Friday, December 14, 2018
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > ‘தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’ – MONDAY MORNING SPL 49

‘தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’ – MONDAY MORNING SPL 49

print
வர் ஒரு சிமெண்ட் ஓடு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். ஒரு நாள் பணி முடித்து கிளம்பும் முன், எதையோ செக் செய்யவேண்டி, சிமெண்ட் மூட்டைகள் பிரித்து கொட்டப்படும் பகுதிக்கு சென்றபோது அங்கிருக்கும் பெரிய கொள்கலனில் தவறி விழுந்துவிடுகிறார்.

எத்தனையோ பலமாக கத்தியும் யார் காதுக்கும் அவர் கூக்குரல் விழவில்லை. பெரும்பாலானோர் ஏற்கனவே பணி முடித்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் சிமென்ட்டில் கலக்க தண்ணீர் திறந்துவிடப்பட்டு அது கொள்கலனில் வந்து விழுந்துகொண்டிருந்தது. இன்னும் சில மணிநேரத்தில் கொள்கலன் நிரம்பிவிடும்.

இவருக்கு மரணபயம் வந்துவிட்டது.

80358180

அந்த நேரத்தில் ஆச்சரியப்படும் விதமாக ஃபாக்டரியின் காவலாளி அந்த பகுதிக்கு வந்து எட்டிப் பார்க்க, இவர் உள்ள கிடப்பதை பார்த்து சைரனை ஒலிக்கச் செய்து காப்பாற்றிவிடுகிறார்.

இவருக்கு ஒரே ஆச்சரியம். “உன் வேலை ஃபாக்டரி வாயிலை காப்பது. இங்கே எப்படி சரியாக வந்து எட்டிப் பார்த்து என்னைக் காப்பாற்றினாய்?”

“ஐயா நான் இந்த பாக்டரியில் பல வருடங்களாக பணிபுரிகிறேன். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு தினம் வந்து போனாலும் நீங்கள் ஒருவர் தான் காலை என்னை பார்க்கும்போது ‘குட் மார்னிங்’ சொல்லி விஷ் செய்வீர்கள். அதே போல, மாலை போகும்போதும் ‘குட் ஈவ்னிங்… நாளைக்கு பார்க்கலாம்!’ என்று சொல்வீர்கள். இன்று காலை வழக்கம்போல வேலைக்கு வரும்போது எனக்கு ‘குட் மார்னிங்’ சொன்னீர்கள். ஆனால் மாலை உங்களிடம் இருந்து ‘குட் ஈவ்னிங்’ வரவில்லை. உங்களையும் பார்க்கவில்லை. சரி… ஏதோ தவறு நடந்திருக்கவேண்டும் என்று தோன்றியது. ஆகையால் பாக்டரியின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று செக் செய்தேன். நீங்கள் இங்கு விழுந்திருப்பதை கண்டுபிடித்தேன்” என்றார்.

இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டார்.

‘தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’

உங்களை சுற்றியிருப்பவர்களிடம் எப்போதும் அன்பாய் இருங்கள். குறிப்பாக உங்களுக்கு கீழே பணி புரிகிறவர்களிடம்.

நீங்கள் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடம் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத வகைகளில் உங்கள் ‘அன்பு முத்திரை’யை பதியுங்கள்.

அன்பு செலுத்துங்கள். அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.

Smile

நிம்மதியான மதிப்பிற்குரிய வாழ்க்கைக்கு பத்து கட்டளைகள்

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3. இன்சொல் கூறி ‘நான்’,’எனது’ போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

10. ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

இவற்றையயெல்லாம் கடைபிடியுங்கள். அப்புறம் பாருங்கள்…. உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் நீங்களாகத் தான் இருப்பீர்கள்!

==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==============================================================
[END]

11 thoughts on “‘தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’ – MONDAY MORNING SPL 49

 1. Good morning sundar sir

  மிகவும் அருமையான தகவல்
  பத்து வாசகங்களும் அருமை

  நன்றி

 2. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
  புன்கணீர் பூசல் தரும்

  அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

  1. நண்பரே, திருக்குறளை மேற்கோள் காட்டி தாங்கள் அளித்த கமெண்ட்டை கண்டு உவகையடைந்தேன். நன்றி.

   – சுந்தர்

 3. மிகவும் அற்புதமான பயனுள்ள பதிவு.

  நன்றி
  ப.சங்கரநாராயணன்

 4. monday morning special as usual superb. தர்மம் தலை காப்பது போல் நாம் பிறரிடம் காட்டும் அன்பும் நமக்கு நன்மை பயக்கும். நாம் மனிதர்களிடம் மட்டும் தான் அன்பு செலுத்த வேண்டும் என்பதில்லை. நம்மை சுற்றியுள்ள நாய், பூனை, மாடு மற்றும் எல்லா விலங்குகளிடமும் நாம் அன்பு செலுத்தினால் கண்டிப்பாக மிருகங்களும் நம்மிடம் அன்பை வெளிபடுத்தும்.
  பத்து கட்டளை களும் நன்றாக உள்ளது. நாம் பின்பற்ற வேண்டிய ஒன்று

  superb ஸ்பெஷல். அன்பே சிவம்.

  நன்றி
  உமா

 5. சுந்தர் சார்,
  மிக மிக அருமையான பதிவு. சூப்பர் மண்டே spl
  நன்றியுடன் அருண்

 6. சார்,

  படிக்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது. அன்புக்கு எல்லையே இல்லை….. கிரேட்….

  நன்றி

  தாமரை வெங்கட்

 7. After reading this article i remember one saying ” A smile is a curved line, which makes everything straight”.

  shashikala

 8. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
  கதை மிகவும் அருமையாக உள்ளது.
  படிக்கும் போதே மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
  பத்து கட்டளைகள் நன்றாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *