Home > மகா பெரியவா (Page 6)

“கண்ணீரை கண்ணீரால் ஆற்றுங்கள்” – குரு தரிசனம் (8)

மகா பெரியவா தான் ஸ்தூல சரீரத்துடன் இந்த பூவுலகில் இருந்த போது தம்மை நாடி வந்தவர்கள் எத்தனையோ பேரின் பாவங்களை பொசுக்கி நல்வழி காட்டியிருக்கிறார். அவர்கள் சொல்லாமலே தன் ஞான திருஷ்டியினால் அவர்களின் குறைகளை உணர்ந்து அவற்றை களைவதற்கு உரிய வழிகளை சொல்லியிருக்கிறார். காஞ்சியில் அவரை சந்தித்து தங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிக்கொண்டவர்கள், பாபம் தொலைத்தவர்கள், ஜென்ம சாபல்யம் பெற்றவர்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கில் உண்டு. தினம் தினம் நூற்றுக்கணக்கான அதிசயங்கள் காஞ்சியில்

Read More

கரைவது கண்ணீர் அல்ல… நம் வினைகள்! – குரு தரிசனம் (7)

மகா பெரியவா அவர்களை பற்றிய பதிவுகளை நாம் சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்த தளத்தில் அளித்து வந்தாலும் அதில் சிறு தொய்வு கூட ஏற்பட்டுவிடக்கூடாது... குரு மகிமையை தட்டச்சு செய்யும் பாக்கியமும் அதை உங்களை படிக்க வைக்கும் பாக்கியமும் எள்ளளவு கூட நமக்கு குறைந்துவிடக்கூடாது... என்று தான் குரு வாரம் என்று கூறப்படும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மகா பெரியவாவை பற்றி பதிவை வெளியிடுவதை நாமே ஒரு வழக்கமாக ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். 'மகா பெரியவா அவர்களை

Read More

மாங்கல்யம் காத்திடுவார், மகிமைகள் பல புரிந்திடுவார் – குரு தரிசனம் (6)

நாளை குருவாரத்தை முன்னிட்டு சிறப்பு பதிவுகள் இடம் பெறப்போவதால் நாளை அளிக்கவேண்டிய இந்த பதிவை இன்றே அளிக்கிறோம். மகா பெரியவாவின் அற்புதங்களும் மகிமைகளும் தோண்ட தோண்ட தங்கச் சுரங்கம் போல வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொன்றும் ஒரு பாடம். நமக்கு. மகா பெரியவா அவர்களின் போதனைகளையும் அவர் அறிவுரைகளையும் ஒருவர் பின்பற்றி வாழ்ந்தாலே போதுமானது. வேறு எந்த நீதி நூல்களையும் பக்தி இலக்கியங்களையும் அவர்கள் படிக்கவேண்டியதில்லை. அவர் நடத்தும் நாடகங்களிலும், லீலைகளிலும்

Read More

டாக்டர்களுக்கெல்லாம் டாக்டருங்க இந்த பெரியவர் – குரு தரிசனம் (5)

1986ல் நடந்த நிகழ்ச்சி. சந்திரமெளளி என்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் கைங்கர்யம் செய்து வந்தார். சந்திரமௌளியின் மாமா ராணுவத்தில் கேப்டனாகப் பணிபுரிந்தவர். கடவுள் நம்பிக்கையுடையவராக இருந்தாலும் மடத்திலும் பெரியவாளிடத்திலும் ஈடுபாடு இல்லாதவர். அவரது குடும்பத்தினரும் அப்படியே. வேலூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது மாப்பிள்ளைக்கு திடீரென்று சிறு நீரகத்தில் கோளாறு. வேலூரில் பரிசோதனை செய்த டாக்டர் கையை விரித்துவிட்டார். அன்றிரவு மிகவும் துக்கத்துடன் இருந்த அந்த கேப்டனின் பெண் சொப்பனத்தில் ஸ்ரீ பெரியவாள் தோன்றி

Read More

தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும்! – குரு தரிசனம் (4)

குரு பூர்ணிமாவையொட்டி ஜூலை 12 சனிக்கிழமை அன்று சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நண்பர் திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் 'குரு மகிமை' சொற்பொழிவு நடைபெற்றது. சுவாமிநாதன் அவர்களின் சொற்பொழிவுகளை கூடுமானவரை நாம் மிஸ் செய்வதில்லை. அதுவும் குரு பூர்ணிமா அன்று குருவின் மகிமையை கேட்காமல் விட்டுவிடுவோமா? புதுவையிலிருந்து இந்து ஆன்மீக கண்காட்சியை பார்க்க நண்பர் சிட்டி நம்முடைய அழைப்பின் பேரில் வந்திருந்தார். "இரவு என் வீட்டில் தங்கிவிடுங்கள். இந்து ஆன்மீக கண்காட்சியை நாளை

Read More

குருவின் பெருமையும் குருவின் திருவடி பெருமையும் – குரு பூர்ணிமா சிறப்பு பதிவு!

இன்று குரு பூர்ணிமா. குரு பூர்ணிமா என்பது ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி. இந்த நாள் அன்று சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள் வியாசபூசை என்றும் வியாச ஜெயந்தி என்றும் அழைப்பர். இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் இந்த குரு பூர்ணிமா

Read More

மகா பெரியவா கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு; மறுப்பதிலும் அர்த்தம் உண்டு – குரு தரிசனம் (3)

"இறைவன் கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு. கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் உண்டு" என்று கூறுவார்கள். நாம் வருந்தி வருந்தி கேட்பது நமக்கு நன்மை தருமா என்பதை  நாம் அறியமாட்டோம். அவன் ஒருவனே அறிவான். எனவே நமது அபிலாஷைகளை அவன் பாதார விந்தங்களில் சமர்பித்துவிட்டு நமது கடமையை நாம் செய்துவரவேண்டும். குருவருளும் அப்படித்தான். குரு கொடுத்தால் நூறு நன்மை. மறுத்தால் இருநூறு நன்மை. கீழ்கண்ட சம்பவமும் உணர்த்துவது அதைத் தான். கிரி ட்ரேடிங்

Read More

‘கனவில் பறந்த காஞ்சி மகானின் உத்தரவு!’ – குரு தரிசனம் (2)

நாம் ஏற்கனவே சொன்னது போல இனி ஒவ்வொரு குரு வாரமும் 'குரு தரிசனம்' தான். மகா பெரியவா தொடர்பான பதிவுகள் இந்த பகுதியில் இடம்பெறும். நாம் படித்த, சிலாகித்த, உருகிய - மகா பெரியவா தன் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய - அற்புதங்கள் தொடர்பான நிகழ்வுகளை உங்களிடையே பகிர்ந்துகொள்வோம். அதே போல, ஒரு வியாழன் விட்டு ஒரு வியாழன் மகரிஷிகளை பற்றிய 'ரிஷிகள் தரிசனம்' தொடர் இடம்பெறும். மகா பெரியவா தவிர,

Read More

உணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

காஞ்சி மகான் தான் ஜீவனோடு வாழ்ந்த காலத்தில் அனுதினமும் தன்னை நாடி ஓடிவந்த எத்தனையோ பக்தர்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கிறார். ஊழ்வினைகளால் ஏற்படும் -  மிக மிகப் பெரிய டாக்டர்களால் கூட தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறார். அது தொடர்பான நிகழ்வுகளை படிக்க படிக்க, சிலிர்பூட்டுபவை. அவர் இன்னும் ஒரு நூறு வருடம் நம்மோடு இருந்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது. (இனி ஒவ்வொரு குரு வாரமும்

Read More

நடிகரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்பு முனை! மகாபெரியவா ஜெயந்தி SPL 2

மனித வாழ்க்கையே விசித்திரமானது. எங்கே, எப்போது, யார் மூலம் திருப்பு முனை ஏற்படும் என்றெல்லாம் தெரியாது. நாம் மிக மிக முக்கியமான சந்திப்பாக நினைப்பது வெகு சாதாரணமாக பத்தோடு பதினொன்றாக போய்விடும். வெகு சாதாரணமாக நினைப்பது மிகப் பெரிய திருப்பு முனையை  ஏற்படுத்திவிடும். மஹா பெரியவா அவர்கள் மீதும் நாம் எப்போதுமே பெரு மதிப்பு வைத்திருந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நமக்கு அவரை பற்றிய அதிகம் தெரியாது. அவர் புரிந்த

Read More

பக்தையை காப்பாற்றிய மரிக்கொழுந்து – மகாபெரியவா ஜெயந்தி SPL 1

இன்று வைகாசி அனுஷம். மகா பெரியவாவின் அவதார ஜெயந்தி. பெரியவா, தான் வாழ்ந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய, நிகழ்த்தி வரும் அற்புதங்களுக்கு அளவே இல்லை.  தனது ஞான திருஷ்டியினால் எத்தனையோ முறை பக்தர்களை வரவிருக்கும் ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார். அத்தகைய அற்புதங்களுள் சுவாரஸ்யமான ஒன்றை பார்ப்போம். அபார கருணாஸிந்தும் ஞானதம் ஸாந்தரூபிணம்! ஸ்ரீ சந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்!! அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமா இருக்கும் எடுத்துக்கோ! பெரியவாளை

Read More

ராமநவமியன்று நாம் செய்ய வேண்டியது என்ன? வழிகாட்டும் மஹா பெரியவா!

வரும் ஏப்ரல் 8, செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ ராமநவமி. இராமபிரான் அவதரித்த திருநாள். பரமேஸ்வரனே ராம, ராம, ராம என்று மூன்று முறை மனமொன்றி சொன்னால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை சொல்லிய பலன் கிடைக்கும் என்று கூறுகிறார் என்றால், இராம நாமத்தின் மகிமையை எப்படி அறுதியிட்டு சொல்வது? பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமன், எதற்கு மானிடனாக பிறந்து மரவுரி தரித்து காட்டிலும் மேட்டிலும் திரியவேண்டும்? திரேதா யுகத்தில் மக்கள், "இறைவன் படைத்த வேதங்களின் படி வாழ்வது

Read More

‘என் குழந்தைகளுக்கு இப்படியா?’ கதறி அழுதவரிடம் மகா பெரியவா சொன்னது என்ன?

நாம் இது வரை சந்தித்த சாதனையாளர்களுள் மிக மிக எளிமையான ஒருவர் மதுரா டிராவல்ஸ் திரு.வீ.கே.டி. பாலன் அவர்கள் என்றால் மிகையாகாது. நமது பாரதி விழாவிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்புற செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். மகா பெரியவா அவர்களை பற்றி பாலன் அவர்களின் கருத்து என்ன? அவரை பற்றி ஏதேனும் பேசியிருக்கிறாரா அல்லது எழுதியிருக்கிறாரா என்கிற சந்தேகம் நமக்கு இருந்துகொண்டு வந்தது. என்ன ஆச்சரியம்... அடுத்த சில நாட்களில் அதற்கு

Read More

நடுக்காவேரி மகாகணபதி தரிசனம் – பிள்ளையை பார்க்க வழி காட்டிய அன்னை!

நடுக்காவேரியை சேர்ந்த ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி தம்பதியினருக்கு மஹா பெரியவாவின் அருள்வாக்கால் சந்தான ப்ராப்தி கிடைத்தது பற்றியும், அதற்கு சாட்சியாக குடமுருட்டி நதிக்கரையில் எழுந்தருளியிருக்கும் ப்ரஸன்ன மஹாகணபதியை பற்றியும் படித்ததில் இருந்து ப்ரஸன்ன மஹாகணபதியை எப்படியாவது நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் நீண்ட நாட்களாக நம்மை ஆட்கொண்டிருந்தது. ஏற்கனவே திரு.சுவாமிநாதன் அவர்களின் 'மகா பெரியவா' நூலில் இது பற்றி படித்தபோது இதே போன்று ஆவல் எழுந்தது. ஆனால் இந்த முறை

Read More