Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 16, 2024
Please specify the group
Home > Featured > 21,600 தரம் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த பலனை கொடுக்கும் ஒரு அதிசய மந்திரம்!

21,600 தரம் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த பலனை கொடுக்கும் ஒரு அதிசய மந்திரம்!

print
சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகரின் குருபூஜை இன்று. முதலில் குரு பூஜை என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்… ‘இறையடியார்கள், தங்களின்   பிறவி நோக்கம் நிறைவடைந்து இறுதியில் இறைவனுடன் ஐக்கியமான நாளே குரு பூஜை நாளாகும்’. சிவபெருமானை பாடிய சிவனடியார்கள் பலர் இருந்தாலும் அவருக்கு மிக நெருக்கமானவர்களுள் பிரதானமானவர் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகரின் வாழ்வில் நடைபெற்ற நீங்கள் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சிகளை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவதே இப்பதிவின் நோக்கம்.

Manickavasagar_Kadambur
திருக்கடம்பூரில் மாணிக்கவாசகர் குருபூஜையின் போது….

இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார். இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்தான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார்.

இவர் அமைச்சாராக இருந்தது, மன்னன் குதிரை வாங்க கொடுத்த பணத்தில் திருக்கோவில் பணி செய்து மன்னனின் கோபத்துக்கு ஆளானது, சிவபெருமான் தலையிட்டு நரிகளை பரிகளாக்கியது, பின் மீண்டும் நரிகளாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது இவை அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருக்கும். இனி உங்களுக்கு தெரியாத சம்பவங்களை அளிக்கிறோம்.

பிட்டுக்கு மண் சுமந்த படலத்தை முடித்த பின்னர், தில்லை செல்லுமாறு வாதவூராரை பணித்தான் இறைவன். மணிவாசகர் தில்லையில் வாழ்ந்துவரும் நாட்களில் சிவனடி யார் ஒருவர் சிதம்பரத்திலிருந்து ஈழ நாட்டிற்குச் சென்றிருந்தார். அவ்வடியார் செம்பொன்னம்பலம், திருவம்பலம், திருச்சிற்றம்பலம் என்ற திருநாமங்களை இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கும் இயல்புடையவர். அவர் ஈழம் சென்றிருந்த காலத்தில் ஈழநாட்டில் புத்த சமயம் மேலோங்கியிருந்தது. இவ்வடியாரின் இயல்பைக் கண்ட சிலர் அரசனிடம் சென்று அவரது செய்கைகளை உணர்த்தினர். அரசன் அச் சிவனடியாரைச் சபைக்கு அழைத்து வருமாறு செய்தான்.

அரசவைக்கு வந்த அடியவர் செம்பொன்னம்பலம், திருவம்பலம், திருச்சிற்றம்பலம் என்று சொல்லிக் கொண்டே தன் இருக்கையிலமர்ந்தார். அரசன் வியந்து “இதன் பொருள் யாது?” என்று அவரைக் கேட்டான். அவ்வடியார் அதன் சிறப்புக்களை எடுத்துரைத்து “தீயவரும் உள்ளன்போடு இப்பெயரை ஒருமுறை கூறினால் 21,600 தடவை திருவைந் தெழுத்தைக் கூறியதனால் உண்டாகும் பயனை இது தரும்!” என்று கூறித் தில்லைப் பெருமானின் சிறப்பை எடுத்துரைத்தனர்.

Thiruvasagam deetchai 2

அங்கிருந்த புத்தமத ஆசாரியன் சிவனடி யார் கூறுவதைக் கேட்டுச் சினந்து `திரிபிடகம் அருளிய எங்கள் புத்தனைத் தவிர வேறு தெய்வம் உண்டோ? இன்றே நான் தில்லைக்குச் சென்று சைவத்தை வென்று புத்தனே கடவுள் என்று நிலைநாட்டி வருவேன்` என்று சூளுரைத்து எழுந்தான். ஈழத்தரசனும் தன் ஊமைப் பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு புத்தாசாரியனுடன் தில்லைக்குப் புறப்பட்டான்.

தில்லையையடைந்த புத்தகுரு, அரசன் முதலானோர் திருக்கோயிலையடைந்தனர். அக்கோயில் மண்டபம் ஒன்றில் அமர்ந்தனர். கோயில் காப்பாளர் அவர்களை அணுகி புறச் சமயத்தார் இங்குத் தங்குதல் கூடாது என்று கூறினர். அதைக்கேட்ட புத்தகுரு `யாம் உங்கள் சமயத்தை வென்று எங்கள் சமயத்தை இங்கு நிலைநாட்ட வந்துள்ளோம் என்று வாதிற்கு அறைகூவினான். அச்சூளுரை தில்லைவாழ் அந்தணர்களுக்கு எட்டியது, அவர்கள் சோழமன்னனுக்கு இந்நிகழ்ச்சியை உடன் தெரிவித்தனர்.

Lord Nataraja

அன்றிரவு தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரும் புத்தமத குருவை எவ்வாறு வெல்வது என்ற கவலையுடன் தில்லைச்சிற்றம்பலவனை எண்ணி வணங்கித் துயில்கொண்டனர். நடராசப் பெருமான் அவர்கள் கனவில் எழுந்தருளி “தில்லையின் கீழ்பால் சிவயோகத்தில் அமர்ந்து தவமியற்றி வரும் நம் அடியவனாகிய வாதவூரனை அழைத்து வந்து இப்புத்த குருவோடு வாதிடச் செய்க, அவன் அவர்களை வெல்வான்; கவலற்க” என்று கூறி மறைந்தார். மறுநாள் தாம்கண்ட கனவை ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு இறைவன் திருவருளை வியந்து மணிவாசகர் எழுந்தருளியுள்ள தவச்சாலையை அடைந்து மணிவாசகரிடம் “அடிகளே! நம் சைவ சமயத்தை அழித்து புத்த மதத்தை நிலைநாட்டும் எண்ணத்துடன் ஈழநாட்டு மன்னனும், புத்த மதகுருவும் வந்துள்ளனர். தாங்கள் வந்து அவர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைநிறுத்தல் வேண்டும்!” என்று அழைத்தார்கள்.

நடராசப் பெருமான் அவர்கள் கனவில் எழுந்தருளி `தில்லையின் கீழ்பால் சிவயோகத்தில் அமர்ந்து தவமியற்றி வரும் நம் அடியவனாகிய வாதவூரனை அழைத்து வந்து இப்புத்த குருவோடு வாதிடச் செய்க, அவன் அவர்களை வெல்வான்; கவலற்க` என்று கூறி மறைந்தார்.

ஊமைப்பெண் பேசியது

வாதவூரடிகளும் தில்லை மூவாயிரவருடன் சென்று ஆனந்தக் கூத்தனை வணங்கி அவனருள் பெற்று புத்தமதகுரு இருந்த மண்டபத்தை அடைந்தார். தீயவர்களைக் காண்பது தீதென்றெண்ணி அவர்களுக்கெதிரே ஒரு திரையிடச் செய்து தான் மறுபக்கத்தில் அமர்ந்தார். சோழ மன்னனும் மறையோரும், புலவர்களும் அவ்வவை யில் கூடியிருந்தனர். சோழன் வாதவூரரைப் பணிந்து, `புத்தர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைபெறச் செய்வது தங்கள் கடமை, தோல்வியுற்ற புத்தர்களை முறைசெய்து என் கடமை` என்று வேண்டிக் கொண்டான். பின்னர் மணிவாசகர் புத்தகுருவை விளித்து `வந்த காரியம் என்ன?` என்று வாதத்தைத் தொடங்கினார்.

[pulledquote]மணிவாசகர் எத்தனை உண்மைகளை எடுத்துரைத்தாலும் அவை புத்தகுருவின் செவிகளில் ஏற வில்லை. மணிவாசகர் கூறிய வாதத்தை மறுக்கும் வழியின்றி, சிவ நிந்தை செய்யத் தொடங்கினான். அதைக்கண்ட மணிவாசகர் கலைமகளை வேண்டி சிவநிந்தை செய்யும் நாவில் நீ இருத்தல் பொருந்துமோ? இவர்கள் நாவைவிட்டு அகல்வாயாக; இது இறைவன் ஆணை` என்று கூறினார். அவ்வளவில் புத்தகுருவும், அவருடன் வந்தவர்களும் ஊமைகளாயினர்.[/pulledquote]

வாதம் தொடர்ந்து நடைபெற்றது. மணிவாசகர் எத்தனை உண்மைகளை எடுத்துரைத்தாலும் அவை புத்தகுருவின் செவிகளில் ஏற வில்லை. மணிவாசகர் கூறிய வாதத்தை மறுக்கும் வழியின்றி, சிவ நிந்தை செய்யத் தொடங்கினான். அதைக்கண்ட மணிவாசகர் கலைமகளை வேண்டி சிவநிந்தை செய்யும் நாவில் நீ இருத்தல் பொருந்துமோ? இவர்கள் நாவைவிட்டு அகல்வாயாக; இது இறைவன் ஆணை` என்று கூறினார். அவ்வளவில் புத்தகுருவும், அவருடன் வந்தவர்களும் ஊமைகளாயினர். இதைக்கண்டு வியப்புற்ற ஈழமன்னன், வாதவூரரை வணங்கி `அடிகளே என்பெண், பிறவி முதல் ஊமையாக இருக்கின் றாள். அவளைப் பேசும்படிச் செய்தால் நான் தங்களுக்கு அடிமை யாவேன்` என்று கூறினான். வாதவூரர் அதற்கிசைந்து அப்பெண்ணை அவைக்கு வரவழைத்து அமர்த்தி, “பெண்ணே! இப்புத்தன் கேட்ட கேள்விகளுக்கு விடை கூறு” என்று கூறினார். அப்பெண்ணும் அனைவரும் வியந்து மகிழும்படி, புத்த குருவின் வினாக்களை மணிவாசகர் தாமே அப்பெண்ணிடம் கேட்க அப்பெண் அதற்கு விடையளித்தாள். அந்த வினா – விடைகள் தாம் 46. திருச்சாழல் என்ற திருப்பதிகமாக அமைந்தது. ஈழமன்னனும் அதைக்கண்டு மகிழ்ந்து மணிவாசகர் திருவடிகளிலே விழுந்து வணங்கிச் சைவஞ் சார்ந்தான். அவையோர் அனைவரும் மணிவாசகப் பெருமானைப் போற்றித் துதித்தார்கள். ஈழ மன்னன் திருநீறும் கண்டிகையும் பூண்டு அடிகளைப் பணிந்து புத்த குருவும், மற்றவர் களும் பேசும் திறம்பெற அருள் செய்ய வேண்டு மென்று வேண்டினான்.

மணிவாசகர் அவர்கள் மீது திருவருட் பார்வையைச் செலுத்தினார். அவ்வளவில் அனைவரும் ஊமை நீங்கிப்பேசும் திறம் பெற்று மணிவாசகரை வணங்கித் தாங்கள் செய்த குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர். புத்தகுருவும் அவரைச் சூழ வந்த அனைவரும் சைவர்களாக மாறினர்.

மணிவாசகரும் திருக்கோயிலுக்குட் சென்று சபாநாயகரை வணங்கித் தம் தவச் சாலைக்கு எழுந்தருளினார். இவ்வாறு தவச்சாலையில் தங்கியிருந்த காலத்தில் மணிவாசகர் 47. திருப்படையாட்சி, 48. திருப்படை யெழுச்சி, 49. அச்சோப் பத்து, 50. யாத்திரைப்பத்து என்ற பதிகங் களைப் பாடியருளினார்.

Manickavasagarஇறைவன் திருவாசகம் கேட்டு எழுதியது

இவ்வாறு சிதம்பரத்தில் மணிவாசகர் வாழ்ந்து வரும் நாள் களில், ஒரு நாள் அந்தணர் ஒருவர் அவரிடம் வந்து தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரென்றும், சிவபிரான் மணிவாசகருக் காகச் செய்த அருட்செயல் உலகெங்கும் பரவியுள்ளது என்றும் வியந்து கூறி மணி வாசகர் பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டார்.

மணிவாசகரும் அந்தணரை அருகிலிருத்தித் தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந்தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்து `பாவைபாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக` என்று கேட்டுக் கொண்டார். அவ்வேண்டுகோளுக்கு இணங் கிய மணிவாசகர் இறைவனது திருவடிப்பேற்றை உட்கருத்தாகக் கொண்ட இனிய கோவையார் என்ற நூலை அருளிச் செய்தார். கேட்ட அந்தணர் அந்த நூலையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்தார். பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தான். அதைக் கண்ட மணிவாசகர் இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கித் திருவருளை எண்ணி வழுத்தினார்.

திருவாசக உட்பொருள்

திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் `திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து` எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற்படியிலே வைத்தருளினார்.

காலையில் கோயிலில் இறைவனைப் பூசை செய்ய வந்த அருச்சகர் வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக்கண்டு அதையெடுத்து ஆண்டவனால் இது தரப்பட்டதாகும் என்ற அன்புணர் வோடு பிரித்துப் பார்த்துப் படித்தார். அவ்வேடுகளின் முடிவில் திருவாதவூரர் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என்றிருந்ததைக்கண்டு உடல் சிலிர்த்து இறைவன் திருவருளைப் பெறுதற்குரிய நூல்களில் இது தலையானது என்று புகழ்ந்து இந்நூலைப் பாடிய வாதவூரரைச் சென்று கண்டு வணங்கினார். திருவாயிற்படியில் இந்நூல் இறைவனால் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியை அவரிடம் தெரிவித்தார். வாதவூரர் அதைக்கேட்டு திருவருளையெண்ணி வணங் கினார். முடிவில் அந்தணர் அனைவரும் இந்நூலின் பொருளைத் தாங்களே விளக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், அதற்கு மணிவாசகர் இதன் பொருளைத் தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கின்றேன் என்று சொல்லி அவர்களோடு சிற்சபைக்கு எழுந்தருளினார். அங்கு வந்து `இந்நூற் பொருள் இச்சபையில் எழுந் தருளியுள்ள ஆனந்தக் கூத்தப்பெருமானே ஆவன்` என்று சுட்டிக் காட்டி, அச்சபையில் எல்லோரும் காண மறைந்தருளினார். இவ்வற்புத நிகழ்ச் சியைக் கண்ட அனைவரும் வியந்து மகிழ்ந்து தொழுது போற்றினர்.

நடராசப்பெருமான் மணிவாசகருக்குத் தம் திருவடிகளிலே இரண்டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைத் தந்து அவரை ஆட் கொண்டருளினார்.

(தயாரிப்பில் உதவி : www.thevaaram.org)

மேலே கண்ட நிகழ்வுகளில் இருந்து  நாம் இதுவரை கேள்விப்பட்டிராத மிகப் பெரியதொரு தகவல் – நமக்கு அன்றாடம் பயன்படக்கூடிய தகவல் – கிடைத்துள்ளது. அது என்ன என்று எந்த வாசகராவது சுட்டிக்காட்ட இயலுமா? பார்க்கலாம் யார் முதலில் சரியான விடையை சொல்கிறீர்கள் என்று….!

=================================================================

மாணிக்கவாசகரை பற்றிய திரு.சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவின் காணொளி இரண்டு பகுதிகளாக கீழே இணைக்கப்பட்டுள்ளது. ஒரு சில வினாடிகள் பார்க்கலாம் என்று நீங்கள் பார்க்க ஆரம்பித்தால் முழுவதையும் பார்த்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பீர்கள். பிரமாதப்படுத்தியிருக்கிறார் சுகி சிவம். (ஒவ்வொன்றும் சுமார் ஒரு மணிநேரம் ஓடக்கூடியது). பார்க்க ஆரம்பித்தால் நேரம் போவது தெரியாது. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையப்பெற்றவர்கள் தவறாது இந்த காணொளியை பார்க்கவும். மாணிக்கவாசகரின் அருளை பெறவும்.

=================================================================

மாணிக்கவாசகர் பற்றிய திரு.சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு – பகுதி 1

=================================================================

=================================================================

மாணிக்கவாசகர் பற்றிய திரு.சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு – பகுதி 2

=================================================================

Also check :

பக்திக்கும் பாசத்திற்கும் உதாரணமாக இதோ பரமேஸ்வரன் புகழ் பாடும் ஒரு அன்னை !

அன்னையுடன் சில மணித்துளிகள் – குடியாத்தம் திருவாசகம் முற்றோதல் விழா அனுபவம்!

திருவாசகம் முற்றோதலில் நடந்த அதிசயம் – வண்ணத்து பூச்சியாக வந்தது யார்?

ஒளவையை தேடி வந்த அனுமன்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

“நெருநல் உளனொருவன் இன்றில்லை…” – ஒரு சிவ பக்தையின் இறுதிப் பயணம்!

இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?

=================================================================

[END]

 

10 thoughts on “21,600 தரம் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த பலனை கொடுக்கும் ஒரு அதிசய மந்திரம்!

 1. வணக்கம்

  ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி

  “செம்பொன்னம்பலம், திருவம்பலம், திருச்சிற்றம்பலம்” – உள்ளன்போடு இப்பெயரை ஒருமுறை கூறினால் 21,600 தடவை திருவைந் தெழுத்தைக் கூறியதனால் உண்டாகும் பயனை இது தரும்!”

  இதுவா…

  தாமரை வெங்கட்

 2. அன்புள்ள சுந்தர்

  செம்பொன்னம்பலம், திருவம்பலம், திருச்சிற்றம்பலம் – இதுவே நீங்கள் மேற்கூறிய தகவல் என்று நினைக்கிறன்.

  நன்றி

 3. மாணிக்கவாசகரின் குரு பூஜை ஆன இன்று அவரை பற்றிய மிக பெரிய பதிவை போட்டதற்கு மிக்க நன்றி.

  பதிவு மிகவும் நன்றாக உள்ளது.

  //நமக்கு அன்றாடம் பயன்படக்கூடிய தகவல் – கிடைத்துள்ளது. அது என்ன என்று எந்த வாசகராவது சுட்டிக்காட்ட இயலுமா? பார்க்கலாம் யார் முதலில் சரியான விடையை சொல்கிறீர்கள் என்று….!

  ///செம்பொன்னம்பலம், திருவம்பலம், திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் 21,600 தடவை திருவைந் தெழுத்தைக் கூறியதனால் உண்டாகும் பயனை இது தரும்!” என்பதை அறிந்து கொண்டோம்

  //நமச்சிவாய வாழக நாதன் தாள் வாழ்க

  இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்க தான் தாள் வாழ்க //

  நாம் இன்று திருவாசகம் என்னும் தேன் பருகி இறை அன்பை பெறுவோம்

  Alll the photos are too good.

  நன்றி

  உமா

 4. சுந்தர்ஜி
  ஆனந்த நடனம் தத்ருபமாக இருக்கிறது. தகவல்கள் அனைத்தும் படிக்கும் போது மெய் சிலிர்க்கிறது. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி. அப்பேற்பட்ட வாசகத்தை அருளிய மணிவாசகரின் மகிமையினை அற்புதமாக பதிவு இட்ட உங்களுக்கு நன்றி. பதிவின் மூலம் கிடைத்த மந்திரம் சிவபக்தர்களுக்கு கிடைத்த வரபிரசாதம். செம்பொன்னம்பலம்! திருவம்பலம் !திருச்சிற்றம்பலம்!!

 5. திருச்சிற்றம்பலம் என்ற சொல்லுக்கு இணையில்லை என்பது நன்கு புரிந்தது. தொடர்ந்து திருவாசகத்தில் சில பாடல்கள் என்கணவர் திரு. ஞானப்பிரகாசம் அவர்களின் குரலில் ஒலிக்கிறது. டிராப்பாக்ஸ் லிங்க்காக உள்ளது டவுன்லோடு செய்யமுடியுமென நினைக்கிறேன். முயற்சித்துப் பாருங்கள் நன்பர்களே!.

  https://dl.dropboxusercontent.com/u/9827630/020%20%20THIRUVACHAGAM-THIRUPPADAI%20YEZHUCHI.mp3
  https://dl.dropboxusercontent.com/u/9827630/021%20%20THIRUVACHAGAM–YENNAP%20PADIGAM.mp3
  https://dl.dropboxusercontent.com/u/9827630/019%20%20THIRUVACHAGAM-THIRUESARAVU.mp3

 6. dear sundar ji & all friends ,
  iam fine .i will pray all of my team.i will come back shortly.sundar je.all articles very superb.
  allways rightmantara way,
  manohar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *