Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > தினசரி சில நிமிடம் போதுமே! தியானம் செய்வதால் கிடைக்கும் 100 பலன்கள்!!

தினசரி சில நிமிடம் போதுமே! தியானம் செய்வதால் கிடைக்கும் 100 பலன்கள்!!

print
மெடிடேஷன் எனப்படும் தியானம் மனித குலத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது. தியானத்தின் பலன்கள் அளவிடற்கரியது. பிரமிப்பூட்டுவது. மிகப் பெரிய பிரச்சனைகளை சர்வசாதாரணமாக தீர்த்து வைக்கும் ஆற்றல் தியானத்துக்கு உண்டு. கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ள பொக்கிஷத்தை கையருகே கொண்டு வரும் உன்னத கலை தியானம்.

ஒரு பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். அதை சூரியனின் கிரணங்களுக்கு முன்பாக வையுங்கள். எவ்வளவு நேரமானாலும் ஒன்றும் ஆகாது. ஆனால் அதையே ஒரு குவி லென்ஸ் கண்ணாடி மூலம் சூரிய கதிர்களை ஒருமுகப்படுத்தி காட்டுங்கள். சில வினாடிகளில் காகிதம் தீப்பற்றி எரிய ஆரம்பித்துவிடும்.

Buring paper with lensமனதின் ஆற்றலும் இத்தகையது தான். ஒருமுகப்படுத்தப்படும் மனதின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கிறது. அது உடல், செயல், ஆற்றல் என அனைத்திலும் எதிரொலிக்கும்.

தியானம் என்பது வாழ்க்கை முழுவதற்குமே தேவைப்படும் ஒரு அம்சம் என்றாலும், மாணவர் பருவம் போன்ற வாழ்வை நிர்ணயிக்கும் ஒரு காலகட்டத்தில் தியானத்தின் தேவை முக்கியமானது. அதன்மூலம் மாணவர்கள் அடையும் நன்மை அளப்பரியது. அமைதியான மனம், சிறந்த தக்கவைப்பு, நல்ல ஆரோக்கியம், கவனம் மற்றும் ஒருமுகப்படுத்தும் சக்தி போன்றவை தியானத்தினால் கிடைக்கும் சில பிரதான நன்மைகள்.

பிளஸ் டூ பரிட்சைகள் நடக்கும் இந்நேரத்தில், தினமும் காலை 5 அல்லது 10 நிமிடங்கள் தியானத்துக்கு ஒதுக்குவது மாணவர்களுக்கு நல்லது.

சில மாணவர்களுக்கு ஒரு விஷயத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கவனம் செலுத்த இயலாது. தேர்வு நெருங்கும் சமயத்தில் புத்தகத்தை எடுத்து படிப்பது சிலருக்கு எரிச்சலாக இருக்கும். அதை அவர்கள் அழுத்தமாகவும் உணர்வார்கள். தியானத்தின் மூலம் இந்த நிலையை மாற்றலாம்.

Meditate Quote

தியானம் என்றால் என்ன?

அலையும் மனதை ஒருமுகப்படுத்துவது தியானம் ஆகும். தியானமானது ஓய்வில்லாது சலனத்துடன் இருக்கும் மனதை சாந்தப்படுத்துகின்றது. தியானத்தை ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடின்றி செய்து பயன்அடையலாம்.

தியானத்தில் இறை அன்பு இருக்கிறது.
தியானம் நமது வாழ்க்கையை இனிதாக்கும்.
தியானம் கஷ்டங்களைப் போக்கிவிடும்.
தியானம் என்பது மனதை ஒருமுகப் படுத்தி இறைவனை நினைப்பது. தியானம் செய்பவரின் நோக்கம் மற்றவர்களையும் உயர்த்துவதாக இருக்க வேண்டும்.

தியானம் என்பது கடினமான விஷயம் அல்ல. அது மிக மிக எளிதான ஒன்று.

தியானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் 100 நன்மைகளை இத்துடன்  பட்டியலிட்டிருக்கிறோம். படித்து முடிக்கும்போது, நீங்களும் உடனே தியானம் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள் என்பது உறுதி.

தினசரி தியானம் செய்வோம். அளப்பரிய பலன்களை பெறுவோம்.

தியானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் 100 நன்மைகள் !

உடல் ரீதியான நன்மைகள்

1. பிராணவாயுவின் தேவையை குறைக்கிறது

2. மூச்சு விடும் சுற்றை குறைக்கிறது (ஒரு நிமிடத்துக்கு நாம் எவ்வளவு முறை மூச்சு விடுகிறோம் என்பது நமது ஆயுள் சம்பந்தப்பட்டது. குறைந்த மூச்சு நிறைந்த ஆயுள்!)

3. இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தை  இயங்க செய்கிறது

4. உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையை மாற்றி உடலை உடற்பயிற்சிக்கு தயார் செய்கிறது.

5. நம் உடலுக்கு அவ்வப்போது மிகவும் தேவையான ஆழ்ந்த ஓய்வை தருகிறது

6. அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தியானம் ஒரு மிகச் சிறந்த மருந்து

Rightmantra Meditate Quote2

7. இரத்தத்தில் உள்ள lactic acid அளவை R குறைத்து அச்ச உணர்வினால் ஏற்படும் நோய்களை பூரணமாக விரட்டுகிறது.

8. தசைகளுக்கு ஏற்படும் இறுக்கத்தை போக்குகிறது.

9. அலர்ஜி மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்ற நோய்கள் வராமல் காக்கிறது

10. பெண்களுக்கு மாதவிலக்கு தொடர்பான பயங்களை போக்கி அது சீராக இருக்க உதவுகிறது.

11. அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறுவதை விரைவுபடுத்துகிறது

12. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

13. வைரஸ்களின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்கிறது. மனக்கவலையை போக்குகிறது.

14. ஆற்றல், சக்தி, வீரியத்தை அத்கிகரிக்கிறது

15. உடல் எடையை கட்டுக்கள் I வைக்க உதவுகிறது

16. திசுக்களை பாதுக்காக்க உதவுகிறது.

17. தோலுக்கு பலம் கூடுகிறது. (Higher skin resistance)

18. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அண்டவிடாமல் பாதுகாக்கிறது

19. நுரையீரலுக்கு சரியான அளவு பிராணவாயு செல்ல உதவுகிறது.

20. முதுமையை ஒத்திப்போடுகிறது.

21. நமது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் Dehydroepiandrosterone என்ற ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உதவுகிறது.

22. நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்த G உதவுகிறது.

23. வியர்வையை கட்டுப்படுகிறது

24. மைக்ரேன் மற்றும் தலைவழியை போக்குகிறது

25. மூளையை நன்கு இயங்கச் செய்கிறது

26. உடலுக்கான மருத்தவ தேவையை குறைக்கிறது

27. நமது சக்தி (எனர்ஜி) விரயமாகாமல் பாதுகாக்கிறது.

28. விளையாட்டு மற்றும் H இதர செயல்பாடுகிளில் ஆர்வத்தை தூண்டுகிறது

29. ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது

30. விளையாட்டு போட்டிகளில் நாம் சிறப்பாக விளையாட உதவுகிறது

31, உங்கள் உடலுக்கு தேவையான எடையை அளிக்கிறது

32. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக வைக்கிறது

33. நமது நரம்பு மண்டலத்தை பாதுக்கக்கிறது

34. மூளையின் மின் செயல்பாடுகளை பராமரிக்கிறது (brain electrical activity).

35. ஆண்மைக்குறைவை போக்குகிறது.

மன ரீதியான நன்மைகள்

36. தன்னமபிக்கையை அதிகரிக்கிறது

37. நமது இரத்தத்தில் செரோடொனின் அளவை அதகரித்து நமது மனோநிலையையும் நடத்தையையும் சரியாக இருக்க செய்கிறது

38. தேவையற்ற அச்சத்தை போக்கி பயம் சார்ந்த நோய்களை விரட்டுகிறது

39. நமது எண்ணங்களை M கட்டுப்படுத்துகிறது

40. நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி குறிக்கோளில் கவனம் செலுத்த உதவுகிறது.

Rightmantra Meditate Quote3

41. கிரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பாற்றலை அதிகரிக்கிறது

42.  மூளையின் மொத்த சமச்சீர் செயல்பாட்டை (Brain wave coherence) அதிகரிக்கிறது

43. கற்கும் ஆற்றலையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது

44. மனதுக்கு உற்சாகத்தையும் இளமையையும் தருகிறது

45. உணர்சிகளை கட்டுக்கள் வைக்க உதவுகிறது

46. உறவுமுறைகளை மேம்படுத்துகிறது

47. மூளைக்கு முதுமை ஒத்திப்போடப்படுகிறது.

48. தீய பழக்கங்கள் இருந்தால் அவற்றை விரட்டி விடுகிறது

49. உள்ளுணர்வை மேம்படுத்துகிறது.

50. நமது உடலின் மொத்த செயல்பாட்டையும் அதிகரிக்கிறது

51. வீட்டிலும் பணியிடத்திலும் சுமூகமான ஒரு சூழலை நமக்கு ஏற்படுத்தி தந்து உதவுகிறது

52. ஒரு சூழ்நிலையின் முழு பரிமாணத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது

53. சின்னஞ்சிறு அற்பத்தனமான A சச்சரவுகளில் ஈடுபடாமல் நம்மை காக்கிறது

54. மிக கடினமான பிரச்சனைகளை கூட எளிதில் தீர்க்க உதவுகிறது

55. நமது நடத்தையை சுத்தப்படுத்துகிறது

56. நமது WILL POWER அதிகரிக்க உதவுகிறது

57. வலப்பக்க மூளைக்கும் இடப்பக்க N மூளைக்கும் சரியான தொடர்பை ஏற்படுத்தி தருகிறது

58. இக்கட்டான தருணங்களில் சமயோசிதத்துடன் முடிவுகளை மேற்கொள்ள உதவுகிறது.

59. பார்ப்பவற்றை சரியாக உள்வாங்கும் திறனையும் நமது உடலின் தசைக்கூறு செயல்ப்பாட்டையும் மேம்படுத்துகிறது. (Perceptual ability and motor performance).

60. புத்தி சாதுரியம் கூட உதவுகிறது

61. செய்யும் வேளையில் பரம திருப்தி கிடைக்கிறது

62. நாம் நேசிப்பவர்களுடன் சரியான ஒரு உறவு முறையை கையாள உதவுகிறது.

63. மனநல குறைபாடுக்கான சத்தியங்களை T குறைக்கிறது

64. நமது சமூக செயல்பாடு மேம்படுகிறது

65. தேவையற்ற போர்குணத்தை (எதிர்மறையான) கட்டுப்படுத்துகிறது.

66. மதுப் பழக்கம் மற்றும் சிகரெட் பழக்கங்களை கைவிட உதவுகிறது

67. மருந்து, மாத்திரைகளுக்கான தேவைகளை குறைக்கிறது

68. உடலுக்கு தேவையான தூக்கத்தை கிடைக்க உதவுகிறது

69. ஆழ்ந்த தூக்கத்திற்கு உடல் செல்ல R எடுத்துக்கொள்ள நேரத்தை குறைத்து தூக்கமின்மை நோயை விரட்டுகிறது

70. பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்கிறது

71. சாலையில் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் எரிச்சல் மற்றும் a வெறுப்புணர்வை போக்குகிறது. (Road rage).

72. அர்த்தமற்ற சிந்தனையை கட்டுபடுத்துகிறது

73. கவலையை போக்குகிறது

74. கவனிக்கும் ஆற்றலை மேம்படுத்துகிறது. இரக்க குணத்தை A ஏற்படுத்துகிறது.

75. சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

76. சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது

77. ஆக்கப்பூர்வமான செயல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவும் சிந்தனையை செலுத்தவும் உதவுகிறது

78. நமது ஆளுமையை மிக மிக சரியாக பராமரித்து சமூகத்தில் நன்மதிப்பை பெற்று தருகிறது.

79. உணர்வு ரீதியான பக்குவத்தை தருகிறது. (Emotional Maturity).

ஆன்மீக ரீதியிலான பலன்கள்

80. சரியான இடத்தில் சரியானதை வைத்து பார்க்க உதவுகிறது

81. மனஅமைதி, t மகிழ்ச்சியை தருகிறது

82. நமது வாழ்வின் குறிக்கோளை கண்டுபிடிக்க உதவுகிறது

83. நம்மை உணர்ந்துகொள்ள வழி செய்கிறது. (உன்னையறிந்தால்.. நீ உன்னையறிந்தால்….)

84. சகமனிதர்களிடம் கருணை காட்ட r உதவுகிறது

85. ஞானத்தை அதிகரிக்கிறது

86. நம்மையும் மற்றவர்களையும் புரிந்துகொள்ள உதவுகிறதுMeditation is gift

87. உடல், மனம், ஆன்மா மூன்றையும் மகிழ்ச்சியான சமனுக்கு கொண்டுவருகிறது.

88. ஆன்மீக m ரீதியில் மனம் லயிக்க உதவுகிறது

89. நம்மை நாமே விரும்ப உதவுகிறது.

90. பிறரின் தவறுகளை i மன்னிக்கும் சுபாவத்தை வளர்க்கிறது

91. வாழ்க்கை குறித்த நமது மனப்பாங்கை மாற்றுகிறது

92. கடவுளுக்கும் நமக்கும் ஒரு g நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துகிறது

93. வாழ்விற்கு தேவையானவற்றை செய்ய உதவுகிறது. (Synchronization in your life)

94. மனசாட்சியை விஜிஹிப்புடன் வைத்திருந்து நாம் சரியான பாதையில் செல்ல n உதவுகிறது

95. நிகழ்காலத்தின் அருமையை h உணர்த்தி, நிகழ்காலத்தில் வாழ உதவுகிறது

96. பிறரால் நேசிக்கப்படுவதற்க்கான சாத்தியங்களை மேம்படுத்துகிறது.

97. ஈகோவை வெல்ல உதவுகிறது

98. நம் ஆழ்மனதின் ஆற்றலை அறிய உதவுகிறது

99. எல்லாம் அவன் செயல் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி, இறைவனுடன் நமது பந்தத்தை அதிகரிக்கிறது.

100. ஞானோதயம் பெற வழி காட்டுகிறது.

===============================================================

தியானம் செய்வதால் ஏற்படும் பலன்களை சொல்லிடீங்க? ஆனா அப்படி தியானம் செய்றது? எனக்கு அது பத்திய அனா ஆவண்ணா கூட தெரியாதே என்று உங்களில் சிலர் நினைக்கூடும்.

அடுத்த பதிவில் தியானம் எப்படி செய்யவேண்டும் என்பது பற்றி எளிமையான முறையில் உங்களுக்கு விளக்கப்படும்!

(நாம் இதற்கு முன்பு தியானம் செய்திருக்கிறோம். இடையில் அது நின்றுவிட்டது. தற்போது மீண்டும் தினசரி செய்துவருகிறோம். பலன்களை பார்க்கத்தானே போகிறீர்கள்…!)

ஆரம்பத்துல 5 நிமிஷமும் அப்புறம் 15 நிமிஷமும் தினசரி தியானம் செஞ்சிட்டு வாங்க… அப்புறம் பாருங்க… நீங்க ஏங்கும் விஷயங்கள் உங்கள் மடியிலேயே வந்து விழும்!

===============================================================

மிகவும் கஷ்டப்பட்டு இதை தயார் செய்திருக்கிறோம். காப்பி பேஸ்ட் செய்பவர்களிடமிருந்து காப்பாற்ற, பதிவில் நமக்கு மட்டுமே தெரியும்படி ஆங்காங்கே ரகசியக் குறியீடு வைத்திருக்கிறோம். தவறாக எவரும் நினைக்கவேண்டாம். நாங்கள் வளர வேண்டியவர்கள். எடுத்தாளுபவர்கள் நம் தளத்தின் முகவரியை தயை கூர்ந்து அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

===============================================================

[END]

15 thoughts on “தினசரி சில நிமிடம் போதுமே! தியானம் செய்வதால் கிடைக்கும் 100 பலன்கள்!!

  1. சுந்தர் அவர்களுக்கு ,மிகவும் அருமையான பதிவு .அதுவும் தேர்வுகள் நடக்கும் இந்த நேரம் பார்த்து இந்த பதிவு வந்து இருப்பது இந்த காலத்து மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகும்.நான் படிக்கும் காலத்தில் எல்லாம் இந்த மாதிரி எல்லாம் சொல்லி கொடுக்க யாரும் இல்லை .வாழ்க உன் தொண்டு !!!

  2. டியர் சுந்தர்ஜி

    தியானம் பற்றிய article மிக நன்றாக உள்ளது.
    உங்கள் பதிவின் மூலம் தியானத்தின் மகத்துவத்தை அறிந்து கொண்டோம்.

    நாங்களும் இனி மேல் தியானம் செய்ய பழகுவோம். தியானம் செய்வதை பற்றிய கட்டுரையை எதிர்பார்கிறோம்.

    நன்றி
    uma

  3. “நாம் இதற்கு முன்பு தியானம் செய்திருக்கிறோம். இடையில் அது நின்றுவிட்டது. தற்போது மீண்டும் தினசரி செய்துவருகிறோம். பலன்களை பார்க்கத்தானே போகிறீர்கள்…!) – ” – நடுவில் நிறுத்தியதை மறுபடி தொடர நினைவூட்டியமைக்கு நன்றி.

  4. தியானம் எவளவோ முக்கியம் நு இப்போ புரிது. நன்றி சுந்தர் அவர்களுக்கு …

  5. சுந்தர்ஜி,
    தியானம் ஒரு வரபிரசாதம். அது எங்கும் இலவசமாக கிடைப்பது இல்லை. முறையாக இருநாட்கள் அல்லது அதற்கு மேலாக சென்று பணம் கட்டி ஒரு ஆச்சாரியரிடம் கற்றுகொள்வதை நம் தளத்தில் நீங்கள் தரப்போவது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி

  6. சுந்தர் ஜி மிகவும் நல்ல பதிவு ,………….நன்றி

  7. ஆரம்பத்துல 5 நிமிஷமும் அப்புறம் 15 நிமிஷமும் தினசரி தியானம் செஞ்சிட்டு வாங்க… அப்புறம் பாருங்க… நீங்க ஏங்கும் விஷயங்கள் உங்கள் மடியிலேயே வந்து விழும்! -உன்மைதான் சார்..

  8. சுந்தர் சார் …ரொம்ப மாறுபட்ட மிகவும் அருமையான பதிவு . …சிவாய சிவ….

  9. சுந்தர் ஜி மிகவும் நல்ல பதிவு ,………….நன்றி

    நந்தகோபால்
    வந்தவாசி

  10. சுந்தர் சார் காலை வணக்கம்

    தங்கள் பதிவு மிகவும் அருமை

    நன்றி

  11. சார்
    நான் இதற்கு முன்பு தியானம் செய்திருக்கிறேன்.. இடையில் அது நின்றுவிட்டது. மறுபடியும் நினைவூட்டியதற்கு நன்றி.
    அடுத்த பதிவை சிக்கிரம் போடவும்
    selvi

  12. விபாசன தியானம் மிகவும் அற்புதமான ஒன்று .புத்தர் பகவானால் அருளப்பட்டது. சென்னையில் பல்லாவரத்தில் இந்த மையம் உள்ளது . 12 நாட்கள் இருக்க வேண்டும்
    .கட்டணம் இல்லை. நாம் விரும்பியது கொடுக்கலாம்/

    http://courses.dhamma.org/en/schedules/schsetu

  13. \\\”ஒரு பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். அதை சூரியனின் கிரணங்களுக்கு முன்பாக வையுங்கள். எவ்வளவு நேரமானாலும் ஒன்றும் ஆகாது. ஆனால் அதையே ஒரு குவி லென்ஸ் கண்ணாடி மூலம் சூரிய கதிர்களை ஒருமுகப்படுத்தி காட்டுங்கள். சில வினாடிகளில் காகிதம் தீப்பற்றி எரிய ஆரம்பித்துவிடும்.

    Buring paper with லென்ஸ் மனதின் ஆற்றலும் இத்தகையது தான். ஒருமுகப்படுத்தப்படும் மனதின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கிறது. அது உடல், செயல், ஆற்றல் என அனைத்திலும் எதிரொலிக்கும்.\\

    எளிமையான விளக்கத்துடன் 100 பலன்கள் அற்புதம் .

    நன்றி .நன்றி .நன்றி ….

    -மனோகர்

  14. சுந்தர் சார்
    மிக்க நன்றி
    தியானம் தொடருந்து செய்ய நேரமில்லை என்று நினைத்து இருந்தேன். அதிக பலன் இருப்பதை அறிந்து கொண்டேன்.
    தினமும் தியானம் செய்ய போகிறேன்.

    வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *