Home > ரைட்மந்த்ரா நிகழ்ச்சிகள் (Page 2)

நமது நூல்கள் எங்கே கிடைக்கும் ? எப்படி வாங்கலாம் ??

பல விதமான பகீரத பிரயத்தனங்கள் மற்றும் தளராத முயற்சிகளுக்கு பிறகு நம் புத்தகங்கள் இரண்டும் நல்லபடியாக வெளியாகிவிட்டன. வாசகர்கள் அனைவரும் நம்மை பாராட்டியும், சிலர் வெளியீட்டு விழாவிலேயே புத்தகங்களை வாங்கியும் நமக்கு ஊக்கமளித்தனர். அவர்கள் அனைவருக்கும் நமது நன்றி.  இன்னும் பலர் புத்தகங்கள் கிடைக்கும் இடம் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. நமது தளத்தில் வெளியாகும் பதிவுகளின் கருத்துக்கள் இணையம் பார்க்காத சாமான்ய மக்களையும் சென்றடைய வேண்டும்

Read More

நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….

வேலூர் மாவட்டம் குடியேற்றம் (குடியாத்தம்) நகரில் அமைந்துள்ள தொன்மையான காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் 27/09/2015 ஞாயிறன்று மாலை நமது பௌர்ணமி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. பல்வேறு மேடைகளில் நாம் இதுவரை பேசியிருந்தாலும் அவை அனைத்தும் நமது மேடைகள். நாம் நடத்திய விழாவின் மேடைகள். எனவே என்ன பேசவேண்டும் என்பது குறித்த பதட்டம் நம்மிடம் இருந்தது கிடையாது. அரிதாக வெளி மேடைகளில் தோன்றியிருந்தாலும் அவை வரவேற்புரைக்காக மட்டுமே. ஆனால் இந்த நிகழ்ச்சி அப்படி

Read More

எதிர்பாராமல் கிடைத்த ஒத்துழைப்பும் உதவியும்!

"நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான்" என்று கூறுவார்கள். பல சமயங்களில் பிரமிக்கத்தக்க பாடங்களை எதிர்பார்க்காத கோணங்களில் எதிர்பார்க்காத நபர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது உண்டு. பொதுவாக மனிதர்களை சரியாக எடைபோடுவதில் நாம் தவறுவதில்லை. காரணம், கடந்து வந்த பாதையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள், சந்தித்த நபர்கள்! நமது கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை. ஆனால் அரிதினும் அரிதாக சில சமயம் நமது கணிப்புக்கள் உல்டாவாகி போவதுண்டு. அப்படிப்பட்ட ஒன்றை பார்ப்போம். முக்கியப் பிரமுகர்களின்

Read More

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!

எல்லாம் வல்ல இறைவனின் கருணையினாலும் என்றும் நம்மை வழிநடத்தும் நம் குருமார்களின் அருளாலும், தக்க சமயத்தில் கைகொடுத்த நண்பர்களாலும் நம் வாசகர்களின் மகத்தான பிரார்த்தனையாலும் நமது இன்றைய நூல் வெளியீட்டு விழா மிக மிக சிறப்பாக நடந்தேறியது. அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வருகை தந்து நமது நூலை வெளியிட்டு நூல்கள் குறித்து தங்கள் பேருரையை ஆற்றி நம்மை பெருமைப்படுத்தினர். நூல்களும் இன்று அரங்கத்தில் நன்கு விற்பனையாகின. இந்த வெற்றியை

Read More

நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!

ஒரு முக்கியமான விஷயத்திற்காக சிறுவாபுரியும் பேரம்பாக்கமும் (நரசிங்கபுரம்) செல்ல வேண்டியிருந்தது. பேரம்பாக்கம் என்றால் பைக்கே போதும். கூட ஒருவர் வந்தால் போதும் நமக்கு... ஜாலியாக பேசிக்கொண்டே போய்விடுவோம். ஆனால் சிறுவாபுரி, பேரம்பாக்கம் என இரண்டு வெவ்வேறு பக்கங்களில் இருக்கும் ஆலயங்களுக்கு செல்லவேண்டியிருந்ததால் கார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கார் வைத்திருக்கும் நண்பர்கள் யாரையாவது கேட்டுப்பார்க்கலாம் என்று கருதி ஒரு சிலரிடம் பேசினோம். வார இறுதி என்றால் வர

Read More

அங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது!

தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் சரி... தலைநகர் சென்னையிலும் சரி... எங்கெங்கு காணினும் கலாம் தான். மக்கள் அனைவரும் மக்கள் ஜனாதிபதியின் நினைவுகளில் ஆழ்ந்திருக்கின்றனர். முதன்முதலாக ஒரு தலைவரின் மறைவிற்காக எந்த ஒரு பேருந்தின் கண்ணாடியும் உடைபடவில்லை, கடைகள் அடித்து மூடப்படவில்லை, வாகனங்கள் தீக்கிரையாக்கபடவில்லை, வன்முறை ஏதும் ஏற்படும் என்ற பயத்தில் பொதுவிடுமுறை விடப்படவில்லை, யாரும் போலியாக அழவில்லை, மதுவிற்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு எந்த கூட்டமும் வரவில்லை, தற்கொலை நாடகமில்லை..

Read More

ரைட்மந்த்ரா அலுவலகத்தில் உறுதிமொழியுடன் நடந்த அப்துல் கலாம் அவர்களின் இரங்கல் கூட்டம்!

நமது தளத்தின் அலுவலகத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர் கூறிய வார்த்தைகள் உறுதிமொழி எடுத்துகொள்ளப்பட்டது. இன்று காலை நம்மை தொடர்புகொண்ட நண்பர் ராஜா நமது தளத்தின் அலுவலகத்தில் அப்துல் கலாம் அவர்களின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற யோசனையை தந்தார். இதையடுத்து அப்துல் கலாம் அவர்களின் படம் ஒன்று தரவிறக்கம் செய்யப்பட்டு ஸ்டூடியோவில் கொடுத்து பிரிண்ட் எடுத்து லேமினேட் செய்யப்பட்டது. கலாம் அவர்களுடன்

Read More

அகத்தியர் தேவாரத் திரட்டு!

நமது தளம் சார்பாக நாம் செய்து வரும் சைவத் தொண்டை பொருத்தவரை பல நிலைகள் உள்ளது. 1) ஏற்கனவே சைவத் தொண்டில் புகழ் பெற்று விளங்குபவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மகிழ்ந்து அவர்களை அவர்தம் சேவையை உங்களிடம் அறிமுகப்படுத்துவது. (இவர்கள் பிரபலமானவர்கள். தொண்டில் / சைவப் பணியில் சிறந்தவர்கள் ) 2) அவரவர் சக்திக்கு ஏற்றவகையில் எளிமையாக சைவத் தொண்டு செய்து வருபவர்களை சந்தித்து அவர்களை பேட்டி கண்டு அவர்கள் புகழை மேலும் பரவச்

Read More

கண்ணனுடன் கொண்டாடிய குரு பெயர்ச்சி!

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாம் கடந்த மூன்றாண்டுகளாக கோ-சம்ரட்சணம் செய்து வருவது நீங்கள் அறிந்ததே. அங்கு உள்ள கோ-சாலைக்கு நம் தளம் சார்பாக பிரதி மாதம் தீவனம் வாங்கித் தருவதுடன், அந்த கோ-சாலையை சிறந்த முறையில் நிர்வகித்து வரும் ஊழியர்களை பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் கௌரவித்து அவர்களுக்கு துணிமணிகள், இனிப்புக்கள் தந்து உற்சாகப்படுத்துவது நமது வழக்கம். அதே போல, அங்குள்ள பசுக்கள் கன்று ஈனும்போதெல்லாம், நம்

Read More

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

நம் தளத்தின் ஓவியர் திரு.சையத் ரமீஸ் என்னும் இளைஞர். மிகவும் சாதாரண ஒரு அடித்தட்டு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். நாம் வெளியிடும் நீதிக்கதைகள் மற்றும் பக்தி கதைகள் பலவற்றுக்கு ஓவியம் தீட்டி வருகிறார். நமது தளம் துவக்கப்பட்ட காலகட்டத்தில் (2012), நமக்கென்று பிரத்யேகமாக ஒரு ஓவியரை தேடி வந்தோம். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. பிரபல ஓவியர்களை அணுகியபோது ஒரு சிறு ஓவியத்திற்கு ரூ.5,000/- முதல் ரூ.10,000/- வரை கேட்டார்கள். மேலும்

Read More

ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய திருஞானசம்பந்தர் குரு பூஜை!

திருஞானசம்பந்தர் குரு பூஜையையொட்டி கடந்த 03/06/2015 புதன்கிழமை அன்று சைதையில் உள்ள திருவள்ளுவர் குருகுலம் என்னும் ஆதரவற்றோர் இல்லத்தில் நம் தளம் சார்பாக திரையிடப்பட்ட ஞானசம்பந்தர் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'ஞானக் குழந்தை' திரைப்படம் பற்றிய பதிவு இது. குழந்தைகளுக்கு குறிப்பாக இதுபோன்ற ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பக்தியையும் நற்பண்புகளையும் வளர்க்கும் திரைப்படங்களை போட்டு காண்பிக்கவேண்டியதன் அவசியத்தை 'தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக

Read More

தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி!

ஒரு குழந்தை பிறந்தவுடனேயே நோய்க் கிருமிகள் அதை தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. எனவே தான் குழந்தை பிறந்து வளரும் காலகட்டங்களில், உயிர்க்கொல்லி நோய்களிடமிருந்து அவர்களை பாதுகாக்க தடுப்பூசி போடுவது வழக்கம். சில தடுப்பூசிகளை ஒரு முறை போட்டால் போதும் ஆயுசுக்கும் அந்த குழந்தைகளுக்கு அந்த நோய் வராது. உதாரணத்துக்கு காசநோய், ஹெபாடிடிஸ், இளம்பிள்ளை வாதம், பெரியம்மை, டெட்டனஸ் போன்ற தடுப்பூசிகள். அதே போன்று நாம் போடப்போகும் ஒரு தடுப்பூசி பற்றியது இந்த பதிவு.

Read More

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா!

நம் தனிப்பட்ட வாழ்விலும் சரி... ரைட்மந்த்ரா வரலாற்றிலும் சரி இது  மிகப் பெரிய மைல்கல்! பார்வையற்றோர் இணைந்து நடத்தும் 'வள்ளுவன் பார்வை' என்கிற மின்னஞ்சல் குழுமத்தின் உறுப்பினர்கள் ஆண்டு சந்திப்பு, திருச்சி சமயபுரம் அருகே பழுவூர் என்னும் ஊரில் ஒரு பள்ளியில் நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கவிருக்கிறது. இந்த மின்னஞ்சல் குழுமத்தை சார்ந்த தமிழகத்திலிருந்து 200 க்கும் மேற்ப்பட்ட பல்வேறு பார்வையற்ற சாதனையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இவர்களில்

Read More

காலடி பயணமும் ஒரு அவசரத் தேவையும்!

வாசகர்களுக்கு வணக்கம்! நமது RIGHTMANTRA.COM அலுவலகத்தை பிப்ரவரி மாதம் துவக்கியபோது ஒரு அலுவலகம் அமைப்பதற்கு அத்தியாவசியமான சில அடிப்படை தேவைகளை பற்றி குறிப்பிட்டு வாசகர்களிடம் உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். அதில் ஒரு சிலவற்றை தவிர அனைத்தும் நம் வாசகர்களின் பேராதரவோடு பெருங்கருணையோடு நிறைவேறிவிட்டன. அவர்கள் உதவிக்கரம் நீட்டாவிட்டால் நமது கனவு கானல் நீராகவே போயிருக்கும். இப்படி உதவிகளை நல்கிய வாசகர்கள் சிலர் தங்கள் பெயர்களை வெளியிடவேண்டாம் என்றும் இது ஆத்மார்த்தமாக தாங்கள் செய்யும் உதவி

Read More