பசிக்கும் உணவும் தாகத்திற்கு தண்ணீரும் கொண்டுள்ள ஒரே உணவுப் பொருள் தேங்காய் தான். சிறு குழந்தை முதல் பற்கள் விழுந்த கிழவர்கள் வரை யார் வேண்டுமானாலும் தேங்காயை சாப்பிடலாம் என்பது தான் இதன் சிறப்பு.
எனவே மனிதனுக்காகவே பிரத்யேகமாக படைக்கப்பட்ட மிக மிக உயர்வான ஒரு இயற்கை அமிர்தம் தேங்காய் மட்டுமே.
எல்லாப் பருவகாலத்திலும் எந்த வித தடைகளும் இன்றி எளிமையாக விலை மலிவாக கிடைக்கக்கூடிய ஒரே பொருள் தேங்காயும் வாழைப்பழமும் தான். அதனால் இவை இரண்டுக்கும் இறைவழிபாட்டில் இன்றியமையாத இடம் கிடைத்துள்ளது.
ஒரு தென்னைமரம் தேங்காயை உடனே தருவதில்லை. தென்னங்கன்றை நட்ட பிறகு குறைந்தது பத்தாண்டுகள் அது ஒரே இடத்தில தவம் செய்து தனது ஆற்றல்களையெல்லாம் தேக்கி வைத்துக்கொண்டு, தண்ணீரை தூய்மைப்படுத்தி தூய்மைப்படுத்தி வடிகட்டி, அதன் தவத்தை யாரும் கலைத்துவிடாதபடி, யார் கைகளுக்கும் அகப்படாதபடி இருபதடி உயரத்தில் தனது காயை பாதுகாத்து வைத்துக்கொள்கிறது.
சற்று ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் புரியும், மனிதனுக்கும் பத்து மாதம் தான். தேங்காய்க்கும் பத்து மாதம் தான். பத்து மாதம் கழித்து மரத்திலிருந்து தேங்காய் தானாகே விழுந்துவிடும். அப்படி விழும்போது, அதிர்ச்சியில் உள்ளே உள்ள பருப்பு உடையாமல் இருக்கத் தான் இயற்கை எப்படியெல்லாம் அதற்கு பாதுக்காப்பு தருகிறது. தேங்காய் ஓடு பருப்பை பாதுகாத்தாலும் அது கீழே விழும்போது அதிர்ச்சியில் உடையாமல் இருக்க நார் போன்ற அமைப்பு அதற்கு குஷன் எஃபக்டை கொடுக்கிறது. மிகச் சிறந்த ஹெல்மெட்டுக்கு விருதை தரவேண்டும் என்றால் அதை தேங்காய்க்கு தான் தரவேண்டும்.
மிகச் சிறந்த ஹெல்மெட் தயாரிப்புக்கு விருதை தரவேண்டும் என்றால் அதை தென்னைமரத்துக்கு தான் தரவேண்டும்.
இத்தனை விஷயங்களை இப்படியெல்லாம் யாருங்க யோசிச்சு யோசிச்சு தேங்காயை படைத்திருக்கமுடியும்?
‘இயற்கை’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி அறிவாளிகள் எஸ்கேப்பாகி விடுகிறார்கள்.
ஆனால் இது உண்மையில் ஈசனின் படைப்பு. இயற்கையும் ஈசனும் வேறு வேறு அல்லவே….!
நம் தொன்மை மிக ஆலயங்களின் முகப்பையும் ராஜகோபுரங்களையும் தென்னை மரங்களுடன் பார்க்கும்போது ஏற்படும் பரவசத்திற்கு ஈடு இணை எதுவும் உண்டா?
இணைக்கப்பட்டுள்ள சில புகைப்படங்களை பாருங்கள்… எத்தனை அழகு!
தேங்காய்க்கு, குரும்பை, இளநீர், தேங்காய், கொப்பரை என்ற நால்வகைப் பருவங்கள் உள்ளன.
தென்னை மரத்தின் உற்பத்தியான தேங்காய் உட்பட எந்த ஒரு பொருளும் வீணாவது இல்லை. ஓலை கீற்று வேயப் பயன்படுகிறது. அதன் குச்சி துடைப்பம் செய்ய பயன்படுகிறது. நார் கயிறு திரிக்க பயன்படுகிறது. ஓடு ஒரு அருமையான இயற்கை உரம். இப்படி தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மனிதனுக்கு இயற்கைக்கும் உதவுகிறது.
இறைவனின் அபிஷேகத்திற்கு ஏற்றது இளநீர். அர்ச்சனைக்குத் தக்கது தேங்காய். ஆகுதிக்கு உகந்தது கொப்பறை. குரும்பை இளநீராக மாறும் அற்புதமான பருவத்தில் அதற்கு மூன்று கண்கள் முகிழ்க்கின்றன. அப்போது முதல், இளநீர் வழிபாட்டுக்குரிய பொருளாக உயர்வடைகிறது. மென்மேலும் பக்குவப்படுகின்ற தேங்காயும், கொப்பரையும் பற்பல முறைகளில் வழிபாட்டிற்குப் பயன்படுகின்றன.
"
‘கொலஸ்டிரால்’ குறித்த அச்சம் இல்லாத குடும்பம் இன்று இல்லை என்றே சொல்லலாம். கொலஸ்டிரால் தாவர கொழுப்புகளில் நேரடியாக கிடையாது. நமது இரத்தக் குழாய்களின் உட்சுவர்களில் கீறல், புண்கள் ஏற்படுகையில், அதை சரி செய்யும் சிமெண்ட் போன்ற பணி தான் கொலஸ்டிரால் செய்வது. தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு பொருளும் அதைத்தான் செய்யும். தேங்காய் எண்ணெயோ அல்லது நல்லெண்ணையோ இரத்தக் குழாய் அடைப்பை நேரடியாக உருவாக்குவதில்லை. நமது மன உளைச்சல், தினம் உடலில் சேரும் மாசுக்கள், ட்ரான்ஸ் ஃபேட், (துரித உணவு வகைகள் தான் ட்ரான்ஸ் ஃபேட்டை அதிகம் நமக்கு அளிப்பது) என பல்வேறு காரணங்கள் தாம் இரத்தக் குழாய் அடைப்பில் முதல் காரணிகளாகின்றன. இன்று அனைவருக்கும் உடல் உழைப்பு குறைவதே கொலஸ்ட்ரால் சேர்வதற்குக் காரணம். உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்கள் சிறிதளவு தேங்காயை சேர்த்துக் கொள்ளலாம். அதிக ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயைத் தவிர்க்கலாம்.
லாரிக் அமிலம் என்ற அமிலம், நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் ஒரு மிகச் சிறந்த பொருள். இது உலகில் இடம் பெற்றுள்ள இரு பொருட்கள் தாய்ப்பாலும், தேங்காய் எண்ணயும் மட்டுமே. மோனோலாரின் என்ற பொருளை தேங்காய் எண்ணெயில் இருந்து பிரித்தடுத்து காப்புரிமையும் பெற்று சந்தை படுத்தியும் வருகின்றன, அமெரிக்க வணிக நிறுவனங்கள்.ஆனால், நாமோ தேங்காய் எண்ணெயைக் கண்டாலே அலறத் துவங்கியுள்ளோம்.
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
அடைப்பு உருவாகக் காரணியாகக் கருதப்படும் சில நுண்கிருமிகளைக் கூட கொல்லும் இயல்பு உடையது தேங்காய் எண்ணைய் என்று கூறப்படுகிறது. குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் உடல் தேற, அவை 5 – 6 மாதத்தில் பால் – அரிசி கஞ்சிக்கு மாறும் பருவத்தில் தேங்காய் எண்ணெய் துளிகள் சேர்த்து கொடுக்க எடை உயர்வும், நோய் எதிர்ப்பாற்றல் உயர்வும் பெருகும்.
மிகச்சிறந்த குளிர்பானம், இளநீர். கால்சியம், பொட்டாசியம், குளுக்கோஸ் நிரம்பியது. இது டி.என்.எஸ் (டெக்டோரிடின் வித் நார்மல் சலைன்) கொண்ட ஓர் உணவுப் பொருள். உடலுக்கு அவசரமாக உப்பு மற்றும் சர்க்கரை சத்துக்கள் தேவையென்றால், உடனடியாகக் கொடுக்கக் கூடியதுதான் இந்த இயற்கை சலைன். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் எனர்ஜியைக் கொடுக்கக் கூடியது.’
மொத்தத்தில், ஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் அமிர்தமே தேங்காய்!
நம் வாசகர்களுக்கு நாம் விடுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்…. சொந்த வீடு வைத்திருப்பவர்கள் அல்லது வீடு கட்டுபவர்கள் தயவுசெய்து உங்கள் வீட்டில் குறைந்த பட்சம் இரண்டு தென்னை மரங்களையாவது நடவேண்டும் என்பது தான்.
==============================================================
எந்த வகையில் நியாயம்?
நமது தளம் எந்தளவு தனித்துவத்துடன் விளங்குகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். தளத்திற்கு என்று தனி அலுவலகம் அமைத்துவிட்ட நிலையில் செலவினங்களை சமாளிக்க மிகவும் போராட வேண்டியிருக்கிறது. யாரையும் கட்டாயப்படுத்த விரும்பாமல் மனமுவந்து வாசகர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தவேண்டும் என்று தான் நாம் ‘விருப்ப சந்தா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு தளத்தின் பணிகளில் உதவிய வாசகர்கள் தான் தற்போதும் உதவி வருகிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் புதிதாக ஒரு சிலர் ‘விருப்ப சந்தா’ அளித்து வருகிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று.
நமது தேவையறிந்தும் சிலர் பாராமுகமாக இருப்பது எந்த வகையில் நியாயம்? நாம் ஒவ்வொரு பதிவிலும் ‘விருப்ப சந்தா’ குறித்த அறிவிப்பை வெளியிடுவதன் நோக்கம், அவர்களை மனதில் வைத்து தான்.
ஓரளவு நல்ல பணியில் நல்ல நிலையில் இருப்பவர்கள் அவர்களால் இயன்ற தொகையை பிரதி மாதமோ அல்லது எப்போது முடியுமோ அப்போது அளித்து தளம் தொய்வின்றி தொடர உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த உலகமே பணத்தை சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறது. ரைட்மந்த்ரா மட்டுமாவது விதிவிலக்காக இருக்கவேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். இருப்பவர்கள் உதவினால் தான் இல்லாதவர்களுக்கு இந்த தளத்தை இப்போது போல் எப்போதும் இலவசமாக கொண்டு செல்லமுடியும். மாற்று வழிகளை ஆராயும் நிலைக்கு நம்மை தயவு செய்து தள்ளவேண்டாம்!
==============================================================
நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 11
தேங்காய் தானம் – எந்தெந்த நாளில் தானம் செய்தால் என்னென்ன பலன்?
- பிரதமை திதியில் தேங்காயை தானம் செய்தால் செல்வம் சேரும்.
- துவிதியை திதியில் தேங்காய் கொடுத்தால் கணவன்-மனைவி ஒற்றுமை வளரும்.
- திருதியை திதியில் தேங்காய் கொடுத்தால் குரு அருள் உங்களைத் தேடி வரும்.
- சதுர்த்தசி திதியில் தேங்காய் தானத்தால் குடும்ப குழப்பங்கள் நீங்கும்.
- பஞ்சமி திதியில் தேங்காய் தானத்தால் மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். இவை ஒவ்வொன்றிற்கும் பின்னால் பெரிய வரலாறுகள் உண்டு.
- சஷ்டி திதியில் தேங்காய் தானத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- சப்தமி திதியில் தேங்காய் தானத்தால் பிதுர்களின் ஆசி கிடைக்கும்.
- அஷ்டமி திதியில் தேங்காய் தானத்தால் தனதான்ய யோகங்கள் கிடைக்கின்றன.
- நவமி திதியில் தேங்காய் தானத்தால் வித்தையில் வெற்றி கிடைக்கும்.
- தசமி திதியில் தேங்காய் தானத்தால் சகல பாக்கியங்களும் தேடி வரும்.
==============================================================
Also check :
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
கைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து! MUST READ!!
==============================================================
[END]
இந்த பதிவை பார்த்த பிறகு தான் இன்று சர்வதேச தேங்காய் தினம் என தெரிகிறது. இந்த நாளை என் மேமொரியில் store பண்ணி விட்டேன். தெரியாத ஒரு நாளை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தேங்காயை பற்றி இவ்வளவு விலாவாரியாக ஆராய்ச்சிக் கட்டுரையாக அளித்ததில் எல்லோரும் படித்து இன்புறுவர் என்பது நிச்சயம்.
ஒவ்வொரு பதிவும் எதோ பதிவாக கொடுத்தோம் என இல்லாமல் , தங்களின் கடின ஆராய்ச்சியின் மூலம் பதிவாக வருகிறது. இதில் தான் தங்களின் தனித்துவம் வெளிபடுகிறது …..
தேங்காய் தானத்தைப் பற்றிய 10 பாயின்ட்டுகளும் இந்த பதிவின் மணி மகுடம். ….
இந்த பதிவை நம் பள்ளி மாணவச் செல்வங்களும் படித்து இன்புற வேண்டும்.
அழகிய ‘தேங்காய்’ பதிவிற்கு நன்றிகள் பல
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
ஆஹா! ஆஹா! தேங்காயை பற்றி இத்தனை விபரமான விஷயங்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது இந்த காய். உண்மையில் இதன் மருத்துவ தகுதி பற்றி அறியாமலே நிறைய பேர் தேங்காயை ஒதுக்கி விடுகின்றார்கள். இனிமேலாவது தேங்காயின் அருமையை புரிந்து கொள்ளட்டும்.
நன்றி.
தேங்காய் பற்றிய செய்திகள் அருமை. நல்ல நல்ல விஷயங்களை எடுத்து சொன்ன உங்களை மனமார பாராட்டுகிறேன். தொடரட்டும் உங்களின் சிந்தனை.