கடைசி நேரத்தில் – எதிர்பாராத சூழ்நிலைகளால் – நம் உழவாரப்பணியில் வழக்கமாக பங்கு பெறும் சிலர் வர இயலவில்லை. ஆனால் பக்தவத்சலன் அவர்களுக்கு பதில் வேறு சிலரை நம்முடன் வரவழைத்து கைங்கரியத்தை மிக சிறப்பாக நடத்திக்கொண்டு விட்டான்.
மூலஸ்தானத்தை சுற்றிலும் பன்னெடுங்காலமாக தேங்கிக்கிடந்த உபயோகமற்ற பொருட்கள் குப்பைகள் அகற்றப்பட்டன. கோவில் முழுக்க ஓட்டடை அடிக்கப்பட்டது. விளக்குகள், பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், அண்டா உள்ளிட்டவை தேய்த்து கொடுக்கப்பட்டது.
கோவிலில் நெடுங்காலமாக பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், மற்றும் ஆலயப் பணிகளில் – கைங்கரியங்களில் உதவுபவர்கள் நம் தளம் சார்பாக கௌரவிக்கப்பட்டனர். பெரிய இடம் என்று நான் தலைப்பில் சொன்னது இவர்களைத் தான். இவர்கள் அனைவருக்கும் நம் தளம் சார்பாக கையில் சிறிது ரொக்கமும், இனிப்பும் வழங்கப்பட்டது.
இவர்களின் சேவைகளின் மகத்துவத்தை அனைவர் மத்தியிலும் எடுத்துக்கூறி, பலத்த கைதட்டல்களுக்கிடையே இவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியில் தலைமை அர்ச்சகர் மணிவண்ணன் பட்டாச்சார்யா அவர்களை கௌரவித்து அவருடன் க்ரூப் ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம்.
“இது வரை எத்தனையோ குழுவினர் நூற்றுக்கணக்கில் இங்கு வந்து உழவாரப்பணி செய்திருக்கிறார்கள். ஆனால் உங்கள் குழுவை போல கருமமே கண்ணாக உழைத்தவர்களை பார்த்ததில்லை! மிக சிறப்பான பணி!!” என்று பாராட்டினார்.
இந்த பாராட்டுக்களை நம்மை பணிக்கு தேர்ந்தெடுத்த அந்த பக்தவத்சலனுக்கே சமர்ப்பிக்கிறேன். கைங்கரியத்தில் பங்கு பெற்று பம்பரமாக சுழன்ற நம் நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் ஒத்துழைப்பு இல்லையேல் இது சாத்தியப்பட்டிருக்காது.
இறுதியில், கோவில் நிர்வாகம் சார்பாக நமக்கு மதிய உணவு தரப்பட்டது. பக்தவத்சலனின் பிரசாதம் அல்லவா? சுவைக்கு கேட்கவேண்டுமா என்ன??
மேலே காணும் புகைப்படத்தில் நடுவே பொன்னாடையுடன் காணப்படும் சிறுவன், கோவில் வாட்ச்மேனின் மகன். அவன் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லையென்பதால் அவர் வரவில்லை. எனவே தந்தைக்கு பதில் தனயன் கௌரவிக்கப்பட்டான்.
இந்த உழவாரப்பணியின் போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது. அவற்றை விரிவாக மற்றொரு பதிவில் மேலும் பல புகைப்படங்களோடு அளிக்கிறேன். நேரமின்மை காரணமாக இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.
[END]
டியர் சுந்தர்ஜி
நானும் என் மகன் ஹரியும் தங்கள் குழுவுடன் உழவார திருப்பணியில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. கடவுள் க்ருபை இருந்தால் ஒவ்வொரு மாதமும் நாங்கள் கடவுளுக்கு தொண்டு செய்ய வருவோம். உங்கள் ஆன்மிக பயணம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
நன்றி
உமா
நம் குழுவுடன் உழவாரப்பணி செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறேன் … ஏனோ ஏதாவது ஒரு காரணத்தால் தள்ளி கொண்டே செல்கிறது …… இறைவன் சீக்கிரம் அந்த பணிக்கு என்னை கூப்பிட வேண்டும் …
உழவாரப்பணி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் … திருவருள் துணை நிற்கட்டும்.
டியர் சுந்தர்,
திருநின்றவூர் கோயிலில் உழவாரப்பணி செய்ததை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
நன்றி
நாராயணன்.
—
சுந்தர்ஜி,
பகவான் அனுக்ரஹம் இருந்தால் மட்டும்தான் உழவார பணியில் கலந்து கொள்ள இயலும். கலந்து கொண்ட நம் தல வாசகர்களுக்கு வாழ்த்துக்கள்.
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த திருத்தலத்தை தரிசிக்க முடியாமல் போனது ….
///இந்த உழவாரப்பணியின் போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது. அவற்றை விரிவாக மற்றொரு பதிவில் மேலும் பல புகைப்படங்களோடு அளிக்கிறேன்.////
ஆவலுடன் காத்திருக்கின்றோம் …சுந்தர் சார்…
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த திருத்தலத்தில் , உழவாரப்பணி செய்தவர்கள் அனைவரும் முன்ஜென்ம தொடர்புடையவர்கள் {பாக்கியம்} .
வந்திருந்த அனைவருக்கும் திருப்பதி சென்றுவந்த திருப்தி கிடைத்தது .
காலை.மதியம் தரிசனம் ,துளசி தீர்த்தம் ,பிரசாதம் அருமை.
பணிக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணிசெய்தார்கள்.
அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள் .
காலை டிபன் சுந்தர்ஜி spl sponsor. சூப்பர்.
மகளீர் குழு மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள் .அவர்களுக்கு என் வணக்கங்கள் .
சவாலான பகுதிகளில் சீரமைப்பில் பட்டையை கிளப்பிய நண்பர் மௌலி அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டார் .
குழுவினரை வழி நடத்தி எங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய rightmanthra சுந்தர் அவர்களுக்கு நன்றி ,பாராட்டுக்கள் .
-மனோகர்
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 58 வது தேசமான இந்த திருத்தலத்தில் , உழவாரப்பணி செய்ய வாய்பு கிடைத்தது அந்த பெருமாளின் கருணை அன்றி வேறொன்றும் இல்லை…
.
வந்திருந்த நண்பர்கள் அனைவரும் தம் பணிகளை சிறப்புற செய்தாலும் நண்பர் மௌலியின் பணி மகத்தானது….
.
திருமலை திருப்தி பெருமாளை நேரில் தரிசித்த அனுபவம் கிடைத்து என்பதில் ஐயமில்லை.
.
மாரீஸ் கண்ணன்
பெருமாளுக்கும் எனக்கும் எதோ சின்ன மனஸ்தாபம் போல ,மனுஷன் அவர் கோவில் உழவாரபணி மட்டும் வர முடியாமல் போய் விடுகிறது,பார்ப்போம் எப்பொழுது கூப்பிடுகிறார் என்று
இந்த முறை என்னால் பணியில் கலந்துகொள்ள முடியவில்லை. அது என் மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. கடவுள் கிருபையால் அடுத்த முறை கலந்து கொள்ள வாய்ப்பு அமைய வேண்டும்.
இந்த முறை பங்கு கொண்ட நம் தோழர்கள் அனைவருக்கும் என் பாராட்டுதல்கள்.
நான் சென்னையில் இருக்கிறேன். உழவார பணியிலும், அதற்க்கு முன் தினம் பொருட்கள் வாங்கவும் தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளவும்.
சார்… தயை கூர்ந்து எனக்கு உங்கள்,பெயர், அலைபேசி எண், முகவரி ஆகியவற்றை simplesundar@gmail.com மற்றும் rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு, Temple Cleaning Volunteer என்று சப்ஜெக்டில் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பவும். அப்போது தான் என்னால் டிராக் செய்ய இயலும்.
– சுந்தர்