Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > இறைவனை விட சக்திமிக்கது எது தெரியுமா? — Rightmantra Prayer Club

இறைவனை விட சக்திமிக்கது எது தெரியுமா? — Rightmantra Prayer Club

print
காசியிலே ஒரு செல்வந்தர் இருந்தார். மிகச் சிறந்த வள்ளல். ஆனால் பூர்வஜன்மப் பலனாக அவரைத் தொழுநோய் பற்றிக்கொண்டது. வாரி வாரி வழங்கிய அந்தச் செல்வரை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்காக அவரிடம் உதவிகள் பெற்ற பலரும் முன்வந்தனர்.

அந்தச் செல்வந்தரின் நோய் முற்றிப்போய் புழுக்கள் நெளியத் தொடங்கின. தாம் யாருக்கும் பாரமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. தனது நண்பர்களையும் ஆதரவாளார்களையும் அழைத்துத் தன்னைக் கங்கைக்கரைக்குக் கூட்டிச்செல்லச்சொன்னார். தான் கங்கையில் மூழ்கி இறந்துவிடப் போகவதாகவும் தன் மேல் உண்மையான அக்கறை இருந்தால் ஒரு கல்லை அவர் உடலில் கட்டும் படியும் வேண்டினார். அவர் மேலும் மேலும் வற்புறுத்தவே அவருடைய இடுப்பில் ஒரு கல் கட்டப்பட்டது. அவரைச் சுற்றி நின்றவர்கள் அழுதுகொண்டிருந்தனர். அந்நேரம் அங்கே கபீர்தாசர் சீடர் பத்மநாபர் என்னும் பெயருடையவர் வந்தார். அங்கே என்ன நடக்கிறது என்று விசாரித்தார் நடப்பதை அறிந்ததும் அங்கிருந்தவர்களிடம் ‘நான் சொல்கிறப்டி நீங்கள் செய்தால் அவரைக் காப்பாற்றிவிடலாம். செய்வீர்களா?”என்று கேட்டார்.

‘எங்கள் உயிரை வேண்டுமானாலும் கொடுக்கிறோம் ‘ என்றனர் சிலர்.

Rama namam

‘ஒரு உயிரைக் காப்பாற்ற வேறு உயிர்கள் தேவையில்லை. நீங்கள் எல்லோரும் ஒரே மனத்துடன் நான் சொல்லுவதை மூன்று முறை திருப்பிச் சொல்லவேண்டும்’ என்றார்.

‘சரி’ என்றார்கள்

உடனே அவர் எல்லோரையும் எழுந்து நின்று கைகூப்பிக்கொண்டு மூன்று முறை ராம நாமத்தைச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்.

‘ஏற்கனவே இராமர் கோவிலுக்குச் சென்று பிரார்த்திதோம். ஏதும் நடக்கவில்லை’ என்றார்கள்.

‘ராமனைத் தொழுது நடக்கவில்லையென்றால் இராம நாமத்தால் நடக்கும். முயன்று பாருங்களேன்’ என்றார்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரே சிந்தையோடு மூன்று முறை இராமநாமத்தைக் கூறினர். செல்வந்தர் இடுப்பில் கட்டிய கல் அறுந்துவிழுந்தது. அவரது நோய் நீங்கப்பெற்று புலிப்பொலிவுடன் விளங்கினார். எல்லோரும் பத்மநாபரைப் போற்றினர். எல்லாம் குருவருள் என்றார் அவர். எல்லோரையும் அழைத்துக்கொண்டு கபீர்தாஸரிடம் சென்றார். எல்லாவற்றையும் கேட்ட கபீர்தாசர் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாகக் கோபம் கொண்டார். பத்மநாபரைப் பார்த்து.

‘நீ என்னிடம் கற்றுக்கொண்டது இவ்வளவு தானா? இராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே போதுமே! அவர் குணமாகியிருப்பாரே!. அதன் திறமையை அறியாமல் மூன்று முறை சொல்லச் செய்து இராமநாமத்தின் பெருமையை குறைவாக மதிப்பிட்டுவிட்டாயே’ என்றார் கபீர்தாசர்.

