Home > பிரார்த்தனை (Page 4)

சிவனின் பெருமை Vs அவன் அடியார்களின் பெருமை! – Rightmantra Prayer Club

இறைவனின் பெருமையை படிப்பதை விட அவன் அடியவர்களின் பெருமையை படிப்பது மிகவும் சிறந்தது. இறைவன் தன் பெருமையை கேட்க விரும்புவதைவிட அவன் அடியவரின் பெருமை கேட்பதையே அதிகம் விரும்புவான். அதுவும் சிவபக்திக்கு உதாரணமாய் திகழ்ந்து, பக்தி என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிவிட்டு போயிருக்கும் நாயன்மார்களின் பெருமையை படிப்பது என்றால் அதன் பலனை கேட்கவேண்டுமா என்ன? சிவனின் பெருமையை எங்கேனும் யாரேனும் உரைப்பதை கேட்டால், நந்தி அங்கே உடனே

Read More

‘இறைவனை வீடு தேடி வரவழைத்த பக்தி’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

துவாரகைக்கு அருகே உள்ள டாங்கோர் என்னும் சிற்றூரில் ராமதாஸர் என்கிற பக்தர் ஒருவர் இருந்தார். தினமும் உஞ்சவிருத்தி செய்து கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தார் அவர். தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பியதும் வீடு திரும்பிவிடுவார். "இவர் நம் வீட்டுக்கு வரமாட்டாரா...!" என்று மக்கள் ஏங்கி தவிப்பார்கள். அந்தளவு இனிமையாக பாடிக்கொண்டே உஞ்சவிருத்தி செய்வார். பெயர் தான் ராமதாஸரே தவிர துவாரகையில் உள்ள கிருஷ்ணன் மீது பெரும் பக்தி பூண்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட

Read More

அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே…! Rightmantra Prayer Club

நார்த்தமலை அருகே உள்ள கீழக்குறிச்சி என்ற செழிப்பான ஊர் ஒன்று உள்ளது. எங்கெங்கு பார்க்கினும் பசுமையை போர்த்திய வயல்வெளிகள் தான். இந்த வயல்வெளிகளுக்கு இடையே உள்ள பாதை வழியே சிவாச்சாரியார் ஒருவர் தினந்தோறும் சென்று வரும்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தை கடக்கும்போது மட்டும் இடறிவிழுந்துவிடுவாராம். இது போல ஒரு முறை அல்ல பல முறை நடக்கவே அவருக்கு சந்தேகம் தோன்றி, வயலில் வேலை செய்பவர்களை அழைத்து அந்த இடத்தை தோண்டி

Read More

தேவையில்லாத ஒன்றை கூட பகவான் நமக்கு தருவதில்லை – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

இரு நண்பர்கள் வெகுதூரம் நடந்து சென்றனர். பசியில் வயிறு கிள்ள ஆரம்பித்தது. ஒரு பெரியவர் இதை கண்டு அவர்களின் அருகில் வந்து வாருங்கள் என்னுடன் நான் உங்களுக்கு வழி செய்கிறேன் என்றார்... இருவருக்கும் ஒவ்வொரு அறைகளின் வழிகளை காட்டி இரண்டு சாவிகளை கொடுத்தார்... இருவரும் நன்றாக பசியாருங்கள், நான் காலையில் வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார்... விடிந்தது, பெரியவர் வந்தார்... முதலாமவரின் அறைக்கு சென்றார் அவர் நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்கி கொண்டு

Read More

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

நமது பிரார்த்தனை கிளப் துவக்கி இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பல வாசகர்கள் இந்த காலகட்டங்களில் பிரார்த்தனைக்கு கோரிக்கையை அனுப்பியிருக்கின்றனர். அவற்றுள், கோரிக்கை நிறைவேறிய சிலரது அனுபவங்களைப் பார்ப்போம். பொதுவாகவே பிரார்த்தனை என்பது மிக மிக சக்தி மிக்கது. இறைவனுக்கும் நமக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் ஒரு உன்னதமான விஷயம். ஆண்டவனிடம் "எனக்கு அது வேண்டும், இது வேண்டும், இதை தந்தால் நான் உனக்கு அதை செய்கிறேன்" என்றெல்லாம் சொல்வது பிரார்த்தனையல்ல. அது

Read More

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

நமது தளத்தின் மிகப் பெரிய பணிகளுள் ஒன்று வாராந்திர பிரார்த்தனை கிளப். ஒவ்வொரு வாரமும் நாம் பிறருக்காக, இந்த நாட்டுக்காக, இந்த சமூகத்துக்காக பிரார்த்திக்கும் ஒரு நல்ல வாய்ப்பை இறைவன் நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறான். ஆனால இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு எத்தனை பேர் அவனுடைய அருளுக்கு பாத்திரமாகி வருகிறார்கள் என்று தான் தெரியவில்லை. ஒரு சில வாசகர்கள் தவிர்க்க இயலாத காரணங்களினால் அந்த வாரத்து பிரார்த்தனை பதிவை படிக்க இயலாமல் போகும்போது,

Read More

விருப்பம் மந்த்ராலயத்தில்; திருப்பம் தில்லையில்! Rightmantra Prayer Club

1939 - 40 ஆண்டுகளில் நடந்தது இது. மகாராஷ்டிர மாநிலம் ஷோலாப்பூரில் கமாலகர ஜோஷி என்று ஒரு அந்தண இளைஞர் இருந்தார். பொதுவாகவே அந்தணர்களுக்கு மிதமாகவோ சற்று அதிகமாகவோ தெய்வ பக்தி இருக்கும். அது இல்லாவிட்டாலும் கூட, நம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்கிற எண்ணம் இருக்கும். விதிவிலக்காக கடவுள் நம்பிக்கையே சிறிதும் இல்லாத ஒரு சில அந்தணர்களும் இருப்பார்கள். மேற்கூறிய கமாலகர ஜோஷி அந்த கடைசி வகை. கடவுளை

Read More

அன்னையின் ஆயுளை நீட்டித்த அருட்கடல்! RIGHTMANTRA PRAYER CLUB

சென்னையை அடுத்துள்ள போரூரைச் சேர்ந்தவர் திருமதி.வத்சலா வேணுகோபால். வயது 58. சென்ற வாரம் ஒரு நாள் இரவு, சுமார் 10.00 மணியளவில் திடீரெனெ "அம்மா... நெஞ்சுவலிக்குதே..." என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தவர், அப்படியே மூர்ச்சையாகிவிட்டார். என்னவோ ஏதோ என்று பதறிப்போன பிள்ளைகள், அவரை உடனே வளசரவாக்கத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு பரிசோதனை நடந்தபோது, பிள்ளைகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர். ஏதோ கேட்கப் போய் ஏதோ பதில்

Read More

எது அமிர்தம் தெரியுமா? – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – Rightmantra Prayer Club

சிவகங்கை அருகே உள்ள இளையான்குடியில் பிறந்த மாறனார் என்பவர் உழவுத்தொழில் செய்து வாழ்ந்து வந்தார். பெருஞ் செல்வம் கொண்டிருந்தாலும் பசி என்று வரும் அடியார் அனைவருக்கும் உணவு படைப்பதையே தொண்டாக கருதி செய்து வந்தவர் அவர். சிவனடியார் தம் இல்லத்திற்கு வந்தால் எதிரே சென்று கைகூப்பி வணங்கி, இனிய மொழிகளைக் கூறி வரவேற்று அவர்களுக்கு உணவளிப்பார். இவரது அருந்தொண்டின் தன்மை உணராத ஊர்மக்களுள் சிலர், "அவனுக்கென்ன, இருக்கு அள்ளிக் கொடுக்குறான்" என்று

Read More

‘இறந்த சினை ஆடு உயிர்த்தெழுந்தது. இரட்டை கன்றும் ஈன்றது!’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

16 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர் குகை நமசிவாயர். நமச்சிவாயர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் எனும் பகுதியில் பிறந்தவராவார். அண்ணாமலையாரின் அழைப்பினை ஏற்று திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். இவருடைய சீடர்களில் குரு நமச்சிவாயர் மற்றும் விருபாட்சித் தேவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் அண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாறி மாறி தங்கியதாகவும், இறுதியாக அண்ணாமலையாரே தன்னுடைய மலையில் ஓர் குகையில் தங்கிக் கொள்ளுமாறு கூற, குகையில் தங்கியதால்

Read More

“வருவான்டி தருவான்டி மலையாண்டி!” Rightmantra Prayer Club

அருணகிரிநாதரால் பாடப்பட்ட பழநி ஆண்டவன் சந்நிதியில் மூன்று வயது குழந்தையைக் கிடத்தி விட்டு பெற்றோர் அழுதனர். "பழநியாண்டவா! நீயே இப்படி செய்யலாமா? எங்கள் குழந்தையைக் காப்பாற்று! உன்னை விட்டால் எங்களுக்கு வேறு யார் துணை?'' என்று கதறினார்கள். இரவு வந்தது. அங்கேயே படுத்து விட்டனர். மறுநாள் காலை அதிசயம் நிகழ்ந்திருந்தது. குழந்தையின் உடம்பில் இருந்த முத்துக்கள் குறைந்து இருந்தன. ஆம்! வைசூரியால் பாதிக்கப்பட்ட குழந்தைக்காகவே அதன் பெற்றோர் முருகனிடம் வேண்டிக் கொண்டிருந்தனர். பாதிப்பு குறைந்ததும் வீடு

Read More

எத்தகைய பூஜையை சிவபெருமான் ஏற்றுக்கொள்கிறார்? – Rightmantra Prayer Club

மகாபாரதப் போரில் சிந்து மன்னனை வெல்ல மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம் அர்ஜூனனுக்கு தேவைப்பட்டது. அதனால் பகவான் கிருஷ்ணர், சிவபெருமானின் அருளால் அவ்வாயுதம் கிடைக்கும் என்றும், தாம் கயிலைக்கு அழைத்துச் சென்று அதை பெற்றுத் தருவதாகவும் கூறி, அர்ஜூனனை கயிலைக்கு அழைத்துச் சென்றார். அர்ஜூனன் சிறந்த சிவபக்தன். செல்லும்போது சிவபூஜைக்கு நேரம் நெருங்கியது. ஆனால், சிவலிங்கம் இல்லாதால் எப்படி பூஜை செய்வது என்று குழம்பினான். அவனது குழப்பத்தை அறிந்த கிருஷ்ணர், தன்னையே சிவனாக

Read More

அருட்பார்வை பெற்றுத் தந்த கண் பார்வை – Rightmantra Prayer Club

இது நடந்து 50 - 60 வருஷம் இருக்கும். சுவாமிநாதன்னு ஒருத்தர் சங்கர மடத்துல கைங்கரியம் பண்ணிட்டு இருந்தார். பெரியவா மேல அவருக்கு அதீத பக்தி. மரியாதை. அவருக்கு கல்யாணமாகி சில வருஷம் கழிச்சி ஒரு பெண் குழந்தை பிறந்தது. சுவாமிநாதனும் அவர் மனைவியும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஆனா அவங்க சந்தோஷம் நீடிக்கலை. குழந்தைக்கு கண்ல ஏதோ குறைபாடு. பார்வையே இல்லாம இருந்தது கண்டுபிடிச்சாங்க. "ஈஸ்வரா உன்னோட அனுகிரகத்தால குழந்தை பிறந்திருக்கேன்னு

Read More

இராமர் முறித்த ‘சிவதனுசு’ எங்கிருந்து வந்தது தெரியுமா? Rightmantra Prayer Club

ஜனக மகாராஜன், சிவதனுசை வைத்திருந்த இடத்திற்கு பெயர் 'கார்முக சாலை'. எட்டுச் சக்கரங்களுடைய ஒரு மிகப் பெரிய இரும்பு பேழையில் அந்த தனுசு வைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் ஜனகனின் உத்திரவுக்கிணங்க அதை ஆயிரக்கணக்கான பணியாளர்கள் சுமந்து வந்தனர். சிவதனுசை எடுத்து எடுத்து வளைத்தல் என்பது அந்த சிவபெருமான் மற்றும் திருமால் ஆகிய இருவராலும் மட்டுமே முடியும். திருமகள் போன்ற நம் மகளான சீதாதேவியை அந்த திருமாலே வந்து மணக்கட்டும் என்று

Read More