதம், திடீரென தோன்றிய ஒரு பெரிய அலை, நண்டின் அந்த கால் தடத்தை அழித்துவிட்டது.
நண்டிற்கு, தாங்க முடியாத வருத்தம்.
அலையிடம் கேட்டது: “நான் உன்னை என் சிறந்த நண்பன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். நீ என்னடாவென்றால், இப்படி செய்துவிட்டாயே…?”
“ஒரு மீனவன், உன் கால்தடத்தை பின்பற்றி உன்னை பிடிக்க பின்னால் வந்துகொண்டிருக்கிறான். அவனிடமிருந்து உன்னைக் காக்கவே இவ்வாறு செய்தேன்!”
சில உறவுகள் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அன்பையும் அக்கறையையும் நம் மீது கொண்டிருக்கும். அதை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஒரு போதும் அவர்கள் நோக்கத்தை சந்தேகிக்காதீர்கள்.
Relationships mean caring beyond imagination. Value them and don’t ever doubt the intentions!
2) சித்தன் போக்கு சிவன் போக்கு!
திருவண்ணாமலையில் ஒரு இறுதி ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தில், பிரேதத்தின் பின்னால் சென்றவர்களிடையே மக்களோடு மக்களாக சேஷாத்ரி சுவாமிகளும் நடந்து சென்றுகொண்டிருந்தார். ஊர்வலம், ஒரு திருமண வீட்டை கடந்து சென்றது. வாசலில் வாழைமரம் தோரணம் இதெல்லாம் கட்டியிருந்தார்கள். கோலம் போட்டு செம்மண் பூசியிருந்தார்கள்.
உள்ளே திருமணத்திற்கான முக்கிய சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. இறுதி ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்த சேஷாத்ரி ஸ்வாமிகள், என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ, திடீரென்று திருமண வீட்டிற்குள் நுழைந்தார். கொல்லைப்புறம் ஒரு பெரிய கொட்டகை போட்டு, அடுப்பு மூட்டி, பெரிய பெரிய அண்டாக்களில் திருமணத்திற்காக சமையல் தயாராகிக் கொண்டிருந்தது.
சுவாமிகளை திருவண்ணாமலையில் எல்லாருக்கும் தெரியும் என்றாலும், திடீரென்று, அவர் இங்கே சமையற்கட்டுக்கு வந்து என்ன செய்கிறார் என்று புரியாமல் திருமண வீட்டார் தவித்தனர்.
நேரே அங்கே சாம்பார் கொதித்துக்கொண்டிருந்த அண்டாவை ஸ்வாமிகள் ஓங்கி உதைக்க, ஆறென பெருகி கொதிக்கும் சாம்பார் தரையில் ஓடியது. அப்போது, அதிலிருந்த ஒரு விஷப் பாம்பை ஸ்வாமிகள் ஒரு குச்சியில் எடுத்துக் காட்டிவிட்டு, இதற்காகவே சாம்பாரை உதைத்தேன் என்றார் எதுவும் பேசாமலேயே. அனைவரும் அவர் கால்களில் வீழ்ந்தார்கள்!
ஒருவேளை திருமண வீட்டிற்கு வந்தவர்கள் அந்த சாம்பாரை சாப்பிட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?
சித்தன் போக்கு சிவன் போக்கு என்றது இதனால் தானோ?
3) வாழைப்பழத்தின் பெருமை!
பூஜை பொருட்களில் ‘பழம்’ என்ற பெருமை வாழைப் பழத்துக்கு மட்டுமே உண்டு. ஆம்! பழம்பெருமை உடையது அல்லவா? முக்கனி கூட்டணியிலும் வாழைக்குப் பங்குண்டு. அசோனம், அரம்பை, கதலி, காவாகிலி, சமி, சகுந்தம், சோகிலி, ததபத்ரி, தந்துவிக்ரியை, மடல், மோசகம் என்ற பல பெயர்கள் இதற்கு உண்டு. வாழைப் பழங்களில் பூவன், மொந்தன், பேயன், கர்ப்பூரவல்லி (தேன்கதலி), ரஸ்தாளி, மலைப்பழம், செவ்வாழை, நேந்திரம், நற்கொம்பு, பச்சை, பூவில்லா வாழை, பச்சைநாடன், ஏலக்கி என்று எத்தனையோ ரகங்கள் உண்டு. ஆயினும், பூவன் வாழைப்பழத்தையே பெரும்பாலோர் பூஜைக்கு ஏற்றதாகக் கொள்வர். பூவன் என்பது (தாமரை) பூவில் அமர்ந்த பிரம்மனுக்கு உரியது. முகுந்தன் (திருமால்) திரிந்து மொந்தன் ஆயிற்று. சிவபெருமானுக்கு பேயன் என்றொரு பெயர். எனவே, பேயன் அவருக்கு உரியது. இது மிக உயர்ந்த வகை. தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிட, மலச்சிக்கல் இருக்காது. மலைப்பழம் கொண்டு பஞ்சாமிர்தம் செய்தால், பல மாதங்கள் ஆனாலும் கெடாது.
– திரு.வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் @ சக்தி விகடன்
4) ஒரு ஆலயத்தின் நேர்த்திக்கடனை இன்னொரு ஆலயத்தில் நிறைவேற்றுவது சரியா?
இப்போதெல்லாம் ஒரு ஆலயத்தில் வேண்டிக்கொண்டு மற்றொரு ஆலயத்தில் நேர்த்திக்கடனை செலுத்தும் பாங்கு அதிகரித்து வருகிறது. அது குறித்து ஒரு தெளிவான விளக்கம்.
கேள்வி : ஒரு ஆலயத்தின் நேர்த்திக்கடனை இன்னொரு ஆலயத்தில் நிறைவேற்றுவது சரியா?
பதில் : “தவறு. எந்த கோவிலில் நேர்ந்துகொண்டோமோ அந்தக் கோவிலில் தான் அதற்க்கான நேர்த்திக்கடனை செலுத்தவேண்டும். திருப்பதிக்கு நேர்ந்துகொண்டு, திருநெல்வேலியில் செலுத்துவதற்கு, எதற்காக நாம் திருப்பதிக்கு வருவதாக நேர்ந்துகொள்ளவேண்டும்? துன்பம் சூழும் நேரத்தில் மனதிற்கு பட்டதை நேர்ந்துகொண்டு விடுகிறோம். வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதை செலுத்துவதற்கு மட்டும் ஆயிரத்தெட்டு விதிவிலக்குகளை எதிர்பார்க்கிறோம். பிரார்த்தனை செய்யும்போதே நம்மால் எதைச் செய்ய இயலுமோ அதை தான் நேர்ந்துகொள்ளவேண்டும். வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்ந்த்கொன்டதை சரிவர செய்துவிடவேண்டும். ஒரு ஆலய நேர்த்தியை மற்றொரு ஆலயத்தில் நிறைவேற்றுவது என்பது தவறு!”
– ‘ஆன்மிகம்’ மாத இதழில் திருக்கோவிலூர் கே.பி.ஹரிபிரசாத் சர்மா
5) அவசியம் போடுங்கள்… `அட்டெண்டன்ஸ்’!
பக்கத்து வீட்டுப் பெண்மணி, அடிக்கடி என் வீட்டுக்குப் பேச வருவார். வந்தவுடன் முதலில் வயதான என் மாமியார் உள்ள அறைக்கு சென்று, அவருடைய உடல்நலம் பற்றி விசாரித்து விட்டுத்தான் என்னிடம் பேச்சு கொடுப்பார். “என்ன… என் மாமியாரைக் காக்கா பிடிக்கறயா?” என்று நான் தமாஷாக கேட்டேன். அதற்கு அந்தப் பெண்மணி, “வயதானவர்கள் பலருக்கும் தாங்கள் அலட்சியப்படுத்தப்படுவதாக ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். முதலில் அவர்களை விசாரித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று விளக்கம் அளித்தார்.
இனி, யார் வீட்டுக்குப் போனாலும் முதலில் வீட்டு பெரியவர்களிடம் அட்டெண்டன்ஸ் போட்டுவிடுவோம்… சரிதானே?!
– பார்வதி, பெங்களூரு @ அவள் விகடன்
(இது நூற்றுக்கு நூறு உண்மை. எம் பாட்டி இருந்தபோது, திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பத்திரிக்கை வைக்க வரும் உறவினர்கள், எங்கள் பாட்டியிடம் ஆறுதலுக்கு கூட நான்கு வார்த்தைகள் பேசாமலே செல்வார்கள். பாட்டி இது குறித்து பலமுறை தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.)
6) தம்பி நான் அப்படி சொல்லலே!
“அண்ணே… மாப்பிள்ளைப் பையன் எனக்கு தூரத்து சொந்தம். பார்க்க அழகா இருப்பான்னு சொன்னீங்களே… பையன் படு சுமாரா இருக்கானே?”
“தம்பி நான் அப்படி சொல்லலே. பையன் எனக்கு சொந்தம். தூரத்துல பார்க்குறதுக்கு அழகா இருப்பான்னு சொன்னேன்!”
-மீனா முருகேசன் @ குமுதம்
7) கலக்டர்கள்ல மட்டும் நிறைய பேர் ஏன் ஆண்களாகவே இருக்காங்க?
“முப்பது வருஷமா பொண்ணுங்க தானே முதல் மார்க்கு. அப்புறம் ஏன் கலக்டர்கள்ல மட்டும் நிறைய பேர் ஆண்களாகவே இருக்காங்க?”
“மனப்பாடம் பண்ணி கலக்டர் ஆக முடியாதுல்ல!”
– twitter.com/paviparu31
(இந்த கேள்வி நமக்கும் ரொம்ப நாளாவே இருந்துச்சுங்க… இப்போ விடை கிடைச்சிடுச்சு! ஹி…ஹி…!!)
8) படித்ததில் பிடித்தது
“காதல் ஜாதி பார்க்காது. ஆனால் அதைத் தவிர மீதி எல்லாத்தையும் பார்க்கும்!” – ஆல்தோட்டபூபதி
=====================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா??
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=====================================================================
Also check :
‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)
=====================================================================
[END]
ஒரு தத்துவம், ஒரு ஆன்மிகம், ஒரு பொது தகவல், ஒரு நேர்த்திகடன் விளக்கம், மற்றும் இன்று ஒரு தகவல் மேலும் இரு நகைச்சுவை என பதிவு களை கட்டியுள்ளது.
அருமையான தகவல் பரிமாற்றம். படித்ததில் பிடித்தது நன்றாக உள்ளது.
வணக்கம் சுந்தர். மீண்டும் ஒரு கண்டதும் கேட்டதும் பதிவு.மிக நன்றாக இருந்தது.வாழையில் இப்போது அத்தனைவகை கடைகளில் பார்க்கமுடிவது இல்லை .பச்சை பழங்கள் தான் அதிகமாக உள்ளது.சில உறவுகளை சந்தேகபடகூடாது என்றால் அவர்களை நம் நன்றாக தெரிந்து வைத்து இருக்கவேண்டும்,குணங்களை புரிந்து இருக்கவேண்டும்.நன்றி
அசத்தலான 8 தகவல்கள்.
இந்த பதிவிலிருந்து அடுத்தவர்கள் நம் மீது காட்டும் மதிப்பிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்,
அதே போல் நான், தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்றால், வயதானவர்கள் இருந்தால் அவர்களின் நலம் விசாரித்து அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்காமல் வர மாட்டேன். இந்த பழக்கம் என் அம்மாவிடம்நான் கற்றுக் கொண்ட நல்ல பழக்கம்.
நன்றி
உமா வெங்கட்
கலக்கலான கண்டதும் கேட்டதும் பதிவு.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு.
வயதானவர்களை புறக்கணித்தல் மிகபெரும் தவறு…இப்போது தான் படித்தேன்.
“உங்கள் வீட்டில் வயதான ஒருவர் இருந்தால்,ஒரு விலை மதிப்பிலா வைரம் இருப்பதற்கு சமம் ”
இந்த வார ஆரம்பமே அதிரடி பதிவோடு ஆரம்பித்துள்ளது..
இன்னும் எதிர்பார்ப்பை கூடியுள்ளது.
நன்றி அண்ணா..