Home > %E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D

ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் என்ன தெரியுமா?- ஸ்ரீ ரமண ஜயந்தி SPL

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமென நான் தெரிந்தேன்… அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தைமிக விழைந்ததாலோ! - வள்ளலார்  பகவான் ஸ்ரீ ரமணர், சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், ஞானானந்தகிரி சுவாமிகள், மகா பெரியவா போன்ற ஞானிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கூறும் வரிகள் இவை. இன்று ஸ்ரீ ரமண ஜயந்தி. எல்லாரும் மற்றவர்களை ஆராய முற்பட்ட காலத்தில், 'நான் யார் என்று

Read More

குரு வார்த்தையே துன்பம் தீர்க்கும் அருமருந்து!

சில முக்கிய பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைவு பெறவில்லை. எழுதும் பதிவுகளில் தகுந்த புகைப்படங்கள் அல்லது ஓவியம்  சேர்த்து அனைத்தும் நன்றாக வந்த பிறகே பதிவை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதனிடையே காத்திருக்கும் உங்களுக்காக ரமணர் தொடர்புடைய அருள் விளையாட்டுக்களை தந்திருக்கிறோம். யாரோ சிலருடைய கேள்விகளுக்கோ அல்லது ஆன்மாவின் விசும்பலுக்கோ இவை பதிலாக அமையலாம். எனவே கவனமாக படிக்கவும்! முடிந்தால் திருவண்ணாமலை சென்று ரமணாஸ்ரமத்தை தரிசித்துவிட்டு வரவும்! மேலும் இந்தப் பதிவை இன்று பகிர்வதில் காரணமிருக்கிறது.

Read More

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!

ஆடி மாதம் துவக்கத்திலேயே இந்தப் பதிவை அளித்திருக்கவேண்டும். பரவாயில்லை. BETTER LATE THAN NEVER அல்லவா? இன்னும் ஒன்பது நாட்கள் இருக்கிறதே. பதிவு சற்று பெரிது. ஆனால், முக்கியமானது. இறுதிவரை படியுங்கள். அனைவருக்கும் நல்லதே நடக்கும்! (*இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்து புகைப்படங்களும் நம் ரைட்மந்த்ரா அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் இருக்கும் மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி ஜெயமுத்து மாரியம்மன் ஆலயத்தின் ஆடி விழா புகைப்படங்கள்.) ஆடி

Read More

ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?

வீட்டில் சில சமயம் விருந்தினர்கள் சாப்பிட வரும்போது அவர்களை கவனிக்கும் மும்முரத்தில் நமக்கு எதுவும் கடைசியில் மிச்சமிருக்காது. நாம் எதுவும் சாப்பிட்டிருக்கமாட்டோம். அம்மா அந்த சூழ்நிலையை சமாளிக்க அவசர அவசரமாக ஏதோ ஒன்றை நமக்கு செய்து தருவாள். ஆனால் அது விருந்தைவிட பிரமாதமாக இருக்கும். இன்னும் கொஞ்சம் கேட்டால்... "இல்லையேடா கண்ணா... அவசரத்துக்கு இருந்த மிச்சம் மீதியை வெச்சு செஞ்சேன். நாளைக்கு பண்ணித் தரவா?" என்பாள். இது நம் எல்லார்

Read More

”இதுக்கு பதிலா ஒங் குழந்தையைத் தந்துடறியா?”

உண்மையான ஞானிகள் மந்திர தந்திரங்களில் சித்து வேலைகளில் கவனம் செலுத்தமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்கள் அவதார நோக்கத்தை சிதைத்துவிடும். ஆனால் அவசியம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் சக்தியை பிரயோகிக்க தயங்க மாட்டார்கள். பகவான் ரமணர் போன்ற மகான்கள் தங்கள் உபதேசங்கள் மக்கள் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களில் தான் கவனம் செலுத்தினார்களே தவிர தங்களுக்கு இருந்த மந்திர தந்திர சக்திகளில் அல்ல. காவியுடுத்தியவர்கள் எல்லாம் குரு அல்ல. முற்றும் துறந்தேன் என்று கூறுபவர்கள் எல்லாம் துறவிகளும் அல்ல. துறவின்

Read More

ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?

பக்தியின் மூலம் முக்தியடைய விரும்பும் அனைத்து அன்பர்களுக்கும், இன்முகம் காட்டி நிறைவான அன்பு செலுத்தி, அவர்களை வழிநடத்திச் சென்றவர் ரமண மகரிஷி. பரம்பொருளின் சொரூபமாக விளங்கிய ரமணர், "நான் யார் என்ற கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும். இந்தக் கேள்வியே தேவையற்ற எண்ணங்களை எழவிடாமல், மனதை அடக்கும். அதுவே ஆத்ம தரிசனம்!" என்றார். சிஷ்யர்கள் சந்தேகங்களை கேட்கும்போது மெய்ஞாநியானவன், மிகப் பெரிய நூல்களையும் வேத உபநிடதங்களையும் தேடவேண்டியதில்லை. அவர்கள் உள்ள சூழலில்

Read More

“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”

பல நதிகள் எப்படி இறுதியில் சமுத்திரத்தை அடைகிறதோ அதே போல இறைவனை அடைவதற்கு பல வழிகள் உண்டு. ஒவ்வொரு ஞானியரும் ஒவ்வொரு மார்க்கத்தை பின்பற்றி மக்களை நல்வழிப்படுத்தினார்கள். அவர்களுள் ரமணர் பின்பற்றியது 'ஆன்ம விசாரம்'. ஆன்மவிசாரம் அத்தனை எளிதல்ல. ஆனால் மிக மிக கடினமான கருத்துக்களைகூட மிக மிக அற்புதமாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் அன்றாட ஆஸ்ரம நடவடிக்கைகளை கொண்டே பகவான் ரமணர் புரியவைத்தார். அது தான் ரமணரின் சிறப்பு! கடும்கோடையில்

Read More

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்ரீராமநவமி சமயத்தின்போது, 'வைதேகி' என்கிற கன்று பிறந்ததை பற்றி சொல்லியிருந்தோம் அல்லவா? அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசேஷ கோ-சம்ரட்சணம் பற்றிய பதிவு இது. காசி-விஸ்வநாதர் கோவிலில் பிரதிமாதம் நாம் கோ சம்ரட்சணம் செய்துவந்தாலும், முக்கிய பண்டிகை நாட்கள், விஷேட நாள் கிழமைகள், குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி உள்ளிட்ட கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் அங்கு கோ-சாலைப் பசுக்கள் கன்று ஈனும் தருணங்கள் ஆகியவற்றின்

Read More