Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > சாஸ்திர சம்பிரதாயங்களை விட உயர்ந்தது எது? ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

சாஸ்திர சம்பிரதாயங்களை விட உயர்ந்தது எது? ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

print
த்தனையோ மகான்கள் இந்த பூமியில் அவதரித்திருக்கிறார்கள். எதையுமே எதிர்பார்க்காமல், எளிமையை மட்டுமே விரும்பி ஏற்றுக்கொண்டு வையம் தழைக்க வாழ்ந்த உத்தமர்கள் அவர்கள். இவர்களது சரிதத்தைப் புரட்டினால் பல இடங்களில் கண்கள் குளமாகும். இதயம் கசியும். தங்களுக்கென வாழாமல், பிறரது நலன்களை முன்னிறுத்தியே இவர்களது வாழ்க்கை அமைந்திருக்கும். இவர்கள் வாழ்ந்த மறைந்த இடங்களில் இன்றும் இவர்களின் பெயரைச் சொல்லும் தவச்சாலைகள் பல இடங்களில் உள்ளன. இவர்களது ஆன்மா உறையும் இந்த தவச்சாலைகளைத் தரிசிப்பதே பெரும் பாக்கியம் தான்.

 பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவானைக்காவல்

பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவானைக்காவல்

சாஸ்திர சம்பிரதாயங்களைவிட மனித நேயமே உயர்ந்தது என்பதை நிரூபித்த நிகழ்வுகளில் இது ஒன்று.

16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. காவேரிக்கரை ஆற்றில் பல மகான்கள் வாழ்ந்து உள்ளார்கள். அவர்களில் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் என்பவரின் வரலாறு சுவையானது. அந்த காலத்திலேயே ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஜாதி – மதபேதங்களைப் பார்க்காதவர் . பிராமணராக இருந்தாலும் மனிதர்களை மனிதர்களாகவே மதித்து வாழ்ந்தவர். அவர் வீட்டின் பின் புறத்தில் அவர் வயலில் வேலை செய்து வந்த பண்ணையாளும், அவன் மனைவி மற்றும் குழந்தைகளும் இருந்தார்கள். வேலையாட்கள் பிராமணர்கள் அல்லாதவர்கள் என்பதினால் அந்த காலத்தில் வயலின் ஒரு மூலையில் வேலையாட்களின் வீடுகளும் இருக்கும்.

ஒரு நாள் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாளின் வீட்டில் அவருடைய தந்தையின் திவசம் வந்தது. வீட்டில் சமையல் தயாராகிக் கொண்டு இருந்தது. சமையல் வாசனை மூக்கைப் பிளந்தது. பின்புறத்தில் வேலை செய்து கொண்டு இருந்த அந்த வேலைக்காரர்கள் அந்த வாசனையைக் கண்டு ‘ஆகா இந்த சமையல் எவ்வளவு சுவையாக இருக்கும்’ என தமக்குள்ளேயே பேசிக் கொண்டு இருந்தார்கள். இன்னும் திவசம் ஆரம்பிக்கவில்லை , பண்டிதர்களும் வரவில்லை. அவர்களுக்காக காத்திருந்த அய்யாவாளினால் வேலைக்காரகளின் மனதில் ஓடிய எண்ணத்தை உணர முடிந்தது. காரணம் அவர் மனதில் உள்ளதை அறிந்து கொள்ளும் அதி சக்தி பெற்றவர் .

Sri Sridhara Aiyyavaalஆகவே மனம் இளகிய அவர் உடனே தனது மனைவியை அழைத்து சமையல் செய்து இருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விட்டு மீண்டும் சமைக்குமாறு கூறி விட்டார். அந்த நேரம் பார்த்து பிராமணர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் வந்து திவசம் செய்யும் முன்னரே வேலையாட்களுக்கு வீட்டில் இருந்து சாப்பாட்டைக் கொடுத்து விட்டதினால் தாம் திவசத்தை செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.

அய்யாவாள் அவர்களிடம் நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டு அவர்களை திவசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்களோ கர்வம் பிடித்தப் பண்டிதர்கள். ஆகவே அவர்கள் திதியை செய்து கொடுக்க வேண்டும் என்றால் திதிக்கான நேரம் முடியும் முன்னரே கங்கை நீரில் அவர் குளித்து விட்டு சமையல் செய்தால் தான் அதை நடத்துவோம் என்று நடக்க முடியாத காரியத்தை ஒரு நிபந்தனையாகக் கூறினார்கள்.

ஆனால் அய்யாவாள் அசரவில்லை. ‘பத்து நிமிடம் பொறுங்கள்’ எனக் கூறி விட்டு அவர்கள் எதிரிலேயே கங்கை நதி மீது கங்காஷ்டகம் பாடத் துவங்க அடுத்த சில நிமிடங்களில் அவர் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கை நீர் பாய்ந்து வெளி வந்து அனைத்து இடங்களிலும் ஓடத் துவங்கி வீடுகளும், சாலைகளும் கிணற்றில் இருந்து வந்த நீரினால் மூழ்கத் துவங்கின. பண்டிதர்கள் அஞ்சி நின்றார்கள். அவர்கள் அய்யாவாள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அந்த நதியை தடுத்து நிறுத்துமாறு வேண்ட மீண்டும் அய்யாவாள் கங்கை நதியை வேண்டிக் கொள்ள நதியின் நீர் கிணற்றில் திரும்பிப் பாய்ந்தது.

இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று, 300 ஆண்டுகளுக்கு முன் கங்கை பொங்கி வந்ததுபோல, ஐயாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு  பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்!

ஞானம் வழியும் கிணறான திருவிசநல்லூர் தலத்திற்குச் சென்று கார்த்திகை அமாவாசையன்று நீராடுவது பெறற்கரிய பெரும் பாக்கியமாகும். கும்பகோணம் – வேப்பத்தூர் சாலையில் 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

(கடந்த புதன்கிழமை வேளச்சேரியில் நடைபெற்ற ஸ்ரீ பகவன் நாம போதேந்திராள் நாடகத்தின்போது, பாம்பே ஞானம் அவர்கள் கூறக்கேட்டது.)

=================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்: ராம புத்திரர்கள் லவ குசர்கள் ஸ்தாபித்த குறுங்காலீஸ்வரருக்கு தினமும் பூஜை செய்யும் பேறு பெற்ற சசிகுமார் குருக்கள் அவர்கள்.

கடந்த ஞாயிறு கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் நாம் செய்த உழவாரப்பணி சிறக்க முக்கிய காரணம் சசிக்குமார் குருக்கள் அவர்கள் தான்.

பணிக்கு முந்தைய தினம் சசிக்குமார் குருக்களை சந்தித்து, பணி தொடர்பாக பேசியபோது அவர் நம்மிடம் கேட்டுக்கொண்டதையடுத்து தான், உழவாரப்பணி நடைபெற்ற தினத்தன்று ஆலயத்திற்கு பல்புடன் கூடிய ட்யூப் லைட் பிட்டிங்குகள் மற்றும் மின் விசிறிகள் நம் தளம் சார்பாக வாங்கித் தரும் பாக்கியம் நமக்கு கிடைத்தது.

கோவில்களை பொருத்தவரை நாம் எத்தனையோ தொண்டுகள் செய்ய விரும்பினாலும், நம்மிடம் உரிய தேவைகளை சொல்லி அவற்றை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்பவர்கள் மிகவும் குறைவு. அதே போல, பணி செய்யும்போதும் அருகில் இருந்து நம்மை வேலை வாங்குபவர்களும் குறைவு. ஆனால் சசிக்குமார் குருக்கள், மிக அழகாக நமது குழுவினரிடம் வேலை வாங்கி, நமது தொண்டு சிறக்க மிகவும் உதவியாக இருந்தார். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி. அவர் இல்லையேல், நமது உழவாரப்பணி அன்று சிறப்பு பெற்றிருக்காது.

DSCN2964

அதே போல, பணி முடியும் வரை கோவிலேயே இருந்து, இறுதியில் நம் குழுவினர் அனைவருக்கும் இறைவனின் பிரசாதமாக மாலைகளை சூட்டி ஆசீர்வதித்தார். கையோடு விபூதி பிரசாதமும் அனைவருக்கும் தந்தார். அவரவர் கோரிக்கைகளை கேட்டுத் தெரிந்துகொண்டு அனைத்தும் நிறைவேற ஆசீர்வதித்தார். இதை மிகப் பெரிய பாக்கியமாக நமது குழுவினர் கருதுகிறார்கள்.

சசிக்குமார் அவர்களின் தந்தை மற்றும் பாட்டனார் காலத்தில் இருந்து இந்த கோவிலில் தொண்டாற்றி வருகிறார்கள். சசிக்குமார் அவர்களை பொருத்தவரை சிறுவயது முதலே தம் தந்தையாருடன் கோவிலுக்கு வந்து போவார். சிவனிடம் ஈர்ப்பு ஏற்பட குருக்களாகிவிட்டார்.

சென்னமல்லீஸ்வரர் வேத ஆகம பாடசாலையில் முறைப்படி வேதமும் வேத ஆகமங்களும் படித்துள்ள இவர், செய்யும் குருக்கள் வேலையை ஒரு பணி போல கருதாமல் தொண்டாகவே கருதி ஆத்மார்த்தமாக செய்து வருகிறார்.

நம் வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, எந்த கோவில் சென்றாலும், அந்தந்த கோவிலின் அரச்சகர்கள் இறைவனின் சன்னதியில் பூஜையிலோ அர்ச்சனையிலோ இருக்கும் போது அவசரப்படாமல் பொறுமையாக இருந்து அவர்களது பூஜைக்கு உதவவேண்டும்  என்றும், அவர்கள் நமக்காகத் தான் இறைவனிடம் பூஜை செய்துகொண்டிருக்கிறார்கள் எனும்போது நாம் அவசரப்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். வாசகர்கள் இதை கவனித்தில் கொண்டு, ஆலயங்களுக்கு செல்லும்போது அவசரப்படாமல் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களின் பூஜை சிறக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வார கூட்டு பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டபோது, தான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்று மறுத்துவிட்டார். நாம் தான் இதற்கு முன்பு தலைமை தாங்கியவர்களை பற்றியும் நமது பிரார்த்தனை கிளப்பின் நோக்கத்தை பற்றியும் எடுத்துக்கூறி சம்மதிக்க வைத்துள்ளோம். பிரார்த்தனை நேரத்தில் தாம் சன்னதியில் தான் இருப்போம் என்று நிச்சயம் இறைவனிடம் நம் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியிருக்கிறார். அவருக்கு நம் நன்றி.

=================================================================

பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்கள்!

நமது பிரார்த்தனை கிளப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பித்துள்ளது. சிலரின் பிரார்த்தனை அவர்களின் நம்பிக்கையின் ஆழத்தை பொறுத்து சீக்கிரமே பலித்துவிடுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் சான்றோர்களும் ஒரு முக்கிய காரணம்.

இதோ பிரார்த்தனை நிறைவேறிய இரண்டு சம்பவங்கள். அந்தந்த பிரார்த்தனைகள் இடம்பெற்ற பதிவுகளின் முகவரிகள் தனியே தரப்பட்டுள்ளன.

=================================================================

அறுவை சிகிச்சைக்கான தேவையே இல்லாமல் போன அதிசயம்!!!

அனைவருக்கும் வணக்கம் !!!

சில வாரங்கள் முன் எனது நண்பர் திரு. சுரேஷ் ராஜ் அவர்களுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக பிரார்த்தனை clubbil வேண்டியிருந்தோம். அனைவரின் தொடர் பிரார்த்தனைகளால் திரு. சுரேஷ் அவர்களுக்கு இதய மாற்று அறுவை  சிகிச்சை தேவை இல்லை என மருத்துவர்கள் முடிவு செய்து உள்ளனர். தற்சமயம் அவர் தீவிர சிகிச்சையிலிருந்து விடுபட்டு அவர் உடல் நலம் நன்றாக தேறி வருகின்றார். அவருக்கு மருந்தின் மூலமே சிகிச்சை நடை பெற்று வருகிறது.

பிரார்த்தனை மற்றும் பதிகங்கள் தந்து உதவியவர்களுக்கு மிகவும் கடமை பட்டுள்ளோம். இது குறித்து இன்னும் சில நாட்களில் திரு. சுரேஷ் அவர்களே மின்னஞ்சல் அனுப்ப உள்ளார்.

இந்த அதிசயம் சகோதர, சகோதரிகளின் பிரார்த்தனையால் இறையருள் நிகழ்த்தியது என நான் திவீரமாக நம்புகிறேன்.

சம்பந்தப்பட்ட பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற 63 நாயன்மார்கள் பக்தி தொடரின் இயக்கனர் தனுஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

மகா பெரியவா திருவடிகள் சரணம்.

நன்றியுடன்,
ஸ்ரீராம்

http://rightmantra.com/?p=10215

=================================================================

My father is perfectly alright now!

Dear Sundar and friends,

Two weeks ago my prayer regarding my father was placed in Rightmantra Prayer Club.

He was admitted in hospital due to stomach cancer. Two surgeries were done for him. But even after that too the problem was not solved. Whatever he took as food, it came out. It was very painful for me. that time only i wrote to our prayer club. And it was placed.

Now everything has come to normal and my father was discharged on last Saturday. This happens because of Right Mantra Prayer Club.

Really thanks for all of your kind concern and prayer. And finally my sincere thanks to Kundrathur Temple Gurukkal Thiru.Thirumurugan who headed that week’s prayer.

Ultimately, my sincere thanks to Maha Periyava who heads our prayer club every week. It is because of his blessings this miracle happened.

God is great. Guru is very very great.

– N Venkat
Alandur,
Chennai 600 016

http://rightmantra.com/?p=10883

=================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கையை அனுப்பியிருக்கும் திரு.சேஷாத்ரி ஒரு நடுத்தர குடும்பத்தின் தந்தைக்கான அடையாளம். தியாகத்தின் சொரூபம். பல விஷயங்களை நம்மிடம் மனம்விட்டு பேசினார். அவருடைய மகேன் வேலை பற்றிய கவலை தான் அவரை பெருமளவு ஆட்கொண்டிருந்தது. நமது பிரார்த்தனை கிளபுக்கு அவரது கோரிக்கையை சற்று விரிவாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம். எப்படி அனுப்புவது என்று கேட்டார். ஒரு DTP சென்டர் சென்று அவர்களிடம் விஷயத்தை கூறி டைப் செய்து நமக்கு மின்னஞ்சல் அனுப்பிவிடுவார்கள் என்றோம். அதன்படியே அனுப்பி இருக்கிறார்.

=================================================================

மகனுக்கு ஒரு எதிர்காலம்!

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் சேஷாத்ரி.

காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து சமீபத்தில் தான் ஒய்வுபெற்றேன். தற்போது எங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு நிறுவனத்தில் பகுதி நேர வேலை பார்த்து வருகிறேன். பேரம்பாக்கம் நரசிம்மர் ஆலயத்துக்கு சென்ற மாதம் சென்றபோது, அங்கு உங்கள் தளத்தின் தினசரி பிரார்த்தனை படத்தை பார்த்தேன். அதை எழுதிக்கொண்டு வந்து தினசரி சொல்லி வருகிறேன்.

எனக்கு ஒரு மகன் ஒரு மகள். மகளுக்கு திருமணமாகி வயதில் குழந்தை இருக்கிறது. மகன் டிகிரி முடித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூரில் ஒரு நிறுவனத்தில் கடந்த நான்காண்டுகளாக வேலை பார்க்கிறான்.

நிறுவனம் நல்ல பெரிய நிறுவனமாக இருந்தும் இவனுக்கு மட்டும் எந்த வித ப்ரோமோஷனும் இல்லை. சம்பள உயர்வும் இல்லை. இத்தனைக்கு தனது கம்பெனிக்காக மாடாக உழைக்கிறான். வேறு எங்காவது வேலை தேடலாம் என்றால், இவன் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப நல்ல சம்பளத்துடன் வேலை கிடைப்பது கஷ்டமாக உள்ளது.

தற்போது திருமண சந்தை உள்ள சூழலில் இவனுக்கு எப்படி வரன் பார்க்கப்போகிறோம் என்கிற பயம் எனக்கு வந்துவிட்டது.

என் மனைவிக்கும் பிரஷர் இருக்கிறது. எந்த வேலை செய்தாலும் சீக்கிரம் உடல் களைப்படைந்துவிடுகிறாள்.

என் மகனுக்கு உத்தியோகத்தில் நல்ல ப்ரோமோஷனும் சம்பள உயர்வும்  கிடைக்கவேண்டும். என் மகளும் அவர் குடும்பத்தாரும் எந்த வித நோய்நோடியுமின்றி சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவேண்டும். என் மனைவிக்கு ஏற்பட்டுள்ள பிரஷர் நார்மலாகி அவள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். எங்களுக்கு சொந்த வீடு இல்லை. விரைவில் நல்ல வீடு அமையும் பாக்கியமும் வேண்டும்.

மகன் பெயர் : கணபதி
மகள் பெயர் : துளசி

நன்றியுடன்,
சேஷாத்ரி,
காஞ்சிபுரம்

=================================================================

இந்த வார பொது பிரார்த்தனை

இந்த வார பொது பிரார்த்தனை இரண்டு தியாகிகளை பற்றியது. ஒருவர் தீவிரவாதத்தால் பலியாகி தன் இன்னுயிரை தியாகம் செய்துள்ளார். மற்றொருவர், நாட்டுக்காக தீவிரவாதிகளுடன் போரிட்டு தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார். இருவரது தியாகும் ஒப்பற்றது. போற்றத்தக்கது.

Blast in Chennaiசுவாதியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்!

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அரசு இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.

சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை (வியாழன்) கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் சுவாதி என்கிற பெண் உயிரிழந்தார்.

Chennai Bomb Blastஉயிரிழந்த சுவாதியின் பெற்றோர் ராமகிருஷ்ணன் மற்றும் காமாட்சி ஆவார்கள். இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் இவரது தாயார் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். குண்டுவெடிப்பில் பலியான சுவாதி ஐதராபாத்தில் எம்.டெக் படிப்பு முடித்துள்ளார். இவருக்கு 2 மாதங்களில் திருமணம் நடக்க இருந்ததாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். சென்னைக்கு சுவாதியின் உடலை பெற்றுக்கொள்ள அவர்கள் வந்தபோது தங்களது மகளின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

பலியான சுவாதியின் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் அவரது பெற்றோர் ஆறுதல் பெறவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம். இனி இப்படி ஒரு சம்பவம் எங்குமே நடக்கக்கூடாது என்றும் வேண்டுவோம்.

நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த முகுந்த் வரதராஜன்!

காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில், கடந்த 25ல், பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 44வது ராஷ்ட்ரிய துப்பாக்கிகள் படை பிரிவில் பணியாற்றிய, சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த, ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன், வீர மரணம் அடைந்தார்.

Image0001அவரது, உடல் விமானம் மூலம், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது.
முகுந்த் வரதராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது அவரது மூன்று வயது மகள் அர்ஷியா நடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்தது அனவராது உள்ளத்தையும் உருக்கியது.

நாட்டை காப்போர் எல்லையில் அனுதினமும் தங்கள் உயிரை பணயம் வைத்து காவல் இருக்கும் நிலையில், நாட்டிற்காக எந்த வித தியாகமும் செய்யாதவர்கள் பதவி சுகம் பெற்று நாம் இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். முகுந்த் வரதராஜனை போன்ற உண்மையான ஹீரோக்களை கொண்டாடாமால் நம் இளைஞர்கள் தகுதியற்றவர்களை கொண்டாடி வருகின்றனர். இந்த கொடுமை என்று முடிவுக்கு வரும்?

28major6

மேஜர் முகுந்த் வரதாராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும் அவரை இழந்து வாடும் அவர் குடும்பம் ஆறுதல் பெறவும், எல்லையில் நாட்டை காவல் காக்கும் நம் இராணுவ வீரர்கள், ஒரு ஆபத்தும் இல்லாமல் தங்கள் கடமையை செய்யவும், இறைவனை பிரார்த்திப்போம்.

=================================================================

வாசகர் சேஷாத்ரி அவர்களின் மகன் திரு.கணபதிக்கு வேலையில் ப்ரோமோஷனும், நல்ல சம்பள உயர்வும் கிடைத்து அவருக்கு நல்லதொரு எதிர்காலம் அமைந்திடவும், அவர் மகள் திருமதி.துளசியின் இல்லறம் சிறக்கவும், அவர் மனைவிக்கு ஏற்பட்டுள்ள பிரஷர் நோய் நீங்கி அவர் ஆரோக்கியமாக வாழவும், தீவிராவாததிற்கு எதிரான போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ள சுவாதி மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜன் ஆகியோரது ஆன்மா சாந்தியடையவும், நாட்டை காவல் காக்கும் நம் இராணுவ வீரர்கள், ஒரு ஆபத்தும் இல்லாமல் தங்கள் கடமையை செய்யவும், இறைவனை பிரார்த்திப்போம். அதே போன்று இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள, திரு.சசிகுமார் குருக்கள் அவர்களும் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து திருத்தொண்டு செய்துவரவேண்டும் என்றும் பிரார்த்திப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மே 4,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருச்சி உறையூரை சேர்ந்த பார்வைத்திறன் சவால் கொண்ட டூ-வீலர் மெக்கானிக் கண்ணப்பன் அவர்கள்.

9 thoughts on “சாஸ்திர சம்பிரதாயங்களை விட உயர்ந்தது எது? ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

  1. வாசகர் சேஷாத்ரி அவர்களின் மகன் திரு.கணபதிக்கு வேலையில் ப்ரோமோஷனும், நல்ல சம்பள உயர்வும் கிடைத்து அவருக்கு நல்லதொரு எதிர்காலம் அமைந்திடவும், அவர் மகள் திருமதி.துளசியின் இல்லறம் சிறக்கவும், அவர் மனைவிக்கு ஏற்பட்டுள்ள பிரஷர் நோய் நீங்கி அவர் ஆரோக்கியமாக வாழவும், தீவிராவாததிற்கு எதிரான போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ள சுவாதி மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜன் ஆகியோரது ஆன்மா சாந்தியடையவும், நாட்டை காவல் காக்கும் நம் இராணுவ வீரர்கள், ஒரு ஆபத்தும் இல்லாமல் தங்கள் கடமையை செய்யவும், இறைவனை பிரார்த்திப்போம். அதே போன்று இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள, திரு.சசிகுமார் குருக்கள் அவர்களும் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து திருத்தொண்டு செய்துவரவேண்டும் என்றும் பிரார்த்திப்போம்.

  2. காஞ்சிபுரம் சங்கர மடம் தொடர்ந்து 9 நாட்கள் சென்று வழிபட்டு அங்குள்ள மஹா பெரியவரின் பிருந்தாவனத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும் …இது தங்கள் மகனின் வளமான எதிர்கால வாழ்வுக்கு அடிவகுக்கும் …ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் உள்ள ராமானுஜருக்கு மாத திருவாதிரை நட்சத்திர நாட்களில் நெய் தீபமேற்றி வணங்கி ,ஒருமுறை திருச்சுழி [மதுரை அருகில் ]துணை மாலையம்மன் சமேத திருமேனிநாதர் திருகோயில் சென்று அங்கு திருமேனிநாதர் , துணை மாலையம்மன் வழிபாடு செய்து ,திருமேனிநாதரை தொழுது வரும் அடியவர்களின் திருவடி தொழுது , வாருங்கள் .தங்கள் மகன் கண்டிப்பாக வேலையில் உயர் பதவி வகிப்பார் .செல்வம் சேரும்.தங்கள் மகனை பின்வரும் பதிகத்தை தினமும் எப்போதும் பாராயணம் செய்ய சொல்லுங்கள் 48 நாட்கள் …அசைவம் வேண்டாம் ..
    திருச்சிற்றம்பலம்

    ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும்
    வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின்
    தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல்
    நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.

    தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ்
    சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத்
    திண்டேர்மிசை நின்றானவன் உறையுந்திருச் சுழியல்
    தொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே.

    கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக்
    கொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல்
    தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாரடி தொழுவார்
    அவ்வத்திசைக் கரசாகுவர் அலராள்பிரி யாளே.

    மலையான்மகள் மடமாதிட மாகத்தவள் மற்றுக்
    கொலையானையின் உரிபோர்த்தவெம் பெருமான்றிருச் சுழியல்
    அலையார்சடை யுடையானடி தொழுவார்பழு துள்ளம்
    நிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே.

    உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்துஞ்
    செற்றார்திரு மேனிப்பெரு மானூர்திருச் சுழியல்
    பெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமங்
    கற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே.

    மலந்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச்
    சலந்தாங்கிய முடியான்அமர்ந் திடமாந்திருச் சுழியல்
    நிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்நினைந் தேத்துந்
    தலந்தாங்கிய புகழாம்மிகு தவமாஞ்சது ராமே.

    சைவத்தசெவ் வுருவன்றிரு நீற்றன்னுரு மேற்றன்
    கைவைத்தொரு சிலையால்அரண் மூன்றும்மெரி செய்தான்
    தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்றிருச் சுழியல்
    மெய்வைத்தடி நினைவார்வினை தீர்தல்லெளி தன்றே.

    பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியுங்
    கோவேந்திய வினையத்தொடு குறுகப்புகல் அறியார்
    சேவேந்திய கொடியானவன் உறையுந்திருச் சுழியல்
    மாவேந்திய கரத்தான்எம சிரத்தான்றன தடியே.

    கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்விச்
    செண்டாடுதல் புரிந்தான்திருச் சுழியற்பெரு மானைக்
    குண்டாடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா
    மிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே.

    நீரூர்தரு நிமிலன்றிரு மலையார்க்கயல் அருகே
    தேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான்றிருச் சுழியல்
    பேரூரென உரைவானடி பெயர்நாவலர் கோமான்
    ஆரூரன தமிழ்மாலைபத் தறிவார்துயர் இலரே.

    திருச்சிற்றம்பலம்

    திருச்சிற்றம்பலம்

    அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை
    அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்
    தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
    திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
    கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
    பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
    காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
    அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
    ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
    மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
    வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்
    பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
    கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி
    வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
    வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
    அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
    அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
    பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை
    அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
    மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் றன்னை
    மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந்
    திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
    திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
    பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
    அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி
    வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
    வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
    பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
    பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
    பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக்
    கனவயிரக் குன்றனைய காட்சி யானை
    அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை
    அருமறையோ டாறங்க மாயி னானைச்
    சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
    சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
    பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
    வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
    அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
    அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னைச்
    சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்
    துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
    பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    காரானை ஈருரிவைப் போர்வை யானைக்
    காமருபூங் கச்சியே கம்பன் றன்னை
    ஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை
    அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
    பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
    பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
    பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    முற்றாத பால்மதியஞ் சூடினானை
    மூவுலகுந் தானாய முதல்வன் றன்னைச்
    செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத்
    திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
    குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக்
    கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
    பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
    கடிக்கமலத் திருந்தயனுங் காணா வண்ணஞ்
    சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
    திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
    ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
    ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
    பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    திருச்சிற்றம்பலம்
    ……………………………………………………………………………………………….

    பிரஷர் நோய் அகல ஒருமுறை உவரி சுயம்புலிங்க சுவாமி [திருசெந்தூர் அருகில் ]திருகோயில் சென்று ,11 முறை கடல் மண் சுமந்து கொட்டவும் [9443507973]. பின்வரும் பதிகம்களை படித்து வரவும் …
    திருச்சிற்றம்பலம்

    ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
    அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
    நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை
    நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்
    கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
    கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு
    பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

    சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
    திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக்
    கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
    குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
    பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
    பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
    போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

    பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்
    பாமாலை பாடப் பயில்வித் தானை
    எத்தேவு மேத்தும் இறைவன் றன்னை
    எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
    அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
    அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
    புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

    இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி
    இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
    தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
    சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
    அருளானை ஆதிமா தவத்து ளானை
    ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற
    பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

    மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு
    வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
    தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
    தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
    மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
    வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
    பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

    அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
    அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்
    கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
    கடல்நாகைக் காரோணங் கருதி னானை
    இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
    திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
    பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

    நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
    நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
    விருப்பவனை வேதியனை வேத வித்தை
    வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
    இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா
    இறையவனை எனையாலுங் கயிலை யென்னும்
    பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

    பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
    பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
    வாராத செல்வம் வருவிப் பானை
    மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
    தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
    திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
    போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

    பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப்
    படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை
    நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
    நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்
    கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
    காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
    புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

    இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
    எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
    அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
    அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
    கறுத்தானைக் கண்ணழலாற் காம னாகங்
    காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
    பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

    திருச்சிற்றம்பலம்

    திருச்சிற்றம்பலம்

    இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்
    பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
    மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
    கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.

    அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர்
    நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ
    வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங்
    கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.

    துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
    தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
    அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
    கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.

    பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
    உண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ
    மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமாக்
    கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.

    முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா
    தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ
    பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்
    கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.

    ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்
    பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக்
    காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
    கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.

    ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்
    மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
    பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்
    கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.

    மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
    பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ
    வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
    குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.

    மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
    செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
    வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
    கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.

    தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
    பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
    விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்
    கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே.

    கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
    செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை
    அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
    பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.

    …………………………………………………………………………………………………..

    வீடு வாங்க ஒருமுறை சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை[சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 36-வது கிலோமீட்டரில்] நாடினால் பலன் உண்டாகும். கூடவே காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சென்று தொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமியில் பைரவர் பூசனை செய்து வரவும் , பின்வரும் பதிகத்தையும் தினமும் பாடி வரவும் …
    திருச்சிற்றம்பலம்

    நன்று நாடொறும் நம்வினை போயறும்
    என்று மின்பந் தழைக்க இருக்கலாஞ்
    சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
    துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

    கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
    பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
    விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
    திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே.

    வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை
    ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்
    பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
    காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.

    அல்ல லில்லை அருவினை தானில்லை
    மல்கு வெண்பிறை சூடு மணாளனார்
    செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
    வல்ல ராகில் வழியது காண்மினே.

    துன்ப மில்லை துயரில்லை யாமினி
    நம்ப னாகிய நன்மணி கண்டனார்
    என்பொ னாருறை வேட்கள நன்னகர்
    இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே.

    கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
    பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
    சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
    பட்ட வல்வினை யாயின பாறுமே.

    வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
    எட்டு மொன்றும் இரண்டுமூன் றாயினார்
    சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
    திட்ட மாகி யிருமட நெஞ்சமே.

    நட்ட மாடிய நம்பனை நாடொறும்
    இட்டத் தாலினி தாக நினைமினோ
    வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
    சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே.

    வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
    சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
    குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்
    சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.

    சேட னாருறை யுஞ்செழு மாமலை
    ஓடி யாங்கெடுத் தான்முடி பத்திற
    வாட வூன்றி மலரடி வாங்கிய
    வேட னாருறை வேட்களஞ் சேர்மினே.
    …………………………………………………………………………………….
    யாவரும் நலமுடன் இருக்க தேய்பிறை அஷ்டமி பைரவர் பூசனையை தொடர்ந்து ,அசைவம் ,மது விலக்கி செய்து வரவும் ..
    கூடவே இப் பதிகத்தை படித்து வரவும் ..
    திருச்சிற்றம்பலம்

    வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்
    வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
    ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண்
    ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங்
    கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
    கருதுவார் இதயத்துக் கமலத் தூறுந்
    தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த
    நாதன்காண் பூதகண மாட ஆடுஞ்
    சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்
    துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும்
    பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண்
    புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
    திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்
    மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண்
    கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்
    கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்
    அம்பர்நகர்ப் பெருங்கோயி லமர்கின் றான்காண்
    அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்
    செம்பொனெனத் திகழ்கின்ற உருவத் தான்காண்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
    பீடழியச் சாடி யருள்கள் செய்த
    முத்தன்காண் முத்தீயு மாயி னான்காண்
    முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
    அத்தன்காண் புத்தூரி லமர்ந்தான் றான்காண்
    அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட
    சித்தன்காண் சித்தீச் சரத்தான் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    தூயவன்காண் நீறு துதைந்த மேனி
    துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்
    தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்
    சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண்
    ஆயவன்காண் ஆரூரி லம்மான் றான்காண்
    அடியார்கட் காரமுத மாயி னான்காண்
    சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
    பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற
    நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
    நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
    பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றி
    பிரியாது பலநாளும் வழிபட் டேத்துஞ்
    சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்
    வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்
    மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்
    வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க
    கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்
    காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்
    செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    கலையாரு நூலங்க மாயி னான்காண்
    கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி
    மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற
    மண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண்
    தலையாய மலையெடுத்த தகவி லோனைத்
    தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதித் தாண்ட
    சிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.

    திருச்சிற்றம்பலம்

    1. தங்களின் இனிய வழிகாட்டுதல்களுக்கு வாசகர்கள் சார்பாக மிக்க நன்றி விஜய் பெரியசுவாமி அவர்களே.

      – சுந்தர்

  3. திருவிசநல்லூர் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் திருவடிகள் போற்றி … அய்யாவாளின் வீட்டுக்கு சென்று நமது “திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி” பிரசாதம் கொடுத்திருக்கிறார் ….அய்யாவாளின் திருவடிகள் போற்றி ….

  4. நடுத்தர வர்க்கத்தின் மனசாட்சியாக தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார் திரு.சேஷாத்திரி அவர்கள். அவர்களது இன்னல் நீங்க வேண்டும். எதற்காக தன்னுயிர் பிரிகிறது என்றே தெரியாமல் பயங்கரவாதத்திற்கு மேலும் ஒரு உயிர் பலியாகி உள்ளது துயரமான சம்பவம், அவ்விளம் பெண்ணின் ஆன்மா அமைதியடையட்டும். , நாட்டிற்குள் நாமெல்லாம் அமைதியாக வாழ நமக்காக மற்றொரு உயிர் இம்மண்ணிற்கு காணிக்கையாகி இருக்கிறது…………….மேஜர் முகுந்த் அவர்களுக்கு என்னுடைய வீரவணக்கத்தைக் காணிக்கையாக்குகின்றேன்.

  5. ஸ்ரீ தர வெங்கடேச அய்யாவாள் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கை நீரை வரவழைத்து ,நிகழ்த்திய அற்புதத்தை படிக்கும்போதே மெய்சிலிர்கின்றது .வேளச்சேரியில் நடைபெற்ற ஸ்ரீ பகவன் நாம போதேந்திராள் நாடகத்தின்போது, பாம்பே ஞானம் கூறியதை, எங்களுக்காக கதை மூலம் புரியவைத்த தங்களின் நினைவு திறனை என்னவென்று சொல்வது ????…மிகவும் அருமை .

    திரு.சேஷாத்ரி அவர்களின் மகன் திரு.கணபதிக்கு வேலையில் ப்ரோமோஷனும், நல்ல சம்பள உயர்வும் கிடைத்து அவருக்கு நல்லதொரு எதிர்காலம் அமைந்திடவும், அவர் மகள் திருமதி.துளசியின் இல்லறம் சிறக்கவும், அவர் மனைவிக்கு ஏற்பட்டுள்ள பிரஷர் நோய் நீங்கி அவர் ஆரோக்கியமாக வாழவும், தீவிராவாததிற்கு எதிரான போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ள சுவாதி மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜன் ஆகியோரது ஆன்மா சாந்தியடையவும், நாட்டை காவல் காக்கும் நம் இராணுவ வீரர்கள், ஒரு ஆபத்தும் இல்லாமல் தங்கள் கடமையை செய்யவும், இறைவனை பிரார்த்திப்போம்.

    கூட்டு பிரார்த்தனைக்கு அனைவரும் நேரம் ஒதுக்கி பிரார்த்தனை செய்வோம் .பலன் அடைவோம் .
    நண்பர் ஸ்ரீராம் அவர்களின் நண்பர் சுரேஷ் விரைவில் பூரண குணமடைத்து வீடு திரும்ப பிரார்த்திப்போம் .

    வணக்கங்களுடன்,
    -மனோகர்

  6. பிரார்த்தனை நிறைவேறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம் சகோதர, சகோதரிகளுக்காக வார வாரம் பிரார்த்தனை செய்யுங்கள், இறைவனின் பார்வை நம் மீதும் படும்.

    சகோதரர் கணபதிக்கு வேலையில் ப்ரோமோஷனும், நல்ல சம்பள உயர்வும் கிடைத்து அவருக்கு நல்லதொரு எதிர்காலம் அமைந்து , அவர் வாழ்வு சிறக்கவும், சகோதரி துளசியின் இல்லறம் சிறக்கவும், சேஷாத்ரி அவர்களின் வாழ்வு சிறக்கவும், சேஷாத்ரி அவர்களின் மனைவிக்கு ஏற்பட்டுள்ள பிரஷர் நோய் நீங்கி அவர் ஆரோக்கியமாக வாழவும், இறைவனை பிரார்த்திப்போம்.

    சுவாதி மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜன் ஆகியோரது ஆன்மா சாந்தியடையவும், நாட்டை காவல் காக்கும் நம் இராணுவ வீரர்கள், ஒரு ஆபத்தும் இல்லாமல் தங்கள் கடமையை செய்யவும், இறைவனை பிரார்த்திப்போம். அதே போன்று இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள, திரு.சசிகுமார் குருக்கள் அவர்களும் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து திருத்தொண்டு செய்துவரவும் மகா பெரியவாவை வணங்கி அனைவருக்காகவும் மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

  7. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள, திரு.சசிகுமார் குருக்கள் அவர்கள் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து திருத்தொண்டு செய்துவரவேண்டும் என்றும் பிரார்த்திப்போம்.

    வாசகர் சேஷாத்ரி அவர்களின் மகன் திரு.கணபதிக்கு வேலையில் ப்ரோமோஷனும், நல்ல சம்பள உயர்வும் கிடைத்து அவருக்கு நல்லதொரு எதிர்காலம் அமைந்திடவும், அவர் மகள் திருமதி.துளசியின் இல்லறம் சிறக்கவும், அவர் மனைவிக்கு ஏற்பட்டுள்ள பிரஷர் நோய் நீங்கி அவர் ஆரோக்கியமாக வாழவும், தீவிராவாததிற்கு எதிரான போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ள சுவாதி மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜன் ஆகியோரது ஆன்மா சாந்தியடையவும், நாட்டை காவல் காக்கும் நம் இராணுவ வீரர்கள், ஒரு ஆபத்தும் இல்லாமல் தங்கள் கடமையை செய்யவும், இறைவனை பிரார்த்திப்போம்.

    Right manthra கூட்டு பிரார்த்தனை நமக்கு கிடைத்துள்ள ஒரு வரபிரசாதம் . எல்லோரும் வாரா வாரம் பிரார்த்தனை செய்து பலன் அடைவோம் .நன்றி சார்.

  8. பிரார்த்தனைகள் பலித்தது மிக்க சந்தோஷம். அனைவருக்காகவும் பிராத்திக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *