Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > ‘இறந்த சினை ஆடு உயிர்த்தெழுந்தது. இரட்டை கன்றும் ஈன்றது!’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

‘இறந்த சினை ஆடு உயிர்த்தெழுந்தது. இரட்டை கன்றும் ஈன்றது!’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

print
16 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர் குகை நமசிவாயர். நமச்சிவாயர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் எனும் பகுதியில் பிறந்தவராவார். அண்ணாமலையாரின் அழைப்பினை ஏற்று திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். இவருடைய சீடர்களில் குரு நமச்சிவாயர் மற்றும் விருபாட்சித் தேவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர் அண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாறி மாறி தங்கியதாகவும், இறுதியாக அண்ணாமலையாரே தன்னுடைய மலையில் ஓர் குகையில் தங்கிக் கொள்ளுமாறு கூற, குகையில் தங்கியதால் குகை நமச்சிவாயர் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய ஜீவ சமாதி அண்ணாமலையில் உள்ளது.

Guhai Namasivayar

இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த காலத்தே மலையில் ஒரு இடையன் ஆட்டு மந்தையை பராமரித்து வந்தான். அந்த மந்தையில் இருந்த சினை ஆடுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டது. இறந்த அந்த சினை ஆட்டை எப்படியாவது யார் தலையிலாவது  கட்டிவிட எண்ணி “இதன் வயிற்றில் இரண்டு குட்டிகள் இருக்கின்றன… இரண்டு குட்டிகள் இருக்கின்றன!” என்று அதை கூவி கூவி விற்க முயன்றுகொண்டிருந்தான்.

அந்த நேரம் பார்த்து அங்கே வந்த ஒரு குறும்புக்கார நாஸ்திகன், “இங்கே ஏன்பா கஷ்டப்பட்டு கூவிக்கிட்டுருக்கே… மலைக்கு மேலே போ… அங்கே ஆட்டிறைச்சி விரும்பி சாப்பிடுற ஒரு பரதேசி இருப்பான். அவன் கிட்டே இதை விற்கலாம். என்ன விலை கொடுத்தாவது இதை வாங்கிக்குவான்” என்று கூறிவிட்டு போய்விட்டான்.

அந்த குறும்புக்காரன் சொன்னது குகை நமச்சிவாயரை.

குகை நமச்சிவாயரிடம் வந்த ஆட்டிடையன், “இந்த ஆடு இரண்டு பவுன் பெறும்!” என்றான்.

“இரண்டு பவுன் இதற்கு அதிகம். இருந்தாலும் நீயே ஆடுகள் மேய்த்து ஜீவனத்தை நடத்துபவன் என்பதால் உனக்கு உரிய விலையை தருகிறேன். நாளை வந்து நீ சொன்ன விலையை பெற்றுக்கொள். ஆட்டை இப்போது இங்கே விட்டுச் செல்!” என்றார்.

‘வந்த வரைக்கும் லாபம். அது இன்னைக்கு வந்தால் என்ன… நாளைக்கு வந்தால் என்ன?’ என்று கருதிய ஆட்டிடையன் அந்த ஆட்டை அங்கேயே விட்டுச் சென்றான்.

Annamalai

அவன் சென்றதும், அண்ணாமலையாரை துதித்த குகை நமச்சிவாயர், “ஐயனே… பிட்டை வைத்து திருவிளையாடல் புரிந்த நீ இப்போது ஆட்டை வைத்து இந்த அடியவனிடம் விளையாடுகிறாயோ?” என்றார்.

பிறகு தனது திருநீற்றுப் பையிலிருந்து சிறிது திருநீற்றை எடுத்து அண்ணாமலையாரை நோக்கி ஜெபித்து அந்த ஆட்டின் மீது தூவினார். அடுத்த நொடி துள்ளி எழுந்த அந்த ஆடு, அங்கேயே இரண்டு குட்டிகளை ஈன்றது.

அருகே இருந்த மரத்திலிருந்து இலை தழைகளை பறித்து வந்து அந்த ஆட்டுக்கு அளித்தார் குகை நமச்சிவாயர்.

மறுநாள் பொன்னைப் பெறவந்த இடையன் இறந்த ஆடு உயிர் பெற்றது மாத்திரமல்லாது அது குட்டிகளையும் ஈன்றது கண்டு ஆச்சரியப்பட்டான்.

குகை நமச்சிவாயரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கோரினான்.

அவன் மீது இரக்கப்பட்ட குகை நமச்சிவாயர், “இந்த ஆடுகளை நீயே வேண்டுமானால் வைத்துக்கொள்!” என்று திருப்பி கொடுத்துவிட்டார்.

Goat calf

முதல் நாள் இடையனை குகை நமச்சிவாயரிடம் கிண்டல் செய்வதன் பொருட்டு அனுப்பிய அந்த குறும்பன் இதைப் பற்றி இடையன் மூலம் கேள்விப்பட்டு, குகை நமச்சிவாயரை மேலும் சோதிக்க எண்ணினான்.

தனது நண்பர்களில் உயிரோடு இருக்கும் ஒருவனை படுக்கவைத்து அவனை தென்னை ஓலைகளால் மூடி, தனது நண்பர்கள் சிலரை துணைக்கு அழைத்துக்கொண்டு குகை நமச்சிவாயரிடம் கொண்டு வந்து, “இவன் எங்கள் ஆருயிர் நண்பன். இறந்துவிட்டான். ஆட்டை உயிர்ப்பித்தது போல இவனை உயிர்பிக்கவேண்டும்” என்றான் போலியாக அழுதபடி.

இவர்கள் நாடகத்தை உணர்ந்துகொண்ட குகை நமச்சிவாயர், “இறந்தால் இறந்தது தான். நான் எதுவும் இதில் செய்ய முடியாது!” என்றார்.

அவர் அப்படி சொன்னதும், அவரை நோக்கி கலகலவென சிரித்த அந்த குறும்பன், “டேய்… எழுந்திரிடா.. இறந்தவங்க எழுந்திருக்க முடியாதாம்… நான் உன்னை எழுப்புறேன்” என்று கூறி ஏதோ மந்திரம் கூறுவது போல பாசாங்கு செய்தான்.

ஆனால் நண்பன் கடைசி வரை எழுந்திருக்கவேயில்லை. ஏனெனில் அவன் உண்மையிலேயே இறந்துபோயிருந்தான்.

இறைவனின் மெய்யடியார்களை ஒரு போதும் சோதிக்கக்கூடாது. அவர்கள் சினம் கொண்டால் அதை தாங்கும் சக்தி யாருக்கும் கிடையாது. ‘பெரியோரை பழித்தாயோ பெரும்பாவம் கொண்டாயோ’ என்று அதனால் தான் கூறுவார்கள். அதே சமயம், அவர்கள் நினைத்தால் முடியாததும்  எதுவும் இல்லை.

இதைத் தான் வள்ளுவர்,

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு (குறள் 269)

என்று கூறியிருக்கிறார்.

(கூகுள் செய்து பொருளை பார்க்கவும்!)

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : திருப்பணித்தொண்டர் திரு.சிவ.ஜனார்த்தனம் !

இவரைப் பற்றிய பதிவு நமது ரோல்மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதை படிக்கவும்.

“குடும்பத்தை கவனிக்கவே நேரமில்லை. இதுல கோவிலுக்கு எங்கே போறது, சாமியை எங்கே கும்பிடுறது??” என்று அங்கலாய்ப்போர் இவர் கதையை கேளுங்கள்!

கூட்டுறவு பண்டகசாலை ஒன்றில் விற்பனையாளராக பணிபுரிந்துகொண்டே இதுவரை 150 க்கும் மேற்ப்பட்ட உழவாரப்பணிகளிலும், 20 க்கும் மேற்பட்ட தேவார, திருவாசக முற்றோதல்களிலும் எண்ணற்ற சைவ விழாக்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

Sirgazhi Janarthanam 6

விழாக்களில் திருமுறைகளை தலையில் சுமந்து வரும் மிகப் பெரும் தொண்டை செய்துவருகிறார் இவர்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, எங்களுக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அந்நேரம் சிவாலயம் ஒன்றில் இருப்பேனென்றும் நிச்சயம் நமக்காக சிவபெருமானிடம் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

* சென்ற வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற, பார்வையற்ற வயலின் இசைக் கலைஞர் திரு.மணலி குமார் அவர்கள் நாம் கேட்டுக்கொண்டதை போலவே முருகனின் பக்தி பாடல்களை வயலினில் இசைத்து பின்னர் பிரார்த்தனை செய்ததாக கூறினார். அவருக்கு நம் நன்றி!

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

முதல் கோரிக்கையை அனுப்பியிருக்கும் வாசகி, வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனையில் கோரிக்கை அனுப்பியிருந்தார். அனைவருக்கும் நல்லதையே நினைக்கும் நல்லுள்ளம் கொண்டவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து கடும் துன்பத்தை அனுபவித்து வருகிறார். இத்தனை சோதனைக்கு நடுவிலும் பக்தி செய்யும் திடம் படைத்தவர்.அவர் கோரியிருப்பதை போன்றே அவருடைய கணவருக்கும் அவருக்கும் ஒரே இடத்தில பணி அமைந்து இருவரும் ஒற்றுமையுடன் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவேண்டும். கதிரவனை கண்ட காரிருளை போல இவர் பிரச்சனைகள் சீக்கிரம் தீரும் என்பது உறுதி.

அடுத்து, கோரிக்கை அனுப்பியிருக்கும் திரு.கணபதி ராமனின் கோரிக்கையை படித்துவிட்டு கண்கலங்கிவிட்டோம். இப்படியெல்லாம் கூட ஒருவருக்கு சோதனைகள் ஏற்படுமா என்ன? ஒரு பக்கம் ஸ்திரமில்லாத வேலை. மறுப்பக்கம் பெற்ற மகளுக்கு உடல்ரீதியான பிரச்சனைகள்…. தங்களுக்கு பிரச்னைகள் தங்கள் குழந்தைக்கு பிரச்சனைகள் என்று நினைப்பவர்கள் இவரது கோரிக்கையை ஒரு முறை படித்துப் பாருங்கள். உங்களை ஆண்டவன் எந்தளவு நல்ல நிலையில் வைத்திருக்கிறான் என்று புரியும்.  அக்குழந்தைக்கு ஏற்பட்டுள்ள உடல்ரீதியான குறைபாடுகளை பற்றி அறியும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. ஒரு பிஞ்சு குழந்தைக்கு இதுவரை 14 மேஜர் அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கிறதாம். இன்னும் 4 பாக்கியிருக்கிறதாம். எல்லாம் வல்ல ஈசனின் அருளால் விரைவில் இவர்கள் துன்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி விழும் என நம்பலாம்.

பொதுப் பிரார்த்தனையாக வாசகர் திரு.ஸ்ரீகாந்த் அவர்கள் தனது கோரிக்கையை அனுப்பியிருக்கிறார். படித்தபோது நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டோம். நான்கு வயது குழந்தை ஒன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போய்விட்டது. அக்குழந்தை மீண்டும் அதன் பெற்றோர்களுடன் இணையவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கும் திரு.ஸ்ரீகாந்த், தனது குழந்தை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் தாம் பறி கொடுத்துவிட்டதை குறிப்பிட்டு, பிள்ளையை பிரிந்து வாடும் பெற்றவர்களுக்குத் தான் அந்த வேதனை புரியும் என்று குறிப்பிட்டுள்ளார். உண்மை தான். அவரது நல்ல எண்ணத்திற்காகவாவது அந்த குழந்தை பெற்றவர்களிடம் மீண்டும் சேரவேண்டும்.

==================================================================

கணவருக்கும் எனக்கும் ஒரே இடத்தில் நல்ல வேலை கிடைக்கவேண்டும்!

ஆசிரியருக்கு எனது இனிய வணக்கங்கள்

எனது கணவர் ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

அங்கு மேற்படிப்பு (Ph.D) படிக்க வேண்டும் என்றால், படிப்பு முடிந்து 3 வருடங்கள் அங்கு வேலை செய்வதாக ஒப்பந்தம் கையெழுத்து போட்டு தர வேண்டும். இவரும் அது போல ஒப்பந்தம் போட்டு விட்டார். அப்பொழுது படிக்க (full time) நல்ல வாய்ப்பு வந்தபொழுதும் செல்ல இயல வில்லை

ஆனால் இப்பொழுது ஒப்பந்த காலம்  முடியும் முன்பே அவர்களாகவே  கிளம்ப சொல்லி விட்டார்கள்.

அவரது திறமைக்கு தகுந்த ஒரு நல்ல வேலை கிடைக்கவும், அதே போல எனக்கும் ஒரு நல்ல வேலை கிடைத்து மீண்டும் நானும் எனது கணவரும் ஒரே கல்லூரியில்பணியாற்றும் வாய்ப்பு பெறவும்  எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
– ஊர் மற்றும் பெயர் வெளியிட விரும்பாத வாசகி

==================================================================

Please pray for my child!

My name Ganapathy Raman. N
I am Presently at Nigeria and my family is at coimbatore. one daughter for me.

In my life i am struggling lot, with help of maha periyava i am surviving.

My daughter by birth had single kidney and no ass hole. Single Kidney also functioning only 20%. now we have fixed artificial ass hole for her.

Presently her age is 4 years – she has undergone appx 14 major surgery, due to the multiple problem. still 4 more surgery pending for her.

Due to my daughter problem, i came to nigeria for earning. Her also in my work i am not satisfied, toomuch political here. no one is ready to support me.

Next month i am planning to wind- up from here.

I am requesting you to pray for me to get a good job to support my daughter lifetime and also pls. pray for my daughter health to recover.

Ganapathy Raman. N,
Nigeria

==================================================================

பொது பிரார்த்தனை

Missing child should re-unite with parents!

Dear Sir,

I have a prayer to be included in the ‘group prayer’ of Rightmantra.

You might have read in the newspaper about this incident.

boy missingA 4-year old boy (Name: Sridhar) has got lost by his parents in Central Railway station (when they came to chennai for a vacation).  CCTV camera shows that a middle-aged lady was taking that child away.

Sir just to tell you that I lost my 4-year old son in an accident in 2013.  I am still suffering from it.

I can understand the anguish of those poor parents of missing their child – not even knowing his state of affairs. It is worst even than death of the child.

I prayed to God to reunite that child with his parents. Couple of days back I read the latest status in The Hindu that the search for the boy is still on. It is very sad that lot of railway stations don’t even know about this case when contacted by press.

Sir, for poor people, it is only the Almighty who can help in getting them out of trouble.

With this, I humbly request you to include this prayer in your group prayer session that the child Sridhar should get reunited with their parents through the lord’s grace.

Thank you,
Sreekkanth A V

=============================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgகணவரை பிரிந்து வாடும் நம் வாசகிக்கு நல்ல பணி கிடைத்து மீண்டும் ஒரே இடத்தில் அவர் தன் கணவருடன் பணிபுரிய ஏற்றதொரு சூழலை கனிய வைக்க இறைவனை பிரார்த்திப்போம். அதே போல, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தனது நான்கு வயது மகளின் மருத்துவ செலவுக்காக அயல்நாடு சென்று பொருளீட்டும் திரு.கணபதி ராமன் அவர்களின் உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, அவருக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் யாவும் முடிவுக்கு வந்து, அவரது குழந்தையும் பரிபூரண ஆரோக்கியத்தை பெறவும், நிம்மதி இழந்து தவிக்கும் அந்த குடும்பம் நிம்மதி பெறவும், பெற்றோரை பிரிந்து தவிக்கும் குழந்தை ஸ்ரீதர் மீண்டும் தன் பெற்றோருடன் சேரவும் எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திப்போம். இந்த பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு.சிவ.ஜனார்த்தனம் அவர்களின் சிவத் தொண்டு மேன்மேலும் சிறக்கவும் அவரும் அவர் தம் குடும்பத்தினரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் ஈசனருளால் என்றும் பெறவும் பிரார்த்திப்போம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மே 24, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W: www.rightmantra.com

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வயலின் இசைக்கலைஞர் திரு.மணலி குமார் அவர்கள் 

5 thoughts on “‘இறந்த சினை ஆடு உயிர்த்தெழுந்தது. இரட்டை கன்றும் ஈன்றது!’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

  1. குகை நமச்சிவாயர் பற்றிய கதையை நம் தளத்தில் பதிவு செய்தததில் மிக்க மகிழ்ச்சி. தெரியாத கதையை பற்றி தெரிந்து கொண்டதில் ஆனந்தம்,

    இதே போல் ராகவேந்திரர் மகானும் இறந்த மாதிரி நடித்தவரை உயிர் துறக்கச் செய்து இருக்கிறார். மாமிசங்களை வைத்து அவரை சோதனை செய்த பொழுது அந்த மாமிசத்தை பூக்களாக மாற்றி இருக்கிறார். ஏன் … நம் ஞானக் குழ்ந்தை திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர் பெறச் செய்யவில்லையா… இதே போல் எவ்வளவோ நிகழ்வுகளை நம் ஞானிகள் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருமுறைகளை சுமந்து வரும் சிவனடியார் திரு ஜனார்த்தனுக்கு எனது பணிவான வணக்கங்கள். அவர் வெகு விரைவில் சிவாலயம் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் பண்ண வேண்டும். //தில்லை வாழ அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் //

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் அன்பர்களின் கோரிக்கை குருவருளாலும் திருவருளாலும் இனிதே நிறைவேறும்.

    //கோபுர தரிசனம் கோடி புண்ணியம் /// அண்ணாமலையார் படம் அருமை .

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. வணக்கம்…….. பிரார்த்தனை கோரிக்கைகளில் குறிப்பிடப் பட்டுள்ள குழந்தைகளை நினைக்கையில் மனது கனக்கிறது…… விரைவில் அனைவரின் குறைகளும் நீங்கி நல்ல வண்ணம் வாழ குருவருளையும் திருவருளையும் வேண்டுகிறோம்……..

  3. குகை நமசிவாயர் பற்றியும்,அவர் நிகழ்த்திய திருவிளையாடல் பற்றியும் நம் த(ல)த்தின் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

    கூகிளிட்டு பார்த்தாலும், தாங்கள் தரும் திருக்குறளுக்கான விளக்கம் சிறப்பாகவும் மற்றும் எளிமையாகவும் இருக்கும்.

    சிவா.ஜனார்த்தனம் அய்யா தலைமை ஏற்கும் இந்த வார கூட்டு பிரார்த்தனையில், அனைவரது கோரிக்கைகளும் நிறைவேறிட, எல்லாம் வல்ல எம் பெருமான் அருள் புரிவாராக..

    தென்னாடுடைய சிவனே போற்றி..
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

    நன்றி அண்ணா…

  4. கதைக்கேற்ப இரட்டை ஆட்டுக்குட்டி அருமை ..மேலும் இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை விடுத்த அனைவருக்கும் அவர்களது பிரார்த்தனை நிறைவேறவும் காணாமல் போன சிறுவன் தன் பெற்றோருடன் இணையவும் பிரார்த்தனைக்கு தலைமை ஏர்க்கும் திரு ஜனார்த்தனம் அவர்களது சிவ தொண்டு சிறக்கவும் எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டுவோம் ..

  5. குகை நமச்சிவாயரின் அருள் அற்புதங்களை அறிந்து நெகிழ்ச்சியடைந்தேன். இவ்வார பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் சிவ.ஜனார்த்தனன் அவர்களுக்கு எனது வணக்கங்கள். வேண்டுகோள் வைத்திருக்கும் அனைவருக்கும் எம்பெருமான் திருவருளாலும் மகாபெரியவா அவர்களின் குருவருளாளும் நண்மைகள் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *