பிள்ளைகளை படிக்கச் செய்வது ஒரு கலை. பத்தாம் வகுப்பு போன்ற தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் மற்றும் வெற்றி மிகவும் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அது மட்டுமே வாழ்க்கையாகிவிடாது.
சில குழந்தைகளுக்கு DYSLEXIA அதாவது கற்றலில் குறைபாடு என்கிற பிரச்னை இருக்கும். அவர்களை புரிந்துகொண்டு அரவணைப்பது அவசியம். “நீ என்ன மார்க் எடுத்தாலும் சந்தோஷம். ஆனா நீ கெட்டிக்காரன் எல்லாத்துலேயும் 90% மேலத் தான் வாங்குவே!” என்று கூறுங்கள். பாக்கு விற்பவனைக் கூட ஊக்குவித்தால் அவன் தேக்கு விற்பான்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் நன்றாக தேர்வு எழுதி விரும்பிய படி மேற்படிப்பு படிக்க, நம் தளம் சார்பாக நடைபெறும் வாராந்திர கூட்டு பிரார்த்தனையில் இந்த வாரம் கோரிக்கை வைக்கப்படும்.
=================================================================================
வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம் !
* பிள்ளைகளை எப்போது பார்த்தாலும் “படிபடி’ என்று பெற்றோர்கள் தொந்தரவு செய்யக் கூடாது. இதனால் குழந்தைகளுக்கு பதற்றம் ஏற்பட்டு ஞாபக சக்தி குறைந்து படிப்பது சீக்கிரம் மறந்து போகும். எனவே உங்கள் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களான உங்களது பொறுப்பு.
* எல்லாவற்றையும் கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை உங்கள் குழந்தைகளிடம் இருந்தால் அதனால் வரும் மன உளைச்சலை முன் கூட்டியே எடுத்துச் சொல்லி மாற்றுங்கள்.
* பக்கத்து வீட்டு குழந்தையுடன் உங்கள் வீட்டு குழந்தையைக் கம்பேர் பண்ணி பேசவே பேசாதீர்கள். “நீயும்தான் இருக்கியே என்னத்த எக்ஸாம் எழுதி கிழிக்கப் போறே” போன்ற பேச்சுகள் உங்கள் குழந்தைக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடும் என்பதை மறவாதீர்கள்.
* உங்கள் குழந்தையை தட்டிக் கொடுத்து “”உன்னாலும் நிச்சயம் நிறைய மார்க் வாங்க முடியும்” என்று பாஸிடீவான வார்த்தைகளை சொல்லித்தேற்றுவது எக்ஸாம் நேரத்தில் ரொம்ப முக்கியம்.
*பிள்ளைகளை மணிக்கணக்கில் ஒரேயடியாக உட்கார்ந்து படிக்கச் சொல்லாதீர்கள். இதனால் படிக்கும் விஷயம் சரியாக மனதில் தங்காமல் போவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே அரைமணி நேரத்திற்கு ஒரு முறை பிரேக் எடுத்து கொஞ்சநேரம் டிவி பார்க்க அனுமதித்தோ ஜாலியாகப் பேசி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்த பிறகோ அவர்களைப் படிக்கச் சொல்லலாம்.
* சில பிள்ளைகள் கணக்கு, இயற்பியல், வேதியியல் மாதிரியான பாடங்களை கஷ்டமாக நினைத்து மனப்பாடம் செய்து படிப்பார்கள். ஆனாலும் அதை மறந்து போவார்கள். இதைத் தவிர்க்க முதலில் அவர்களுக்கு விருப்பமான பாடங்களை படிக்க வைத்துவிட்டு கஷ்டம் என நினைக்கும் பாடங்களுக்குத் தனியாக நேரம் ஒதுக்கி படிக்கச் சொல்லுங்கள். முடிந்தால் உங்களிடம் ஒப்புவிக்கச் சொல்லுங்கள்.
* பிள்ளைகளின் உயர் கல்வியை மனதில் வைத்துக் கொண்டு சில பெற்றோர்கள் “” இவ்வளவு மார்க் எடுத்தாதான் உனக்கு மெரிட்ல இடம் கிடைக்கும்” என்று அவர்களாகவே மார்க் பற்றி கணக்குப் போட்டு பேசுவது கூடாது.””உன்னால முடிஞ்சவரைக்கும் பரீட்சையை சிறப்பா எழுது மத்ததைப் பற்றி அப்புறம் பேசிக்கலாம்” என்று ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை சொல்ல வேண்டும்.
* உங்கள் பிள்ளைகள் சரியாகப் படிக்காமல் இருப்பதற்கு நண்பர்கள் வட்டத்தில் பிரச்னை, ஆசிரியர்களின் கவனக்குறைவு அல்லது “படிபடி’ என்று விரட்டிக் கொண்டே இருக்கும் உங்களிடம் உள்ள பயம். இப்படி நிறைய காரணங்கள் இருக்கலாம். இதில் எதுவாக இருந்தாலும் அதை பிள்ளைகளிடம் பொறுமையாக காது கொடுத்துக் கேட்டு உடனே அந்த பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்.
* தேர்வு சமயத்தில் சில பிள்ளைகளுக்கு கைகள் பயங்கரமாக வியர்க்கும். அதிலும் கணக்கு பரீட்சையென்றால் உடலின் படபடப்பு இன்னும் அதிகரிக்கும். இப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் முடிந்தவரை உங்கள் குழந்தைகளை ஆறுதல் வார்த்தைகள் சொல்லி சமாதானப்படுத்துங்கள். உங்களால் அவர்களுடைய பயத்தையும், படபடப்பையும் சமாளிக்க முடியாத பட்சத்தில் உடனடியாக மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று “கவுன்சிலிங்’ பெறுவது நலன் அளிக்கும்.
* தேர்வு சமயங்களில் கண்டபடி டியூஷனுக்கு அனுப்பாமல் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படும் பாட விஷயங்களுக்கு மட்டும் டியூஷனுக்கு அனுப்புங்கள். டியூஷன் போய்விட்டு வீட்டிற்கு வந்தாலும் உடனே அவர்களை ரிலாக்ஸ் செய்ய அனுமதிக்காமல் உடனே மீண்டும் படிக்கச் சொல்லி இம்சிக்காதீர்கள்.
மேற்கூறியதேர்வுகால யோசனைகளைப் பின்பற்றினாலே உங்கள் பிள்ளைகள் சுலபமாகத் தேர்வை எதிர்கொள்வார்கள்.
(நன்றி : தினமணி – ஞாயிறு கொண்டாட்டம்)
[END]
All the best to 10th std students who are writing public exams. So also my special wishes to our site reader Mr.Manohar and Vijayalakshmi couple’s daughter Janani who is writing 10th std exam. Her aim is to become a doctor. Her parents wishes will be fulfilled. Definitely she will become a doctor.
Regards
Uma
சுந்தர் சார் வணக்கம் …… இன்று பத்தாம் வகுப்பு தேர்வை ஒட்டி நீங்கள் கொடுத்த டிப்ஸ் மிக அருமை ……இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள் ……. நன்றி தனலட்சுமி …..
\\\பாக்கு விற்பவனைக் கூட ஊக்குவித்தால் அவன் தேக்கு விற்பான். \\
சிறந்த எளிமையான யோசனைகளைப் பின்பற்றினாலே போதும்,நல்ல பலன் நிச்சயம் உண்டு .
நம் தளம் சார்பாக நடைபெறும் வாராந்திர கூட்டு பிரார்த்தனையில் இந்த வாரம் கோரிக்கை பதிவிடும் சுந்தர்ஜி அவர்களுக்கு நன்றி ..நன்றி ..நன்றி …..
எனது மகளின் வெற்றிக்காக வாழ்த்துகளை தெரிவிக்கும் சுந்தர் ஜி மற்றும் ,நம் தல வாசகர்கள், நண்பர்கள்,அனைவருக்கும் நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன் .
-மனோகர்