லேசில் புரியுமா?
ஆனால் கேட்டவர்க்கு கேட்டபடியும் கேள்வியிலே பதிலாகவும் வருபவனல்லவா அவன்? இதோ உங்கள் இல்லம் தேடி புறப்பட்டுவிட்டான்!
‘கண்ணனின் மாயமென்ன மாயமே…’
பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் & எழுத்தாளர் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீக தொண்டு நிறுவனமான கிஞ்சிட்காரம் டிரஸ்ட் சார்பாக ஒவ்வொரு வருடமும் ஒரு அற்புதமான நாட்காட்டி (CALENDAR) வெளியிடப்படுவது வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். சென்ற ஆண்டு ‘ஸ்ரீராமனின் பாதையில்…’ என்கிற தலைப்பிலும் அதற்கு முந்தைய ஆண்டு அன்னை மகாலக்ஷ்மியின் பல்வேறு வடிவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட, ‘லக்ஷ்மீ கடாக்ஷம்’ என்கிற பெயர் கொண்ட காலண்டரும் வெளியிடப்பட்டது. திரு.வேளுக்குடி கிருஷ்ணன் முன்னின்று வடிவமைத்து சிட்டி யூனியன் வங்கியுடன் இணைந்து அதை வெளியிட்டு வருகிறார்.
சுமார் ஒரு லட்சம் காலண்டர்கள் வரை அது முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்தது. நம் தளத்திலும் அது பற்றி சென்ற ஆண்டு இதே நேரம் நாம் பதிவளித்திருந்தோம். காலண்டரை வாங்க விரும்பும் மெய்யன்பர்கள் அதை முன்பதிவு செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டோம். பல வாசகர்கள் அதை முன்பதிவு செய்து பெற்றார்கள்.
இந்த ஆண்டு, 2015 ஆம் ஆண்டுக்கான காலண்டர் ‘கண்ணனின் மாயமென்ன மாயமே…’ என்கிற தலைப்பில் கண்ணனின் லீலைகளை மையமாக வைத்து அதற்கு பொருத்தமான வண்ண ஓவியங்கள் மற்றும் ஸ்லோகங்களுடன், முக்கிய நாள், கிழமை விஷேடங்கள் இவற்றை பற்றிய குறிப்புக்களோடு காலண்டர் தயாராகி வருகிறது. 12 பக்கங்கள் கொண்ட அழகிய வண்ண காலண்டர் இது.
தமிழ், மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் இந்த காலண்டர் தயாராகி வருகிறது என்பது தான் இதன் சிறப்பு. இது தினசரி காலண்டர் அல்ல. மாத காலண்டர்.
இந்த காலண்டரை வாங்க விரும்பும் நம் வாசகர்கள் அதை முன்பதிவு செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
முன்பதிவு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. டிசம்பர் 2, 2014 அன்று முன்பதிவு முடிவடைகிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே காலண்டர் கிடைக்கும். கடைகளில் இது கிடைக்காது.
முன்பதிவை http://kinchit.org என்ற முகவரியிலும் செய்யலாம் அல்லது சிட்டி யூனியன் வங்கியின் கிளைகளிலும் நேரில் சென்று செய்யலாம்.
முன்பதிவு செய்பவர்கள் அவர்களுக்குரிய காலண்டரை சிட்டி யூனியன் வங்கியின் கிளைகளில் (புக் செய்த கிளையில்) 2015 ஜனவரி 1 முதல் ஜனவரி 10 வரை பெற்றுக்கொள்ளலாம். கூரியர் மூலம் வேண்டுபவர்கள் கூரியரிலும் பெற்றுக்கொள்ளலாம்.
காலண்டரை புக் செய்பவர்களுக்கு, யமுனை, மதுரா, பிருந்தாவனம், கோகுலம், துவாரகை, குருஷேத்ரம் ஆகிய இடங்களில் வீடியோ காட்சிகளுடன் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் யாத்திரை விளக்கவுரை வர்ணனையுடன் கூடிய டி.வி.டி.க்கள் 3 இலவசமாக வழங்கப்படும்.
கண்ணனின் லீலைகளையும் அது உணர்த்தும் வாழ்வியல் நீதிகளையும் அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு. காலண்டரை புக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளியுங்கள்.
இதில் வரும் வருமானம் முழுக்க திருக்கோவில் புனருத்தாரனங்கள், வேத பாடசாலை பரமாரிப்பு, திவ்ய பிரபந்தங்களின் வகுப்புகள் உள்ளிட்ட இறைபணிகளுக்கே செலவிடுப்படுகிறது. எனவே இந்த காலண்டரை வாங்குவதன் மூலம் பகவத் சேவையிலும் உங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்களாவீர்கள்!
மேலும் விபரங்களுக்கு http://kinchit.org/index.php/services என்ற முகவரியை பார்க்கவும்.
மேற்படி இணையத்தில் சென்று நீங்கள் ஆன்லைன் மூலம் காலண்டரை புக் செய்ய, அந்த தளத்தில் USERNAME create செய்துகொள்வது அவசியம். ஏனெனில், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் விதிமுறைப்படி BILLDESK & PAYMENT GATEWAY மூலம் பணம் செலுத்துபவர்கள் LOG IN ID மூலம் LOG IN செய்தே பணத்தை செலுத்தவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு:
http://kinchit.org
==============================================================
குறிப்பு: கண்ணனின் லீலைகளை இல்லம் தோறும் கொண்டு சென்று, அதன் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்துகொள்ள வகை செய்யும் ஒரு மகத்தான பணியிலும், மேலும் பல்வேறு அறப்பணிகளில், சமயப்பணிகளில் ஈடுபட்டு வரும் கிஞ்சிட்காரம் அமைப்பின் அரும்பெரும் தொண்டில் நம் தளத்தையும் ஒரு அணில் போல ஈடுபடுத்திக்கொள்ளவுமே இந்த பதிவை நாம் அளிக்கிறோம். மற்றபடி நம் தளத்திற்கும் இந்த காலண்டரை தயாரித்து விநியோகிக்கவிருக்கும் கிஞ்சிட்காரம் அமைப்புக்கும் எந்த வர்த்தக தொடர்பும் இல்லை என்பதை இத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.
– சுந்தர்,
www.rightmantra.com
==============================================================
இதற்கு முந்தைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட காலண்டர்கள் குறித்த நம் பதிவுகள்:
வீடு தேடி வர ஸ்ரீராமன் தயார்… வரவேற்க நீங்கள் தயாரா?
வருடம் முழுக்க இனி லக்ஷ்மி கடாக்ஷம் தான்!
==============================================================
Also check:
பிறவி ஊமையை பேசவைத்த திருமலை தெய்வம் – உண்மை சம்பவம்!
கண்ணனாக அவதரித்ததற்கு கடவுள் கொடுத்த விலை – கிருஷ்ண ஜெயந்தி SPL!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!
தன் பரம பக்தனுக்கு ஏவல் செய்த பரமாத்மா – நரசிம்ம மேத்தாவின் முழு வரலாறு!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும் மகா பெரியவாவும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!
ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!
‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!
திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !
‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !
==================================================================
[END]
We got 2014 year calendar. ராமனின் பாதையில் CD மிகவும் அருமையாக இருந்தது
We will book the calendar through on line. Thanks for the information and for this article.
Regards
Uma
பதிவை படிக்கும்போது முந்தைய ஆண்டு காலண்டர்களை மிஸ் செய்துவிட்டோமே என்று ஏங்கச் செய்கிறது.
இந்த ஆண்டுக்கு இரண்டொரு நாளில் முன்பதிவு செய்துவிடுகிறேன்.
வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் பலவற்றை டிவிக்களில் பார்த்திருக்கிறேன். தெள்ளத் தெளிவான உச்சரிப்பும் சாஸ்திர சம்பிரதாய அறிவும் நிரம்ப பெற்றவர்.
பதிவின் துவக்கத்தில் நீங்கள் அளித்துள்ள முன்னுரை அருமை.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
Thanks shri சுந்தர்ஜி.
பதிவுக்கு நன்றி சுந்தர் சார். சிட்டி யூனியன் வங்கியில் சலான் மற்றும் கிஞ்சித் காரம் டிரஸ்டின் ரசீது தரப்படும். இவை இரண்டையும் பத்திரமாக வைத்திருந்து காலண்டர் வாங்கும் போது வங்கியில் கொடுத்தால் தான் காலண்டர் கிடைக்கும்.
அருமையான தகவலுக்கு நன்றிகள் பல…………..