Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, November 5, 2024
Please specify the group
Home > Featured > எதிரிகளை வெல்வதைவிட விட நம் மனதை வென்று அடக்கியாள்வது மேலானது – மகாவீர் ஜெயந்தி ஸ்பெஷல்!

எதிரிகளை வெல்வதைவிட விட நம் மனதை வென்று அடக்கியாள்வது மேலானது – மகாவீர் ஜெயந்தி ஸ்பெஷல்!

print
ரு பணக்காரர் மிகப்பெரிய யாகம் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் யாகம் செய்யும் போது விலங்குகளைப் பலியிடுவது வழக்கம். யாகம் துவங்க இருந்த வேளையில், ஜைன மத ஸ்தாபகர் மகாவீரர் தன் சீடர்களுக்கு அகிம்சை குறித்து போதித்துக் கொண்டிருந்தார். மிருகங்களைத் துன்புறுத்துவதை அவர் கண்டித்தார். இந்த தகவல் வேத விற்பன்னர்களுக்கு தெரிய வந்தது. அவர்களின் தலைவர் இந்திரபூதி. அவர் பெரிய கல்விமான். ஆனால், ஆணவம் மிக்கவர்.
அவர் மகாவீரரைச் சந்தித்து, வேதங்கள் சொல்லியுள்ளபடியே தாங்கள் பலியிடுவதாக ஆதாரத்துடன் கூறினார்.  நீங்கள் சொல்வது தவறு. இறைவன் தன்னால் படைக்கப்பட்ட பிராணிகளை மனிதன் அழித்துக் கொள்ளலாம் என்று  சொல்லவே மாட்டான், என்றார். அதற்கு இந்திரபூதி,சரி…இந்த உலகத்தையாவது கடவுள் தான் படைத்தார் என்பதை ஏற்கிறீர்களா? என்றார். அதையும் ஏற்கமாட்டேன். கடவுள்  என்பவர் சர்வசக்தியுள்ளவர். அவர் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்துடன் மனிதர்களைப் படைப்பார் என்பதை நான் நம்ப மாட்டேன், என்றார் மகாவீரர். அப்படியானால், ஏழை, பணக்காரர்,  அழகன், அழகில்லாதவன் என்ற வேற்றுமையெல்லாம் எப்படி வந்தது? என திருப்பிக்கேட்டார் இந்திரபூதி. இதற்கு காரணம் மனிதன் செய்த  முந்தைய வினையே! இறைவனின்  படைப்பில் வித்தியாசம் கிடையாது. மனிதன் தான் செய்யும் வினைகளுக்கேற்பவே  இத்தகைய பலன்களை அடைகிறான், என்று தெளிவாகச் சொன்னார்.  இதுகேட்ட வேத விற்பன்னர்கள் மகாவீரரின் காலடியில் விழுந்தனர். தங்களுக்கு நற்கருத்துக்களை போதிக்குமாறு வேண்டிக்கொண்டனர்.
இன்று மகாவீர் ஜெயந்தி.

பாரதம் கண்ட ஒப்பற்ற மகான்களுள் மகாவீரரும் ஒருவர். அவர் வாழ்ந்த காலகட்டம் (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு) இந்திய வரலாற்றில் மிக மிக முக்கியமான காலகட்டமாகும். சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த மக்கள் மனிதத்தை மறந்தனர். வேள்விகள் மற்றும் யாகங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுப்பது அதிகரித்தது. தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல் காரர்கள் போல செயல்பட்டனர். சாதிப் பாகுபாடுகள் தலைவிரித்து ஆடியது.

மகாவீரர் ஹிந்து மதத்தில் காணப்பட்ட குறைகளைக் களைந்தார். மக்களுக்குப் புரிகின்ற எளிய மொழியில் சமயக் கொள்கைகளைப் போதித்தார். மகாவீரரின் போதனைகளால் சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கின. கண்மூடித்தனமான கொள்கைகளும். உயிர்பலி இடுதலும் ஒழிந்தன.

அவதாரத் திருநாளான இன்று அவர் அருள்மொழிகள் சிலவற்றை பார்ப்போமா?

================================================================

ஸ்ரீ மகாவீரர் அருள் மொழிகள்

  • அதிகாலையில் எழுந்திரு.
  • படுக்கையிலிருந்து வலது பக்கமாக எழுந்திரு.
  • கிழக்கு முகமாக உட்கார்ந்து கொள்.
  • கடவுளை வணங்கு.
  • மந்திரத்தை நினை -ஜபம் செய்.
  • காலைக்கடன்களை முடித்துக்கொள். கை, கால், முகம், சுத்தம் செய்து கொள்.
  • உடனே குளித்து விடு.
  • ஆலயத்திற்கு செல்.
  • தெய்வ வழிபாடு செய்.
  • பின்னர் உன் தொழிலைக் கவனி.
  • தொழிலைச் செய்வதில் ஊக்கம் கொள்.
  • நியாய முறையில் பொருளைத்தேடு.
  • அநியாயத்தை மனத்திலும் கருதாதே.
  • உலகத்தோடு ஒத்து வாழ்.
  • உன்னைப் போல் மற்றவரையும் நினை.
  • எவ்வுயிர் கட்கும் தீங்கு செய்யாதே.
  • மற்றவரைக் கண்டு பொறாமைப்படாதே.
  • புகழொடு வாழ்.
  • பகைவரிடத்திலும் இனிமையாகப் பேசு.
  • எல்லோரிடத்திலும் அருவருப்பாகப் பேசாதே.
  • எவரிடத்திலும் அருவருப்பாகப் பேசாதே.
  • அனைவா¢டத்தும் முக மலர்ச்சியுடன் பேசு.
  • நல்லவரைப் பின்பற்றுக.
  • நல்லவர் சொற் கேள்.
  • நல்லவர் போன வழி நீயும் போகுக.
  • நல்லோரைக் காண்பதுவும் நன்றே.
  • நெடுந்தூரம் சென்றாயினும் நல்லவரைக் காண்க.
  • பெரியோரிடத்தில் வணக்கமாய் இரு.
  • பெரியோர் எதிர் நின்று மாறுதல் பேசாதே.
  • பெரியோர் பேச்சைக் கேள்.
  • பெரியோரைக் கண்டால் தாழ்மையுடன் நட
  • பெரியோர் வார்த்தையை மீறாதே
  • பெரியோர் சொற்படி நட.
  • தீயோருடன் சேராதே.
  • தீயோர் சொற்களைக் கேட்காதே.
  • தீயோருடன் பழகாதே.
  • தீயோரைக் கண்டால் தூர நட
  • தீயோரைக் காண்பதும் தீதே.
  • தீது செய்தல் இம்மைக்கும் மறுமைக்கும் தீதே.
  • தர்மம் செய்க.
  • தர்மத்தைப் பேணிக் காக்க.
  • புண்ணியம் செய்க.
  • பாபத்தைச் செய்யாதொழிக.
  • இறைவனை வழிபடுக.
  • குருக்களை வணங்குக.
  • அற நூல்களை ஓதுக.
  • கொலை செய்யாதே.
  • பொய் பேசாதே.
  • கொல்லானை எல்லாவுயிரும் கைகூப்பித் தொழும்.
  • திருடாதே (களவு செய்யாதே).
  • ஐம்புலனை அடக்குக.
  • பிரம்மசர்ய விரதம் காக்க.
  • பொருள்மீது பேராசைப் படாதே.
  • பொருட்கள் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாய் இரு.
  • நீ மனிதனாக இரு.
  • நீ மனிதனாக வாழ்க.
  • விலங்கு இனத்தைச் சேர்ந்தவனாக வாழாதே.
  • பகுத்தறிவுள்ளவனாக வாழ்க.
  • பொறாமைப்படாதே.
  • கோபத்தை அடக்குக.
  • கர்வங் கொள்ளாதே.
  • வஞ்சனை செய்யாதே.
  • கபடம் செய்யாதே.
  • பிறருக்குக் கொடுத்து வாழ்தலைக் கற்க.
  • லோபத்தை விடுக.
  • அன்னமிட்டுண் (அன்னதானம் செய்)
  • அபய தானம் செய்.
  • கல்விக்கு உதவி செய்.
  • பிறர் பிணி நீக்குக.
  • பிறர் நலம் கருதுக.
  • தன்னலம் கருதாதே.
  • பிறரை இகழாதே.
  • தற்புகழ்ச்சி செய்யாதே.
  • எல்லோரிடத்திலும் நேசமாயிரு.
  • எவ்வுயிரையும் துன்புறுத்தாதே.
  • யாருக்கும் கெடுதி செய்யாதே.
  • பிற உயிருக்கு இன்னலை நினைக்காதே.
  • பிறருக்குக் கெடுதி யுண்டாவதைப் பற்றிப் பேசாதே.
  • ஊன் உண்ணாதே.
  • ஊன் உண்பது மனித இயல்பல்ல.
  • ஊன் உண்பது கொடிய விலங்கின் செயல்.
  • கள் குடிக்காதே.
  • கள் மயக்கத்தைத் தரும்.
  • கள் அறிவைக் கெடுக்கும்.
  • கள் மனித இயல்பைக் கெடுக்கும்.
  • கள்ளைக் கனவிலும் கருதாதே.
  • களவையும் கனவில் நினைக்காதே.
  • பிறர் பொருளை விரும்பாதே.
  • பிறர் மனை நயவாதே.
  • சூதாடாதே.
  • வேசியை நேசிக்காதே.
  • விபசாரியை விரும்பாதே.
  • குருபத்தினியைக் கருதாதே.
  • கன்னியைக் கெடுக்காதே. குலமாதரைக் கெடுக்காதே.
  • மாதாவைத் தெய்வமாக நினை
  • செய்ந்நன்றி மறவாதே.
  • பித்ரு துரோகம் நினைக்காதே.
  • தாயாதி துரோகம் நினைக்காதே.
  • அண்டினவரைக் காப்பாற்றுக.
  • பிராணிகளை வதைக்காதே.
  • பிராணிகளின் காது முதலானவற்றை அறுத்துத் துன்புறுத்தாதே.
  • பிராணிகளை அடிக்காதே.
  • பிராணிகளுக்குச் சரியான வேளையில் தீனி வைக்காமல் கட்டிப் போடாதே.
  • காலந் தவறி தீனி வைக்காதே.
  • காலந்தவறி தண்ணீர் காட்டாதே.
  • வண்டிகளில் (பொதிமாடுகளின் மீது) அதிகக் சுமை ஏற்றாதே.
  • மாடுகள் வண்டியிழுக்க சக்தியற்றவையாயிருப்பின் வண்டியைத் தள்ளி உதவி செய்.
  • உதவி செய்யாமல் அடிக்காதே.
  • பசுங்கன்றுக்குப் பால் விடு.
  • பாலை அடியோடு கறக்காதே.
  • கன்றுகளைக் காப்பாற்று; உழவுக்கு உதவும்.
  • வயதான மாட்டை ஊன் உணவுக்கு விற்காதே.
  • உழைத்த உயிர் நீங்கிய மாட்டை ஓ¡¢டத்தில்; புதைத்து விடு.
  • பொய்ப் பிரசாரம் செய்யாதே.
  • பிறருக்கு துன்பம் ஏற்படும் சொல்லைச் சொல்லாதே.
  • உண்மையற்றதை உலகில் பரப்பாதே.
  • ஆண் பெண் சம்பந்தமான ரகசியத்தை வெளியிடாதே.
  • ரகசியத்தை அறிந்தாலும் அறியாமலிருந்து விடு. வெளியிடாமல் இருந்துவிடு.
  • பிறர் பொருளை அபகா¢க்காதே.
  • உன்னிடம் பிறர் இருப்பு வைத்த பொருளை அவர் மறந்து விடினும் அதனைக் திருப்பிக் கொடுத்து விடு.
  • பிறர் பொருளை அபகா¢க்கக் கனவிலும் கருதாதே.
  • தன்னுடையதல்லாதவற்றை யாருடையதென்று விசாரித்து அவருக்குக் கொடுத்து விடு.
  • அரசு ஆணையை மீறாதே.
  • அரசு சட்டப்படி நட
  • அரசுக்கு அடங்கி நட.
  • அரசை அவமதிக்காதே.
  • அரசு அன்று கொல்லும்.
  • தெய்வம் நின்று கொல்லும்.
  • ராஜா பிரத்யக்ஷ தேவதா.
  • பாலில் நீரைக் கலந்து விற்காதே.
  • தான்யத்தில் மண்ணையும் கல்லையும் கலந்து விற்காதே.
  • அதிக விலையுள்ள பொருளில் குறைவான விலையுள்ள பொருளைக் கலந்து விற்காதே.
  • அழுகிய பொருளை அகற்றி விடு. அதனைக் கலந்து விற்காதே.
  • வாங்கும்போது அதிக நிறுத்தலில் வாங்காதே.
  • விற்கும் போது குறைவான நிறுத்தலில் விற்காதே.
  • விலையைக் குறைத்தாலும் குறை அளவைக் குறைக்காதே.
  • அளவை மத்யஸ்தமாக அளத்தல் வேண்டும்.
  • வாங்கும்போது அதிக அளவில் வாங்காதே.
  • விற்கும்போது குறைந்த அளவில் விற்காதே.
  • திருட்டுப் பொருளை வாங்காதே.
  • சட்டத்திற்கு மீறி நடக்காதே.
  • பொருள்களை மிதமாக வைத்துக் கொண்டு வாழ்க.
  • அதிகமான பொருள்களைச் சேர்த்து வைக்காதே.
  • உன் தேவைக்கு அளவான பொருள்களைச் சம்பாதித்துக் கொள்.
  • அதிகமான பொருள்களை நீயே பொருளற்றவர் கட்குப் பங்கிட்டுக் கொடு.
  • எதிலும் அதிக ஆசைப் படாதே.
  • ஜாதி குல முறைப்படி மணம் செய்து கொள்.
  • மணம் செய்து கொண்ட மனைவியுடன் ஒத்து வாழ்.
  • மனைவி மனம் நோக எதையும் செய்யாதே.
  • தன் மனைவியிருக்க பிறர் மனைவியைச் சேராதே.
  • வேசியின் உறவு கொள்ளாதே.
  • புணர்ச்சி செய்வதில் அதிக ஆவல் கொள்ளாதே.
  • புணர்ச்சி செய்வதை ஒரு தொழிலாகக் கொள்ளாதே.
  • மக்களைப் பெறுதற்கு மிதமாகப் புணர்தல் வேண்டும்.
  • புணர்ச்சி செய்வதற்குரிய அங்கத்தில் புணர்தல் வேண்டும்.
  • புணர்ச்சிக்குரிய காலத்தில் (இரவில்) புணர்தல் வேண்டும்.
  • பகலில் புணர்ச்சி செய்யாதே.
  • உறவினரை உள்ளன்போடு நேசி.
  • உறவினருக்கு உன்னால் இயன்ற உதவி செய்.
  • உறவினருக்கு விருந்தளி.
  • விருந்தினரிடம் முகமலர்ந்து பேசு.
  • உபசரித்து உள்ளங்களித்து உப்பிலாக் கூழிட்டாலும் உண்பது அமிர்தமாகும்.
  • முகங்கடிந்து முப்பழமொடு பால் கொடுப்பினும் கடும்பசி யாகும்.
  • வீட்டிற்கு வந்தவரை வாவென்று அழைக்காமல் இராதே.
  • பிறருக்குக் கொடுப்பதில் உன்னிடம் உள்ளதை நல்ல எண்ணத்துடன் மறைக்காதே
  • பிறர் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படாதே.
  • உலகில் நல்லவனாக வாழ்க.
  • கெட்டவனென்று பேரெடுக்காதே.
  • உலகுக்கு உதவியாளனாக வாழ்.
  • உலகத்தார் விரும்பாத செயலைச் செய்யாதே.
  • உன்னுடைய வாழ் நாட்களை நல்லபடியே கழி.
  • வாலிபத்தில் எவ்விதமாயினும் வாழ்ந்து விடலாம். முதுமையில் வாழ இயலாது.
  • முதுமையில் உறவினருடன் ஒத்து வாழ்தல் வேண்டும்.
  • பெண்கள் தனித்து வாழ்தல் கூடாது.
  • பெண்கள் இளமையில் தந்தை தாயின் அடக்கத்தில் இருத்தல் வேண்டும்.
  • பெண்கள் வாலிபத்தில் கணவனுடன் கூடி வாழ்தல் வேண்டும்.
  • பெண்கள் முதுமையில் மக்களுடன் கூடி வாழ்தல் வேண்டும்.
  • மக்கள் இளமையில் நன் முறையில் இருக்க வேண்டும்.
  • மக்கள் மறுமையில் சுகத்துடன் வாழ முயலல் வேண்டும்.
 நன்றி : – ஸ்ரீ லக்ஷ்மீஸேன ஸ்வாமிஜீ  | www.moderntamilworld.com | www.dinamalar.com

10 thoughts on “எதிரிகளை வெல்வதைவிட விட நம் மனதை வென்று அடக்கியாள்வது மேலானது – மகாவீர் ஜெயந்தி ஸ்பெஷல்!

  1. சுந்தர்ஜி,

    அவதாரத் திருநாளான இன்று அவர் அருள்மொழிகள் சிலவற்றை பார்ப்போமா?

    அப்பாடா ………………… மூச்சு வாங்கி விட்டது.

    நல்லதை பின்பற்றி வாழ்வில் மேன்மையடைவோம்.

    நன்றி
    AWAITING YOUR NEXT POST .(I .E ., CHITRA POWRNAMI )

  2. அன்பரே 178 பொன்மொழிகள் இந்த பதிவில் கொடுத்துள்ளீர்கள். இதில் மூன்றில் ஒரு பங்காவது நாம் பின்பற்றுவோமா

    அனைவரும் படித்து பயனடைய வேண்டும்

    அன்பே சிவம்

  3. வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு மகாவீரர் சொல்லியுல்லார். அதை சுந்தர் நம்முடன் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி…… முடியும் நம்மால், முயிற்சி செய்தால் வாழலாம் ..க. பாரதிதாசன்

  4. 178 வரிகளை சுருக்கமாக ஒரு வரிகளில் தலைப்பக்கியது, தங்களிடத்தில் உள்ள தனி சிறப்பு .

    \\எதிரிகளை வெல்வதைவிட விட நம் மனதை வென்று அடக்கியாள்வது மேலானது\\

    மகாவீர் ஜெயந்தி ஸ்பெஷல்….

    சூப்பர்…பாராட்டுக்கள் .

  5. மகாவீர் குட்டிக்கதையும் , அனைத்துப் பொன் மொழிகளும் அருமை , அருமை ,அருமை . வாழ்வில் பின்பற்றக் கூடியவை சுந்தர் ஐயா நன்றி.
    பாரிஸ் ஜமால் , பிரான்சு

  6. சுந்தர்… நல்லதை படிச்சு முடிக்கவே மூச்சு வாங்குது. தாங்கள் சிரமம் எடுத்துக் கொண்டு இத்தனை விஷயங்களைத் தொகுத்து கொடுத்ததுக்கு நன்றிகள். பலரும் இதைப் பயன்படுத்த ஆரம்பித்தால் வெற்றி உங்களுக்குத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *