Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > பிரச்னைகளுக்கு அப்பாற்பட்டவர் இங்கே யார்?

பிரச்னைகளுக்கு அப்பாற்பட்டவர் இங்கே யார்?

print
ம் நட்பு வட்டங்களில் யாரிடமாவது “எனக்கு மனசு சரியில்லேப்பா… கொஞ்சம் பிரச்னை” என்று சொன்னால் “என்னது உங்களுக்கு பிரச்னையா? நீங்களே இப்படி சொன்னா எப்படி?” என்று ஏதோ நாம் பிரச்சனைகளுக்கும்  கவலைகளுக்கும் அப்பாற்பட்ட மனிதர் போல நினைத்து அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் நம்மை பார்க்கிறார்கள்.

Problems_reactionபிரச்னைகளுக்கும் துன்பத்திற்கும் அப்பாற்ப்பட்ட மனிதர் என்று எவருமே இந்த உலகத்தில் கிடையாது. யாராவது அப்படி சொன்னால் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.  மாபெரும் ஞானிகள் மற்றும் மகான்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல எனும்போது  அற்ப மானிடன் நாம் எம்மாத்திரம்?

பிரச்னைகளுக்கும் துன்பத்திற்கும் அப்பாற்ப்பட்ட மனிதராக நம்மை என்றுமே நாம் நினைத்ததில்லை. அப்படி காட்டிக்கொண்டதுமில்லை. ஒரு சராசரி மனிதனுக்கு வரும் அத்தனை பிரச்னைகளும் ஏமாற்றங்களும் நமக்கும் உண்டு. என்ன… அவற்றுக்கு ரீயாக்ட் செய்வதில் தான் நாம் மாறுபடுகிறோம்.

நம்மை பொருத்தவரை, நமக்கு வரும் பிரச்னைகள் / துன்பங்கள் அனைத்தும் இன்னொரு விடியலுக்கு திறவுகோல் என்பது நாம் மனதில் அழுத்தந்திருத்தமாக பதிந்துவிட்டது.

கரும்பை பிழிந்தால் தானே சாறு வரும்!

துன்பங்கள் நம்மை பிழிய பிழியத் தான் நம்முள்ளே நாம் அறியாமல் உறங்கிக்கொண்டிருக்கும் பல திறமைகள் வெளியே வரும். பல புதிய வாசல்கள் கண்களுக்கு புலப்படும்.

எனவே மனதை வாட்டும் துன்பங்கள் சூழும்போது, வெளியுலகத் தொடர்புகளில் இருந்து தற்காலிகமாக விலகி நம்மை சுயபரிசோதனை செய்துகொள்வது நம் வழக்கம்.

பாட்டியின் மறைவு ஏற்படுத்திய சோகத்தை மெல்ல மெல்ல கடந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வேறு ஒரு துயரம் மனதை ஆட்டுவித்துகொண்டிருந்தது.

சிவனிடம் ஓடிச்சென்று அவன் கால்களில் வீழ்ந்து ஆறுதல் தேடலாம் என்றால் பாட்டி தவறியதால் இன்னும் சில நாட்களுக்கு கோவிலுக்கு போக இயலாத நிலை.

பிரச்சனைக்கான சூத்திரதாரியே அந்த உடுக்கைப் பயல் தான் எனும்போது அவனிடம் ஓடிப்போய் என்னவாகப்போகிறது?

ராமபிரான் ஒருமுறை கங்கையில் குளிக்கச் செல்லும்போது தன் தோளில் இருந்த அம்பறாத் துணியைக் கழற்றி வைத்தார் . அதில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது. அதைப் படுக்க வைத்துச் செல்வது வீரனுக்கு அழகல்ல எனத் தரையில் குத்திவிட்டுச் சென்றார்.

குளித்து முடித்துவிட்டுத் திரும்ப அந்த அம்பைத் தரையிலிருந்து பிடுங்கியபோது ஒரு தவளை ரத்தம் வெளியேற உயிருக்குத் துடித்துக்கொண்டு அதன் நுனியில் ஒட்டி இருந்தது. அதைக் கண்ட ராமபிரான் நெஞ்சம் பதைபதைத்து.

“தவளையே! நான் உன்னை அம்பால் குத்தியபோது நீ குரல் கொடுத்திருக்கலாமே” என்று கலங்கினார் .

“எம்பெருமானே ! எனக்குப் பிறர் தீமை செய்தால் என்னைக் காப்பாற்றிக்கொள்ள ‘ராமா! ராமா!’ என அழைப்பேன் . ஆனால், ராமனாலேயே எனக்கு ஆபத்து என்னும்போது யாரைக் கூவி அழைப்பேன்?” என்றது தவளை.

அந்த தவளையின் நிலை தான் நமக்கும்.

விஷயத்துக்கு வருகிறோம்.

சரி… இரண்டு நாள் மெளனமாக இருப்போம் அனைத்தும் சரியாகிவிடும் என்று அமைதியாக இருந்தோம். நம் புத்தக அலமாரியில் படிக்காமல் தூசி படிந்திருந்த சில நூல்களை எடுத்து படித்தோம். மனம் சற்று லேசானது.

இந்த சூழ்நிலையில், நண்பர் பாபாராம் ஹிந்து நாளிதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்திருந்த ஒரு கட்டுரையை நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

நம் நெஞ்சை நெகிழ வைத்த கட்டுரை அது. படித்து முடித்த பின்னர் நம் கவலைகள் அப்படியே மறைந்து மனம் லேசாகிவிட்டது.

கட்டுரையின் நாயகி யாஸ்மீன் பேகத்தை நம் தளத்திற்காக விரைவில் சந்திக்கவிருக்கிறோம்.

==========================================================

கர்னாடக இசையில் கலக்கும் பொறியாளர் யாஸ்மின் பேகம்- கச்சேரி வருமானத்தை இசைக் கலைஞர்களுக்காக அர்ப்பணிக்கிறார்

மேடையில் கர்னாடக இசைப் பாடல்களைப் பாடும் யாஸ்மின் பேகம். அருகில் ஆர்மோனியம் வாசிக்கும் கமால் பாஷா.

இந்துக் கடவுள்களைப் பற்றி பேசுவதை இஸ்லாத்தில் அவ்வள வாய் அங்கீகரிக்க மாட்டார்கள். ஆனால், இந்துக் கடவுள்களைப் போற்றிப் பாடும் கர்னாடக சங்கீதத் தில் முஸ்லிம் பெண் யாஸ்மின் பேகம் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரை இப்போது மீள முடியாத ஒரு சோகம் சூழ்ந்திருக் கிறது. அதைச் சொல்வதற்கு முன்பாக யாஸ்மினை பற்றி சில வரிகள்..

மேடையில் கர்னாடக இசைப் பாடல்களைப் பாடும் யாஸ்மின் பேகம். அருகில் ஆர்மோனியம் வாசிக்கும் கமால் பாஷா
மேடையில் கர்னாடக இசைப் பாடல்களைப் பாடும் யாஸ்மின் பேகம். அருகில் ஆர்மோனியம் வாசிக்கும் கமால் பாஷா

மயிலாடுதுறையைச் சேர்ந்த கமால் பாஷா – அனிஷா பேகம் தம்பதியின் ஒரே மகள் யாஸ்மின் பேகம். இப்போது எம்.இ., படிக் கிறார். கமால் பாஷாவுக்கு சிறுவயதி லேயே கர்னாடக இசையின் மீது நாட்டம் அதிகம். இந்த ஆர்வத்தில் 40 வயதில் ஹார்மோனியம் வாசிக்கப் பழகினார். அப்போது யாஸ்மின் பேகம் 7 வயது குழந்தை. தனது மகளை இசை மேதையாக உருவாக்க நினைத்த பாஷா, அப் போதிருந்தே அவரையும் தயார் படுத்தினார். அப்புறம் நடந்தவை களை யாஸ்மின் பேகமே நமக்குச் சொல்லட்டும்.

‘என்னை கர்னாடக சங்கீதத்தில் இசை மேதையாக உருவாக்க வேண்டும் என்பதுதான் அப்பாவின் கனவு. ஆனால், எங்கள் மதத்தைச் சேர்ந்த சிலர், நம்ம புள்ள எப்படி கர்னாடக சங்கீதம் படிக்கிறது? என்று முணுமுணுத்தார்கள்.

ஆனால், அப்பா அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ‘இசையை இசையாக மட்டும் பாருங்கள். இதற்குள்ளே மதத்தை திணிக்காதீர்கள்.

அனைவருக்கும் பொதுவான இறைவனைப் பற்றித்தான் எம் பொண்ணு பாடுகிறாள். கர்னாடக சங்கீதம் படிப்பதால் அவள் இந்து வாக மாறிட்டதா அர்த்தம் இல்லை’ என்று சொல்லி எதிர்ப்புகளை சமாளித்தார்.

நாகஸ்வர வித்வான் சண்முகம் பிள்ளை தான் எனக்கு குரு. அவரிடம் சங்கீதம் படித்து முறைப்படி மேடை கச்சேரிகள் பண்ண ஆரம்பித்தேன். எனது அத்தனை கச்சேரிகளுக்கும் அப்பாதான் ஹார்மோனியம் வாசிப் பார். இதுவரைக்கும் 100 கச்சேரி கள் வரைக்கும் பண்ணியிருக்கிறேன். கச்சேரியில் கிடைக்கும் வரு மானத்தை தனியாக ஒரு வங்கிக் கணக்கில் சேமித்தோம். நலிவடைந்த இசைக் கலைஞர்களுக்கும் புதிதாக இசையை படிக்க வரும் ஏழை களுக்கும் உதவுவதற்காகவே நாங்கள் அதைச் சேமித்தோம்.

ஆனால், நாங்கள் ஒன்று நினைக்க இறைவன் வேறுமாதிரியாக தீர்மானித்துவிட்டான். இந்த வருடம் பிப்ரவரி 2-ம் தேதி, காட்டுமன்னார் கோயில் அருகிலுள்ள முட்டம் கிராமத்துக்கு நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக நான், அப்பா, அம்மா மூவரும் கிளம்பினோம். அந்த ஊர் பெருமாள் கோயிலில் அன்றுதான் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. அப்பாவின் நண்பர் அங்கு இருப்ப தாக தகவல் வந்ததால் கோயிலுக்கே சென்றோம்.

நண்பரைப் பார்த்துவிட்டு கோயி லில் அமர்ந்திருந்தபோது, ‘பெரு மாளைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுமா’ன்னு அப்பா சொன்னார். ஹிந்தோளம் ராகத்தில் ‘ஸ்ரீகிருஷ்ண சைத்தன்யா’ என்ற பாடலைப் பாடி னேன். லயித்துக் கேட்டுக் கொண் டிருந்த அப்பா, முக்கால்வாசி பாடல் பாடிய நிலையில் திடீரென மயங்கி எனது மடியில் சரிந்துவிட்டார். எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தோம். அப்பாவைக் காப்பாற்ற முடியவில்லை. இன்னமும் அந்த நிகழ்வை என்னால் மறக்க முடிய வில்லை. அப்பா இல்லாமல் கச்சேரிக்கும் போகமுடியவில்லை.

நண்பர்கள், ஆசான்கள் வற்புறுத் தலுக்குப் பிறகு ஜூலை மாதம் கச்சேரிக்கு செல்ல ஒப்புக் கொண்டிருக் கிறேன். நான் எப்படி வரவேண்டும் என்று அப்பா கற்பனை பண்ணி வைத்திருந்தாரோ அந்த நிலையை அடைவதுதான் எனது லட்சியம். கச்சேரிக்குப் போய் சம்பாதித்த பணம் அப்படியே வங்கியில் இருக்கிறது. அப்பாவின் விருப்பப்படியே, இசை சம்பந்தப்பட்ட இயலாத மனிதர் களுக்கு அந்தத் தொகையையும் இனிமேல் கிடைக்கும் வருமானத் தையும் செலவு செய்வேன்” நம்பிக்கை துளிர்க்கச் சொன்னார் யாஸ்மின் பேகம்.

(நன்றி : tamil.thehindu.com)

==========================================================

[END]

8 thoughts on “பிரச்னைகளுக்கு அப்பாற்பட்டவர் இங்கே யார்?

  1. இந்த கட்டுரையை நண்பர் சுந்தருக்கு மின்னஞ்சல் செய்யும்போது அவரது மனச்சுமையை குறைக்க உதவும் என்று நினைத்து நான் அனுப்பவில்லை. ஆனால் நிச்சயம் இதை படித்துவிட்டு சந்தோஷப்படுவார் என்று தெரியும். யாஸ்மின் பேகம் அவர்களை நம் தளத்திற்காக சந்திப்பார் என்று நான் மட்டுமல்ல என் அலுவலக நண்பர்களும் நினைத்தோம். நாங்க எல்லாரும் உங்களை ஓரளவு புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டோம் சுந்தர்.

    பெருமாளின் புகழை கேட்டுக்கொண்டே உயிர் விடும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும். அந்த வகையில் திரு கமால் பாஷா அவர்களின் ஆன்மா இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டது. இசை துறையை சேர்ந்த இயலாதவர்களுக்கு தன கச்சேரி மூலமா கிடைக்கும் வருவாயில் உதவ நினைக்கும் யாஸ்மின் பேகம் அவர்களுக்கு இறைவனின் அருள் பரிபூரணமாக உண்டு. எல்லாம் அவன் செயல்.

  2. திரு பாபா ராம் அவர்கள் சரியான நேரத்தில் தங்களுக்கு இந்த கட்டுரையை அனுப்பியிருக்கிறார். தமது துன்பத்தை அடுத்தவர்களிடம் பகிர்ந்தால் நம் மன சுமை பாதியாகும். சந்தோஷத்தை பகிர்ந்தால் double ஆகும்.

    இந்த கட்டுரையின் நாயகி யாஷ்மின் அவர்களின் தொண்டு எவ்வளவு பெரியது. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று தனது கச்சேரி பணத்தை சேர்த்து வைத்திருக்கிறார்கள்/ அவரது தந்தை எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறார் இறைவனின் நாமாவை கேட்டுகொண்டே உயிர் விடுவதற்கு.

    யாஷ்மின் கோரிக்கை அவர் அப்பா ஆசைப்படி நிறைவேற வாழ்த்துக்கள்.

    நன்றி
    உமா

  3. Even Robin Sharma too had admitted and said that by writing so many books and being a personal motivational coach, doesn’t mean those who do all this are living far good life compared to ordinary people who live mediocre life and completely flawless.

    So, all people who are above the earth does have problems. NO ONE IN THIS EARTH CAN CLAIM THAT THEY’RE FREE OF PROBLEMS.

    If poor man’s problem is money, wealthy’s problems are health related; if a company employee’s problem is freedom and more money, then a company director’s problem is how to run a company first without any loss and then with profits and thus lead it to successful one; every one right from – actors, sportspersons, politicians, scientists, personal motivational coaches to ordinary normal middle class and poor people have problems.

    so, don’t worry Sundarji. Our site will go a long way by meeting so many prestigious leaders from local to national ones.

    Wish you all the best in your upcoming days.
    **
    **Chitti**.
    Thoughts becomes things.

  4. சுந்தர் சார்,

    இந்த பதிவு கடந்த 3 வாரமாக வதைத்து வந்த என் மனவேதேனையை கொஞ்சம் குறைத்துள்ளது.

    “நம்மை பொருத்தவரை, நமக்கு வரும் பிரச்னைகள் / துன்பங்கள் அனைத்தும் இன்னொரு விடியலுக்கு திறவுகோல் என்பது நாம் மனதில் அழுத்தந்திருத்தமாக பதிந்துவிட்டது.”

    நானும் அந்த நல்ல விடியலுக்காக தான் காத்திருக்கிறேன்.

    நன்றியுடன் அருண்

  5. துன்பங்கள் நம்மை பிழிய பிழியத் தான் நம்முள்ளே நாம் அறியாமல் உறங்கிக்கொண்டிருக்கும் பல திறமைகள் மற்றும் அறியாமையும் கூட வெளியே வரும். பல புதிய வாசல்கள் கண்களுக்கு புலப்படும்.
    துன்பப் படுபவரை பார்த்து கவலைப்படாதே கடவுள் இருக்கிறார் என்று ஆறுதல் சொல்வது மிக எளிது …அதனை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் உண்மை புரியும் …கடவுளைக்கூட ஒருவன் கண்டபடி புலம்புகிறான் என்றால் அவனுக்கு எவ்வளவு துன்பம் ஏமாற்றம் துரோகம் ..இவை எல்லாவற்றையும் விட மனிதனால் தீர்த்து வைக்கமுடியாத சில விஷயம். இதைதான் நாம் கடவுள் என்ற ஒரு சக்தியிடம் நாம் விடுகிறோம் .அதை அவன் சரி செய்தாலும் சரி
    சரி செய்யாவிட்டாலும் சரி ..தலைவிதியே அவ்வளவுதான்..என்பது என் முடிவு ..

    ஆரம்பத்தில் தங்களின் இந்த தலத்தில் கமண்ட் செய்யும்போது என்னுடைய வார்த்தைகளில் கடவுளின் எதிர்ப்புகள் எதிரொலிக்கும் ..பார்த்திருப்பீர்கள் ..அதற்க்கு காரணம் எனக்கு ஏற்பட்ட அளவிடமுடியாத சோதனை ஒவ்வொரு கமேண்டிர்க்கும் தாங்கள் விளக்கம் கொடுத்து என்னை கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு மனிதனாக மாற்றியுல்லீகள் அதன்பிறகு என்னுடைய பிர்ராத்தன ஆர்டிகல் வெளிவந்த பிறகு என்னுடைய கமெண்ட் பக்குவப்பட்டதா உள்ளதையும் தாங்கள் பார்த்திருப்பீர்கள்..
    ..அப்படிப்பட்ட தாங்கள் இந்த வார்த்தையை ///பிரச்சனைக்கான சூத்திரதாரியே அந்த உடுக்கைப் பயல் தான் எனும்போது அவனிடம் ஓடிப்போய் என்னவாகப்போகிறது -///என்று முன்வைத்துல்லீகள் …இதனை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்வது கடவுளை நம்பலாமா? வேண்டாமா ?தாங்கள் அடிக்கடி சொல்லும் முழு சரணாகதி என்பதன் பொருள் என்ன ?…
    கரும்பை பிழிந்தால் தானே சாறு வரும்? (இங்கு கேள்விக்குறி எதற்கு சாரு வருமா? வராதா?)என்பதுபோல் உள்ளது மொத்தத்தில் இந்தபதிவு உங்களின் விரக்தியை பிரதிபலிக்கிறது ..

    1. அடடே… நீங்கள் இப்படி எடுத்துக்கொண்டீர்களா?

      எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி அந்த உடுக்கைப் பயல் என்று சிவபெருமானை சொன்னது அன்பின் மிகுதியில். விரக்தியில் அல்ல.

      (‘கரும்பை பிழிந்தால் தானே சாறு வரும்’ என்ற வரியில் ஆச்சரியக் குறிக்கு பதில் கேள்விக்குறியை போட்டது தப்பாகிவிட்டது!)

      ஆண்டவன் தரும் சோதனைகள் யாவும் நம் நன்மைக்கே என்பதை பல தருணங்களில் கண்கூடாக உணர்ந்திருக்கிறேன். அதை நம் தளத்திலும் அவ்வப்போது பகிர்ந்திருக்கிறேன்.

      இறைவன் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது. காலம் தான் அதை நமக்கு உணர்த்தும்.

      துன்பத்தை எதிர்கொள்வது எப்படி என்பதை தெரியப்படுத்த விரும்பியே இந்த பதிவை அளித்தேன். துன்பத்திலும் என் இறைவனை நான் நேசிக்கிறேன் என்பதையே இந்த பதிவில் நான் தெரியப்படுத்த விரும்புவது.

      கீழ்கண்ட பதிவை மீண்டும் ஒருமுறை பொறுமையாக படிக்கவும். உங்களுக்கு ஓரளவு புரியும்.

      http://rightmantra.com/?p=4665

      – சுந்தர்

  6. திரு ஸ்ரீராம் (பாபா ராம்) அவர்கள் அலுவகத்தில் என்னிடம் இக்கட்டுரைய காண்பிக்கும்போது எனக்கு பெரிய ஆச்சிரியமாக இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அது என்னவென்றால் கலைகளுக்கு அப்பாற்பட்டது மதம் என்று….

    எல்லாம் வல்ல இறைவன் சகோதரி யாசின் அவர்களுக்கு அனைத்து புகழையும் பெயரும் வழங்கட்டும்…..

    ரைட் மந்த்ரா நண்பர்களின் சார்பாக இறைவனை வேண்டும்….

    விசு

Leave a Reply to ARUNOTHAYAKUMAR Cancel reply

Your email address will not be published. Required fields are marked *