Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > கிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் !

கிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் !

print
ஷீரடி என்னும் திவ்ய தேசத்தில் அருள்பாலித்து வரும் மகான் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா, தான் வாழ்ந்த காலத்தில் மூன்று பாதுகைகளை பயன்படுத்தினார். அதில் ஒன்று ஷீரடியில் உள்ளது. மீதி இரண்டு பாதுகைகள் அவரது சீடர்களான மஹல் சாபதியிடமும் (காண்டோபா கோவில் அர்ச்சகர்) நானா சாகேப் நிமோன்கரிடமும் இருந்தது.

திரு.நானா சாகேப் நிமோன்கரின் நான்காம் தலைமுறை வாரிசு திரு.நந்தகுமார்  ரேவன்நாத் தேஷ்பாண்டே தற்போது அந்த பாதுகையை பராமரித்து வருகிறார். அதை நாடு முழுவதும் பக்தர்களின் இல்லங்களுக்கு கொண்டு செல்லும்படி சில ஆண்டுகளுக்கு முன்பு (2009 ல்) பாபா உத்தரவிட, தற்போது திரு.நந்தகுமார் அதை பக்தர்களின் இல்லங்களுக்கு கொண்டு சென்று வருகிறார்.

பாதுகா வந்து இறங்குகிறது

சென்னையில் உள்ள சில பக்தர்களின் இல்லங்களில் கடந்த வார இறுதியில் இந்த பாதுகை எழுந்தருளியது. இது தொடர்பாக நம்மை தொடர்புகொண்ட நம் வாசகர் திரு.சிவக்குமார் அவர்கள் பாதுகா வரவிருக்கும் விலாசங்களில் ஒன்றை தந்து அங்கு முடிந்தால் சென்று தரிசனம் செய்யும்படி கூறினார். நிச்சயம் சென்று தரிசிப்பதாக குறிப்பிட்டு தகவல் தந்தமைக்கு நன்றியும் கூறினேன்.

என்ன புண்ணியம் செய்தீர் ஐயா குருவின் திருவடியை சுமக்க….

(திரு.சிவக்குமார் அவர்கள் நம் தளத்திற்கு வாசகராக வந்த கதை சுவாரஸ்யமானது. இதுவும் அவர் சொல்லித் தான் நான் தெரிந்துகொண்டேன். இந்த ஆண்டு துவக்கத்தில் அதாவது ஜனவரி மூன்றாவது வாரம், மகாவதார் பாபாஜியின் நேரடி சீடர் திரு.க்ரியானந்தா அவர்கள் சென்னை மியூசிக் அகாடமியில் க்ரியா யோகா பற்றி உரையாற்றினார். அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நாம் நிகழ்ச்சியின் இறுதியில், மெயின் கேட் அருகே நின்று அனைவருக்கும் நம் தளத்தின் ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீஸ்களை விநியோகித்தோம். பலர் ஆர்வமுடன் வாங்கிச் செல்ல, சிலர் அலட்சியப்படுத்த எதையும் பொருட்படுத்தாது நானும் நண்பர் சிட்டியும் சேர்ந்து கிட்டத்தட்ட 1000 நோட்டீஸ்களுக்கும் மேல் விநியோகித்தோம். அந்த நோட்டீஸ் மூலம் நம் தளத்தை பற்றி அறிந்து அதன் மூலம் நம் வாசகரானவர் தான் திரு.சிவக்குமார். ஒய்வு பெற்ற வங்கி அதிகாரியான இவர், தம் நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு ஆன்மீக பணிகளை செய்துவருகிறார்.)

பாதுகையை சுமந்த புண்ணியாத்மாக்களுக்கு பாத பூஜை

சிவக்குமார் அவர்கள் நம்மிடம் பாதுகாவை தரிசிக்க கூறிய நேரம் நாம் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் இருக்க வேண்டியிருந்ததால் அவர் குறிப்பிட்ட நேரம் பாதுகையை தரிசிக்க செல்லமுடியவில்லை. அதற்குள் அங்கிருந்து பூஜைகள் முடிந்து பாதுகை கிளம்பிவிட்டது. ஆனாலும் எப்படியாவது பாபாவின் பாதுகையை தரிசித்தே தீர்வது என்று உறுதியாக இருந்ததால் திரு.சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்டேன்.

பாதுகை பூஜையறையில் வைத்து பூஜை செய்யப்படுகிறது

அவர் திரு.ஸ்ரீதர் என்னும் அன்பரின் மொபைல் நம்பரை தந்தார். அவரை தொடர்புகொண்டு  தந்தார் அடுத்து மந்தைவெளி அருகே ஒரு வீட்டிற்கு செல்வதாகவும் அங்கு சென்றால் தரிசிக்கலாம் என்றும் கூறி ஒரு மொபைல் நம்பரை அளித்தார்கள். நான் செல்வதற்குள் அங்கிருந்து பாதுகா வேறு இடத்திற்கு சென்றுவிட்டது. நானும் விடவில்லை. கடைசியில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஸ்ரீகாந்த் என்ற பக்தர் ஒருவரின் வீட்டிற்கு பாதுகா வரவிருக்கும் விபரம் தெரிந்து அங்கு சென்றுவிட்டேன்.

குருவே சரணம்…. (பின்னால் மகா பெரியவாவின் படத்தை கவனித்தீர்களா?)

அங்கு அந்த வீட்டின் உரிமையாளர் ஸ்ரீகாந்த் என்னும் சாயி பக்தர் பாதுகாவை வரவேற்பதற்கும் பூஜைக்கும் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார். நாம் பாதுகாவை தரிசிக்க வந்திருக்கும் விபரத்தை சொன்னதும் நம்மை வரவேற்று அழைத்து சென்றார். நம்மை அறிமுகப்படுத்திகொண்டேன். அவரிடம் பேசியதில் அவர் சொந்தமாக ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார் என்று தெரிந்தது. நம் தளத்தை அவசியம் பார்ப்பதாக கூறியிருக்கிறார்.

கற்பூரம் கரைவது போல எங்கள் தீவினைகள் கரையட்டும்

சற்று நேரத்தில் பாதுகா பிரத்யேக வேனில் வந்துவிட, “சாயிநாத் மஹராஜ் கீ ஜெய்’ என்ற கோஷத்திற்கிடையே அதை தலையில் சுமந்து பெற்றுக்கொண்டு, பாதுகையை சுமந்த பேறு பெற்றமையால் அவருக்கும் பாதுகையை கொண்டு வந்தவர்களுக்கும் பாதபூஜைகள் உள்ளிட்டவைகள் முடிந்த பின்னர் உள்ள பூஜையறையில் பாதுகையை வைத்தனர்.

வந்திருந்த பக்தர்களில் சிலர்….

தொடர்ந்து ஷீரடி பாபா அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அனைத்து தெய்வங்களின் காயத்ரி மந்திரமும் உச்சரிக்கப்பட்டு இறுதியில் நிவேதனம் செய்து ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இப்படி ஒரு கணீரென்ற உச்சரிப்பில் காயத்ரி மந்திரங்களை கேட்டு எத்தனை நாளாச்சு….! செவிகள் விமோசனம் பெற்றன.

தொடர்ந்து பஜன்ஸ் நடைபெற்றது. ஒரு சில பெண்கள் தேனினும் இனிய குரலில் பாபாவின் பாடலை பாட…. அதை மெய்மறந்து அனைவரும் கேட்டனர். பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராக வரிசையில் நின்று பாபாவின் பாதுகையை பூக்கள் போட்டு தொட்டு வணங்க அனுமதி தந்தார்கள். அனைவரும் அவ்வாரே பாதுகையை வணங்கி உதி பிரசாதம் பெற்றுக்கொண்டு சென்றனர்.

ஷீரடி மகானின் பாதுகா – திவ்ய தரிசனம்

நாமும் வரிசையில் நின்று நம் முறை வந்ததும் பூக்களை போட்டு பாதுகாவை தொட்டு வணங்கி, ஆசி பெற்றோம். அங்கிருந்தவரிடம் அனுமதி பெற்று நம் தளத்தின் விசிட்டிங் கார்டை பாபாவின் பாதத்தில் சிறிது நேரம் வைத்தேன்.

(மரத்தாலான பாதுகை சேதமடையக்கூடாது என்பதற்காக வெள்ளியில் கவசம் செய்து போடப்பட்டிருக்கிறது.)

தனிப்பட்ட சில வேண்டுதல்களை தவிர நம் தளத்தின் வளர்ச்சிக்காகவும் நம் வாசகர்களின் சுபிட்சம், குடும்ப நலன் மற்றும் ஆரோக்கியத்துக்காகாவும் பிரார்த்தனை செய்துகொண்டேன்.

பாதுகாவின் மீது நம் தளத்தின் விசிடிங் கார்ட்

ஷீரடியில் கூட நமக்கு பாதுகையை தொட்டு வணங்க அனுமதி இல்லை. மேலும் பகவானே பக்தர்களை தேடி வரும் வைபவம் இது என்பதால் ஷீரடி தரிசனத்தை விட மகத்துவம் மிக்கது இந்த பாதுகா தரிசனம். இதுவரை நான் ஷீரடி சென்றதில்லை. இருப்பினும் பாபாவின் பாதுகையை தரிசித்து அதை தொட்டு வணங்க வாய்ப்பு கிடைத்ததை என்னவென்று சொல்வேன்? பாபாவின் கருணையே கருணை.

முன்னதாக நம் பிரார்த்தனை நேரத்தில் நான் ஒரு ஆலோசனை கூட்டத்தில் இருந்தபடியால் பிரார்த்தனை செய்ய இயலவில்லை. (ஒரு சில வினாடிகள் மட்டும் செய்தேன்.) எனவே, இங்கே பாபாவின் பாதுகை பூஜை நடந்த வேளையில், நம் பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனையை செய்தோம். தீபா அவர்களின் மைத்துனர் திரு.சௌந்தர்ராஜன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன நல பிரச்னை தீரவும், இதற்கு முன் பிரார்த்தனை கோரிக்கைகளை அளித்தவர்களின் பிரார்த்தனையையும் நிறைவேற்றும்படி பாபாவை வேண்டிக்கொண்டேன்.

திரு.ஸ்ரீகாந்த் குடும்பத்தினர்

உதி பெற்றபின், ஒரு சிறிது அவல் பாயசமும், கொஞ்சம் கேசரியும் பிரசாதம் தந்தார்கள்.

குருவின் பாதுகை… மிக நெருக்கத்தில் !

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்க்கேற்ப இதோ பாபாவின் பாதுகா தரிசனம்.

(தேதி காணப்படும் புகைப்படங்கள் அங்கு வந்திருந்த ஸ்ரீனிவாஸ் என்னும் அன்பர் அவர் காமிராவில் எடுத்தது. நாம் கேட்டுக்கொண்டதர்க்கிணங்க நமக்கு அனுப்பி உதவினார்.)

[END]

50 thoughts on “கிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் !

  1. வேண்டுதல்கல் நிரைவேர வேண்டும் இரைவா! உன் பாதம் பார்த்த அனைவருக்கும்..

    நன்ரி சுந்தர் சார்..

    1. சாய்பாபாவின் பாத தரிசனம் செய்யும் வாய்ப்பை வழங்கிய உங்களுக்கு மிக்க nanri

    2. thanks lot this
      really i very happy see this
      i am already facing lot of problem i hope on baba my problems will solve ……………………..

  2. சார்
    மனதில் ரொம்ப ரொம்ப சந்தோசம்
    சாய்பாபா நேரில் வந்ததுபோல் இருதது
    சுந்தர் சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்
    சாய்பாபா உங்களுக்கு எல்லா வளமும் தரட்டும்
    selvi

    1. ஸ்ரீசாய்ராம்,

      பாபாவின் பாதுகைகளை பார்த்தது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. ஷீரடி சென்று பாபாவை தரிசிக்க பாபாவினை அருள் பெற வேண்டுகிறேன்.

  3. சாய்ராம் அன்பர்களே,

    திரு சுந்தர், எழுதிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம்
    மிகவும் அருமை. மேற்கண்ட கட்டுரைக்கு ஒருசில தகவல்களை பதிவு செய்ய விரும்புகிறேன். சென்னைக்கு பாபாவின் பாதுகா வர முக்கிய காரணம் திரு ஆனந்த் கோபாலகிருஷ்ண.

    அவருடைய நீண்ட நாள் கனவு சென்னையில் உள்ள நம் அன்பர்களுக்கு ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் கிடைக்க வேண்டும் என்பதே. அதற்கான அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. எப்போதும் அவர் பாபாவின் சேவையை செய்ய வாழ்த்துகிறோம்.

    நாங்களும் பாபாவின் பாதுகா தரிசனம் கிடைக்கபெற்றோம்.
    அவருக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.

    ஜெய் சாய்ராம்!
    கவிதா பெருமாள்.

    1. தகவலுக்கு நன்றி.

      சாய் பக்தர்கள் சார்பாக திரு.ஆனந்த கோபாலகிருஷ்ணா அவர்களுக்கு நன்றியோ நன்றி!

      – சுந்தர்

  4. தேங்க்ஸ் திரு. சுந்தர்.

    இன்னும் சென்னையில் பாதுகைகளை தரிசிக்கலாமா?

    1. இல்லை. சென்னையைவிட்டு பாதுகை கிளம்பிவிட்டது. அடுத்த முறை வரும்போது நிச்சயம் முன்கூட்டியே தெரிவிக்கிறேன்.
      நன்றி….!
      – சுந்தர்

    2. மதுரைக்கு வருகின்ற தேதி குறிப்பிட முடியுமா? பாதுகா தருசிக்க மிக்க ஆவலுடன் உள்ளோம்.

  5. திரு சுந்தர் அவர்களுக்கு,

    ஷீரடி சாய்பாபா அவர்கள் மறைந்து மிக சரியாக 95 ஆண்டுகள் ஆகின்றன. அவரது பாதுகை பாதுகாக்கப்படுகின்றது.

    தமிழ் சைவ துறவி சுந்தரர் வாழ்ந்து 1200 ஆண்டுகள் ஆகின்றன!. அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.

    திருவெண்ணெய்நல்லூரில் சிவபெருமான் அவருக்காக செய்த திருவிளையாடல்களின் சான்றாக இன்றளவும் இறையனாரின் பாதகுறடுகள் உள்ளன.

    இதனை சொல்வரும் இல்லை. அதை ஊர் சுற்றி கொண்டு சென்று காண்பிப்பாரும் இல்லை.

    இது தமிழனுக்கே உள்ள குணம். உள்ளுரின் பெருமை அவனுக்குத் தெரியாது அதை சொன்னாலும் புரியாது.

    தங்கள் தளம் மூலமாக இதை நீங்கள் தெளிவுபடுத்தினால் அது நீங்கள் நடத்தும் இத்தமிழ் தளத்திற்கு பெருமை சேர்க்கும் என நினைக்கிறேன்

    நன்றி,

    கனஹகுமார்

    1. ஒரு வேண்டுகோள் : இறை ஞானியரை மற்றும் ஷீரடி பாபா போன்ற புனிதர்களை மொழியின் பெயரால் வேறு படுத்தி பார்க்கவேண்டாமே…. அவர்கள் மொழி பார்த்து அருள் புரிந்தவர்கள் அல்லவே? அவர்கள் அருள் மழை அனைவருக்கும் பொதுவாகத் தானே இருந்தது…?

      மற்றபடி உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே. சுந்தரர் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். அவரது பாதுகை குறித்த செய்தி தெரியாமைக்கு வருந்துகிறேன். எம்மை மன்னிக்கவும். இந்த நிலை ஏற்பட்டதற்கு வெட்கப்படுகிறேன்.

      (ஆனால் இங்கு ‘அறம் நிலையாத் துறை’ என்ற ஒன்று அனைத்திற்கும் குறுக்கே வந்துவிடுகிறதே? அது தான் பிரச்னையே.)

      – சுந்தர்

  6. சீரடி ஸ்ரீ சாய்பாபா அவர்களின் அருளை அனைவருக்கும் அவர் தம் இருப்பிடம் கொண்டு வந்து சேர்த்தமைக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை !!!

    இந்த அற்புத நிகழ்வை நிஜமாகிய சுந்தர் அவர்களுக்கும் அவருக்கு இந்த தகவலை அளித்த அத்துணை மெய் அன்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் !!!

    அந்த மகான் சாய் மகாராஜ் கலியுகத்தில் மக்கள் படும் துயர் போக்கி அவர் தம் வாழ்க்கையில் எல்லா நலமும் பெருக என்றென்றும் துணை நின்று வழி நடத்தி காத்தருல்வாராக !!!

    ஓம் ஸ்ரீ சத்ய சாய் நாத் மகாராஜ் கி ஜெய் !!!

  7. சுந்தர் தரிசனம் முடித்து எனக்கு தெரிவித்தார் .கேட்கவே இனிமையாக இருந்தது .நாமும் தரிசிக்க முடிவில்லை என்று வருத்தப்பட்டேன் .சுந்தர் முயற்சியால் நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் தரிக்க முடிந்தது .நேரில் பார்த்திருந்தால் எப்படி இருக்குமோ அதே போல் உள்ளது .அணைத்து புகைப்படங்களும் அருமை .தேடல் உள்ள எங்களுக்கு சுந்தர் உழைப்பு அபாரம்.
    நன்றி .நன்றி …………..

  8. ஷீரடி செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது …சீக்கிரமே நிறை வேற பாபா அருள் புரிய வேண்டும்.

  9. Sairam Sundar,

    It was a great pleasure to talk with you and the article / pic’s posted was really excellent with the blessings of SAI..

    Paduka started to travel from the early year of 2008 as directed by the LORD.

    Few months before it had arrived at HYDERBAD where my Sai Brother Naveen had got the blessings of HOLY FEET of SAI.

    A dream came, given by SAI to us with a great gracious thought that Padukka can be brought to Chennai.

    SAI means _ I am Administrated by SAI and with that HE directed us to proceed to do this SERVICE.

    This being a great opportunity that LORD had given to us we had an excellent frequent travel to SHIRDI to get the blessings.

    Getting the blessings of SAI we travelled to Nimon (Ahmednagar) village to meet Sri Nandakumar Revannath Deshpande the great Grand Son (4th Generation) of Sri Shankar Rao Raghunath Deshpande (alias) Nana Saheb Nimonkar to whom SRI SHIRDI SAIBABA gave his holy PADUKA in the year 1898,

    We invited Sri Nandakumar to travel Chennai & give the blessings of HOLY PADUKA of the LORD.

    Though Sri Nandakumar had been busy with lot of schedules, had given the date for arrival to Chennai in April and we were my delighted.

    The areas we could cover in Chennai (total of 2.5 days) are as follows:

    Madipakkam, Kilkattalai, Perumbakkam, Nanganallur, Guindy, Valsarvakkam, Porur, Virugambakkam, Trust puram, United India colony, Ashoknagar, Mylapore, R A Puram, Saidapet, Annanagar, Ambattur (4 places), Thirumalaivayal, Choolaimedu & Vadapalani.

    In all the places there were much mass waiting to get the blessings of Paduka.

    To my knowledge the total no’s of around 2500 + (Approx) of devotees got the blessings and able to see their tears flowing out with happiness by touching the feet of SAI.

    With SAI blessings & team work with joint hands altogether made this successful.

    LOVE SAI LIVE IN SAI

    Thanks & Regards,

    Anand G

    1. Thanks for sharing the happenings behind Paduka vijayam.
      If go one step towards GOD, he will come 100 steps towards us.
      – Sundar

  10. சாய் பாபாவின் பாதுஹைகளை பார்த்தது, ஷிரிடிகே சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியது. இதற்கு ஏற்பாடு செய்த அணைத்த சை அன்பர்களுக்கும் மிக்க நன்றி!!! சாய் ராம் சரணம்!!!

  11. ஓம் சாய்ராம் திரு ஷிரடி சாய்பாபாவின் அரிய பாதுகா தரிசன பஜன் நிகழ்ச்சி நேரில் பார்த்தது போல அருமையாக கட்டுரை தொகுக்கப்பட்டிருந்தது நன்றி மதுரை. பகுதி பக்தர்களுக்கும் இந்த மாதிரியான அரிய வாய்ப்பு கிடைக்க சாய் அருள் வேண்டி வணங்குகிறேன்

  12. சாய்பாபாவின் பாதுகைகளை தரிசனம் கிடைத்ததை பிறவிப்பயன் அடைந்துவிட்டது என பேரானந்தம் அடைகிறேன். இதற்கு ஈற்பாடு செய்த அனைத்து சாய் உள்ளங்களுக்கும் மனதார நன்றி தெரிவிக்கிறேன். சாய்ராம் சரணம்…

  13. சாய்பாபாவின் பாதுகைகளை தரிசித்தது மிகவும் சந்தோசமாகவும் மனதுக்கு நிறைவாகவும் உள்ளது.

  14. ஷிர்டி செல்லவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துகொண்டிருந்த எனக்கு நமது தளத்தின் மூலம் கிடைத்த பாதுகா தரிசனம் பாபாவை நேரில் தரிசித்ததுபோல் இருந்தது. ராமபிரான் இல்லாத காலத்தில் அவரது பாதுகைகளை அரியணையில் வைத்து பரதன் ஆட்சி செய்துதான் நினைவிற்கு வருகிறது. இறைவனின் பாதகமலங்களுக்கு அவ்வளவு மகத்துவம். நன்றி சுந்தர்.

  15. சாயியின் பாதுகையை தங்கள் தளத்தில் தரிசித்ததை பாக்கியமாக கருதுகிறேன்
    ் .

  16. sundarji

    ஓம் சாயி ராம்

    நேரிடையாக பார்த்ததை போன்று உள்ளது. உண்மையில் நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஷீரடி சாயி பாபா அருளால் தங்களுக்கு எல்லா வளமும் கிடைக்க வாழ்த்துக்கள்.

    நன்றி

  17. பாபா அருள் எல்லோருக்கும் கிட்டட்டும் . பாபாவை நம்பினோர் என்றுமே கைவிடபடார் . இது உண்மை . மனதால் ஒரு முறை நினைத்தாலே போதும் அவர் நம்மை தேடி வருவார். ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் இந்த மந்திரம் நமக்கு துணை நிற்கும் .

  18. பாபா பாதுகை நேரில் பார்த்த அனைவரும் பாக்யசாலிகள்.

  19. பாபாவின் பாதுகவை பார்த்து தரிசிக்கும் வாய்ப்பை உங்கள் தளம் மூலம் ஏற்படுத்தி தந்தமைக்கு மிக்க நன்றி சுந்தர்.

  20. கேன் யு செ வென் இட் இச் கமிங் டு கோயம்புத்தூர்

  21. ஓம் சாய் ராம்
    திரு ஷிரடி சாய்பாபாவின் அரிய பாதுகா தரிசன நிகழ்ச்சி நேரிடையாக பார்த்ததை போன்று உள்ளது,இதுவரை நான் அறியாத ஷிரடி சாய்பாபாவின் பாதுகை குறித்த செய்தி உங்கள் தலத்தில் பார்த்து நான் வியந்தேன் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சி கோடி கோடி நன்றிகள் சுந்தர் சார் …. எங்கள் மதுரை. பகுதி பக்தர்களுக்கும் இந்த மாதிரியான அரிய வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க சாய் அருள் வேண்டி கேட்டு கொள்கிறேன்.இதே போல் அறிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஷிரடி சாய்பாபாவை வேண்டி வணங்குகிறேன்
    தங்களுக்கு மிகவும் நன்றி நன்றி சுந்தர் சார் ….
    ஓம் சாய் ராம்

  22. ஓம் சாய் ராம்.
    தகவலுக்கு மிக்க நன்றி. நேரில் தரிசனம் பெற்றதுபோல இருந்தது.

  23. Dear Sir,

    I am Shanthi, i use to visit your web site for the two months, It is very useful to me. Just now I saw your Sai baba’s padugai photo in your website, I would like to have a copy of that photo, Will you please send me.

  24. ஷீரடி செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது …சீக்கிரமே நிறை வேற பாபா அருள் புரிய வேண்டும்

  25. பாபாவின் பாதுகவை பார்த்து தரிசிக்கும் வாய்ப்பை உங்கள் தளம் மூலம் ஏற்படுத்தி தந்தமைக்கு மிக்க நன்றி erode வருகின்ற தேதி குறிப்பிட முடியுமா? பாதுகா தருசிக்க மிக்க ஆவலுடன் உள்ளோம்.

  26. ஷீரடி சாய் பாபாவின் பாதுகா தரிஷனம் காணும் அரிய வாய்ப்பை
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி
    ஓம் சாய் ராம்…

  27. ஓம் சாய் ராம் !
    ஷீரடி சாயி பாபாவின் பாதுக தரிசனம் எமக்கும் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் சார்…
    ஷீரடி சாயி …எங்கள் விருப்பத்தையும் அற்புதமாக நிறைவேட்டிடும் பகவனே..
    ஓம் சாய் ராம் !

  28. நான் முதல் முறை உங்கள் தளத்தை சாயின் பாதுகையுடன் கண்டதில் மிக்க மகிழ்ச்சி . ஓம் சாய்ராம்

  29. இந்த பதிவை நாம் நான்காவது முறையாக படிக்கிறோம் . படிக்க படிக்க அவ்வளவு பரசமாக உள்ளது. தாங்கள் எழுதிய விதம் மிகவும் அருமையாக உள்ளது. நாமும் எனது husband உடன் 2010 யில் ஷிர்டி சென்று பாபாவை 4 முறை தர்சன் செய்து eveneing ஆரத்தியில் கலந்து கொண்டு பாபாவின் சமடி மந்திரில் பாபாவின் அருகிலேயே நின்று கொண்டு கண்களில் கண்ணீர் மல்க அவரை வணங்கி விட்டு வந்தோம். அன்று சனி பிரதோஷம் வேறு . மிகவும் அற்புதமான தர்சன். எனக்கு இந்த பதிவை படிதவும் பிளாஷ் பாக் ஞாபகம் வந்தது.

    நம் தளத்தின் விசிடிங் கார்டை பாபாவின் பாதத்தில் பார்த்ததும் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தங்களுக்கு குருவின் பரிபூரண ஆசி உள்ளது. அதனால் தான் தங்களால் பாதுகையை தரிசனம் செய்ய முடிந்தது.

    எவ்வளவு முறை படித்தாலும் ஆனந்தத் திற்கு அளவே இல்லை. அடுத்த முறை பாதுகை சென்னை வந்தால் தெரிவிக்கவும் . பாதுகை தரிசனம் செய்ய ஆவலாக உள்ளோம்.
    ஓம் ஸ்ரீ சாயி ராம்
    நன்றி
    உமா

  30. ஷீரடி சாயியின் பாதுகைகளை தரிசனம் செய்ய (புகைப்படம் மூலம்) வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி. ஜெய் சாய்ரம் .

  31. ஓம் ஸ்ரீ சாய்ராம். ஜெய் ஸ்ரீ சாய் ராம்

  32. ஓம் சாய் ராம்……

    thank u so much for publishing this article which is very useful for sai devotees…keep posting article about sai baba in ur website…

    i wish all prayers of sai devotees will be fulfilled in near future after gettting paduka darshan of Shirdi Sai Baba….

    Om Sai Ram..

  33. சார், நான் 4 முறை ஷீரிடி சென்று உள்ளேன். தங்களின் புண்ணியத்தில் இப்போ பாபாவின் பாதுகை தரிசனம் மிக மிக அருகில் பார்த்தப்போ கிடைத்த சந்தோசம் என்னவென்று சொல்வது சார்,
    நன்றி நன்றி நன்றி .

    எத்தனை முறை உங்களுக்கு நன்றி சொன்னாலும் போறாது சார்

    தங்கள்

    சோ. ரவிச்சந்திரன்
    கார்வார்
    கர்நாடகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *