Saturday, February 23, 2019
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > All in One > வாருங்கள்…. வாழ்ந்துகாட்டுவோம்…!

வாருங்கள்…. வாழ்ந்துகாட்டுவோம்…!

print
னைவருக்கும் வணக்கம். இரையைத் தேடுவதோடு இறையையும் தேடு என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். அதன்படி எனது வாழ்க்கை பயணத்தில் எனது தேடலில் ஏற்பட்ட விளைவு தான் இந்த தளம்.

ஏற்கனவே ONLYSUPERSTAR.COM என்ற தளத்தை நான் கடந்த பல ஆண்டுகளாக நடத்திவருகிறேன். சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி அவர்களைப் பற்றிய பிரத்யேக செய்திகளை தாங்கி வரும் அந்த தளத்தில், அவரது சினிமா மற்றும் பொது வாழ்க்கை பற்றிய செய்திகளையும் தாண்டி பயனுள்ள பல நல்ல விஷயங்களை பகிர்ந்திருக்கிறேன்.

இருப்பினும், நான் நினைக்கும் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள பிரத்யேகமாக ஒரு தளம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அனைவரும் பயன்பெறும் விதமாக இதை துவக்கியிருக்கிறேன்.

இந்த தளம் துவக்க எனக்கு மிகப் பெரும் உந்துதலாக இருந்த SHIVATEMPLES.COM திரு.நாரயணசாமி அவர்களுக்கும், LIVINGEXTRA.COM நண்பர் திரு.ரிஷி அவர்களுக்கும் என் நன்றி!

வாழ்க்கையில் போராடுபவர்களுக்கும், தேடல் உள்ளவர்களுக்கும், தெய்வ பக்தியும் தன்னம்பிக்கையும் உள்ளவர்களுக்கும் உற்ற துணையாக இந்த தளம் விளங்கும். வாழ்க்கைக்கு பயனுள்ள விஷயங்கள் மட்டுமே இந்த தளத்தில் இடம்பெறும்.

ஆன்மிகம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, மருத்துவம், ஆரோக்கியம், பக்தி இலக்கியங்கள், தமிழ் நன்னெறி நூல்கள், இதிகாசங்கள், பிரபலங்களின் பேட்டிகள், சாதனையாளர்களுடன் சந்திப்பு, திருக்கோவில்கள் பயணம், பல்துறை நிபுணர்களின் பங்களிப்பு என பல வற்றை இந்த தளத்தில் நீங்கள பார்க்கலாம்.

எவருக்கும் அறிவுரை கூறுவது என் நோக்கமல்ல. என்னிடம் நான் திருத்திக்கொள்ளவேண்டியதே நிறைய இருக்கிறது. THOUGHTS SHARING மட்டுமே எனது நோக்கம். தளத்தில் வெளியாகும் பதிவுகளில் அறிவுரை கூறும் தொனி தென்பட்டால் அது எனக்கும் சேர்த்து நான் கூறுவதாக கருத வேண்டுகிறேன்.

‘கற்றது கையளவு. கல்லாதது உலகளவு’ என்பதை என்றும் நினைவில் வைத்திருப்பவன் நான்.

வாருங்கள்…. வாழ்ந்துகாட்டுவோம்… சிகரத்தை எட்டுவோம்!

முழுமுதற்க் கடவுள் விநாயகப் பெருமானை வேண்டி வணங்கி, அவனுக்கு உகந்த இந்த ‘விநாயக சதுர்த்தி’ நன்னாளில் இந்த பயணத்தை துவங்குகிறேன்.

திருவருள் துணைபுரியட்டும்!

[nggallery id=1 ]

 

7 thoughts on “வாருங்கள்…. வாழ்ந்துகாட்டுவோம்…!

 1. 2012 இல் இருந்து 2015 இற்குள் அலுவலகம் ஆரம்பிக்கும் அளவு
  க்கு அபார வளர்ச்சி நம் தளம் அடைந்து இருப்பதில் பெருமை ஆக உள்ளது தாங்கள் பல பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நிலையை எட்ட வேண்டும். இதை தாங்கள் அபௌட் மீ பதிவில் சொல்லி இருக்கிறீர்கள் கண்டிப்பாக அந்த நிலையை இறைவன் கண்டிப்பாக உருவாக்குவான்

  நன்றி
  உமா வெங்கட்

 2. இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ,ஆயுளையும் கொடுக்க வேண்டுகிறேன் சார்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.விரைவில் என்னால் முடிந்ததை தளத்தின் வளர்ச்சிக்கு அளிக்க பேராசை படுகிறேன்.

 3. ஜி, சூப்பர்
  எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி இந்த தளத்திற்கு மூன்றாம் ஆண்டு விழா.

  வாழ்த்துக்கள். வாழ்க வளமுடனும் நலமுடனும்.
  வாழிய பல்லாண்டு
  நாகராஜன் ஏகாம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *