Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > மாளிகைகள் வரவேற்க தயாராக இருக்க, குடிசையை தேடி வந்த கண்ணன் – Rightmantra Prayer Cub

மாளிகைகள் வரவேற்க தயாராக இருக்க, குடிசையை தேடி வந்த கண்ணன் – Rightmantra Prayer Cub

print
பாரதப் போர் தீர்மாணிக்கப்பட்டவுடன், எதற்கும் கடைசியாக ஒரு முறை சமாதானத்துக்கு முயன்று பார்ப்போமே என்று பகவான் கிருஷ்ணர் கௌரவர்களின் தலைநகரமான ஹஸ்தினாபுரம் செல்கிறார். கிருஷ்ணர் தன் இரதத்தில் ராஜ வீதி வழியே செல்லும்போது, இரு பக்கங்களிலும் பெரும் பெரும் மாளிகைகள் கண்ணனை வரவேற்கும் பொருட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. வித விதமான தோரணங்களும் வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்தன.

Krishna302முதலில் எதிர்பட்ட மாளிகையை பார்த்த பரந்தாமன், “இது யார் மாளிகை?” என்றான்.

“இது என்னுடையது!” என்று பதில் வந்தது. பதில் சொன்னவன் துரியோதனன்.

அடுத்து ஒரு அழகிய மாளிகை தென்பட்டது.

“இது யார் மாளிகை?” என்றான் கண்ணன்.

“இது என்னுடையது!” என்றான் துச்சாதனன்.

இப்படி எதிர்ப்படும் மாளிகைகளை எல்லாம் “இது யாருடைய மாளிகை?’ என்று கேட்டப்படி வந்தான்.

“இது என்னுடையது, இது என்னுடையது!” என்று பதில் வந்த வண்ணமிருந்தது. துரோணர், பீஷ்மர், கிருபர். கர்ணன் என அனைவரும் இப்படியே கூறினார்கள்.

கண்ணன் அவர்கள் எவர் வரவேற்பையும் பொருட்படுத்தாமல் இரதத்தை செலுத்திக்கொண்டேயிருந்தான். வீதியின் கடைசி பகுதிக்கு வந்தாகிவிட்டது. அங்கே ஒரு கூரையால் வேயப்பட்ட குடிசை தென்பட்டது. பார்ப்பதற்கு ஏதோ தவசியின் குடில் போன்று இருந்தது.

வாசலில் நின்று, “இது யாருடையது?” என்றான் கண்ணன்.

“இது தேவரீரது திருமாளிகை!” என்றது உள்ளே இருந்து பதில் வந்தது.

பதில் வந்த திசையை நோக்கினார் கிருஷ்ணர். அங்கே இருந்தது மகாத்மா விதுரர். பணிவுடன் கண்ணனை வணங்கிய வண்ணம் காட்சியளித்தார் விதுரர். அவரது தோற்றமே அவர் அடக்கத்தின் திருவுருவம் என்று சொல்லாமல் சொன்னது.

பாண்டுரங்கன் சிரித்துக்கொண்டே, “இந்த மாபெரும் நகரத்துக்குள் எனக்கும் ஒரு மாளிகை உள்ளதே. மிக்க மகிழ்ச்சி. நான் இங்கே தங்குவதே முறை!” என்று கூறிக்கொண்டே அந்த குடிசைக்குள் சென்றான்.

தனது சின்னஞ்சிறு ஓலைகுடிசையில் பரந்தாமன் கால் பட்டதை எண்ணி பூரித்துப் போனார் விதுரர்.

வீட்டில் எதுவுமில்லாத நிலையில், பரம்பொருளுக்கு ஏதாவது வாங்கி வரலாம் என்று சந்தைக்கு ஓடுகிறார் விதுரர். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த காய்ந்த கீரையை தேவாமிர்தமாக எண்ணி உண்கிறான் கண்ணன்.

விதுரரின் மனைவியிடம், “அம்மா இப்படி ஒரு சுவையான கீரையை நான் இதுவரை உண்டதில்லை. வேறு ஏதாவது சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்க, உள்ளே சென்று தேடிப்பார்க்கிறாள் அந்த அன்னை.

சற்று அழுகிய நிலையில் சில வாழைப்பழங்கள் இருக்க, அதை எப்படி பகவானுக்கு கொடுப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, “அம்மா பரவாயில்லை கொடுங்கள்… எனக்கு மிகவும் பசிக்கிறது” என்று கூற, அன்னை பதட்டத்தில் உரிக்கும்போது கனியை கீழே போட்டுவிட்டு, தோலை பகவானிடம் கொடுத்தாள்.

கண்ணன், அதை வாங்கி உண்டவண்ணமிருந்தான்.

வெளியே சென்ற விதுரர் வீட்டிற்கு திரும்பியவுடன், பகவான் பழத்திற்கு பதிலாக தோலை தின்று கொண்டிருப்பதை பார்த்து திடுக்கிறார்.  “என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறாய்…?” என்று மனைவியிடம் இருந்து பழங்களை பறித்து, தான் தோலை உரித்து பழத்தை பகவானுக்கு தருகிறார்.

“அன்னை முன்பு கொடுத்த தோலின் சுவை போல இல்லையே…” என்று குறைப்பட்டு கொள்கிறார் பகவான்.

அது எப்படி பழத்தை விட தோல் சுவையாக இருந்தது ?

காரணம் அன்னை, அன்பையும் சேர்த்தல்லவா பரந்தாமனுக்கு கொடுத்தாள்….

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்: மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சேவை செய்து வரும் திரு.குரு அவர்கள்.

குரு அவர்களை கடந்த ஒரு ஆண்டாகத் தான் நமக்கு தெரியும். சென்ற குரு பெயர்ச்சியின் போது முதன் முதலில் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள பசுக்களுக்கு நாம் தீவனம், அளித்த போது அப்போது கோ-சாலையை பார்த்துக்கொண்டிருந்த இவரிடம் தான் ஒப்படைத்தோம். (தற்போது கோ-சாலையை பாலாஜி அவர்கள் பார்த்துக்கொள்கிறார்.)

லேத் பட்டறை ஒன்றில் ஆப்பரேட்டராக பணிபுரியும் குரு இக்கோவிலில் பணிபுரிவது சம்பளத்துக்கு அல்ல. சிவனுக்கு சேவை செய்யவேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில் தான்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/05/IMG_9606.jpg

தினமும் காலை 4.30 க்கெல்லாம் எழுந்து கோவிலுக்கு சென்று அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கும் அபிஷேகம் செய்து, அவர்களுக்கு ஆடைமாற்றி விடுவது இவரது வேலை. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. தினமும் அதை செய்துவருகிறார். அதன் பிறகு கோவிலை சுத்தம் செய்வார். 6.30 க்குள் அனைத்தையும் முடித்துவிட்டு தனது டூட்டிக்கு கிளம்பிவிடுவார்.

எந்தை சிவனைவிட அவன் தொண்டர்கள் நாயன்மார்கள் மிக மிக பெரியவர்கள். அப்படிப்பட்ட தொண்டர்களுக்கு தினமும் அபிஷேகம் செய்கிறார் திரு.குரு என்றால் அவர் எப்பேற்ப்பட்ட தொண்டர் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.

(அடுத்த முறை நீங்கள் ஏதாவது சிவாலயத்துக்கு சென்றால் சிவபெருமானை தரிச்ப்பதில் காட்டும் அக்கறையை, ஆர்வத்தை அவனது மெய்த்தொண்டர்களாக விளங்கி பக்தி என்றால் என்ன என்று நமக்கு காட்டிய 63 நாயன்மார்களை தரிசிப்பதிலும் காட்டுங்கள். நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நாயன்மார்கள் அருளால் நிறைவேறும். எந்தை சிவனை தரிசிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவன் தொண்டர்களை தரிசித்துவிட்டு வாருங்கள். சிவனின் மனம் அதற்கே குளிர்ந்துவிடும்.)

DSC06656
கோவிலில் தான் நடத்தி வரும் சிறு கடைக்கு முன்பாக திரு.குரு அவர்கள்

பணம் பணம் என்று காலை எழுவதில் இருந்து இரவு உறங்கப்போவது வரை அலையும் இந்த உலகத்தில் சேவை மனப்பான்மையோடு கோவில்களில் இது போன்று தொண்டாற்றவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையில் நாம் செய்த பாக்கியம் தான்.

மாலை வேளைகளில் தன்னுடைய வருமானத்திற்காக கோவில் வாயிலில் அபிஷேகப் பொருட்கள், ஸ்லோகப் புத்தகங்கள், டாலர்கள், செயின்கள், சிறு சிறு சுவாமி படங்கள் ஆகியவற்றை விற்கும் ஒரு சிறு கடை வைத்திருக்கிறார். இந்த கடையை கூட கடந்த சில மாதங்களாக தான் வைத்திருக்கிறார் குரு. நாம் பசுக்களை பார்க்கவும், தீவனங்களை இறக்கவும் கோவிலுக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும், இவரிடம் பிஸ்னஸ் செய்யாமல் வருவதில்லை. ஏதோ நம்மள இயன்ற ஒரு சிறு வணிகத்தை இவருக்கு தருவோம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று சொன்னபோது, மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். ஞாயிறன்று காலை நாயன்மார்களுக்கு அபிஷேகம் செய்யும்போது ஒரு முறை பிரார்த்தனை செய்வதாகவும், மாலை வழக்கமான பிரார்த்தனை நேரத்தில் (Sunday 5.30 – 5.45 pm) கோ-சாலையில் செய்வதாகவும் கூறியிருக்கிறார் குரு.

நம் வாசகர்கள் அனைவருக்காகவும் நாயன்மார்களிடம் பேசும்படி கூறியிருக்கிறோம். (நம்மளை நம்ம தலைவர் சிவபெருமான் அலட்சியப்படுத்தலாம். ஆனா நாயன்மார்கள் மூலமா போனா, அவருக்கு வேற வழியே இல்லை. எப்பூடி?)

================================================================

தாயில்லா சேய்க்கு தாயாகவேண்டும்!

சமீபத்தில் கடலூரை சேர்ந்த திரு.குமார் என்பவரிடம் பேச நேர்ந்தது. காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் தனது தங்கை கீதா (29) என்பவரின் திருமணத்துக்காக அவர் முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது தனது தங்கை பற்றிய தகவல் ஒன்றை அவர் சொன்னார். அவரது தங்கைக்கு கருப்பையில் வளர்ந்த ஒரு சிறு கட்டி காரணமாக வேறு வழி இன்றி கருப்பை அகற்றப்பட்டுவிட்டதாக கூறினார்.

நமக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“சார்… கருப்பை இல்லாத நிலையில் எப்படி சார் அவர்கள் திருமணம் செய்யமுடியும்? ஏனெனில், தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று நினைக்காத ஆண் எவரும் இருக்க முடியுமா?” – நம் யதார்த்தமான சந்தேகத்தை கேட்டோம்.

“அப்படி இல்லை சார். மனைவியை இழந்து, கைக்குழந்தையுடன் கஷ்டப்படும் எத்தனையோ ஆண்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எவரையேனும் திருமணம் செய்துகொண்டு, ஒரு நல்ல மனைவியாகவும், தாயில்லா அந்த குழந்தைக்கு ஒரு நல்ல தாயாகவும் இருக்க என் தங்கை ஆசைப்படுகிறாள்!!” என்று அவர் சொன்னபோது, அவரது தங்கையின் அந்த உயர்ந்த உள்ளத்தை எண்ணி, சிலிர்த்துப்போனோம்.

இப்படியும் தியாக உள்ளம் கொண்ட பெண்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பது நமக்கு மிகப் பெரிய ஆறுதல்.

அப்போது தான் நம் தளத்தை பற்றியும் நம் பிரார்த்தனை கிளப் பற்றியும் அவரிடம் சொன்னோம். “சார்… கவலையே  படவேண்டாம். இதை எங்கள் பிரார்த்தனை கிளப்பில் வெளியிடுகிறோம். உங்கள் எதிர்பார்ப்புக்கும் உங்கள் தங்கையின் நல்ல மனதிற்கும் ஏற்றபடி ஒரு மாப்பிள்ளை நிச்சயம் உங்கள் தங்கைக்கு விரைவில் கிடைப்பார். திருமணத்திற்கு அவசியம் என்னை கூப்பிடுங்கள்!” என்று சொல்லியிருக்கிறோம்.

அவர் நெகிழ்ந்து போய்விட்டார். “சார் என் தங்கையின் திருமணம் தொடர்பாக எத்தனையோ பேரிடம் பேசியிருக்கிறேன். ஆனால் உங்கள் போல ஆறுதல் தரும்படி இதுவரை எவருமே பேசியதில்லை!”  என்றார்.

எல்லாப் புகழும் எந்தை ஈசனுக்கே.

தன் தங்கை கீதா அவர்களுடன் சேர்ந்து நம் அனைவருக்காகவும் பிரார்த்திப்பாதாக கூறியிருக்கிறார்  குமார்.

================================================================

என் குடும்பத்தினர் ஆறுதல் பெறவேண்டும்!

என் பாட்டி சீதாலக்ஷ்மி அம்மாள் (85) அவர்கள் மறைந்த துக்கத்திலிருந்து என்னாலோ என் குடும்பத்தினராலோ இன்னும் மீள முடியவில்லை. அவர் நினைவாகவே இருக்கிறேன். அவர் சிவபதம் அடைந்துவிட்ட நிலையில், ஈடு செய்ய இயலாத இழப்பில் தவிக்கும் நானும் என் குடும்பத்தினர் அனைவரும் ஆறுதல் பெற இறைவனை பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

(விரிவான தகவலுக்கு பார்க்க : மகா பெரியவா – அனைத்தும் அறிந்தவர்; முக்காலமும் உணர்ந்தவர்!)

================================================================

இந்த வார பொது பிரார்த்தனை

மாசுபட்டிருக்கும் கங்கை தூய்மை பெறவேண்டும்!

”கங்கையைப் பார்த்துக்கொண்டிருப்பதே மகத்தான ஞானத் தவம். அதன் புண்ணிய வரலாற்றில், பாரதத்தின் பண்டைய கலாசாரத்தையும், நாகரிகப் பெருமைகளையும், ஆன்மிகப் பண்பு களையும் அறியலாம். அதன் ஓட்டத்தில் புராதன நிகழ்ச்சிகளையும், புராணக் காட்சிகளையும் காணலாம்.

கங்கையின் தூய நீரில், மகரிஷிகளின் தூய உள்ளங்களைத் தரிசிக்கலாம். அதன் ஆழத்தில், ஞானிகளின் சலனமற்ற மன நிலையை உணரலாம். அதன் வேகத்தில், கவிஞனின் கற்பனாசக்தியை அளவிடலாம். அதன் சலசலப்பில், கலைஞனின் இதயத் துடிப்பைக் கேட்கலாம்!

இத்தனை பெருமைமிக்க புனித கங்கையின் இன்றைய நிலை என்ன தெரியுமா?

இன்றைய கங்கையின் பரிதாப நிலை!
இன்றைய கங்கையின் பரிதாப நிலை!

ஒவ்வொரு நாளும் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து 1.3 பில்லியன் லிட்டர் மாசு கலந்த தண்ணீர், கங்கை நதியில் நேரடியாகக் கலக்கப்படுகிறது.

கங்கையிலும், அதன் கிளை நதிகளிலும் கரையோரம் ஏராளமான குப்பைகள் குவிந்துகிடக்கின்றன.இந்துக்களின் புண்ணிய நதியாக விளங்கும் கங்கை நதி தற்போது மாசடைந்து அதன் புனிதத் தன்மையை படிப்படியாக இழந்து வருகிறது.

பல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் விளங்கும் கங்கை, இந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது. இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றனர். அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும், தினமும் இறந்தவர்களின் அஸ்தியை அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து, மாசுபட்டு வருகிறது. தற்போது கங்கை நதிக்கு செல்பவர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி எழுந்தால், அவர்களை உரசிக்கொண்டு ஒரு பிணம் மிதந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம்.

நாட்டின் பிரதமாராக பொறுப்பேற்றுள்ள நேரேந்திர மோடி அவர்கள் தன்னை தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி கூற சமீபத்தில் சென்ற போது, கங்கைத் தாயின் இன்றைய நிலை கண்டு  தாம் கண்ணீர் விடுவதாக கூறியிருக்கிறார். கங்கையை சுத்தப்படுத்துவதே தமது முதல் பணி என்று சூளுரைத்திருக்கிறார். அவரது இந்த அரும்பணிக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நின்று அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவவேண்டும். பொதுமக்களும் அதற்கு ஒத்துழைக்கவேண்டும் என்பதே இந்த வார நம் பொது பிரார்த்தனை.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgகடலூரை சேர்ந்த திரு.குமார் அவர்களின் சகோதரி கீதா அவர்களுக்கு விரைவில் நல்லதோர் துணை கிடைக்கவும், தாயுள்ளம் கொண்ட அந்த பெண் நல்லதொரு மணவாழ்க்கை பெறவும், சிவபதம் அடைந்த என் பாட்டி சீதாலக்ஷ்மி அம்மாள் அவர்களை இழந்து வாடும் என் குடும்பத்தினர் அனைவரும் ஆறுதல் பெறவும், கங்கையை சுத்தப்படுத்த சூளுரைத்திருக்கும் நம் பிரதமர் மோடி அவர்களின் மகத்தான பணி வெற்றியடைந்து கங்கையின் புனிதத்தன்மை காக்கப்படவும், இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் குரு அவர்கள் எல்லா வித நலன்களும் வளங்களும் பெற்றும் மேன்மேலும் இறைவனுக்கு தொண்டு செய்யவும் எல்லாம் வல்ல பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூன் 1,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வடலூரில் வாழும் வள்ளலாராய் ஆதரவற்ற பல ஜீவன்களுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் சிவப்பிரகாச சுவாமிகள்.

8 thoughts on “மாளிகைகள் வரவேற்க தயாராக இருக்க, குடிசையை தேடி வந்த கண்ணன் – Rightmantra Prayer Cub

  1. குடிசையை தேடி வந்த கண்ணின் கதை நன்றாக உள்ளது. தெரிந்த கதை தான் என்றாலும் தங்கள் தளம் மூலம் படிக்கும் பொழுது அதன் மகிமையே தனி. ”’தான்” என்னும் அகம்பாவம் இருக்கும் இடத்தில இறைவன் குடியேற மாட்டார். விதுரர் அடக்கத்தின் பிறப்பிடமாக இருந்ததால் இறைவன் அவர்கள் வீட்டிற்குள் வரும் பாக்கியத்தை பெற்றார். superb story

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு குரு அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் அவர் நாயன்மார்களுக்கு செய்யும் தொண்டு அலற்பர்கரியது.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் கீதா அவர்களின் கல்யாண கனவு நனவாக நாம் அனைவரும் பிரார்த்திப்போம். அவரின் நல்ல மனதிற்கு இறைவன் நல்ல துணை யை வெகு விரைவில் அளிப்பார்.

    ///“சார் என் தங்கையின் திருமணம் தொடர்பாக எத்தனையோ பேரிடம் பேசியிருக்கிறேன். ஆனால் உங்கள் போல ஆறுதல் தரும்படி இதுவரை எவருமே பேசியதில்லை!” என்றார். எல்லாப் புகழும் எந்தை ஈசனுக்கே.//

    நீங்கள் யாரிடம் பேசினாலும் energetic and positive ஆகவும் பேசும் சக்தி உங்களிடம் உள்ளது.

    தங்கள் பாட்டியின் ஆன்ம சாந்தி அடைவும், தாங்கள் மற்றும் குடும்பத்தினர் ஆறுதல் நிலையை அடையவும், தங்கள் பணியில் கவனத்தை திசை திருப்பி சகஜ நிலைக்கு வரவும் பிரார்த்தனை செய்வோம்.

    பிரதமர் மோடியின் கங்கையை சுத்த படுத்தும் பணி இனிதே நிறைவேற நாம் பிரார்தனை செய்வோம்

    மகா பெரியவரின் ஆசியுடன் எல்லார் பிரார்த்தனையும் இனிதே நிறைவேறும்

    லோக சமஸ்த சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி

    உமா

  2. அருமையான பதிவு.

    கடலூரை சேர்ந்த திரு.குமார் அவர்களின் சகோதரி கீதா அவர்களுக்கு விரைவில் நல்லதோர் துணை கிடைக்கவும், தாயுள்ளம் கொண்ட அந்த பெண் நல்லதொரு மணவாழ்க்கை பெறவும்,
    சிவபதம் அடைந்த உங்கள் பாட்டி சீதாலக்ஷ்மி அம்மாள் அவர்களை இழந்து வாடும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஆறுதல் பெறவும், கங்கையை சுத்தப்படுத்த சூளுரைத்திருக்கும் நம் பிரதமர் மோடி அவர்களின் மகத்தான பணி வெற்றியடைந்து கங்கையின் புனிதத்தன்மை காக்கப்படவும்,
    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் குரு அவர்கள் எல்லா வித நலன்களும் வளங்களும் பெற்றும் மேன்மேலும் இறைவனுக்கு தொண்டு செய்யவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

  3. இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் சகோதரி கீதா அவர்களின் கல்யாண கனவு நனவாக நாம் அனைவரும் பிரார்த்திப்போம். அவர் மனம் போல் வாழ்வு அமையும்.

    தங்கள் பாட்டியின் ஆன்ம சாந்தி அடைவும், தாங்கள் மற்றும் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும், தங்கள் பணி சிறக்கவும், பிரதமர் மோடியின் கங்கையை சுத்த படுத்தும் பணி இனிதே நிறைவேறவும் நாம் மகா பெரியவாவை வணங்கி, மனம் உருகி பிரார்தனை செய்வோம்

  4. கடலூரை சேர்ந்த திரு.குமார் அவர்களின் சகோதரி கீதா அவர்களுக்கு விரைவில் நல்லதோர் துணை கிடைக்கவும், தாயுள்ளம் கொண்ட அந்த பெண் நல்லதொரு மணவாழ்க்கை பெறவும், சிவபதம் அடைந்த தங்களின் பாட்டி சீதாலக்ஷ்மி அம்மாள் அவர்களை இழந்து வாடும் உங்களது குடும்பத்தினர் அனைவரும் ஆறுதல் பெறவும், கங்கையை சுத்தப்படுத்த சூளுரைத்திருக்கும் நம் பிரதமர் மோடி அவர்களின் மகத்தான பணி வெற்றியடைந்து கங்கையின் புனிதத்தன்மை காக்கப்படவும், இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் குரு அவர்கள் எல்லா வித நலன்களும் வளங்களும் பெற்றும் மேன்மேலும் இறைவனுக்கு தொண்டு செய்யவும் எல்லாம் வல்ல பிரார்த்திப்போம். –

  5. சுந்தர் சார் உங்களுக்கு நாங்கள் ஆறுதல் சொல்வது என்பது முடியாது …உங்கள் பாட்டி பாசம் புரிகிறது சார் …உங்கள் பாட்டி சிவா பதம் அடைந்து இருக்கிறார் ..அதாவது நம் ஈசனிடம் அவன் திருவடி நீழலில் அனுதினமும் இருந்து சிவபூதகண வடிவம் பெற்று விட்டார் ..நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் கவலை அடையக் கூடாது ..இந்த நிலையிலும் நம் ரைட் மந்திராவில் பதிவுகள் தரும் உங்கள் செயல் பணிந்து போற்றுதலுக்கு உரியது ..
    நமக்கு துணை ஈசன் …ஈசனின் மனது திருமுறைகளுக்கு வாஞ்சையுடன் இருக்கும்…………

    திருச்சிற்றம்பலம்

    எங்கே என்னை இருந்து இடம் தேடிக்க்கொண்டு
    அங்கே வந்துஅடை யாளம் அருளினார்
    தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
    அங்கே வாஎன்று போனார் அதுஎன்கொலோ.

    மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
    உன்னி உன்னி உறங்குகின் றேனுக்குத்
    தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமா சொல்லி
    என்னஜ வாஎன்று போனார்அது என்கொலோ.

    தஞ்சே கண்டேன் தரிக்கிலா தார்என்றேன்
    அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேன்என்றார்
    உஞ்சேன் என்றுகந் தேஎழுந்து ஒட்டந்தேன்
    வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே.

    கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்
    ஒழியப் போந்திலேன் ஒக்கவே ஒட்டந்தேன்
    வழியிற் கண்டிலேன் வாய்மூர் அடிகள்தம்
    கழியிற் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ.

    ஒள்ளி யார்இவர் அன்றிமற்று இல்லைஎன்று
    உள்கி உள்கி உகந்திருந் தேனுக்குத்
    தெள்ளி யார்இவர் போலத் தெருவாய்மூர்க்
    கள்ளி யாரவர் போலத் கரந்ததே.

    யாதே செய்துமி யாமலோம்நீ யென்னில்
    ஆதே யேயும் அளவில் பெருமையான்
    மாதே வாகிய வாய்மூர் மருவினார்
    போதே என்றும் புகுந்ததும் பொய்கொலோ.

    பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு
    வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப்போல்
    தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேஎனா
    ஒடிச் போந்திங்கு ஒளித்தவாறு என்கொலோ.

    திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
    உறைப்புப் பாடி அடைப்பித்தா ருந்நின்றார்
    மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
    பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே.

    தனக்கே றாமை தவிர்கென்று வேண்டினும்
    நினைத்தேன் பொய்க்குள் செய்திடு நின்மலன்
    எனக்கே வந்தெதிர் வாய்மூர்க் கேஎனாப்
    புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ.

    தீண்டற் கரிய திருவடி ஒன்றினால்
    மீண்டற் கும்மதித் தார்அரக் கன்தனை
    வேண்டிக் கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத்
    தூண்டிக் கொள்வன்நான் என்றலும் தோன்றுமே.[அப்பர்]

    திருச்சிற்றம்பலம்

    ………………………………………………………………………

    சூலப் படையுடையார் தாமே போலுஞ்
    சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்
    மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
    மந்திரமுந் தந்திரமு மானார் போலும்
    வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்
    மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
    ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.

    காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்
    காரானை ஈருரிவை போர்த்தார் போலும்
    பாரார் பரவப் படுவார் போலும்
    பத்துப் பல்லூழி பரந்தார் போலுஞ்
    சீரால் வணங்கப் படுவார் போலுந்
    திசையனைத்து மாய்மற்று மானார் போலும்
    ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.

    வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
    விண்ணுலகு மண்ணுலகு மானார் போலும்
    பூதங்க ளாய புராணர் போலும்
    புகழ வளரொளியாய் நின்றார் போலும்
    பாதம் பரவப் படுவார் போலும்
    பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்
    ஏதங்க ளான கடிவார் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.

    திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்
    திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
    விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
    வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
    பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
    பரங்குன்ற மேய பரமர் போலும்
    எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.

    ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
    உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்
    பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்
    படுவெண் டலையிற் பலிகொள் வாரும்
    மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
    மணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும்
    ஏகம்ப மேயாரு மெல்லா மாவார்
    இடைமருது மேவிய ஈச னாரே.

    ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
    அறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்
    செய்வினைகள் நல்வினைக ளானார் போலுந்
    திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்
    கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
    கூத்தாட வல்ல குழகர் போலும்
    எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.

    பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்
    பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
    விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
    விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
    தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
    பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
    எரியாய தாமரைமே லியங்கி னாரும்
    இடைமருது மேவிய ஈச னாரே.

    தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
    சுடர்வா யரவசைத்த சோதி போலும்
    ஆல மமுதாக வுண்டார் போலும்
    அடியார்கட் காரமுத மானார் போலுங்
    காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
    கயிலாயந் தம்மிடமாகக் கொண்டார் போலும்
    ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.

    பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்
    படைக்கணாள் பாக முடையார் போலும்
    அந்திவாய் வண்ணத் தழகர் போலும்
    மணிநீல கண்ட முடையார் போலும்
    வந்த வரவுஞ் செலவு மாகி
    மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்
    எந்த மிடர்தீர்க்க வல்லார் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.

    கொன்றையங் கூவிள மாலை தன்னைக்
    குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்
    நின்ற அனங்கனை நீறா நோக்கி
    நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்
    அன்றவ் வரக்கன் அலறி வீழ
    அருவரையைக் காலா லழுத்தி னாரும்
    என்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும்
    இடைமருது மேவிய ஈச னாரே.[அப்பர் ]

  6. கடலூர் குமார் அய்யா அவர்கள் வீட்டுக்குள் வெண்ணையை வைத்து விட்டு வெளியில் தேடிய கதை தான் …ஆம் ! அருகிலேயே உள்ள திருமாணிக்குழி உதவிநாயகி உடனுறை வாமனபுரீஸ்வரர் திருகோயில் சென்று தொடர்ந்து 48 நாட்கள் ,தினமும் கருவறை தீபத்தில் நெய் சேர்த்து வழிபடுங்கள் ..விடியல் பிறக்கும் .மனித உருவில் வந்த வாமனப் பெருமாள், மகாபலியை வதம் செய்த தோஷம் நீங்கும் பொருட்டு திருமாணிக்குழி ஈசனை பூஜித்தார். ராமர், ராவணனை அழித்துவிட்டு அந்தப் பாவம் நீங்க ராமேஸ்வரத்தில் லிங்கத்தை நிறுவி பூஜித்ததுபோல, இங்கு வாமனர் சிவலிங்கத்தை பூஜித்தார். அதனாலேயே இத்தல சிவனுக்கு வாமனபுரீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று. சிவபெருமான் பூவுலகில் தோன்றிய முதல் தலம். இதன் பிறகுதான் பிற சிவத் திருத்தலங்கள் தோன்றின என்கிறது தல வரலாறு. இக்கோயிலை ஒருமுறை வழிபடுவது காசிக்கு சென்று 16 முறை வழிபடுவதற்கும் திருவண்ணாமலையை 8 முறை வழிபடுவதற்கும் சிதம்பரத்தை 3 முறை வழிபடுவதற்கும் சமம் என்பது ஐதீகம். .இங்கு இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக உள்ளது . சுவாமி எப்போதும் இறைவியுடன் இருப்பதாக மரபாதலின், மூலவர் சந்நிதியில் எப்போதும் திரைப்போடப்பட்டுள்ளது.இறைவனும் இறைவியும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11ருத்ரர்களில் ஒருவரான “பீமருத்ரர்’ திரைச்சீலை வடிவில் உள்ளார். எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை. அதன் பின் திரை நீக்கப்பட்டு ஒரு சில வினாடிகள் உள்ளிருக்கும் சுவாமியை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது. கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருவந்திபுரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் திருமாணிக்குழி உள்ளது.ஒருமுறை திருநெடுங்களம்[ திருச்சி அருகில் ] மங்களாம்பிகை,உடனுறை நித்திய சுந்தரேஸ்வரர் திருகோயில் சென்று தீபம் ஏற்றி வழிபடவும்.கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளது.காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் ஈசன் . இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம்.
    பின்பு அசைவம் தவிர்த்து 8 தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு செய்யவும் ..பலன் நிச்சயம் …பதிகம்களை தினமும் எப்போதும் படித்து வாருங்கள்……….கூடிய விரைவில் திருமணம் நடை பெரும் …
    திருச்சிற்றம்பலம்

    நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பரிடபம்
    ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தவிடமாந்
    தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
    வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே.

    சொற்பிரி விலாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
    மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்
    துற்பரிய நஞ்சமுத மாகமுன் அயின்றவரி யன்றதொகுசீர்
    வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே.

    போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
    வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
    சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல்
    வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே.

    காடர்கரி காலர்கனல் கையரனல் மெய்யருடல் செய்யர்செவியிற்
    தோடர்தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லைநகர்தான்
    பாடலுடை யார்களடி யார்கள்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
    வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே.

    சொக்கர்துணை மிக்கஎயில் உக்கற முனிந்துதொழும் மூவர்மகிழத்
    தக்கஅருள் பக்கமுற வைத்தஅர னாரினிது தங்கும்நகர்தான்
    கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலா
    மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே.

    செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்
    தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் அண்ணலிடமாம்
    வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழிவி லாதவகையார்
    வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாதஅவர் வேதிகுடியே.

    உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்
    துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
    கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
    மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே.

    உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
    அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணனிடம்
    முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்தகலவை
    விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே.

    பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி அங்கையனும் நேடஎரியாய்த்
    தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
    பாவலர்கள் ஓசையியல் கேள்வியத றாதகொடை யாளர்பயில்வாம்
    மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே.

    வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்ம னத்தறிவி லாதவர்மொழி
    தஞ்சமென என்றுமுண ராதஅடி யார்கருது சைவனிடமாம்
    அஞ்சுபுலன் வென்றறுவ கைப்பொருள் தெரிந்தெழு இசைக்கிளவியால்
    வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே.

    கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
    பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதிகழலே
    சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
    அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணைநமதே.

  7. இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் கீதா அவர்களின் கல்யாண கனவு நனவாக நாம் அனைவரும் பிரார்த்திப்போம். அவரின் நல்ல மனதிற்கு இறைவன் நல்ல துணை யை வெகு விரைவில் அளிப்பார்.
    சுந்தர் சார் உங்களுக்கு நாங்கள் ஆறுதல் சொல்வது என்பது முடியாது …உங்கள் பாட்டி பாசம் புரிகிறது சார் …உங்கள் பாட்டி சிவா பதம் அடைந்து இருக்கிறார்..அதாவது நம் ஈசனிடம் அவன் திருவடி நீழலில் அனுதினமும் இருந்து சிவபூதகண வடிவம் பெற்று விட்டார் ..நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் கவலை அடையக் கூடாது ..இந்த நிலையிலும் நம் ரைட் மந்திராவில் பதிவுகள் தரும் உங்கள் செயல் பணிந்து போற்றுதலுக்கு உரியது ..
    ‘ஓம் சிவ சிவ ஓம்’‘ஓம் சிவ சிவ ஓம்’‘ஓம் சிவ சிவ ஓம்’
    -manohar

  8. இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் தாயுள்ளம் கொண்ட கீதா அவர்களின் கல்யாண கனவு நனவாக நாம் அனைவரும் பிரார்த்திப்போம். அவரின் நல்ல மனதிற்கு இறைவன் நல்ல துணை யை வெகு விரைவில் அளிப்பார்.சுந்தர் சார் உங்களுக்கு நாங்கள் ஆறுதல் சொல்வது என்பது முடியாது ….பாட்டி இறைவனிடம் அவன் திருவடி நீழலில் சேர்த்து விட்டார் .விரைவில் தங்களுக்கே அவர் செல்ல மகளாக பிறந்து வர இறைவனை வேண்டுகிறோம் …..எனவே நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் கவலை அடையக் கூடாது ..இந்த நிலையிலும் நம் ரைட் மந்திராவில் பதிவுகள் தரும் உங்கள் செயல் பணிந்து போற்றுதலுக்கு உரியது ..
    கங்கை அன்னையை துய்மை படுத்தும் பணி விரைவில் நிறைவேறும். இதணல் நாடும் , உலகமும் விரைவில் நன்மை பெறும்.

Leave a Reply to Nithyakalyani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *