Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > “அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா?”

“அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா?”

print
ருணைக் கடல் காஞ்சி மஹா பெரியவா தான் ஸ்தூல சரீரத்தோடு வாழ்ந்த காலத்திலும் சரி, தற்போது அதிஷ்டானத்தில் இருக்கும்போதும் சரி… ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் அருள் மழையை பொழிந்து வருகிறார் என்பதை உணர்த்தும் மற்றோர் நெகிழ்ச்சியான சம்பவம் இது.

மகா பெரியவா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் நம்மை நெக்குருகி கண் கலங்க வைப்பது தான் என்றாலும் இது ஒரு படி மேலே. படியுங்கள். நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள் பெரியவாளை “அப்பா” என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள்.பெரியவா … “ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்கு காசு கிடைக்குமே!” என்பார். “காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்”என்பாள். பூக்காரி.

மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக் கூடாது.ஆனால், இந்தக் காமாட்சி மட்டும் விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம்.ஏனெனில், பெரியவாளே அவளிடம், ” நீ உன் வியாபாரத்தை முடித்துக் கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு வரக்கூடாது!” என்று கட்டளை இட்டிருந்தார்.அவளது பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?

Periva-Tank_zps451a0eff

ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை 9 மணி நியூஸ் கேட்டுச் சொல்லச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தார். வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருந்தாலும்,உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப் போக நாழி ஆகிவிடும். அன்று, புதுக்கோட்டையிலிருந்து “ஜானா” என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை செய்து கொண்டு வந்திருந்தாள்.. அதைக் காலை முதல் பெரியவா கழற்றவேயில்லை. படுக்கைக்குப் போகு முன் கொட்டகை சென்று, தேகசுத்தி பண்ணிக் கொண்டு வரச் சென்றார்.அப்போது நியூஸ்
படிக்கும் நாகராஜன்,”இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக்கொள்வேன், என்னிடம் பெரியவர் பாதுகையே இல்லை!” என்று கழட்டுவதற்குக் காத்திருந்தார். பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார். பூக்காரியும் நானும் அங்கு போய் நமஸ்காரம் பண்ணினோம். பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம், “இது உனக்குத்தான், எடுத்துக்கோ!” என்றார்.

“நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!” என்று நாகராஜன் குறையோடு திரும்பினார். அப்படிப்பட்ட அன்புக்கு அந்த ஏழைப்பூக்காரி பாத்திரமாயிருந்தாள். எத்தனையோ பேர் அவளிடம் லட்ச ரூபாய் தரோம்,இந்தப் பாதுகையைக் கொடு என்றனர்.அவள் அசையவேயில்லை. பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி,வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல் ஏதாவது பழம் முதலியன போட்டுத்தான் அனுப்புவார்.அவர் மறைவுக்குப் பின் வெறுங்கூடையைப் பார்க்கவே வருத்தமாக இருந்தது. “அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா!” என்று புலம்பினாள்.கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு சம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது. சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை, “போயிடுத்து,போயிடுத்து”னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.

இது போல் பல நிகழ்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.பிரத்தியட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார்.

நம்பினோர் கெடுவதில்லை…..இது நான்கு மறை தீர்ப்பு.

[Courtesy : periva.proboards.com]

6 thoughts on ““அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா?”

  1. சுந்தர் ஜி

    மஹா பெரியவா நம்பினோர் என்றுமே கைவிடபடுவதில்லை

    மிகவும் அருமையான பதிவு

    நன்றி

  2. சுந்தர்ஜி

    மிகவும் அருமையான பதிவு. மகாபெரியவரின் அருட்பார்வை பூக்காரி காமாட்சிக்கும், இதை பதிவு செய்த சுந்தருக்கும் மேலும் மேலும் கிடைக்க எனது உளம்கனிந்த வாழ்த்துக்கள்

    நன்றி

    உமா

  3. சுந்தர் சார்
    இது சத்தியமான வாக்கு அவர் நம்மோடு தான் இருக்கிறார்.

    நமஸ்காரம்
    குருமூர்த்தி.என்

  4. காஞ்சி மகானின் திருவருளுக்கு இதை விட என்ன உதாரணம் வேண்டும்.

    நான் தெய்வத்தின் குரல் ( காஞ்சி மகானின் உபதேசம் ) புத்தகம் படித்து கொண்டிருந்தேன். இடையில் தங்களின் வலை தளத்திற்கு சென்றேன் .அங்கு பார்த்தால் காஞ்சி மகானின் கட்டுரை. நம் எண்ணங்களுக்கு என்ன ஒரு ஒற்றுமை. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  5. நம்பினோர் கெடுவதில்லை…..இது நான்கு மறை தீர்ப்பு. உண்மையான வார்த்தைகள் ..

  6. சுந்தர்ஜி
    தங்கள் வழிகாட்டுதலினாலும் மஹா பெரியவா ஆசியுடனும் திரு.சுவாமிநாதன் அவர்களின் அற்புத படைப்பான மஹா பெரியவா என்ற புத்தகம் கிடைக்கப்பெற்று தற்போது படித்துக்கொண்டு வருகிறேன். என் மனத்தில் மஹா பெரியவா அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரை பார்க்க முடியவில்லை என பெரிய ஆதங்கம் ஏற்பட்டது. ஏனேன்றால் அவர் வாழ்ந்த காலத்தில் எப்படி எப்படி எல்லாம் பாமரர் முதல் பணக்காரர் வரை தேடிசென்றவர்க்கும் அவரே தேடிச்சென்று பலருக்கும் அருளியுள்ளார். பல நேரங்களில் அவற்றை படிக்கும்போது நெக்குருகிப்போனேன். நமக்கு அந்த பாக்கியம் கிடைக்க இல்லையனே நினைத்து வருந்தினேன். அதுவும் திரு சுவாமிநாதன் அவர்களின் எழுத்து நம்மை அந்த காலத்திற்கே இழுத்து செல்கிறது
    அதை எனக்கு வழிகாட்டிய உமக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். திரு சுவாமிநாதன் அவர்களை இங்கிருந்தே நான் வணங்குகிறேன்.

    சமிபத்தில் தங்கள் அறிவுரைப்படி காஞ்சி சென்று அவரின் பாதுகைக்களுக்கு பூஜை செய்யும் பாக்கியம் பெற்றேன். தங்கள் மேலான இப்பதிவை படித்ததும் பாதுகை பூசையினை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்து மகிழ்ந்தேன். நேரில் பார்க்கவிட்டாலும் இதுவே பாக்கியம் என உணருகிறேன். அவர் நிதர்சனமாக இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். இந்த தளத்தின் மூலம் அவரின் அருளுக்கு பாத்திரமான நாம் பெரும் பாக்கியசாலிகள். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *