ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், பராசர பட்டர் என்ற ஆச்சார்யார், புரோகிதராக இருந்தார். ரங்கநாதர் கோயில் வீதியிலிருந்த குருகுலத்தில், அவர், தன் சிஷ்யகோடிகளுக்கு தினமும் பாடம் நடத்துவார். அந்த வழியே ஒரு வித்வான், தினமும் தன் சீடர்களோடு போவார். பட்டர் அவரைக் கவனிக்கக் கூட மாட்டார். அதே நேரம், அந்த வீதியில் ஒரு செம்பை எடுத்துக் கொண்டு உஞ்சவ்ருத்தி (பிச்சை எடுத்தல்) செய்யும் ஒரு பிராமணரை விழுந்து விழுந்து கவனிப்பார். அவரிடம், நீண்ட நேரம் பேசவும் செய்வார். இதைப் பார்த்த பராசர பட்டரின் சீடர்களுக்கு வியப்பு ஏற்பட்டது.
ஒருநாள், பட்டரிடம் அதைக் கேட்டே விட்டார்கள்.
“சுவாமி! மிகப்பெரிய வித்வான் இந்த வழியே தினமும் போகிறார். அவரை நீங்கள் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை. ஆனால், பிச்சை எடுக்கும், இந்த பிராமணரிடம் நீண்ட நேரமாய் பேசுகிறீர்கள். என்ன காரணம் சொல்லுங்கள்?” என்றனர்.
பட்டர் அவர்களை அமைதிப்படுத்தினார். “பொறுங்கள், காலம் போகப் போக உங்களுக்கே புரியும்” என்றார்.
சில மாதங்கள் கழித்து, அந்த வித்வானை தன் குருகுலத்துக்குள் அழைத்தார்.
“வித்தகரே! பரதத்துவம் (நிஜமான கடவுள்) யார்?” என்று கேள்வி கேட்டார்.
வித்வான் பட்டரிடம், “எனக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் தான் உமக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதற்குரிய விடையைத் தானே நான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.
பட்டர் வித்வானை அனுப்பி விட்டார். சில நாட்களில், உஞ்சவ்ருத்தி எடுத்த பிராமணரை பட்டர் அழைத்தார்.
“உம்மிடம் ஒன்று கேட்க வேண்டும், உள்ளே வாரும்” என்றார். பிராமணர் பயந்து போனார். இவ்வளவு பெரிய ஆச்சார்யர், தன்னை அழைக்கிறாரே! கேள்வி வேறு கேட்கப்போகிறேன் என்கிறார். “எனக்கு படிப்பறிவே கிடையாதே!” என்ற நடுக்கத்துடன் உள்ளே வந்தார்.
“சுவாமி! உண்மையான கடவுள் யார்?” என்று கேட்டாரோ இல்லையோ, பிராமணருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. கையில் இருந்த பிச்சை செம்பை தூக்கி எறிந்தார். “என்ன ஓய் கேட்டீர்? இது கூட தெரியாமல் தான், நீர் உம் சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீரா? நிஜமான கடவுள் நம் ரங்கநாதர் என்று கூட நீர் அறியவில்லையோ? நீரெல்லாம் ஒரு குரு!” என்று, கோபமாகச் சொல்லிவிட்டு, வேகமாக எழுந்து போய்விட்டார்.
பராசர பட்டர், “பார்த்தீர்களா? ரங்கன் தான் நிஜமான தெய்வம் என்று அந்த வித்வானுக்கு தெரியவில்லை. இந்த பிராமணரோ, ரங்கனே எல்லாமும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ரங்கனே சகலமும் என எண்ணுபவர்கள் தானே நமக்கு சொந்தக்காரர்கள்!” என்றார். குருவின் செய்கைக்கான காரணமறிந்த சீடர்கள் வியந்து நின்றார்கள். (கதை உதவி : தினமலர்/ஆன்மீக மலர்)
சற்று யோசித்து பாருங்கள்…
வித்வானிடம் கேட்ட இதே கேள்வியை பட்டர் உங்களிடம் கேட்டிருந்தால் உங்கள் பதில் என்னவாக இருந்திருக்கும்?
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்… நீங்கள் விழுந்து விழுந்து நித்தம் வணங்கும் உங்கள் தெய்வத்தை சொல்லியிருப்பீர்களா?
ஏதோ மிகப் பெரிய ஞானி போல எண்ணிக்கொண்டு அந்த வித்வானை போல எதையாவது சொல்லியிருக்கமாட்டீர்கள்?
இறைவனிடம் ஆழ்ந்த பக்தி கொள்ள, சாஸ்திரங்களையும் வேத இதிகாச புராணங்களையும் கரைத்து குடித்திருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. அப்பழுக்கற்ற அன்பும் ஆணித்தரமான நம்பிக்கையுமே போதும்.
நாமும் அப்படி ஒரு பக்திக்கு நம்மை தயார் படுத்திக்கொள்வோம்.
===================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : ‘யுவ ஸ்ரீ கலா பாரதி’ திருக்குறள் தீபிகா அவர்கள்.
தீபிகா அவர்கள் செங்கல்பட்டில் அரசு மேனிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே திருக்குறள் அனைத்தையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறமையை பெற்றிருந்தார். தீபிகாவுக்கு இருந்த இந்த ஆற்றலை கண்டு வியந்த பெற்றோர் அவருக்கு மேலும் மேலும் ஊக்கம் கொடுத்து திருக்குறளை பரப்பும் ஒரு உன்னத பணிக்கு என்றே அவரை அர்பணித்து விட்டனர். இதுவரை 150 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சென்று திருக்குறள் குறித்து மாணவர்களிடம் உரை நிகழ்த்தி திருக்குறள் கற்கும் ஆர்வத்தை மாணவர்கள் மத்தியில் விதைத்திருக்கிறார். இவரை பார்த்து பல மாணவர்கள் தாங்களும் திருக்குறளை முழுமையாக கற்று தேர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபிகா இதுவரை வாங்கிய பட்டங்கள் எத்தனை தெரியுமா?
1) திருக்குறள் ஞாயிறு 2) திருக்குறள் தென்றல் 3) திருக்குறள் இராணி 4) குறள் பாரதி 5) யுவஸ்ரீ கலாபாரதி 6) திருக்குறள் மாமணி 7) திருக்குறள் இளவரசி 8) வாகை விருது 9) திருக்குறள் சீர் பரவுவாளர் விருது 10) குறள் மணி. இவை இன்னும் பல பட்டங்கள் காத்திருக்கின்றன.
விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி அளிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். தனது லட்சியம் என்று இவர் கூறுவது என்ன தெரியுமா? தமிழாசிரியர் பணி செய்வது!
திருக்குறள் தொண்டு செய்து வரும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் திரு.வள்ளிமுத்து அவர்கள் மூலம் தீபிகாவை பற்றி நாம் கேள்விப்பட்டோம். இதையடுத்து, தீபிகாவின் பெற்றோரிடம் பேசி சென்ற டிசம்பர் 8 அன்று நடைபெற்ற நமது பாரதி விழாவில் “திருக்குறளும் பாரதியும்” என்கிற தலைப்பில் தீபிகாவை பேச ஏற்பாடு செய்தோம்.
விழாவுக்கு பெற்றோர்களுடன் வந்திருந்து தீபிகா சிறப்பித்தார். “திருக்குறளும் மகாகவி பாரதியும்” என்ற தலைப்பில் பாரதி திருக்குறள் பற்றி சிலாகித்து கூறியவற்றை எல்லாம் பேசி அடி தூள் கிளப்பிவிட்டார்.
பாரதி கண்ட புதுமைப் பெண், தீபிகா அவர்கள் பாரதி பெரிதும் போற்றும் திருக்குறள் பற்றி பேசியதை கேட்டு நிச்சயம் அந்த கவிஞனின் ஆன்மா மகிழ்ந்திருக்கும்.
தீபிகா அவர்களுக்கு நமது விழாவில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு சான்றிதழும் தந்து கௌரவிக்கப்பட்டார்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கூறியபோது அவரும் அவரது பெற்றோரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். வீட்டில் அந்நேரம் விளக்கு ஏற்றி வைத்து, திருக்குறளை கூறி பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
============================================================
கணவர் மன்னித்து என்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும்! எங்கள் வீட்டில் மழலைச் சத்தம் கேட்கவேண்டும்!!
My name is Nithyakalyani. My Husband name is Velmurugan Age 35. We got married few years ago. Still we are not blessed with a child. He is a very nice person. I’m very lucky for getting him as a life partner. But in many situations, I hurted him using harsh words. But he was very patient at that time. Past two years, we are not living together. Now, he said that he is not interested to live with me and he will take action legally for separation.
But I still love him and realize my faults. I can’t imagine my life without him. I want to live with him. But his parents also not liking me. A single person not supporting me in their side. I’m very much afraid about life.
I trust only in GOD. He will help us. So Pray for me. ( I’m Longing for my life with my husband)
A.Nithyakalyani
============================================================
இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அம்மா பரிபூரண நலம் பெறவேண்டும்!
டியர் சுந்தர் ஜி,
எனது அம்மாவிற்கு இருதய ஓபன் ஹார்ட் அறுவை சிஹிச்சை 13.02.2014 வியாழன் கிழமை மாசி மாத பிறப்பு அன்று செய்து அதற்கு பிறகு வீட்டுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் ஞாபகமறதியாக பேசுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பெயர் சந்திரசேகரன் . குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரி. கோவை. குருவருளால் சிகிச்சை நன்கு முடிந்தது. விரைவில் பூரண குணம் பெற அனைவரையும் வேண்டிகொள்ளுமாறு கேட்டு கொள்ளுகிறேன். தாயார் பெயர் சுப்புலக்ஷ்மி ராஜகணபதி.
என்றும் அன்புடன்
முத்துக்குமாரசாமி.
============================================================
மகள் +2 தேர்வு நன்றாக எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் !
Dear Sir,
My daughter Aparna is doing her +2 this year and her exam starts on 03.03.2014. I kindly request you all to pray for her to score very good marks as her wish in the exam and wish her a good life in the coming years. Pray for all the students to score good marks too.
Thanking you to include this in your sunday prayer.
Regards,
Suma, Coimbatore
============================================================
இந்த வார பிரார்த்தனைக்கு வந்திருக்கும் கோரிக்கைகளில் முதல் கோரிக்கை பற்றி கூறுவதென்றால்…. சரியான நேரத்தில் நித்யா அவர்களுக்கு தான் செய்த தவறு புரிந்திருக்கிறது. இன்னும் சில காலம் கழித்து இது புரிந்திருந்தால் காலம் கடந்து போயிருக்கும்.
ஒரு பெண்ணின் மனநிலையில் அவர் எந்தளவு ஒரு வேதனையுடன் இருப்பார், இந்த பிரார்த்தனையை அனுப்பியிருப்பார் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. எனவே அவரது தனித்துவம் காப்பாற்றப்பட அவரது இந்த பிரார்த்தனையை MUTE செய்து வெளியிடலாமா என்று நாம் யோசித்தோம். இருப்பினும் அவர் கேட்கும் பகிரங்க மன்னிப்பாக இதை இறைவன் ஏற்றுக்கொண்டு அவரை மன்னித்து அவரது கணவருடன் அவரை மீண்டும் சேர்த்து வைக்கவேண்டும். அவரது கணவரும் அவரை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு இறைவன் அருளவேண்டும். தவறு செய்வது மனித குணம். அதை மன்னிப்பது தெய்வ குணம். செய்த தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும்போது, இறைவனுக்கு மன்னிப்பதை தவிர வேறு வழியே இல்லை.
திருமண வாழ்க்கை என்பது கண்ணாடி பாத்திரம் போன்றது. எந்த சூழ்நிலையிலும் அது கீழே விழ ஒருவர் அனுமதிக்கக்கூடாது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அடுத்தவர் உணர்வுகளை மதித்து வாழ்ந்து வந்தால் என்றென்றும் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் தவழும். விரைவில் அந்த வாசகி நம்மிடம் நல்ல செய்தியை சொல்லுவார் என்பது உறுதி.
(வேல்முருகன் சார்… இதுக்கு முன்னாடி நீங்க பார்த்த நித்யா வேற. இப்போ பார்க்குற நித்யா வேற. நித்யா இப்போ ரைட்மந்த்ரா வாசகர். வாழ்வின் அருமை தெரிந்தவர். தவறுகளை உணர்ந்து அதற்கு வருத்தப்படுபவர். நல்லதையே நினைக்க தெரிந்தவர். இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர். குடும்ப உறவுகளின் அருமை புரிந்தவர். பக்குவப்பட்டவர். இவரை போன்ற ஒருவரை நீங்கள் இழக்கவேகூடாது!)
அடுத்த பிரார்த்தனைக்கான கோரிக்கையை அனுப்பியிருப்பவர் நண்பர் முத்துக்குமாரசாமி. தாமோதரன் ஐயா அவர்களின் திருவாசகம் முற்றோதலில் கலந்துகொள்ள சில மாதங்களுக்கு முன்பு நாம் பழனி சென்ற நம்முடன் வந்திருந்து தானும் அந்த இன்பத்தை பருகியவர். சென்ற வாரம் சிவராத்திரி அன்று, நமது வங்கிக்கணக்கில் சிறிது பணத்தை செலுத்தி, பூஜை செலவுகளுக்கு உபயோகித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். இரவு அபிஷேகத்துக்கு முன்பு சங்கல்பம் செய்யும்போது முதலில் அவரது தாயாரின் பெயரை கூறித் தான் சங்கல்பம் செய்தோம். சிவனருள் என்றும் அவருக்கு உண்டு.
அடுத்து வாசகி சுமா அவர்கள். தனது மகள் நன்றாக தேர்வை எழுத வேண்டும் என்று கோரிக்கை அனுப்பியிருந்தாலும் தேர்வு எழுதும் மற்ற மாணவர்களும் நன்றாக எழுதவேண்டும் என்கிற கேட்டுக்கொண்ட அந்த பரந்த மனப்பான்மைக்கு நம் நன்றி. அவரது கோரிக்கையே இந்த வாரம் பொது பிரார்த்தனையாக வைக்கப்படுகிறது.
============================================================
பொது பிரார்த்தனை
+2 தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும்!
மாணவர்கள் வாழ்வில் 10, +1, +2 இந்த மூன்று கல்வியாண்டுகளும் மிக மிக முக்கியமானவை. அடுத்து நாம் என்னவாகப்போகிறோம், எதை தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான காலகட்டம் இது.
இந்த நேரங்களில் மாணவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்காது, படிப்பில் கவனம் செலுத்தி தேர்வுகளை நல்ல முறையில் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும். சில ஆண்டுகள் கஷ்டப்பட்டால் வாழ்நாள் முழுதும் சுகமாக இருக்கலாம்.
பெற்றோர்களும் தங்கள் செல்வங்களின் கல்விக்கு உதவ சில தியாகங்களை செய்யவேண்டும். கேபிள் டி.வி. இணைப்புக்களை துண்டித்துவிடுங்கள். அவர்கள் மனம் நோகுமாறு எதையும் பேசவோ செய்யவோ வேண்டாம். படி படி என்று குறிப்பாக நச்சரிக்கக்கூடாது. மாறாக அன்பாக சொல்லிப் பாருங்கள்.
“நீ நிச்சயம் எல்லா பாடத்துலயும் நூற்றுக்கு நூறு எடுக்கணும், 90க்கு மேலே எடுக்கணும்… இல்லேன்னா எம்.பி.பி.எஸ், என்ஜீனியரிங் கிடைக்காது…” அப்படி இப்படி என்று அவர்களுக்கு டார்கெட் பிக்ஸ் செய்யாதீர்கள். அது அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மாறாக “நீ என்ன மார்க் எடுத்தாலும் எனக்கு சந்தோஷம்! ஆனா நீ நிச்சயம் நல்ல மார்க் தான் எடுப்பே. ஏன்னா நீ மிக மிக திறமைசாலி. நீ பிறக்கும்போதே சொன்னாங்க நீ +2 எக்சாம்ல நல்லா படிச்சி நல்லா எழுதி ஒரு கலக்கு கலக்குவியாம்!” என்று கூறிப்பாருங்கள்.
+2 தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும். குறிப்பாக எத்தனையோ போராட்டங்களுக்கிடையே பெற்றோர்கள் மெழுகுவர்த்திகளாக உருகி படிக்க வைக்கும் மாணவர்கள் அனைவரும் நன்கு தேர்வு எழுதவேண்டும். அவர்கள் கல்வியினால் தான் அந்த குடும்பமே தலை நிமிரவேண்டும் என்கிற நிலையில் உள்ள மாணவர்கள் யாவரும் எந்த கவனச் சிதறலும் இன்றி நன்கு படித்து நன்கு தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் கனவை நனவாக்கவேண்டும்!
இதுவே இந்த வார பொது பிரார்த்தனை!
============================================================
வாசகி நித்யகல்யாணி அவர்கள் மீண்டும் தனது கணவருடன் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்தவேண்டும். அவர்கள் குலம் தழைக்க அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான குழந்தை பிறக்கவேண்டும். திரு. முத்துக்குமாரசாமி அவர்களின் தாயார் சுப்புலக்ஷ்மி ராஜகணபதி அவர்கள் பரிபூரணம் குணம் பெற்று இனி வரும் காலத்தை எந்த வித நோய்நொடியும் இன்றி சௌக்கியமாக சந்தோஷமாக கழிக்கவேண்டும். சுமா அவர்களின் மகள் அபர்ணா மற்றும் +2 தேர்வு எழுதும் இதர மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும். இவற்றுக்கெல்லாம் திருவருள் துணை செய்ய பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : மார்ச் 9, 2014 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : போரூர் இராமநாதீஸ்வரர் கோவிலில் பூஜை மற்றும் உற்சவங்களின் போது நாதஸ்வரம் இசைக்கும் நாதஸ்வர கலைஞர் திரு.துரை.
[END]
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் : ‘யுவ ஸ்ரீ கலா பாரதி’ திருக்குறள் தீபிகா அவர்கலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாரதி விழாவில் அவரது பேச்சு மிகவும் அருமையாக இருந்தது.
வாசகி நித்யகல்யாணி அவர்கள் மீண்டும் தனது கணவருடன் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்தவேண்டும். அவர்கள் குலம் தழைக்க அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான குழந்தை பிறக்கவேண்டும். திரு. முத்துக்குமாரசாமி அவர்களின் தாயார் சுப்புலக்ஷ்மி ராஜகணபதி அவர்கள் பரிபூரணம் குணம் பெற்று இனி வரும் காலத்தை எந்த வித நோய்நொடியும் இன்றி சௌக்கியமாக சந்தோஷமாக கழிக்கவேண்டும். சுமா அவர்களின் மகள் அபர்ணா மற்றும் +2 தேர்வு எழுதும் இதர மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும். இவற்றுக்கெல்லாம் திருவருள் துணை செய்ய பிரார்த்திப்போம்
தேர்வில் வெற்றி பெற
வித்யா வித்யாகரீ வித்யா வித்யாவித்யா ப்ரபோதிநீ
விமலா விபவா வேத்யா விஸ்வஸ்தா விவிதோஜ்வலா
இந்தச் சுலோகத்தை 11 தரம் காலையில் ஜபித்து வந்தால், ஞாபக சக்தியும் தேர்வில் வெற்றியும் கிடைக்கும்.
பிழை பொறுக்க வேண்டுதல்
அபராத ஸஹஸர ஸங்குலம்
பதிதம் பீம மஹார்ண வோதரை
அகதிம் சரணாகதமாம் க்ருபயா
கேவல மாத்மஸாத் குரு.
மந்த்ர ஹீம் க்ரியா ஹீனக
பக்தி ஹீநம் ஸுரேச்வா
யத் பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துமே.
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிசம்
தாஸோ யமிதிமாம் மத்வர க்ஷமஸ்வ புருஷாத்தம்.
nandri
uma
Thank you very much mam.
சுந்தர் சார், நம்முடைய தளத்தில் பிரார்த்தனை கோரும் அனைவருக்கும் அது நிறைவேறுவது திண்ணம் ..உடனே அது முழுமையாக சரியாகாவிட்டாலும் நமது பிராத்தனைக்குபின் பிரச்சனை மேலும் வலுவடையாமல் கட்டுக்குள் இருக்கும் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை ,,
///வாசகி நித்யகல்யாணி அவர்கள் மீண்டும் தனது கணவருடன் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்தவேண்டும். அவர்கள் குலம் தழைக்க அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான குழந்தை பிறக்கவேண்டும். திரு. முத்துக்குமாரசாமி அவர்களின் தாயார் சுப்புலக்ஷ்மி ராஜகணபதி அவர்கள் பரிபூரணம் குணம் பெற்று இனி வரும் காலத்தை எந்த வித நோய்நொடியும் இன்றி சௌக்கியமாக சந்தோஷமாக கழிக்கவேண்டும். சுமா அவர்களின் மகள் அபர்ணா மற்றும் +2 தேர்வு எழுதும் இதர மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும். இவற்றுக்கெல்லாம் திருவருள் துணை செய்ய பிரார்த்திப்போம் -///
Thank You very much Sir.
நல்ல எளிமையான கதை ,ஆழ்ந்த கருத்துக்கள் …
\\வாசகி நித்யகல்யாணி அவர்கள் மீண்டும் தனது கணவருடன் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்தவேண்டும். அவர்கள் குலம் தழைக்க அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான குழந்தை பிறக்கவேண்டும். திரு. முத்துக்குமாரசாமி அவர்களின் தாயார் சுப்புலக்ஷ்மி ராஜகணபதி அவர்கள் பரிபூரணம் குணம் பெற்று இனி வரும் காலத்தை எந்த வித நோய்நொடியும் இன்றி சௌக்கியமாக சந்தோஷமாக கழிக்கவேண்டும். சுமா அவர்களின் மகள் அபர்ணா மற்றும் +2 தேர்வு எழுதும் இதர மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும். இவற்றுக்கெல்லாம் திருவருள் துணை செய்ய பிரார்த்திப்போம்\\
-மனோகர்
Thank You very much Sir
தான் நினைத்தபடி வாழ்வதுதான் சுதந்திரம் என்று மனம் போன போக்கில் வாழும் இன்றைய யுவதிகளுக்கு நடுவில், செய்த தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்பும் கேட்டு தன கணவருடன் இணைந்து வாழவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கும் அபூர்வ பெண்மணி சகோதரி நித்யகல்யாணி அவர்களுக்காக நான் நிச்சயம் பிரார்த்தனை செய்வேன்.
+2 தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் நம் மாணவ செல்வங்கள் நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று வாழ்வில் எல்லா வளங்களும் பெற இறைவனை வேண்டுவோம்.
Thank You very much Sir
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திருக்குறள் தீபிகா அவர்கலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாரதி விழாவில் அவரது பேச்சு மிகவும் நன்றாக இருந்தது. திருக்குறள் பற்றிய அவர் பேச்சு இன்னும் திறம்பட பல விருதுகள் வாங்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.
வாசகி நித்யகல்யாணி அவர்கள் மீண்டும் தனது கணவருடன் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்தவேண்டும். அவர்கள் குலம் தழைக்க அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான குழந்தை பிறக்கவேண்டும். திரு. முத்துக்குமாரசாமி அவர்களின் தாயார் சுப்புலக்ஷ்மி ராஜகணபதி அவர்கள் பரிபூரணம் குணம் பெற்று இனி வரும் காலத்தை எந்த வித நோய்நொடியும் இன்றி சௌக்கியமாக சந்தோஷமாக கழிக்கவேண்டும். சுமா அவர்களின் மகள் அபர்ணா மற்றும் +2 தேர்வு எழுதும் இதர மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று அனைவரும் பிரார்த்திப்போம்
Thank You very much mam
இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் தீபிகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்பில் பெயர் இடம் பெற்று விட்டாலே நம் பிரார்த்தனைகள் நிறைவேறி விடும்.
நித்யகல்யாணி அவர்கள் மீண்டும் தனது கணவருடன் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்தவேண்டும். அவர்கள் குலம் தழைக்க அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான குழந்தை பிறக்கவேண்டும். திரு. முத்துக்குமாரசாமி அவர்களின் தாயார் சுப்புலக்ஷ்மி ராஜகணபதி அவர்கள் பரிபூரணம் குணம் பெற்று இனி வரும் காலத்தை எந்த வித நோய்நொடியும் இன்றி சௌக்கியமாக சந்தோஷமாக கழிக்கவேண்டும். சுமா அவர்களின் மகள் அபர்ணா மற்றும் +2 தேர்வு எழுதும் இதர மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும். இவற்றுக்கெல்லாம் திருவருள் துணை செய்ய பிரார்த்திப்போம
Thank You very much mam
திருத்தலையூர் குங்குமவல்லி உடனுறை சப்தரிஷீஸ்வரர் திருகோயில்[9790329346] [. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து முசிறிக்கு சென்று அங்கிருந்து திருத்தலையூர் செல்லலாம். ] இந்த சுவாமி ,அம்பாள் வழிபட்டு ,மருத மர பூஜை செய்து சென்று வழிபட கணவன் மனைவி ஒன்றுபடுவர்…..
கணவனை முன்பு திட்டியதால் ப்ரம்ம்ஹதி தோசம் அண்டாமல் இருக்க திருவிடைமருதூர் மஹாலிங்க சுவாமி திருகோயில்[கும்பகோணம் அருகில் ] 0435 2460660.சென்று வழிபாடு செய்து ,பிரம்ம ஹதி தோசம் பரிகார பூஜா செய்து வரவும் [காலை 8 மணி ,9 மணி ,10 மணி நடை பெரும் ..திருகோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் ….இது 50 ரூபாவுக்கு செய்து தர படுகிறது ]….
சம்மோகன கிருஷ்ணன் ஸ்துதி சொல்லி வரவும் ….
ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் |
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம் ||
பாகம் தட்சிணம் புருஜம் அந்யத் ஸ்திரீடூபிணம் ததா |
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஷம் ||
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஷாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் ||
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீ க்ருஷ்ண
மாஸ்ரயே ||
– ஸ்ரீ சம்மோஹன க்ருஷ்ண ஸ்துதி
இத்துடன் கீழ்க்கண்ட ஸ்லோகத்தையும்
சேர்த்து சொல்லி வரவும்.
‘‘பீதாம்பரம் கரவிராஜித சங்கசக்ர
கௌமோதக் ஸரஸிஷம் கருணா சமுத்ரம்
ராதா ஸஹாயம் அதி சுந்தரம் மந்தஹாஸம்
வாதாலயே சமனிஸம் ஹ்ருதி பாவயாமி.’’
– ஸ்ரீமந் நாராயணீயம்
சுப்புலக்ஷ்மி ராஜகணபதி அவர்கள் குணமாக …….
திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோயில்[99940 15871][கும்பகோணம் அருகில்]…அப்புறம் மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர்.
மங்களாம்பிகை, சௌந்தரநாயகி திருகோயில்[மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் 2 கி. மீ. தொலைவில்] மார்க்கசகாயேஸ்வரர், மங்களாம்பிகை, சௌந்தரநாயகி சன்னதி 11 நெய் அகல் போட்டு உத்திரம் நட்சத்திர நாளில் வழிபடவும் …..[9677413768]..இது திருவாவடுதுறை ஆதீன ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளின் அவதாரத் தலம்…..
கூடவே
பதிகம் தினமும் படித்து வரவும் ….
திருச்சிற்றம்பலம்
மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.
வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
ஓதியோர்க் ககப்படாப் பொருளையோ விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே.
மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன
வானையுள் கச்செலும் வழிகள்காட் டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே.
செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.
விண்ணுலா வுந்நெறி வீடுகாட் டுந்நெறி
மண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர்க் குந்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலான் ஏறுடை யடிகள்வே டங்களே.
பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படுந்
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கமா றுஞ்சொன்ன அடிகள்வே டங்களே.
கரைதலொன் றும்மிலை கருதவல் லார்தமக்
குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.
உலகமுட் குந்திறல் லுடையரக் கன்வலி
விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி யடிகள்வே டங்களே.
துளக்கமில் லாதன தூயதோற் றத்தன
விளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்
அளக்கவொண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.
செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள்
உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன அடிகள்வே டங்களே.
சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை
மாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே.
திரு முத்துக்குமாரசுவாமி அவர்களின் தாயார் ஹார்ட் Operation பிறகு மறதியால் அவதிப்படுவதாக கூறியிருந்தார். Open ஹார்ட் செய்த அனைவருக்கும் இந்த பிரச்சினை உள்ளது. (Naanum open ஹார்ட் operation செய்து கொண்டுள்ளேன் 3 ஆண்டுகளுக்கு முன்). எனவே கவலை வேண்டாம்.
அவருக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
Thank You very much for all u dear people.
கணித பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற நாமகிரி தாயார் சுலோகம்
தினமும் சொல்லவும்
http://divyadesamyatra.blogspot.in/2014/03/sri-namagiri-lakshmi-sahayam.html