Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ‘கனவில் பறந்த காஞ்சி மகானின் உத்தரவு!’ – குரு தரிசனம் (2)

‘கனவில் பறந்த காஞ்சி மகானின் உத்தரவு!’ – குரு தரிசனம் (2)

print
நாம் ஏற்கனவே சொன்னது போல இனி ஒவ்வொரு குரு வாரமும் ‘குரு தரிசனம்’ தான். மகா பெரியவா தொடர்பான பதிவுகள் இந்த பகுதியில் இடம்பெறும். நாம் படித்த, சிலாகித்த, உருகிய – மகா பெரியவா தன் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய – அற்புதங்கள் தொடர்பான நிகழ்வுகளை உங்களிடையே பகிர்ந்துகொள்வோம். அதே போல, ஒரு வியாழன் விட்டு ஒரு வியாழன் மகரிஷிகளை பற்றிய ‘ரிஷிகள் தரிசனம்’ தொடர் இடம்பெறும்.

மகா பெரியவா தவிர, குருவாரத்தில் இதர குருமார்களை பற்றிய அரிய செய்திகளும் தொடர்களும் கூட இடம்பெறும். போனஸாக மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் தனது பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய நிகழ்த்திவரும் மெய்சிலிர்க்கும் மகிமைகளும் இந்த குருதரிசனம் பகுதியில் இடம்பெறவிருக்கிறது.  இதில் பல விஷயங்கள் உங்களுக்கு புதிதாக இருக்கும்.

“தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே’

இந்த வாரம் காஞ்சி மகான் அன்னதானம் செய்வது தொடர்பாக தனது பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி அருளிய பரவச நிகழ்வை பார்ப்போம்.

கனவில் பறந்த உத்தரவு !

சங்கர மடத்திற்கு சொந்தமான வீடு ஒன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் இருக்கிறது. ஒரு சமயம் வரதராஜருக்கு திருவிழா நடந்தபோது பெரியவா அந்த வீட்டில் தங்கியிருந்தார்.  மிக முக்கியமான கருட சேவையன்று பெருந்திரளாக பக்தர்கள் கூடுவர். அப்போது வெளியூரில் இருந்து வருவோருக்கு சித்ரான்னங்கள் வழங்கினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் பெரியவருக்குத் தோன்றியது.

Maha Periyava

மடத்தின் ஸ்ரீ கார்யத்தை (திருப்பணி செய்பவர்) அழைத்து, “கருடசேவை தரிசன் பண்ண வெளியூர் பக்தர் நிறைய வருவா ! அவாளுக்கு ஏதானும் சித்ரான்னம் செய்து விநியோகம் பண்ண நன்னாயிருக்கும்.  குறைஞ்சது 20 ஆயிரம் பொட்டலத்திற்கு ஏற்பாடு செய்யணும்” என்றார்.

ஸ்ரீ கார்யம் உணவு தயாரிப்பதில் இருக்கும் சிரமத்தை எல்லாம் எடுத்துச் சொன்னார்.  உடனடியாக வேலையாட்கள் இடம் எல்லாம் தேடிப் பிடிக்க முடியாது என்று தயங்கினார்.  இதைக் கேட்ட பெரியவர் , ”சரி பார்க்கலாம்” என்று சொல்லி மௌனமாகி விட்டார்.

கருட சேவை அன்று சென்னையை சேர்ந்த பணக்காரர் ஒருவர்,  காலை 11 மணிக்கு  காஞ்சி பெரியவர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார்.  சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் என சித்ரான்னம் கட்டிய பொட்டலங்கள் பார்சலாக அவர் வசம் இருந்தது.  இது கண்ட ஸ்ரீ கார்யத்திற்கு மனதில் ஒரே ஆச்சர்யம்!

அந்த பணக்காரரிடம் “நீங்கள் எதற்காக இந்த பொட்டலங்களை இங்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்? என்று  கேட்டார். அவரோ “காஞ்சி பெரியவா கனவில் வந்து இது மாதிரி கொண்டு வரச் சொல்லி உத்தரவு போட்டார்” என்று விளக்கம் அளித்தார்.

கனவில் அவர் சொன்னபடியே தான் சென்னையில் இருந்து சமையல் கலைஞர்களை காஞ்சிபுரத்திற்கு  அழைத்து வந்ததாகவும் காஞ்சிபுரம் காந்தி ரோட்டிலுள்ள லட்சுமி டாக்கிஸ் மைதானத்தில் சமையல் ஏற்பாடுகளை செய்து  உணவு தயாரித்தாகவும் வரதராஜரை கருட சேவையில் தரிசிக்கும் பக்தர்களுக்கு அதை வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

“காஞ்சி பெரியவரின் தெய்வீகத் தன்மையை எடுத்துரைக்க வார்த்தைகள் ஏதுமில்லை!” என சங்கர மடத்தின் ஸ்ரீ கார்யம் வியந்தார்.

(நன்றி : தினமலர் – ஆன்மீக மலர் | தட்டச்சு : www.rightmantra.com)

===========================================================
Also check :

குரு தரிசனம் (1)

உணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

===========================================================

[END]

 

11 thoughts on “‘கனவில் பறந்த காஞ்சி மகானின் உத்தரவு!’ – குரு தரிசனம் (2)

  1. குருவின் மகிமையை ஒவொரு குரு வாரமும் நாம் படிப்பதற்கும் , கேட்பதற்கும் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
    ஸ்ரீ கார்யத்தால் சித்ரானம் செய்வதற்கு ஏற்படும் சிரமத்தை மனதில் கொண்டு தனது பக்தனின் கனவில் தோன்றி அன்ன தான கைங்கர்யத்தை வெகு எளிதாக நிறைவேற்றிய குருவின் தெய்வீக தன்மையை என்னவென்பது..

    தங்கள் பதிவிற்கு நன்றி.

    ராகவேந்திரருடன், ஷிர்டி பாபாவின் புனித வரலாற்றையும் பதிவாக போடவும்

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்
    நன்றி
    உமா

    1. நீங்கள் ஆற்றும் சொற்பொழிவுகளில் இருந்து நான் கேட்ட சில விஷயங்களும் இந்த தொடரில் இடம் பெறும் சார்.

      – சுந்தர்

  2. சுந்தர்ஜி
    அருமையான பணியினை துவக்கி உள்ளீர்கள்! அற்புதம்! ஆனந்தம் !! பெரியவா உள்ளிட்ட குருமார்களின் மகிமைதனை நம் தளத்தில் தரிசிக்க ஆரம்பித்து இருப்பது மிக மிக ஆனந்தமாக உள்ளது.
    குரு மகிமை வாசகர்கள் அனைவர்க்கும் ஒரு நல்ல திருப்புமுனையினை நம் தளத்தின் வாயிலாக ஏற்படுத்தும் என நாம் நம்புகிறோம். குருவின் பெருமைதனை எடுத்து சொல்லும் பாக்கியமும் கேட்கும் பாக்கியமும் அனைவருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காது. சுந்தர்ஜி ! தாங்கள் பாக்கியவான்!! இன்று உண்மையில் பெருமைப்பட்டு கொள்கிறோம் நம் தளத்திற்கு வந்ததற்கு! நம்மை ஆட்கொண்ட குருமார்களுக்கு வந்தனம்!! நன்றி!!

  3. மகா பெரியவரின் லீலைகள் சொல்லில் அடங்காது…குருவே சரணம்….

    என் இஷ்ட்ட தெய்வம் ஸ்ரீ குருரஜாரின் மகிமைகளை ஆவலுடன் எதிர்பாக்கும்…..

    விசு

  4. “கு” என்றால் இருள் “ரு” என்றால் நீக்குபவர்!

    குருவின் பாத கமலங்களை பூஜிப்பது அதையே தியானிப்பது, இறை அருள் பெற உதவும்!

    நல்ல செய்திகளை தொகுத்து வழங்கும் நண்பர் சுந்தருக்கு வாழ்த்துக்கள்.

    நன்றி
    வால்டேர்.

    1. குரு என்ற சொல்லுக்கு மிக மிக அற்புதமான விளக்கம்.

      தங்கள் பின்னூட்டங்களுக்கும் சீரிய கருத்துக்களுக்கும் நன்றிகள் பல.

      – சுந்தர்

  5. நமஸ்காரம். ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் எண்ணற்ற லீலைகளை , அதிசியங்களை மேலும் மேலும் பிரசுரிக்கவும் . நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம். உங்களுக்கு எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

  6. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர….
    மகா பெரியவா சரணம்
    அருமையான பதிவு சார்
    ஆமாம் ஷிர்டி சாய் பாபாவைப் பற்றிய தகவல்களையும் முடிந்தால் பதிவு செய்யுங்கள் படிப்பதற்கு ஆவலாக உள்ளோம்
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *