Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 27, 2024
Please specify the group
Home > All in One > நம்பினோர் கெடுவதில்லை. இது நான்மறை தீர்ப்பு!

நம்பினோர் கெடுவதில்லை. இது நான்மறை தீர்ப்பு!

print
ப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.

“இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறேன்.

ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன.

தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கிக்கொள்கிறான்.

இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக்கொள்கிறான்.

ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.

[pulledquote] [typography font=”Cantarell” size=”15″ size_format=”px”]“இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னடாவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே… இது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான். [/typography] [/pulledquote]

பட்ட காலிலே படும் என்பது போல… எது நடக்ககூடாதோ அது நடந்துவிட்டது. இவன் தங்கவென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய்விட்டது.

“இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னடாவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே… இது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.

மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது.

“அப்பாடா… நல்ல வேளை… ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.

கப்பல் சிப்பந்திகள் இவனை, லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள்.

தான் இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்…. யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்.

அப்போது இறைவன் குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.

அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டுவிடுகிறோம். நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால், எதைப் பற்றியும் அலட்டிகொள்ளவேண்டியதில்லை.

So, அடுத்த முறை மிகப் பெரிய பிரச்னை ஏதாவது ஒன்றில் நீங்கள் சிக்கிக்கொண்டால், சோதனை மேல் சோதனை என்றால்… இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்துவிட்டது விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.

நம்பினோர் கெடுவதில்லை. இது நான்மறை தீர்ப்பு!

14 thoughts on “நம்பினோர் கெடுவதில்லை. இது நான்மறை தீர்ப்பு!

  1. Dear sir it is nice story. Valkaiyil sodhanai endral ok. But Sodhanaiye valkai endral! Anyways we have been believing god.

  2. மிகவும் பயனுள்ள பதிவு….கடந்த சில நாட்களாக மனதில் ஒருவித சோர்வுடன் இருந்த எனக்கு இந்த பதிவு ஒரு உற்சாக டானிக்…சோதனைகளினால் மனம் சோர்ந்து இருக்கும் நேரங்களில் இந்த மாதிரியான நன்சொற்கள் நம்மை தாங்கிப் பிடிக்கும்…! உங்கள் கருத்துக்கு நன்றி…!

    விஜய் ஆனந்த்

  3. Wow!! Amazing article. Thank u so much for bringing this good article for our attention brother! Expecting more articles like this..

  4. இந்த கதையை நன்கு அறிந்தவர்கள் ரஜினி ரசிகர்களே; நன்கு உணரவேண்டியதும் ரஜினி ரசிகர்களே!! மிக மிக அழமான கதை சுந்தர்ஜி. அவ்வளவு சிக்கிரம் குதர்க்க மனம் ஏற்று கொள்ளது. இறைவனையும், அவரது திருவிளையாடலையும் புரிந்து கொள்ள நமது மனதிற்கு சக்தி இல்லை என்பதை உணர்ந்தால் ஆனந்தம் சத்தியமே…

    1. I love ur last three lines. how can u approch life in such a wonderful manner?? Great Brother.. Simply love those lines. 🙂

  5. Dear Sir, This story takes me to live in Hardship time nterrible situations.I am sorry to say this. But still I cant Beleive God 100%. Because i am messed up with confusions n fear.

    Anyway i thank u for this Heart Giving Story. Personally this mean a lot to me. I hope So.,

  6. இதை உணர்தால் மட்டுமே தெரியும்….பல சந்தர்பங்களில் நன் இதை உணர்ந்துளேன்…கடவுளை நம்பினோர் கைவிடப்படார்……
    .
    மாரீஸ் கண்ணன்

  7. Sir,

    Simple but powerful story just like Thalaivar kutti kathaigal.

    Shall I post it in my FB

    ———————————————
    என்ன இதையெல்லாம் கேட்டுகிட்டு… தாராளமா எடுத்து போடுங்க…. உங்களுக்கு இல்லாத உரிமையா?
    – சுந்தர்

  8. \\அப்போது இறைவன் குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.\\

    அவன் நடத்தும் நாடகம் யாருக்கும் எளிதில் புரியாது ????…

    புரிந்துவிட்டால் நாம் பக்குவம் அடைந்து விட்டதாகதானே பொருள் ? சரியாய் ஜி .

    -மனோகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *