Home > All in One (Page 4)

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா? — ஆளுமை முன்னேற்றத் தொடர் — Episode 1

பர்சனாலிட்டி அதாவது ஆளுமை என்பது ஒருவரது தோற்றம் மட்டும் அல்ல. பழகும் பண்பு, நாகரீகம், பொது அறிவு, இன்சொல், சுத்தம், பொறுமை இப்படி பல விஷயங்களை உள்ளடக்கியது தான் ஒருவரது ஆளுமை. தோற்றத்தில் மட்டும் வசீகரத்தை வைத்துக்கொண்டு உள்ளுக்குள் குப்பை மலையாய் இருப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். ஒருவரது வெளிதோற்றத்தை வைத்து மட்டும் வரும் மதிப்பீடானது நிரந்தரமாக இருப்பதில்லை. ஆங்கிலத்தில் ஒரு அருமையான சொற்றொடர் உண்டு. Your personality can open any

Read More

விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்! RightMantra Exclusive!!

"நீங்கள் எந்தளவு அதிர்ஷ்டசாலி?" என்ற தலைப்பில் சென்ற வாரம் பதிவு ஒன்றை அளித்திருந்தேன். அதில் கருத்து தெரிவித்த நண்பர் ஒருவர், "அதான் கவிஞர் ஒரே வார்த்தையில் சொல்லிட்டாரே... உனக்கும் கீழே உள்ளவர் கோடி"ன்னு என்று கூறியிருந்தார். அந்த பாடலைப் பற்றி ஒரு தனி பதிவே தருகிறேன் என்று நான் சொல்லியிருந்தேன். இதோ அந்தப் பதிவு! கவியரசு கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை தந்திருக்கிறார். ஆனால் அவற்றுக்கெல்லாம் சிகரம்

Read More

விஜயதசமியன்று கிடைத்த வடபழனி வேங்கீஸ்வரர் தரிசனம்!

சென்னையில் வடபழனி என்றதும் நம் நினைவுக்கு வருவது முருகன் கோவில் தான். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் பலர் மறக்காமல் செல்லும் கோவில்களில் வடபழனி முருகன் கோவிலும் ஒன்று. ஆனால் அதே வடபழனியில் தொன்மையான சிவாலயம் ஒன்று இருப்பது பலருக்கு தெரியாது. சென்னையில் உள்ள அதிகம் அறியப்படாத கோவில்களில் இதுவும் ஒன்று. வடபழனி சிக்னல் அருகே நூறடி சாலையை ஒட்டி அமைந்துள்ளது சாந்தநாயகி உடனுறை வேங்கீஸ்வரர் சிவன் கோவில். வியாக்ரபாத முனிவர் பல புனித

Read More

“அன்னயாவினும் புண்ணியங்கோடி…” — கலைமகள் மனம் குளிர எங்களின் எளிய முயற்சி!!

சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் கூறியுள்ளபடி கல்விக்கடவுள் அன்னை சரஸ்வதியின் பூஜையை இன்றைக்கு நாம் கொண்டாடுவது ஒரு பக்கம் இருக்க, அன்னை சரஸ்வதிக்கு உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் எதையாவது செய்யவேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது. கருவறையில் மட்டும் கடவுளை தேடுபவன் அல்ல என்றுமே நான். சரஸ்வதி பூஜை திருநாளான இன்று யாராவது ஒரு ஏழை மாணவனுக்கு அவன் கல்வி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு சிறிய உதவி செய்யவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவு

Read More

மருத்துவ அதிசயம் — டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு!

மருத்துவ உலகிற்கே சவாலாக விளங்கும் டெங்கு காய்ச்சலை நம்ம பப்பாளி இலை சாறு குணப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அது தான் உண்மை!!! டெங்கு காய்ச்சலின் கொடூரம் குறித்து சமீபதிதில் படித்த செய்தி ஒன்று உண்மையில் நெஞ்சை உருக வைத்தது.  கட்டிய காதல் மனைவி டெங்கு காய்ச்சல் வந்து படும் துன்பத்தை பார்க்க சகிக்காமல் சேலத்தில் அவளது அன்புக் கணவன் மருத்துவமனை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

Read More

தொலைந்த வாழ்க்கை நிமிடங்களில் மீண்ட அதிசயம் — “இதோ எந்தன் தெய்வம்” – புதிய தொடர் (1)

இது நடந்து ஒரு ரெண்டு மூணு வருஷம் இருக்கும். என் வாழ்க்கையில மறக்க முடியாத சம்பவம் இது. அது ஒரு விடுமுறை நாள். மணி இரவு 8.00 pm இருக்கும். நுங்கம்பாக்கத்தில் ஒரு வேலையை முடித்துவிட்டு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியே பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். வள்ளுவர் கோட்டமெல்லாம் தாண்டிய பிறகு, கோடம்பாக்கம் பிரிட்ஜில் சென்று கொண்டிருந்தேன். விடுமுறை நாளில் கூட ஓரளவு பரபரப்புடனேயே இருந்தது கோடம்பாக்கம் பாலம். (லீவ் நாளிலேயே இப்படின்னா மத்த

Read More

கண்களை குளிரவைத்த வேதபுரீஸ்வரர் & உள்ளத்தை குளிர வைத்த பசுக்கள்! மஹாளய அனுபவம்!!

[dropcap]இ[/dropcap]ந்த தளத்தில் 'ஆலய தரிசனம்' பகுதிக்கு இது ஒரு தொடக்கம் தான். அடுத்தடுத்து நமது ஆலய தரிசனங்கள் குறித்த அனுபவப் பதிவுகள் (புகைப்படங்களுடன்) வரவுள்ளன. இந்த தொடக்கப் பதிவில் மனதில் உள்ளவற்றை வடித்திருக்கிறேன். இவற்றை சீர்படுத்தி தேவையில்லாதவற்றை தவிர்த்து, இன்னும் சுவாரஸ்யமாக சுவையாக எழுதக் கூடிய நடை போகப் போகத் தான் கைகூடும் என்று நினைக்கிறேன். இந்த பதிவு மற்றும் நடை குறித்த உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தினால் மகிழ்ச்சியடைவேன். இந்த பதிவின் நோக்கமே இதை படிக்கும் உங்களுக்கும் இத்தகைய செயல்களை

Read More

மஹாளய அமாவாசையும் நமது ஏழு தலைமுறையும் – அரிதினும் அரிய உண்மைகள்!

மஹாளய அமாவாசை பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் சொல்லிகொண்டே போகலாம். பொதுவாகவே அமாவாசை தினத்தை மிகவும் புனிதமாக கருதுவர். ஆகையால் தான் அதற்க்கு 'நிறைந்த நாள்' என்ற பெயரும் கூட உண்டு. நாம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் எவ்வித குறைகளும் இன்றி நலமோடு வாழ, இல்லறம் தழைக்க, நமது முன்னோர்களின் (பித்ருக்களின்) ஆசி மிக மிக அவசியம். அவர்களுக்கு செய்ய வேண்டிய சாஸ்திர மத ரீதியிலான சம்பிரதாயங்களை புறக்கணித்துவிட்டு, நீங்கள் என்ன தான்

Read More

சாதனையாளர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

சாதனையாளர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் அனைவரிடமும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா? அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி.... சினிமா நட்சத்திரங்களோ அல்லது எழுத்தாளர்களோ அல்லது தொழிலதிபர்களோ அல்லது விளையாட்டு வீரர்களோ யாராக இருந்தாலும் எந்த துறையை சேர்ந்த சாதனையாளர்களாக இருந்தாலும் சரி... கடவுள் நம்பிக்கை இருப்பவர்களானாலும் சரி... இல்லாதவர்களானாலும் சரி... அவர்கள் அனைவரிடமும் சொல்லி வைத்தார்ப்போல இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா?................ அதிகாலை எழுவது! “Early to bed

Read More

தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?

உண்மையான இறை பக்தியுடன் ஒவ்வொரு நாளையும் சுவாசித்துக்கொண்டு எவருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் நல்லவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு துன்பங்கள் ஏற்படுவதும், தீமையே உருவாய் நின்று நியாய தர்மங்களை தூக்கி போட்டு மிதித்து அக்கிரமங்களை கூசாமல் செய்பவர்கள் சந்தோஷத்துடனும் இந்த உலகில் வாழ்ந்து வருவதை நாம் அன்றாடம் பார்த்துவருகிறோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவன் மீது நமக்கு கோபமும் வருத்தமும் ஏற்படுவது உண்டு. "உன்னையே  அனுதினமும் நினைக்கிறேன். ஒரு புழு பூச்சிக்கு கூட

Read More

யார் பெரிய பிச்சைக்காரர்கள்?

கோவிலுக்கு போகும்போதோ வரும்போதோ பிச்சையிடக்கூடாது என்று கூறுகிறார்களே. உண்மையில் எப்போது தான் நாம் பிச்சையிடுவது என்று நண்பர் ஒருவர் இங்கு கேட்டிருந்தார். ஆலயம் செல்கையில் பிச்சையிடவேண்டாம் என்று எந்த சாஸ்திரத்திலும் கூறியிருப்பதாக எனக்கு தெரியவில்லை. சொல்லப்போனால் இரப்போர்க்கும் வறியவர்க்கும் பிச்சையிடுவது என்பது நமது பழக்க வழக்கங்களில் பாரம்பரியங்களில் ஒன்று. நமது வாழ்க்கை முறையோடு பின்னிப்பிணைந்த ஒன்று. யோசித்துப் பார்த்தால் நாம் அனைவருமே ஒருவகையில்  பிச்சைக்காரர்கள் தான். கோவிலுக்கு சென்று நாம் இறைவனிடம் வைக்கும்

Read More

கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….

ஆலயங்கள் என்பவை ஆண்டவனின் அருள் கொட்டிக்கிடக்கும் மகாசமுத்திரம் போன்றவை. அவற்றில் இறங்கி முத்துக்களை அள்ளிக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். கிளிஞ்சல்களை வாரிக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். வெறும் கால்களை மட்டும் நனைத்துக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். சமுத்திரம் கேட்டதை எல்லாம் கொடுக்க தயாராக இருக்கிறது எனும்போது வெறும் கையுடன் திரும்புவது யார் குற்றம்? "கோவில்களுக்கு சென்றேன்; ஆனால் பலனில்லை" என்று புலம்புவர்களுக்கு பதில் இது தான். எதற்குமே ஒரு முறை இருக்கிறது சாரே.... நம்மில் பலர் கோவில்களுக்கு செல்லும்

Read More

வேலையில் ப்ரோமோஷன் வேண்டுமா?

ஒரு சிலருக்கு திறமை இருந்தும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் அதற்க்கேற்ற பதவி இல்லாது இருப்பார்கள். ஆன்மீக ரீதியாக இதற்கு பிரார்த்தனைகள் விசேஷ ஸ்லோகங்கள் இருக்கின்றன என்றாலும் கீழ்கண்ட விஷயங்களையும் கவனத்தில் கொண்டு அவற்றை கடைபிடித்து பின்னர் ஆன்மீக ரீதியிலான விஷயங்களுக்கு வருவோம். நாம் கடவுளிடம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம். ஓ.கே.? அணுகுமுறையை மாற்றுங்கள் - அனைத்தும் மாறும்! 1) "அவனுக்கு ஒண்ணுமே தெரியாது சார்.. ஆனா பாருங்க ப்ரோமோஷன் மேல

Read More

ஆண்டவன் போடும் கணக்கு… அது புரியுமா நமக்கு?

ஆண்டவன் போடும் கணக்கு! ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய

Read More