அதற்கு பத்மநாபர், “அந்த செல்வந்தன், இந்த காசி க்ஷேத்ரத்தில் இவ்வளவு காலம் இருந்த போதும், ஒரு நல்ல குருவை தேடி உபதேசம் பெறாமல் இருந்ததற்காக ஒரு முறையும், அவனது நோய் நீங்க ஒருமுறையும், அனைவரும் இந்த ராம நாமத்தின் பெருமையை உணர்ந்திட ஒருமுறையும், ஆக மூன்று முறை சொல்லச் செய்தேன்…’ என்றார் பத்மநாபர்.

இறைவனை விட ஆற்றல்மிக்கது, வலிமையானது  எது என்று கேட்டால் அவன் நாமமே ஆற்றல்மிக்கது, வலிமையானது. பகவானை விட பகவான் நாமத்திற்கு சிறப்பு அதிகம்

‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
‘ராம’ என்றிரண்டெழுத்தினால்’ – கம்பர்

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது : கோவையை சேர்ந்த சாதனையாளர் & ‘மாற்று(ம்) திறனாளி’ நண்பர் ஜெகதீஷ் அவர்கள்.

கை, கால்கள் மற்றும் இன்ன பிற அவயங்கள் நன்றாக இருந்தும் கூட, வீட்டுக்கோ நாட்டுக்கோ எந்த வித பயனும் இல்லாமல், பூமிக்கு பாரமாய் உழலும் மனிதர்கள் எண்ணற்றோர் உண்டு. ஆனால், ஜெகதீஷ் அவர்களுக்கு தலை மற்றும் கைவிரல்கள் தவிர வேறு எதுவும் அசையாது. ஆனால் அந்த நிலையிலும் மனவுறுதி கொண்டு, இந்த சமூகத்தை மாற்ற துடிக்கிறார் இந்த சமூக போராளி.

மாற்றுத் திறனாளிகளின் வீடு என்றாலே சோகத்தில் அழுது வடியும் என்ற அபிப்ராயம் உள்ளவர்கள், இவரிடம் ஒருமுறை பேசிப்பார்க்கவேண்டும், இவரது வீட்டுக்கு போய் பார்க்கவேண்டும். ‘மாற்றுத் திறனாளி அவரல்ல… நாம் தான்’ என்று புரியும். இந்த நிலையிலும் தன்னைச் சுற்றிலும் மகிழ்ச்சியின் அலைகளை ஒருவரால் ஏற்படுத்த முடிகிறது என்பது சாதாரண விஷயம் அல்ல. மிகப் பெரிய அதிசயம்!! இருக்காதா பின்னே… அத்தனை போராட்டத்திலும் வறுமையிலும் “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!” என்று பாடிய மகாகவி பாரதியின் தீவிர ரசிகராயிற்றே இவர். (அந்த ஒன்று போதாதா நம்மையும் இவரையும் இணைக்க…?)

நம் கோவை வாசகர்கள் மூலம் ஜெகதீஷ் அவர்களுக்கு இராமர் ஜாதகமும் பாரதியின் புதிய ஆத்திசூடியும் பரிசளிக்கப்படுகிறது. உடன் ஜெகதீஷ் அவர்களின் பாட்டியும் அம்மாவும்....!
நம் கோவை வாசகர்கள் மூலம் ஜெகதீஷ் அவர்களுக்கு இராமர் ஜாதகமும் பாரதியின் புதிய ஆத்திசூடியும் பரிசளிக்கப்படுகிறது. உடன் ஜெகதீஷ் அவர்களின் பாட்டியும் அம்மாவும்….!

இவரைப் பற்றி கேள்விப்பட்டு இவரை கோவைக்கே சென்று அவரது இல்லத்தில் சந்தித்தோம். (சந்திப்பின் முதல் பாகம் ஏற்கனவே நம் தளத்தில் வெளியிடப்பட்டுவிட்டது. “வணக்கம் அண்ணா!”) இரண்டாம் பாகம் விரைவில் வெளியிடப்படும்.

நம் பிரார்த்தனை கிளப் பற்றி ஏற்கனவே இவருக்கு கூறியிருந்தோம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஜெகதீஷ் அவர்களுக்கு நம் நன்றி.

(இந்த வாரம் இராமநாமத்தின் சிறப்பை வலியுறுத்தும் கதையும், இராமர் ஜாதகத்தை ஜெகதீஷ் அவர்களுக்கு அளித்த புகைப்படமும் ஒன்றாக அமைந்தது திட்டமிட்டு அல்ல. தற்செயலாகத் தான். இந்த கதையே சென்ற வாரமே நாம் அளிக்கவேண்டியிருந்தது. மேலும் ஜெகதீஷ் அவர்கள் அடுத்த வாரம் தான் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவிருந்தார்.தவிர்க்க இயலாத காரணத்தால் இந்த வாரமே தலைமை தாங்குகிறார்!!)

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

சந்தான பாக்கியம் கிடைக்கவேண்டும்!

அனைவருக்கும் வணக்கம்.

இந்த தளத்தை பற்றியும் பிரார்த்தனை கிளப் பற்றியும் தற்பொழுது தெரிந்துகொண்டேன்.

My name is Maragatham. My age is 31 years. 1 years 6 Months completed in our married life. மழழைச் செல்வத்தை அடையவில்லை. நல்ல முறையில் கரு தங்கி ஆரோக்கியமான குழந்தை பிறக்கவேண்டும்.

எங்களுக்காக அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

– மரகதம்
(இவர் ஊர் பெயர் தெரியவில்லை)

==================================================================

குழந்தை நலம் பெறவேண்டும்! கட்டியவள் துயர் தீரவேண்டும்!!

Dear sir and friends,

I am Ramnath (38) working in an Construction co. as Admin Executive.

I am reading this website for the past few months and also referring to lot of my friends and relatives.

I am married and having a female child of age 4. Her name is Ragapriya. She is suffering from autism and we have admitted her to a special school.

I am very much worried about my child’s future. My wife, Pavithra is mentally affected by this.

Please pray for our child’s improvement and future.

Ramnath & Pavithra,
Mangalore – 575006

==================================================================

பொது பிரார்த்தனை

சம்பா பயிர்கள் மழை வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்படவேண்டும்!

தமிழகம் முழுதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. ஒரு பக்கம், ஆறு, குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பினாலும் மறுப்பக்கம், சம்பா பயிர்கள் தென்மாவட்டங்களில் பல இடங்களில் நீரில் மூழ்கியுள்ளது. விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாய தொழில் நம் நாட்டில் பல சவால்களை சந்தித்துவரும் சூழலில், இதை விவசாயிகளால் தாங்க முடியாது.

உலகிலேயே பரிதாபத்திற்க்குரிய ஜீவன்கள் யார் என்றால் நம் விவசாயிகள் தான். ஒன்று வறட்சியால் பயிர்கள் கருகுகின்றன. அல்லது மழை வெள்ளத்தால் அழுகுகின்றன.

flooded-crops

ஊரை அடித்து உலையில் போடும் அரசியல் வியாதிகள் கூட நிம்மதியாக உறங்கும் சூழ்நிலையில், நாம் சோற்றில் கை வைக்க, தான் சேற்றில் கால் வைக்கும் நம் விவசாயி, விதைத்துவிட்டு நிம்மதியாக இங்கு உறங்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம். தகுதியற்றவர்களை தூக்கி வைத்து கொண்டாடும் நாம் அவனுக்காக நாம் என்ன செய்தோம்? குறைந்த பட்சம் அவன் நிம்மதியாக உறங்க, அவன் பயிர்கள் காப்பாற்றப்பட ஒரு பிரார்த்தனையாவது செய்வோம்.

நடவு செய்துள்ள பயிர்கள் காப்பாற்றப்பட, வான் மழையானது தேவையான அளவுக்கே பொழிய, சம்பா அறுவடைக்காக காத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் மனம் குளிர, விளைச்சலுக்கு உரிய விலையை பெற, இறைவனை பிரார்த்திப்போம்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. (குறள் 1032)

==================================================================
http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg புத்திர பாக்கியம் கிட்டாமல் தவிக்கும் திருமதி.மரகதம் அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும், மங்களூரை சேர்ந்த ராம்நாத்-பவித்ரா தம்பதியினரின் குழந்தை ராகப்ரியாவின் குறைபாடு நீங்கி அக்குழந்தை நல்ல முறையில் வளரவும், பெற்றோர் மனம் குளிரவும், மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள சம்பா பயிர்கள் காப்பாற்றப்படவும், விவசாயிகள் நிம்மதியடையவும், இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் ஜெகதீஷ் அவர்கள் மேன்மேலும் பல சிறப்புக்களை பெறவும் இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : அக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருமுறை, திருப்புகழ் தொண்டுக்காக திருப்புகழ் செம்மணி, சைவ சித்தாந்த ஞானாம்பிகை, திருமுறைச் சுடர், திருமுறை தீபம், திருமுறைத் தமிழ் மணி, ஏழிசை வல்லபி, திவ்யபிரபந்த மணி, சித்தாந்த செம்மல், பெரும்பாண நங்கை உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றுள்ள அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்கள். “நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!” — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!!

[END]

8 thoughts on “இறைவனை விட சக்திமிக்கது எது தெரியுமா? — Rightmantra Prayer Club

  1. ராம நாமதத்தின் மகிமையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம். மிகவும் அருமையான கதை

    இந்த வார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் ஜகதீசிற்கு வணக்கங்கள் பல.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் வாசகர்களுக்காகவும் மற்றும் நாட்டின் சுபிக்ஷத்திற்காகவும் பிரார்த்தனை செய்வோம்

    ராமர் படம் அருமை

    லோக சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா

  2. இறைவனை விட இறைவனின் நாமத்திற்கு சக்தி அதிகம். சேது பந்தனம் கட்டும்போது, வானரங்கள் கடலில் போட்ட கற்கள் எல்லாம் நீரில் மிதக்க, இராமன் போட்ட கற்கள் மட்டும் மூழ்கிவிட்டன. இராமன் அனுமனை கூப்பிட்டு வினவ, அப்போது தான் அனுமன் சொன்னான், “பிரபோ, நாங்கள் உங்கள் திருநாமத்தை ‘ராம்’ என்று எழுதி கடலில் வீசுகிறோம். அது மிதக்கிறது. உங்களை விட உங்கள் நாமம் சக்தி வாய்ந்தது” என்று.

    தன்னிகரில்லா சாதனையாளர் ஜெகதீஷ் அவர்களை பற்றி படிக்கும்போதே மனம் நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் மூழ்குகிறது. நேரில் கண்டால்? நீங்கள கொடுத்து வைத்தவர்கள். ஜெகதீஷ் அவர்களை பற்றி படிக்கும்போது நாம் வெட்கி தலைகுனியவேண்டும்.

    ஜெகதீஷ் அவர்கள் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று வாழ வேண்டுகிறேன்.

    நேற்று கூட தொலைக்காட்சியில் செய்தியில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது பற்றியும் ஒரு ஏக்கருக்கு ரூ.25,000/- வரை விவசாயிகள் நஷ்ட ஈடு கேட்பதாகவும் பார்த்தேன். யார் யாருக்கோ அள்ளி வழங்கும் அரசு விவசாயிகளை கைவிடக்கூடாது.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருக்கும் மரகதம் அவர்களின் கோரிக்கை நிறைவேறவும் திரு.ராம்நாத் அவர்களின் குழந்தை ராகப்ரியாவின் ஆட்டிஸ குறைபாடு நீங்கவும் பிரார்த்திப்போம்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. இவ்வார பிரார்த்தனைக்கு தலைமையேற்கும், சகோதரருக்கு எனது வணக்கங்களூம் வாழ்த்துகளும். மழலைச் செல்வம் வேண்டி தவம் இருக்கும் சகோதரிக்கும், கிடைத்த மழலையின் துயர் தீர வேண்டிக்கொள்ளும் சகோதரருக்கும் அவர்தம் மனைவிக்கும் மன அமைதி கிடைத்து துயர் தீரவும், உழுதவன் கணக்குப் பார்த்தா உழக்கு மிஞ்சாது என்பார்கள். அவ்வாறு கணக்கு பார்க்காமல் கால நேரங்கருதாது பாடுபடும் விவசாயிகளின் துயர் தீரவும் எல்லாம் வல்ல மகாபெரியவா அவர்களின் பாதத்தை நினைத்து வேண்டிக்கொள்கிறேன்.

  4. Thank you sir for placing my prayer request and also posting a beautiful story about the Power of Rama Nama.

    Also thanks in advance to all Rightmantra readers who are going to pray for my child.

    Special thanks to Jagadhish sir who is heading prayer club this week. He is an Inspirational role model to all of us.

    Ram Ram Ram

    – Ramnath, Pavithra Ramnath & Ragapriya, Mangalore

  5. அருமையான பதிவு.
    “ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் ”

    புத்திர பாக்கியம் கிட்டாமல் தவிக்கும் திருமதி.மரகதம் அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும், மங்களூரை சேர்ந்த ராம்நாத்-பவித்ரா தம்பதியினரின் குழந்தை ராகப்ரியாவின் குறைபாடு நீங்கி அக்குழந்தை நல்ல முறையில் வளரவும், பெற்றோர் மனம் குளிரவும், மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள சம்பா பயிர்கள் காப்பாற்றப்படவும், விவசாயிகள் நிம்மதியடையவும், இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் ஜெகதீஷ் அவர்கள் மேன்மேலும் பல சிறப்புக்களை பெறவும் இறைவனை வேண்டுவோம்.

  6. திருவருளாலும் நம் குருவருளாலும் மண்ணுயிர்களின் குறைகள் அனைத்தும் நீங்கி எங்கும் நலமும், அமைதியும் சூழ இறைவனின் திருவடிகளை வழுத்துவோம்…………

  7. ராம்நாத் சார் …மன நோய் ,ஆட்டிஷம் குறைபாடுகள் அகல திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி திருகோயில் சென்று ,பிரம்ம ஹத்தி தோசம் அகல பரிகாரம் செய்து கொள்ளவும் ..[திருகோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்,650 ரூபாய் கட்டணம் 04352461946,2460660]..இது நம்முடைய முன் ஜென்ம வினைகளை நீக்கி விடும் ..பின்பு அங்கு உள்ள 27 நட்சத்திர லிங்கம்களையும் வழிபட்டு ,அங்கு உள்ள அஸ்வமேத பிரகாரத்தை வலம வரவும் [கட்டணத்திற்கு திருகோயில் அலுவலகம் தொடர்பு கொள்ளவும் ]…இந்த அஸ்வமேத பிரகார வலம நம் மன நோய் ,ஆட்டிஷம் குறைபாடுகள் அகல துணை நிற்கும் ..மகாலிங்க ஸ்வாமியின் அருள்வெள்ளம் சொல்லி மாளாது ….துர்வாசபுரம் [புதுக்கோட்டை திருமயம் சென்று, அங்கிருந்து 8 கி.மீ,9442762219]சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சென்று அங்கு உள்ள பைரவர் வழிபட்டு அபிசேகம் ,அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வரவும் இது குழந்தைகளின் சகல உடல் நோய்,மன நோய் ஆட்டிஷம் குறைபாடுகள் அகல உதவும் ,…கூடவே சுவாமி மலை அருகில் உள்ள[சுவாமிமலை யில் இருந்து , திருவைகாவூர் செல்லும் பாதையில் 5 கி.மீ ] கூனஞ்சேரி கைலாசநாதர் திருக்கோயில் சென்று அங்கு உள்ள அஷ்ட லிங்கம்களையும் பால் அபிசேகம் செய்து வழிபட்டு ,மூலவர் கைலாச நாதரை வழிபட குழந்தையின் சகல வித பாதிப்புகளும் அகலும் என்பது திண்ணம் .. …வீட்டில் விடுபட்டு போன தெய்வ பிரார்த்தனைகளை மறக்காமல் நிறைவய்ற்றி விடவும் .குழந்தையை விராலிமலை [திருச்சி] முருக பெருமானுக்கு தத்து கொடுத்து ,தவிட்டுக்கு வாங்கி கொள்ளவும் … திருவலிவலம்[திருவாரூரிலிருந்து 8 கி. மீ]வாளையங்கண்ணி உடனுறை மனத்துணைநாதர் திருகோயில்[04366 205636,9486334025]. இங்கு வழிபட்டால் மன அழுத்தம்[டிப்ரஷன்] , மனச்சோர்வு,மனச்சிதைவு நோய்,மன நோய் ,மனக்கலக்கம், மன சஞ்சலம் முதலிய மன அழுத்த நோய்கள் யாவும் குணமாகி மனது தெளிவாகும் .இத்தல சம்பந்தர்[ ஒல்லையாறி உள்ள],அப்பர்[ நல்லான்காண்]பதிகம்களை படித்து வரவும் .கூடவே தினமும்[48 நாட்கள் ] பின்வரும் பதிகம்களை படித்து வரவும்

    திருச்சிற்றம்பலம்

    சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
    மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
    பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
    பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.

    கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
    எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிடம் ஆவது
    மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர்
    பொருது சாத்தொடு பூசல் அறாப்புன வாயிலே.

    தொக்காய மனம் என்னொடு சூளறும் வைகலும்
    நக்கான் நமையாளுடை யான்நவி லும்மிடம்
    அக்கோ டரவார்த்த பிரானடிக் கன்பராய்ப்
    புக்கார் அவர் போற்றொழி யாப்புன வாயிலே.

    வற்கென் றிருத்திகண் டாய்மனம் என்னொடு சூளறும்வைகலும்
    பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கை பொன்னா மதுவேபுகல்
    கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
    புற்கென்று தோன்றிடும் எம்பெருமான்புன வாயிலே.

    நில்லாய் மனம்என்னொடு சூளறும் வைகலும்
    நல்லான் நமையாளுடை யான்நவி லும்மிடம்
    வில்லாய்க் கணை வேட்டுவர் ஆட்ட வெருண்டுபோய்ப்
    புல்வாய்க் கணம் புக்கொளிக் கும்புன வாயிலே.

    மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
    உறவும் ஊழியும் ஆயபெம் மாற்கிடம் ஆவது
    பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
    புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.

    ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும்
    பாசற்றவர் பாடிநின் றாடும் பழம்பதி
    தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
    பூசற் றுடிபூசல் அறாப் புன வாயிலே.

    கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
    தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
    கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே
    புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.

    எற்றே நினை என்னொடு சூளறும் வைகலும்
    மற்றேதும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்தறக்
    கற்றூறு கார்க்காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
    புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.

    பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
    அடியார் அடியன் நாவல வூரன் உரைத்தன
    மடியாது கற்றிவை ஏத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்
    குடியாகப் பாடிநின்றாட வல்லார்க் கில்லை குற்றமே.

    திருச்சிற்றம்பலம்…[சுந்தரர் ]
    …………………………………………………………
    திருச்சிற்றம்பலம்

    ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
    அடங்கு மிடங்கருதி நின்றீரெல்லாம் அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங்
    கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங் கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி
    தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    பிணிநீர சாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின்பத்தோ
    டணிநீர மேலுலகம் எய்தலுறில் அறிமின் குறைவில்லை ஆனேறுடை
    மணிநீல கண்ட முடையபிரான் மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழுந்
    துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
    ஆமா றறியா தலமந்துநீர் அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப்
    பூமாண் அலங்கல் இலங்குகொன்றை புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
    தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
    மான்று மனங்கருதி நின்றீரெல்லாம் மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
    மூன்று மதிலெய்த மூவாச்சிலை முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி
    தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
    வியல்தீர மேலுக மெய்தலுறின் மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
    உயர்தீர வோங்கிய நாமங்களா லோவாது நாளும் அடிபரவல்செய்
    துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா படர்நோக் கின்கண் பவளந்நிற
    நன்னீர்மை குன்றித் திரைதோலொடு நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்
    பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற் புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
    தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    இறையூண் துகளோ டிடுக்கணெய்தி யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
    நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம் நீள்கழ லேநாளும் நினைமின்சென்னிப்
    பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றைப் பிணையும் பெருமான் பிரியாதநீர்த்
    துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
    இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம் இறையே பிரியா தெழுந்துபோதுங்
    கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் காதலியுந் தானுங் கருதிவாழுந்
    தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    நோயும் பிணியும் அருந்துயரமும் நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
    வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம் மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
    தாய அடியளந்தான் காணமாட்டாத் தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
    டோ யும் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    பகடூர் பசிநலிய நோய்வருதலாற் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
    முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன
    திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்திழை யுந்தானும் பொருந்திவாழுந்
    துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    மண்ணார் முழவதிரும் மாடவீதி வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல
    பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
    கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
    விண்ணோ ருலகத்து மேவிவாழும் விதியது வேயாகும் வினைமாயுமே…..

  8. மரகதம் அவர்கள் ,தம்பதிகளாக சென்று ,காலையில் திருவெண்காடு முக்குள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு,திருவாவடுதுறை சென்று கோமுக்தீஸ்வரர், ஒப்பிலாமுலை அம்மை[04364232055] வழிபட்டு ,அர்ச்சித்து அங்கு தனி சந்நிதியில் உள்ள புத்திர தியாகேசர் அர்ச்சனை செய்து வழிபடவும் …பின்னர் அருகில் உள்ள திருவாலங்காடு[:9751549549,9698563577,9626389722] சென்று அங்குள்ள புத்திர காமேச்வர தீர்த்தத்தில் நீராடி,வடாரண்யேசுவரர்,வண்டார்குழலி அம்மன்[புதிய பிரதிஷ்டை ] ,பழைய அம்மனையும் அபிசேகம் செய்து , வழிபட்டு பின்பு வெளி பிரகாரத்தில் தனி சந்நிதியில் உள்ள புத்திர காமேஸ்வர்ரை அபிசேகம் ,அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் .இதனை அமாவாசையில் செய்வது சிறப்பு …அதுவும் வரக்கூடிய பங்குனி மாதம் அம்மாவாசை நாளில் இங்கு தீர்த்த வாரி நடை பெரும் …அப்போது புத்திர காமேச்வர தீர்த்தத்தில் நீராடி வடாரண்யேசுவரர்,வண்டார்குழலி,புத்திர காமேஸ்வர்ரை வழிபட்டால் மலடியும் குழந்தை பெறுவாள் என்கிறது இந்த ஆலய தலபுராணம் ……திருக்கருகாவூர் முல்லை வனநாதர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் திருக்கோயில் வழிபாடு செய்து ,அங்கு தரும் நெய்யை கண்டிப்பாக தம்பதியர் இருவரும் 48 நாட்கள் உண்டு வரவும் …….[ஒரே நாளில் 4 திரு கோயில்களையும் வழிபடலாம் ]……
    பதிகம் 48 நாட்கள் படித்து வரவும் ,அசைவம் வேண்டாம் …

    கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
    பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
    பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

    பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
    வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

    மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி
    எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
    பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
    விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

    விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
    மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
    தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
    கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

    வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
    மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
    ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

    தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
    ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
    பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
    வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

    சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
    மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
    முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

    பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
    உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
    கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
    விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

    கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
    ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
    வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)
    உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

    போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
    பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
    வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்
    றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

    தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
    விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
    பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
    மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.

    திருச்சிற்றம்பலம்

    ……………………………………………………………………………………………

    பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிடநன்
    மதிபோன் மமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
    கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
    நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே.

    சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
    மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
    ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
    கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.

    பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
    சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
    தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
    கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே.

    பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
    கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
    என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
    உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.

    எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
    கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
    தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
    நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ

    முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
    வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
    சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
    வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.

    ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
    வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
    மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
    மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

    பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
    இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
    அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
    துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ.

    கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
    கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
    பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
    தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே.

    மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
    காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
    ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
    வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.

    ……… இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்
    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்[சுவாமிகள் எழுதிய குறிப்பு]

Leave a Reply to Thamarai Vengat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *