Home > MONDAY MORNING SPL (Page 11)

நேதாஜிக்கு எடைக்கு எடை பொன் கொடுத்த தமிழர்கள் – INA வீரரின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்!

இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள். இதையொட்டி இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து மீட்க நேதாஜி துவக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான திரு.முத்தப்பா (வயது 86) அவர்களை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்து ஆசிபெற்றோம். சந்திப்புக்கு நம்முடன் நம் நண்பர் முருகன் என்பவரும் வந்திருந்தார். (சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டும் இவரை சந்தித்து நாம் ஆசிபெற்றது குறிப்பிடத்தக்கது.) இவர் சொந்த ஊர் பரமக்குடி.

Read More

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

புராண காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை "பிறவா நிலையே எனக்கு வேண்டும் இறைவா!" என்று மிகப் பெரிய அருளாளர்கள் கூட  வேண்டி விரும்பிக் கேட்கும் ஒரு சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தர் இறைவனிடம் கேட்டது என்ன தெரியுமா? "கடைத்தேறுவதற்கு கடைசி மனிதன் இந்த உலகில் இருக்கும் வரை நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க ஆசைப்படுகிறேன்!" என்பது தான். எத்தனை பெரிய வார்த்தைகள்... எப்படிப்பட்ட ஒரு சிந்தனை... எத்தனை பெரிய லட்சியம். "சுவாமி விவேகானந்தர்

Read More

சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!

இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள், பெற்ற தந்தையையே மகன் திட்டுவது & ஒருமையில் அழைப்பது, தெய்வமாக பாவிக்க வேண்டிய ஆசிரியர்களை கிண்டல் செய்வது, அவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டி சக மாணவர்கள் மத்தியில் அழைப்பது, பிறரின் அங்கஹீனத்தை கேலி செய்வது, திருநங்கைகளை நகைச்சுவை பொருளாக்கி அனைவர் மனத்திலும் வக்கிரத்தை விதைப்பது.... இது தான் இன்றைக்கு திரைப்படங்களில் நகைச்சுவை. நகைச்சுவை என்றால் அது இப்படித் தான் போல என்று கருதும் நிலைக்கு

Read More

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

நவம்பர் 18. 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி. மறைந்த நாள் இன்று! அவரது வாழ்க்கையில் நடைபெற்ற சில நெஞ்சை உருக்கும் சம்பவங்களின் தொகுப்பை பார்ப்போம். திருநெல்வேலி சமஸ்தானத்தில் வ.உ.சியின் தந்தை வக்கீலாக பணியாற்றிக் கொண்டு இருந்தார். அதே சமஸ்தானத்தில் தான் பாரதியாரின் தந்தையும் பணியாற்றி வந்தார். இதனால் இருவரும் நட்புடன் பழகிவந்தனர். வ.உ.சி.யின் வீட்டுக்கு பாரதியாரின் தந்தை அடிக்கடி வருவது வழக்கம். அப்போது வ.உ.சி. மரியாதையுடனும், அன்புடனும் அவருடன் உரையாடுவார். ஒருசமயம் ''என்

Read More

சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!

“கப்பலோட்டிய சிதம்பரனாரைப் புகழ்வோர், அவருக்கு வலக்கரமாக இருந்த சுப்பிரமணிய சிவாவை மறக்க முடியாது. சிதம்பரனார் துப்பாக்கி என்றால், அதனுள் தோட்டாவாக இருந்து செயல்பட்டவர் சிவா. வ. உ. தம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர் சுப்பிரமணிய சிவா. 'வீரமுரசு' எனப் புகழ்பெற்றவர் இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884, அக்டோபர் 4-ம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் (நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியம்.

Read More

கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???

இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் புதுச்சேரியில் பாரதியாரும் அவரது மாணவர் பாரதிதாசனும் தங்கி இருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் பாரதத் தாய்க்கு ஒரு சிலை செய்ய வேண்டும் என்ற அவரது விருப்பத்தை பாரதிதாசனிடம் கூறியிருக்கிறார் பாரதி. பாரதிதாசனும் ஒரு சிற்பியை வரவழைத்து பாரதத் தாய்க்கு சிலை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். சிற்பி சிலை தயாரிக்கத் தொடங்கியபோதே அவருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. சிலையை ஏழ்மையாக இருப்பது

Read More

உங்களுக்கு நல்ல நண்பர்கள் வேண்டுமா?

நேற்றைக்கு 'சர்வதேச நட்பு தினம்'. INTERNATIONAL FRIENDSHIP DAY. நட்பை குறித்தும் நல்ல நண்பர்கள் குறித்தும் ஓர் விரிவான பதிவை உங்களுக்கு நேற்றைக்கு அளித்திருக்கவேண்டியது. ஆனால் எதிர்பாராத அலுவல் காரணமாக சனிக்கிழமை இரவு பழனிக்கும் திருச்சிக்கும் செல்ல வேண்டியிருந்ததால் பதிவளிக்க முடியவில்லை. இன்று காலை வந்ததும் MONDAY MORNING SPL மற்றும் இந்த பதிவு இரண்டையும் அவசர அவசரமாக தயார் செய்தோம். இருப்பினும் கூற வந்த கருத்துக்களை கூறியிருப்பதாக கருதுகிறோம். ஒரு

Read More

சென்னையில் நேதாஜி தங்கிய ‘GANDHI PEAK’ல் சில மணித்துளிகள் – EXCL கவரேஜ்!

நமது தளத்தின் ரோல் மாடல் பேட்டிக்காக ஒரு மிகப் பெரிய சாதனையாளர் ஒருவரை சந்திக்க வார இறுதியில், ராயப்பேட்டை பாரதி சாலை சென்றிருந்தோம். நம்முடன் நண்பர் நாராயணன் என்பவரும் வந்திருந்தார். பேட்டியெல்லாம் முடித்துவிட்டு ஒரு டீ சாப்பிடலாம் என்று பக்கத்தில் டீக்கடையை தேடி நடந்தபோது 'நேதாஜி தங்கிய இல்லம்' என்று கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தை பாரதி சாலையில் பார்க்க நேர்ந்தது. (* மேலே கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தி.நகர் முகவரி, இந்த கல்வெட்டிய

Read More

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

ஐந்தாம் வகுப்புக்கு மேல் தொடர்ந்து படிக்க குமாரசாமிக்கு வழியில்லை. குடும்பத்தின் வறுமை நிலை தான் அதற்கு காரணம். `அதை அவரும் அறிவார். கல்வி கற்க இயலவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருக்கவே செய்தது. அந்த குறையை போக்குவதற்கு அவர் அவ்வப்போது நூல்களை படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். அவ்வாறு நூல்களை படிக்க படிக்க அவருக்கு அறிவு வளர்ந்தது. பண்பு மிளிர்ந்தது. இயற்கையாக அமைந்திருந்த பண்போடு நூலறிவும் சேர்ந்ததால் அந்த பண்பு மெருகு பெற்று

Read More