ஒரு மனுஷன் எனக்கே ‘கண்ணீர்’ பத்தி இப்படி ஒரு அபிப்ராயம் இருக்குன்னா…. ஆண்டவன் அதை எவ்ளோ சீரியஸா எடுத்துக்குவான்? ஜஸ்ட் ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க. உங்களால் அடுத்தவர்கள் சிந்தும் கண்ணீருக்கு இறைவன் தரும் தண்டனை மிக மிக கடுமையாக இருக்கும். எனவே உங்களை அறிந்தோ அறியாமலோ எந்த ஜீவனின் கண்ணீருக்கும் நீங்கள் காரணமாக இருக்காதீர்கள். நாமெல்லாம் இந்த பிரபஞ்சத்தில் மகிழ்ச்சியின் அலைகளை, சந்தோஷங்களை, தோற்றுவிக்க பிறந்தவர்கள். உங்களால் அனைவரும் சிரிக்கட்டும். தங்கள் கவலைகளை உங்களை காணும்போது மறக்கட்டும். வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கட்டும்.
பாலம் ஐயாவை நான் பார்த்து பேசும்போது, என் நண்பர் பூனைக் குட்டியை காப்பாத்தினது பத்தி அவர் கிட்டே சொன்னேன் பதிலுக்கு அவர் ஒரு அற்புதமான கதை ஒன்னை சொன்னாருன்னு சொன்னேன் இல்லையா?
இப்போ அந்த விஷயத்துக்கு வருவோம். நமது தளத்தின் ஓவியர் ரமீஸின் அபாரமான கைவண்ணத்தில் பாலம் ஐயா கூறிய அந்தக் கதையை தந்திருக்கிறேன்.
————————————————————————————————————————
பாலம் ஐயா தொடர்கிறார்…
“நீங்க பூனைக்குட்டியை நண்பர் காப்பாத்தினது பத்தி சொன்னவுடனே… எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருது.
செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை (2.5%) ஏழைகளுக்கு கொடுப்பது, ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது, என முஸ்லீம்களுக்கு குர்ரானில் கூறப்பட்டுள்ள ஐந்து கடமைகளில் முக்கியமானது தினமும் ஐந்து வேளை தொழுவது.
இவ்வாறு குர்ரானில் கூறப்பட்டுள்ளபடி சன்மார்க்க கடமைகள் அனைத்தையும் தவறாது செய்துவந்த ஒரு முஸ்லிம் இறந்த பிறகு சொர்கத்துக்கு செல்கிறார். அங்கே இறைவனை அவர் சந்திக்கும்போது இறைவன் கேட்க்கிறார்…. “உனக்கு நான் ஏன் சொர்க்கம் கொடுத்தேன் தெரியுமா?”
“தெரியுமே.. எனக்கு மட்டுமில்லே… எல்லாருக்கு தெரியும். நான் இஸ்லாம் கூறியுள்ள ஐந்து கடமைகளையும் தவறாது நிறைவேற்றியவன். ஒரு நாள் கூட தொழுகை தவறியது கிடையாது. அதன் பலனாக சொர்க்கத்திற்கு வந்திருக்கிறேன்” என்கிறார்.
அதற்கு அல்லா… “இல்லை நீ ஒரு நாள் தொழுகை தவறிவிட்டாய்… அதற்காகத் தான் சொர்க்கம் கொடுத்திருக்கிறேன்” என்கிறார்.
இவருக்கு தூக்கி வாரப்போட்டது… ஏதோ ஒரு வேளை தொழுகை தவறிட்டோம் போல…. ஆனா அது பெரிய பாவமாச்சே… என்று நினைத்தவர்… “அல்லா… தொழுகை தவறியது மிகப் பெரிய பாவமல்லவா ஆனால் நீங்கள் அதற்காக எனக்கு சொர்க்க அளித்தேன் என்று சொல்வது எனக்கு விளங்கிவில்லை”
“நீ தொழுகைக்கு ஒரு நாள் சென்றுகொண்டிருந்தாய். அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. பள்ளிவாசலின் சுவரையொட்டி அந்த மழையில் நனைந்த படி… ஒரு பூனைக்குட்டி ஒன்று கிடந்தது. குளிரில் அதன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. நீ அதை பார்த்து பரிதாபப்பட்டாய். அதை எடுத்து அதன் ஈரத்தை உனது ஆடையால் துடைத்தாய்…. அப்போதும் அதன் குளிர் நடுக்க நிற்கவில்லை. இறுதியில் உன் சட்டை பொத்தான்களை அகற்றி உன் மார்பை ஒட்டி அதை வைத்துக்கொண்டாய்… உன் உடம்பின் சூட்டினால் அது சிறிது குளிர் நீங்கப்பெற்றது. சற்று நேரத்தில் மழை நின்றுவிட… நீ அதை கீழே வைத்துவிட்டாய்… அது மகிழ்ச்சியுடன் ஓடிவிட்டது…. பூனைக்கு நீ உபகாரம் செய்தாலும், உனக்கு தொழுகை நேரம் கடந்துவிட்டது. அன்று நீ தொழவில்லை. ஆனால் அதற்காகத் தான் நான் உனக்கு சொர்க்கம் கொடுத்தேன்” என்கிறார்.
————————————————————————————————————————
இஸ்லாமியர்கள் தங்கள் மதக் கோட்பாடுகளில் அதன் கட்டளைகளில் எவ்வளவு தீவிரமாக இருப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும். ஆனா அவர்கள் கூட தொழுகையைவிட அந்த நேரத்தில் ஆபத்தில் இருப்பவருக்கு உதவுவது மிகவும் உயர்வான செயல் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.
இதே டைப் கதைகள் நம்ம கீதை, ராமாயணம், பைபிள்ல கூட இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது ?
நல்லவனா இருந்து நாலு பேருக்கு நம்மால் இயன்ற நன்மையை செய்வதைவிட மிகப் பெரிய ஆன்மிகம் எதுவுமில்லை. பக்தியும் இல்லை. பூஜைகள் இல்லை.
இந்தக் கதையை பாலம் ஐயா சொன்னவுடனே… நான் கைதட்டினேன் பாருங்க அப்படி ஒரு கைதட்டல்.
எவ்ளோ பெரிய விஷயத்தை பாலம் ஐயா எப்படி அனாயசமா சொல்லியிருக்கார் பார்த்தீங்களா? இப்படி நாங்க பேசப் பேச பொக்கிஷமா கொட்டுது அவர் கிட்டேயிருந்து. அப்போவே முடிவு பண்ணிட்டேன்…. இதோ ஏதோ ஒரு பதிவோட நிறுத்துற விஷயம் இல்லே. இவர் கிட்டேயிருந்து வர்ற இவரோட அற்புதமான எண்ணற்ற THOUGHT PROVOKING கருத்துக்களை நிச்சயம் அடுத்தவங்களுக்கு கொண்டு போய் சேர்க்கணும் அப்படின்னு முடிவு பண்ணி அதை ஒரு தொடராகவே நம்ம தளத்தல் வெளியிட முடிவு செய்துவிட்டேன். அதற்க்கு அவரும் ஒப்புக்கொண்டுவிட்டார்.
நான் பணக்காரன், நான் நெறையா சம்பாதிக்கிறேன்… என்பன போன்ற விஷயங்களில் எந்த பெருமையும் கிடையாது. கஷ்டப்படுற நாலு பேருக்கு நீங்க உதவி பண்ணியிருக்கீங்களா? எங்கேயாவது எப்போவாவது யாருடைய கண்ணீரையாவது துடைச்சிருக்கீங்களா? அல்லது அதற்க்கான முயற்சியாவது செஞ்சிருக்கீங்களா? அப்படி செஞ்சிருந்தா அதை நினைச்சி பெருமை படுங்க.
இதைத் தான் வள்ளுவரும் ரொம்ப அழகா சொல்லியிருக்கார்….
————————————————————————————————————————
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. (குறள் 241)
பொருள் : கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.
————————————————————————————————————————
உங்கள் பிள்ளைகளையும் இது போன்ற விஷயங்களை அவர்கள் செய்து பெருமைப்பட்டுக்கொள்ளும்படி வளர்க்க முயற்சி செய்யுங்கள். படிப்பு தானா வரும். ஏன்னா மனசு சுத்தமானா எல்லாமே சாத்தியம் தான்.
ஞாயிற்றுக் கிழமை நடக்குற விழாவுக்கு வாங்க.. ஐயா பேசுறதை கேளுங்க… இன்னும் இதைப் போல நிறைய சொல்வார்…
தொடரும்….
சார், எனக்கு சண்டே நடக்கும் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் பொய்விட்டது இத்தனை நாள் காத்து இருந்தேன் ;தயவு செய்து நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்து தங்கள் வலை தளம் முலம் நாங்கள் பார்க்க அசை படுகிறோம் ;;நன்றி
Expecting the great day to see all of you. Rishi, Ilango, Mr. K.S., Nandakumar, Mulaivanam.
**
Btw, great to know this story. You have got great people’s relationship. Good. Happy for that.
**
Chitti.
Thoughts becomes things.
பாலம் அய்யாவை போலவே அவரின் கதையும் இருக்கிறது. தன்னுடைய இன்ப துன்பங்களை பற்றி கவலை கொள்ளாமல் எவர் பிறருக்காக வாழ்கிறார்களோ அவர்களை பற்றி ஆண்டவன் கவலை கொள்கிறான் என்ற அற்புத தத்துவம் இந்த கதையின் போதனையாக இருக்கிறது.
காலத்தி னாற்செய்த நன்றி சிரிதெனின்னும்
ஞாலத்தின் மாண பெரிது
அஸ்ஸலாமு அலைக்கும். (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக)
சகோதரரே, இது போன்ற கதை குர்ஆனில் கிடையாது. இஸ்லாம் உயிரினங்கள் விஷயத்தில் அன்புடன் நடக்க சொல்கிறது, அவைகளைக் கொடுமைப்படுத்தக் கூடாது என்று சொல்கிறது. இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
தாகமுள்ள நாய்க்கு தண்ணீர் கொடுத்த ஒரு செயலுக்காக ஒரு விபச்சாரியின் அனைத்து பாவங்களையும் இறைவன் மன்னித்தது, ஒரு பூனையைக் கட்டி வைத்து சித்திரவதைப்படுத்தி கொன்றதற்காக ஒரு பெண்ணிற்கு நரகம் கொடுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் குர்ஆனிற்கு அடுத்தப்படியாக முஸ்லிம்கள் நம்பும் நபிமொழிகளில் பல உள்ளன. படைப்பினங்களின் மீது கருணை காட்டாதவருக்கு படைத்தவன் கருணை காட்ட மாட்டான் என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம்.
ஆனால் நீங்கள் சொல்வதைப் போன்ற கதை குர்ஆனில் எங்குமே கிடையாது. குர்ஆனில் இல்லாத ஒன்றை இருப்பது போன்று சித்தரிக்க வேண்டாம்.
முஸ்லிமல்லாத சகோதரர்கள், இஸ்லாத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள பின்வரும் link உபயோகமாக இருக்கும்.
http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/nonmuSlim_dava/
டியர் சுந்தர் இது தான் உண்மை .தவம் இருந்து கடவுளை தேடுவதை விட தர்மம் செய்து கடவுளை தேட வேண்டும்.