Home > ஆன்மிகம் (Page 39)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

தமிழ் சினிமாவில் எத்தனையோ தரமான பக்தி திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. நமது ஆன்மீக பசியை தூண்டி விட்டிருக்கின்றன. துவண்டு கிடக்கும் உள்ளங்களை தட்டி எழுப்பியிருக்கின்றன. அத்தகைய திரைப்படங்களை இன்றைய இணைய வாடிக்கையாளர்களுக்கும் புதிய தலைமுறையினருக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் மீண்டும் அடையாளம் காட்டும் ஒரு முயற்சியே இந்த பகுதி. நல்ல புத்தகங்களை, பக்தி நூல்களை படிப்பதற்கு தெரிந்து கொள்வதற்கு நேரமும் சூழ்நிலையும் ஒத்துவருவது பலருக்கு சிரமமாக இருக்கும் இன்றைய காலகட்டங்களில் அட்லீஸ்ட் இது போன்ற

Read More

இருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!

கடந்த சரஸ்வதி பூஜை திருநாளன்று, "அன்னயாவினும் புண்ணியங்கோடி" என்னும் தலைப்பில் நாம் ஒரு பதிவை அளித்திருந்தோம். அதில் கல்விக்கடவுள் அன்னை கலைவாணிக்கு உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடிய ஏதாவது ஒன்றை நாம் செய்ய விரும்புவதாக கூறியிருந்தோம். இதற்காக கோவை மாவட்டம் இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு முன்மாதிரி பள்ளியாக மாற்றிய சாதனையாளர்கள் தலைமை ஆசிரியர் திருமதி.சரஸ்வதி மற்றும் உதவி ஆசிரியர் திரு.பிராங்க்ளின் இருவருடனும் ஆலோசித்தோம். அப்போது ரீசார்ஜ்

Read More

உங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு அதிசய ஸ்லோகம்!

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்று சொல்கிறார்களே... அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா? ஆபத்தில் இறைவனின் திருவடி உதவுவதை போன்று உடன் பிறந்த அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள் என்பது தான். ஆனால், நம்ம ஆட்கள் அடி, உதை, வெட்டு, குத்து என்று தங்கள் சௌகர்யத்துக்கு ஏற்றார்போல, இந்த அழகான பழமொழியை மாற்றிக்கொண்டு விட்டனர். எந்த  ஆலயத்திற்கு  சென்றாலும் இறைவனை தரிசிக்கும்போது, திருவடிகளை தான் முதலில் தரிசிக்கவேண்டும். அதுவும்

Read More

யுக புருஷனை தரிசித்து பாவங்களை தொலைத்தேன்! சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு!! — “இதோ எந்தன் தெய்வம்” — (2)

நமது “இதோ எந்தன் தெய்வம்” தொடரின் அடுத்த அத்தியாயம் இது. படிக்கும் உங்களுக்கும் பாவங்கள் தொலையும் என்பது மட்டும் உறுதி. சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்த செய்தி ஒன்று நெஞ்சை மிகவும் கனக்க வைத்தது. திருப்பதி நகரில் பிள்ளைகளுக்கு நடுவே வயதான தங்கள் தாயை யார் பராமரிப்பது என்று எழுந்த சண்டையில் அந்த 82 வயதான தாயை கட்டிலுடன் கொண்டு போய் ரோட்டில் போட்டுவிட்டு போய்விட்டனர் மகன்கள். கடந்த 15 நாட்களாக மழையிலும்

Read More

அன்னாபிஷேகத் திருநாள் — இன்று சிவனை தரிசித்தால் கோடி சிவதரிசனத்துக்கு சமம்!

சிவபெருமான் அபிஷேகப் பிரியன். திருமால் அலங்காரப் பிரியன். ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியில் சிவனுக்கு நடக்கும் அன்னாபிஷேகம் மிகுந்த சிறப்பு பெற்றது. பொதுவாக அன்னத்தை  போன்ற கலவை சாதம் (தயிர் சாதம், எலுமிச்சம் சாதம், எள் சாதம், சர்க்கரை பொங்கல்) செய்து அதைத் தான் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வார்கள். ஆனால் சிவனுக்கு மட்டுமே வெறும் அன்னத்தை அபிஷேகம் செய்வார்கள். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அன்னாபிஷேக விழா இன்று பெரும்பாலான சிவாலயங்களில் நடைபெறுகிறது. அன்னாபிஷேகமே பஞ்ச

Read More

“அன்னயாவினும் புண்ணியங்கோடி…” — கலைமகள் மனம் குளிர எங்களின் எளிய முயற்சி!!

சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் கூறியுள்ளபடி கல்விக்கடவுள் அன்னை சரஸ்வதியின் பூஜையை இன்றைக்கு நாம் கொண்டாடுவது ஒரு பக்கம் இருக்க, அன்னை சரஸ்வதிக்கு உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் எதையாவது செய்யவேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது. கருவறையில் மட்டும் கடவுளை தேடுபவன் அல்ல என்றுமே நான். சரஸ்வதி பூஜை திருநாளான இன்று யாராவது ஒரு ஏழை மாணவனுக்கு அவன் கல்வி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு சிறிய உதவி செய்யவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவு

Read More

தொலைந்த வாழ்க்கை நிமிடங்களில் மீண்ட அதிசயம் — “இதோ எந்தன் தெய்வம்” – புதிய தொடர் (1)

இது நடந்து ஒரு ரெண்டு மூணு வருஷம் இருக்கும். என் வாழ்க்கையில மறக்க முடியாத சம்பவம் இது. அது ஒரு விடுமுறை நாள். மணி இரவு 8.00 pm இருக்கும். நுங்கம்பாக்கத்தில் ஒரு வேலையை முடித்துவிட்டு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியே பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். வள்ளுவர் கோட்டமெல்லாம் தாண்டிய பிறகு, கோடம்பாக்கம் பிரிட்ஜில் சென்று கொண்டிருந்தேன். விடுமுறை நாளில் கூட ஓரளவு பரபரப்புடனேயே இருந்தது கோடம்பாக்கம் பாலம். (லீவ் நாளிலேயே இப்படின்னா மத்த

Read More

மஹாளய அமாவாசையும் நமது ஏழு தலைமுறையும் – அரிதினும் அரிய உண்மைகள்!

மஹாளய அமாவாசை பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் சொல்லிகொண்டே போகலாம். பொதுவாகவே அமாவாசை தினத்தை மிகவும் புனிதமாக கருதுவர். ஆகையால் தான் அதற்க்கு 'நிறைந்த நாள்' என்ற பெயரும் கூட உண்டு. நாம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் எவ்வித குறைகளும் இன்றி நலமோடு வாழ, இல்லறம் தழைக்க, நமது முன்னோர்களின் (பித்ருக்களின்) ஆசி மிக மிக அவசியம். அவர்களுக்கு செய்ய வேண்டிய சாஸ்திர மத ரீதியிலான சம்பிரதாயங்களை புறக்கணித்துவிட்டு, நீங்கள் என்ன தான்

Read More

யார் பெரிய பிச்சைக்காரர்கள்?

கோவிலுக்கு போகும்போதோ வரும்போதோ பிச்சையிடக்கூடாது என்று கூறுகிறார்களே. உண்மையில் எப்போது தான் நாம் பிச்சையிடுவது என்று நண்பர் ஒருவர் இங்கு கேட்டிருந்தார். ஆலயம் செல்கையில் பிச்சையிடவேண்டாம் என்று எந்த சாஸ்திரத்திலும் கூறியிருப்பதாக எனக்கு தெரியவில்லை. சொல்லப்போனால் இரப்போர்க்கும் வறியவர்க்கும் பிச்சையிடுவது என்பது நமது பழக்க வழக்கங்களில் பாரம்பரியங்களில் ஒன்று. நமது வாழ்க்கை முறையோடு பின்னிப்பிணைந்த ஒன்று. யோசித்துப் பார்த்தால் நாம் அனைவருமே ஒருவகையில்  பிச்சைக்காரர்கள் தான். கோவிலுக்கு சென்று நாம் இறைவனிடம் வைக்கும்

Read More

ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!

ஆலயங்களுக்கு செல்வது அதுவும் புராதன ஆலயங்களுக்கு செல்வது என்பது நமக்கு கவசம் போன்றது. 32 பற்களுக்கிடையே நாக்கு கடிபடமால் வாழ்வது எப்படியோ அப்படித்தான் நமது வாழ்க்கையின் போக்கும் இருக்கிறது. எண்ணற்ற துன்பங்களும் பிரச்னைகளும் நாம் அறிந்தோ அறியாமலோ நம்மை சூழ்ந்திருக்க, நாம் அவற்றில் சிக்காமல் லாவகமாக நமது வாழ்கை பயணத்தை தொடர இறைவனின் திருவருள் மிகவும் அவசியம். ---------------------------------------------------------------------------------------- நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும் நின்னடியா

Read More

சனியின் கொடுமை தாளவில்லையா?

சனிப் பெயர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அன்பர்களுக்கு அதன் கடுமை குறைய இதோ ஒரு எளிய வழி. கால நேரம்,  இழப்பு மற்றும் இதர சகல வித துன்பங்களையும் கட்டுப்படுத்தும் சனி பகவான் நவக்கிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்தவர். சனியின் பிடியால் அவதியுறுபவர்களுக்கு சனி தோறும் சனி பகவானுக்கு எள்ளு முடிச்சு போட்ட நல்லெண்ணெய் விளக்கேற்றுவது, காக்கைக்கு எள்ளு சாதம் வைப்பது, ஏழை எளியவர்களுக்கு உதவுவது என்று பல பரிகாரங்கள் உண்டு. இவற்றுள் உங்களுக்கு எது சௌகரியமோ

Read More

வாருங்கள்…. வாழ்ந்துகாட்டுவோம்…!

அனைவருக்கும் வணக்கம். இரையைத் தேடுவதோடு இறையையும் தேடு என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். அதன்படி எனது வாழ்க்கை பயணத்தில் எனது தேடலில் ஏற்பட்ட விளைவு தான் இந்த தளம். ஏற்கனவே ONLYSUPERSTAR.COM என்ற தளத்தை நான் கடந்த பல ஆண்டுகளாக நடத்திவருகிறேன். சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி அவர்களைப் பற்றிய பிரத்யேக செய்திகளை தாங்கி வரும் அந்த தளத்தில், அவரது சினிமா மற்றும் பொது வாழ்க்கை பற்றிய செய்திகளையும் தாண்டி பயனுள்ள பல நல்ல

Read More