Home > 2015 > April (Page 2)

நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!!

போரூர் பாலமுருகன் கோவிலில் ஜனவரி 18, 2015 அன்று நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது. நமது தளம் துவக்கப்பட்டு இதுவரை பல உழவாரப்பணிகள் நடைபெற்றிருந்தாலும் முருகன் கோவிலுக்கு என்று தனியாக செய்ததில்லை. ஆனால் செய்யவேண்டும் என்கிற அவா இருந்தது. நாம் தேர்ந்தெடுக்கும் ஏனைய கோவில்களைப் போல இந்த கோவிலும் பாரம்பரியம் மிக்கதாக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். அதை நிறைவேற்றி தந்தது இந்த போரூர் பாலமுருகன் கோவில்! இந்த உழவாரப்பணியின் சிறப்பு! * இந்த

Read More

காலடி பயணமும் ஒரு அவசரத் தேவையும்!

வாசகர்களுக்கு வணக்கம்! நமது RIGHTMANTRA.COM அலுவலகத்தை பிப்ரவரி மாதம் துவக்கியபோது ஒரு அலுவலகம் அமைப்பதற்கு அத்தியாவசியமான சில அடிப்படை தேவைகளை பற்றி குறிப்பிட்டு வாசகர்களிடம் உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். அதில் ஒரு சிலவற்றை தவிர அனைத்தும் நம் வாசகர்களின் பேராதரவோடு பெருங்கருணையோடு நிறைவேறிவிட்டன. அவர்கள் உதவிக்கரம் நீட்டாவிட்டால் நமது கனவு கானல் நீராகவே போயிருக்கும். இப்படி உதவிகளை நல்கிய வாசகர்கள் சிலர் தங்கள் பெயர்களை வெளியிடவேண்டாம் என்றும் இது ஆத்மார்த்தமாக தாங்கள் செய்யும் உதவி

Read More

அருட்பார்வை பெற்றுத் தந்த கண் பார்வை – Rightmantra Prayer Club

இது நடந்து 50 - 60 வருஷம் இருக்கும். சுவாமிநாதன்னு ஒருத்தர் சங்கர மடத்துல கைங்கரியம் பண்ணிட்டு இருந்தார். பெரியவா மேல அவருக்கு அதீத பக்தி. மரியாதை. அவருக்கு கல்யாணமாகி சில வருஷம் கழிச்சி ஒரு பெண் குழந்தை பிறந்தது. சுவாமிநாதனும் அவர் மனைவியும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஆனா அவங்க சந்தோஷம் நீடிக்கலை. குழந்தைக்கு கண்ல ஏதோ குறைபாடு. பார்வையே இல்லாம இருந்தது கண்டுபிடிச்சாங்க. "ஈஸ்வரா உன்னோட அனுகிரகத்தால குழந்தை பிறந்திருக்கேன்னு

Read More

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

நண்பர் அனுப்பிய 'ரமண திருவிளையாடற் திரட்டு' படித்து வருகிறோம். மிகப் பெரிய நீதியை பகவான் ரமணர் மிக அனாயசமாக ஒரு சிறு செயல் மூலமோ அல்லது தனது மௌனம் மூலமோ உணர்த்திவிடுகிறார். இது ஒரு வித்தியாசமான அனுபவம். தொண்டு செய்பவர்களுக்கு, அது சமூகத் தொண்டோ சமயத் தொண்டோ ஒரு கட்டத்தில் அகந்தை ஏற்பட்டுவிடும். தான் மட்டும் தான் சேவை செய்வதாகவும் மற்றவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் பயனில்லாமல் இருப்பதாகவும் எண்ணம் ஏற்படும். அது

Read More

வைத்தீஸ்வரன் பார்த்த ஏலக்காய் வைத்தியம் – குரு தரிசனம் (31)

முந்தைய 'குரு தரிசனம்' அத்தியாயம் ஒன்றில் காஞ்சிபுரத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய திரு.தாமஸ் அவர்களின் காணாமல் போன மகனை தனது அருளாசி மூலம் மகா பெரியவா மீட்டுக்கொடுத்ததை படித்திருப்பீர்கள். மேற்படி சம்பவத்திற்கு பிறகு பெரியவா மேல் தாமஸ் அவர்களுக்கு பக்தியே ஏற்பட்டுவிட்டது. (Check : "என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?") இது நடந்ததது 80 களின் துவக்கத்தில். ஒரு முறை தாமஸ் அவர்களின் மனைவி, வயிற்றில் ஏற்பட்ட திடீர் வழியால் அவஸ்தைப்பட்டு வந்தார்.

Read More

ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்!

மும்பையிலிருந்து சந்திரசேகர் என்பவர் சமீபத்தில் நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நம் தளத்தை பற்றி சமீபத்தில் தான் கேள்விப்பட்டதாகவும், இத்தனை நாள் இப்படி ஒரு தளம் இருப்பது தெரியாமல் போனதற்கு வருந்துகிறேன் என்றும் ஒவ்வொரு பதிவாக அனைத்து பதிவுகளையும் தற்போது விடாமல் படித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். நமது பிரார்த்தனை கிளப் பற்றி தெரிந்துகொண்டதாகவும் தனது மிகப் பெரும் துன்பம் ஒன்றை பற்றி குறிப்பிட்டு தனக்காக நம் பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனை

Read More

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்று சொல்வார்கள். அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சுங்க. பணத் தேவை என்றால் தான் தற்போது பலருக்கு பத்தும் அல்ல பதினொன்று கூட பறந்து விடுகிறது. பாக்கெட்டில் ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தால் அந்த தெம்பே வேறு. பணம் கொடுக்கும் தெம்பை வேறு எதுவும் தர இயலாது. இன்றைக்கு நாம் பார்க்கின்ற கேள்விப்படுகின்ற பெரும்பாலான குற்றங்கள் பணத்தை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்டவர்கள் செய்த குற்றங்கள் தான். பணத்துக்காக என்ன வேண்டுமானாலும்

Read More

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

பல யுகங்கள் கண்ட பாரம்பரியம் தமிழகத்துக்கும் தமிழர்க்கும் உண்டு. ஆனால் சில நூறு ஆண்டுகள் மட்டுமே ஆண்ட வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மை விட்டு போகவில்லை. அவற்றில் ஒன்று தான் ஆங்கிலப் புத்தாண்டை விமரிசையாக கொண்டாடுவது. நாம் உண்மையில் கொண்டாடவேண்டியது தமிழ்ப் புத்தாண்டு தான். நாளை சித்திரை 1 தமிழ் புத்தாண்டு. இதையொட்டி தமிழகத்தில் முருகனின் சில குறிப்பிட்ட தலங்களில் பின்பற்றப்படும் அருமையான நடைமுறை ஒன்றைப் பற்றி பார்ப்போம்.

Read More

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது உழவாரப்பணி தொடர்பான பதிவுகள் இனி இடம்பெறும். இதுவரை நான்கு கோவில்களில் நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவுகள் பாக்கியிருக்கிறது. பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில், ஆப்பூர் நித்தியகல்யாணப் பெருமாள், போரூர் பாலமுருகன் கோவில் மற்றும் சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோவில். இவற்றில் சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது. ஏனைய கோவில்களும் ஒவ்வொன்றாக இனி அளிக்கப்பட்டுவிடும். இரண்டு சிறப்புக்கள்! எந்த உழவாரப்பணியிலும் இல்லாத வகையில் இந்த பணியில் இரண்டு

Read More

இது கடிதமல்ல… கடவுளின் குரல்!

சென்ற டிசம்பர் மாதம் மத்தியில் நடைபெற்ற நமது ரைட்மந்த்ரா விருதுகள் மற்றும் பாரதி விழாவில் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாமாண்டு வரலாறு படித்து வரும் அழகு ரேகா என்கிற பார்வையற்ற மாணவியின் கல்வி + மேல்படிப்பு செலவுக்கு ரூ.15,000/- வழங்கியது நினைவிருக்கலாம். அழகு ரேகா எந்த அடிப்படையில் இந்த உதவித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று உங்களுக்கு தெரியும். இருப்பினும் புதிய வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மீண்டும் சொல்கிறோம். ஏழ்மை நிலையில் உள்ள

Read More

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

மகா பெரியவாவிடம் வேதம் படித்த பெருமையையுடைய திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகளை காஞ்சிபுரத்தில் அவர் இல்லத்தில் சந்தித்தபோது அவர் கூறிய பெரியவாவின் மகிமைகள் இது. சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ ? பெரியவா சின்ன காஞ்சிபுரத்தில் முகாம். பலர் வந்து ஆசிபெற்று சென்ற வண்ணமிருந்தனர். லால்குடி முன்னாள் ஜில்லா ஜட்ஜ் எல்.எஸ் பார்த்தசாரதி ஐயர் அவர்கள் தன் மனைவியுடன் அப்போது பெரியவாவை தரிசனம் செய்ய வந்திருந்தார். கடைசி நாள், பெரியவாவிடம் சொல்லிவிட்டு விடைபெற வந்திருந்தார். புறப்படுவதற்கு

Read More

யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

"நமது மதத்தில் மஹா பெரியவர், ரமண மகரிஷி, ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், யோகி ராம்சுரத்குமார், ஞானானந்த கிரி ஸ்வாமிகள், ஷிர்டி சாய்பாபா என எண்ணற்ற குருமார்கள் இருக்கிறார்களே. இவர்களில் யாரை பின்பற்றுவது யாரை வணங்குவது? ஒரே குழப்பமாக இருக்கிறதே... ஒரே ஒருவர் இருந்தால் சுலபமாக இருக்குமே..." என்று சமீபத்தில் ஒரு வாசகர் நம்மிடம் குறைப்பட்டுக்கொண்டார். "வாழ்க்கை எனும் துன்பக்கடலில் சிக்கி பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே கரைசேர முடியாமல் தவிக்கும் ஒருவனுக்கு கைதூக்கிவிட ஒருவர்

Read More

அன்னப்பிராசனம் – குழந்தைக்கு ஊட்டும் முதல் சோற்றில் இத்தனை விஷயமா?

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சோறூட்டுவார்கள். அதை 'அன்னப்பிராசனம்' என்பர். அன்னப்பிராசனம் என்பது மிகவும் புனிதமான ஒரு விஷயம். உங்கள் குழந்தை நன்கு வளர்வதும் ஆரோக்கியமாக வளர்வதும் அது உண்ணும் உணவில் தான் இருக்கிறது. எனவே இந்த குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் நிகழ்வை இறைவனின் சன்னதியில் வைத்து செய்வர். இதற்கு தான் அன்னப்பிராசனம் எனு பெயர். இது ஆண் குழந்தைகளுக்கு 6 ஆம், 8 ஆம் அல்லது 10 ஆம்

Read More

கிளிகளின் தந்தைக்கு ஒரு சிறிய கௌரவம்!

சென்னை ராயப்பேட்டையில் தனது வீட்டு மாடியில் தினசரி ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வரும் கிளிகளின் தந்தை, பசுமைக் காவலர் திரு.காமிரா சேகர் அவர்களை பற்றிய அறிமுகம் நம் வாசகர்களுக்கு தேவையில்லை. நமது ரைட்மந்த்ரா விருதுகள் விழாவில் 'வள்ளலார் விருது' பெற்றவர் இவர். பறவைகள் நல ஆர்வலர். சிறந்த சமூக சேவகர். ரைட்மந்த்ராவுக்கென அலுவலகம் திறந்ததிலிருந்தே திரு.சேகர் அவர்களை அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து வந்தோம். நம் அழைப்பை ஏற்று நேற்று மாலை

Read More