Home > MONDAY MORNING SPL (Page 9)

சேவை இங்கே சுலபமல்ல!

ஒவ்வொரு ஆண்டு பருவ மழையின் போது சென்னை சற்று திக்கி திணறினாலும் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த முறை தான் கதி கலங்கிப் போனது. அதற்குரிய காரணங்களுக்கு சென்றால் அரசியலோடு கூடிய பதிவை அளிக்கவேண்டியிருக்கும். எனவே நாம் அதில் போகவேண்டாம். இந்த மழை வெள்ள பாதிப்பை இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம். நவம்பர் துவக்கத்தில் பெய்த மழை & டிசம்பர் ஒன்றாம் தேதி பெய்த மழை. முதல் கட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் முடிச்சூர், தாம்பரம்,

Read More

அக்கினிக் குஞ்சு மூட்டிய காட்டுத் தீ ! – தனி ஒருவன் (1)

மக்களுக்கு இன்று தெய்வ நம்பிக்கையைவிட தன்னம்பிக்கையே அதிகம் தேவைப்படுகிறது. தெய்வநம்பிக்கை இல்லாதவர்கள் கூட வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர் வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாது. அவர்கள் முன்பு அந்த கடவுளே வந்து உதவிக்கு நின்றாலும் அவர்களால் முடியாது. எனவே தான், சமீபத்திய வேலூர் சொற்பொழிவின் தலைப்பை கூட, "சோதனைகளை சாதனைகளாக்குவோம்!" என்று தேர்ந்தெடுத்தோம். சொற்பொழிவின் முதலில் நாம் சொன்னது என்ன தெரியுமா? "நீ என்ன பார்க்கிறாயோ அது விதி. அதை எப்படி பார்க்கிறாயோ

Read More

விவேகானந்தர் செய்த சித்திகள் & நவக்கிரகங்களை குளிர்விக்கும் தசாவதார சுலோகம்!

பாரதி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அப்துல் கலாம், இப்படி நம் தேசம் வியக்கும் ஆளுமைகள் பலர் விவேகானந்தரை கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் மனதில் விவேகானந்தர் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல. சித்துக்களை செய்தால் தான் ஒருவரை மகான் என்றே சாமானிய மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சித்துக்கள் புரியாமலே விவேகானந்தர் பலர் தன்னை பின்பற்ற வைத்தார் என்பது தான் விஷயமே. 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 3,000 ஆண்டுகளில்

Read More

99 பொற்காசுகள் வேண்டுமா?

அந்த நாட்டு மன்னனுக்கு எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனதில் ஏனோ நிம்மதி இல்லை. அதற்கு காரணமும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்லுகையில், ஒரு குயவனின் குடிசையை கடக்க நேர்ந்தது. ஒரு சிறு கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு மிக மிக உற்சாகமாக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே பானையை செய்துகொண்டிருந்தான். அருகே அவன் குழந்தை உடைந்த மண் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. குடிசையிலிருந்து வெளிவே வந்த அவன் மனைவி,

Read More

யார் மிகப் பெரிய திருடன் ?

அவன் ஒரு பலே திருடன். வாழ வழி தெரியாமல் சிறு சிறு திருட்டுக்களில் ஆரம்பித்து பின்னர் அது பழகிவிட வீடுகளில் புகுந்து திருடும் மிகப் பெரிய திருடனாகிவிட்டான். ஒரு கட்டத்தில் சாதாரண திருட்டு போரடித்துவிட, பிரபலங்களின் வீடுகளில் புகுந்து திருட ஆரம்பித்துவிட்டான். இது மிகவும் சேலஞ்சிங்காக சுவாரஸ்யமாக இருந்தது அவனுக்கு. ஒவ்வொரு வாரமும் ஒரு சினிமா நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என ஏதாவது ஒரு பிரபலத்தின் வீட்டில் தனது கைவரிசையை

Read More

அம்பாள் அனுக்ரஹம்! பெரியவா கடாக்ஷம்!!

நமது ரைட்மந்த்ரா அலுவலகத்தில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை பற்றிய பதிவு இது. ஆயுத பூஜை என்பதே செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து கொண்டாடப்பட்டு வரும் ஒன்று. அதுவும் நம் தளத்திற்கு என்று தனி அலுவலகம் துவக்கிய பின்பு வரும் முதல் ஆயுத பூஜை என்பதால் நிச்சயம் சற்று வித்தியாசமாக கொண்டாடவேண்டும் என்று விரும்பினோம். ஆனால், எப்படி என்று தான் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. பூஜைக்கான ஏற்பாடுகள் மற்றும் பர்சேஸிங்கில்

Read More

எது உண்மையான கௌரவம்?

"வாழ்வில் ஒவ்வொருவரும் எப்படி இருக்கவேண்டும்?" என்பது பற்றிய போதனையை ஒரு துறவி ஊர் ஊராக சென்று சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். கீதை முதல் ராமாயணம் வரை, ஏவுகணை முதல் ஏரோப்பிளேன் வரை அவர் தொடாத சப்ஜெக்ட்டுக்களே இல்லை எனலாம். மக்கள் அவர் பேசுவதை கேட்க முண்டியடித்துக்கொண்டு செல்வார்கள். பல புராண இதிகாச சம்பவங்கள், குட்டிக்கதைகள் என அவரது உரை பிரமாதமாக இருக்கும். சொற்பொழிவு முடிந்த பின்னர் கூட மக்கள் அவரை ஆற்றிய உரையை

Read More

சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!

நமது பயணத்தில் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம்மிடம் ஏற்படுத்தும் தாக்கத்தினால் (?!) திடீர் திடீரென்று ஒரு சந்தேகம் நமக்கு வந்துவிடும். "ஆமாம்... நாம போற பாதை சரிதானா?" என்கிற சந்தேகம்தான் அது. எப்போதெல்லாம் தன்னம்பிக்கை குறைகிறதோ, எப்போதெல்லாம் செய்யும் பணிகளில் சவால்கள் தென்படுகின்றனவோ அப்போதெல்லாம் நமக்கு உற்ற துணையாக விளங்குவது மூன்று விஷயங்கள் : 1)திருக்குறள் 2)சுவாமி விவேகானந்தரின் உரைகள் & 3)பாரதியார் கவிதைகள். இவற்றில் மூழ்கும்போது நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு ஏதோ

Read More

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

நமது நூல் வெளியீட்டு விழாவுக்கு சில நாட்கள் முன்பு விழாவின் ஸ்டேஜ் பேக்-டிராப் டிசைனை நமது அலுவலகத்தில் அமர்ந்து செய்து முடித்த நேரம்.... முதல் ப்ரூஃப் (MAIDEN DESIGN) திருப்திகரமாக இருந்தது. இன்னும் சிலச் சில நகாசு வேலைகள் செய்துவிட்டு பிரிண்டிங் அனுப்பிவிடலாம் என்று கருதி அனைத்தையும் முடித்து டிசைனை இறுதி செய்துவிட்டோம். ஆனால், பேனரில் ஏதோ ஒன்று மிஸ்ஸாவது போல இருந்தது. திரும்ப திரும்ப பார்த்தோம் ஒன்றும் புரியவில்லை.

Read More

நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….

வேலூர் மாவட்டம் குடியேற்றம் (குடியாத்தம்) நகரில் அமைந்துள்ள தொன்மையான காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் 27/09/2015 ஞாயிறன்று மாலை நமது பௌர்ணமி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. பல்வேறு மேடைகளில் நாம் இதுவரை பேசியிருந்தாலும் அவை அனைத்தும் நமது மேடைகள். நாம் நடத்திய விழாவின் மேடைகள். எனவே என்ன பேசவேண்டும் என்பது குறித்த பதட்டம் நம்மிடம் இருந்தது கிடையாது. அரிதாக வெளி மேடைகளில் தோன்றியிருந்தாலும் அவை வரவேற்புரைக்காக மட்டுமே. ஆனால் இந்த நிகழ்ச்சி அப்படி

Read More

எதிர்பாராமல் கிடைத்த ஒத்துழைப்பும் உதவியும்!

"நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான்" என்று கூறுவார்கள். பல சமயங்களில் பிரமிக்கத்தக்க பாடங்களை எதிர்பார்க்காத கோணங்களில் எதிர்பார்க்காத நபர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது உண்டு. பொதுவாக மனிதர்களை சரியாக எடைபோடுவதில் நாம் தவறுவதில்லை. காரணம், கடந்து வந்த பாதையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள், சந்தித்த நபர்கள்! நமது கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை. ஆனால் அரிதினும் அரிதாக சில சமயம் நமது கணிப்புக்கள் உல்டாவாகி போவதுண்டு. அப்படிப்பட்ட ஒன்றை பார்ப்போம். முக்கியப் பிரமுகர்களின்

Read More

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா?

சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில் ஹவுஸிங் போர்டு குவார்ட்டர்ஸ் ஒன்று உள்ளது. அந்த குவார்ட்டர்ஸில் குடியிருக்கும் ஒருவர் பூண்டி ஊன்றீஸ்வரர் கோவிலுக்கு செல்லும்போது நமது 'தினசரி பிரார்த்தனை' படத்தை அங்கு பார்த்திருக்கிறார். அந்த பிரார்த்தனை வரிகள் பிடித்துப் போக, அதை மொபைலில் படமெடுத்துக்கொண்டு வந்தவர், அதிலிருந்த அலைபேசி எண் மூலம் நம்மை தொடர்புகொண்டு அந்த படம் தமக்கும் வேண்டும் என்றார். நாம் சாஃப்ட் காப்பியை மின்னஞ்சல் அனுப்பி அவரை பிரிண்ட் எடுத்துக்கொள்ளச்

Read More

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!

இரண்டு புத்தகங்கள் வெளியிடும் இந்த மலையை தாண்டும் நிகழ்வு எப்படி நமக்கு சாத்தியமானது என்று உங்களில் பலருக்கு ஒரு சந்தேகம் இருப்பது நமக்கு தெரியும். அதற்கு விடை கூறுவதற்கு முன்பு உங்களிடம் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறோம். நம் தளத்தின் வளர்ச்சி குறித்து நமக்கு மிகப் பெரும் நம்பிக்கை இருக்கும் அதே நேரம், நமக்கு ஒரு அச்சம் அடிமனதில் இருந்து வந்தது. CONCEPT THEFT எனப்படும் 'எண்ணத் திருட்டு' குறித்த பயம் தான்

Read More

பாரதி மறைந்தது எப்படி? திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன??

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்" என்று காலனுக்கே சவால் விட்டவர் பாரதி. அவர் மரணம் இன்னும் ஒரு புரியாத மர்மம் தான். இருப்பினும் பாரதியின் இறுதிக்காலத்தில் அவருடன் இருந்தவர்கள் கூறியதை வைத்து வரலாற்று ஆசிரியர்கள் ஒரு சில விஷயங்களை கூறுகின்றனர். இன்று செப்டம்பர் 11 பாரதி நினைவு நாள். அது தொடர்பான பதிவு தான் இது. சென்னை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் பக்கத்து

Read More