Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, July 12, 2024
Please specify the group
Home > Featured > கொடுத்ததற்கு ஒரு முறை… கொடுக்காததற்கு 100 முறை! ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

கொடுத்ததற்கு ஒரு முறை… கொடுக்காததற்கு 100 முறை! ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

print
டவுளை நம்புபவனுக்கு, தான் நினைத்தது நடக்காத போது, இறைவன் என்கிற ஒருவன் உண்மையில் இருக்கிறானா என்று சந்தேகம் எழுகிறது. நாம் ஏற்கனவே கூறியது போல, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டினால் கடவுள் கண்ணை திறந்துவிட்டார் என்று நினைப்பது அறியாமையிலும் பெரிய அறியாமை. பொருளை சாராமல் அருளுக்கே முக்கியத்துவம் தருபவர்கள் கடவுளின் இருப்பு குறித்து சந்தேகப்படுவதில்லை.

சிங்கப்பெருமாள் கோவில் - அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் மூலவர் விமானம்
சிங்கப்பெருமாள் கோவில் – அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் மூலவர் விமானம்

இறைவன் ஒவ்வொரு கணமும் நம்மை காக்கிறான் என்பதே உண்மை. வரவிருக்கும் ஆபத்துக்களில் இருந்து காக்கிறான். நல்லவர்களின் நட்பை ஏற்படுத்தி தருகிறான். நமக்கு ஒவ்வாத ஒன்று நம்மிடம் சேராமல் தடுக்கிறான். சோதனைகளை தந்து நம்மை பக்குவப்படுத்துகிறான். இப்படி எத்தனையோ விதங்களில் இறைவனின் அருள் அன்றாடம் வெளிப்படுகிறது. நாம் அவற்றை உணர்ந்திருக்கிறோமா?

எறும்பின் காலடி ஓசையையே கேட்கும் ஆற்றல் படைத்த இறைவன், நமது ஒவ்வொரு உண்மையான பிரார்த்தனைக்கும் செவி சாய்க்கிறார். ஆனால், பிரார்த்தனை செய்வதெல்லாம் நடந்து விடுகிறதா? தாயானவள், குழந்தை விரும்பியதையெல்லாம் கொடுப்பதில்லை; குழந்தைக்கு எது நல்லதோ அதைத்தானே கொடுக்கிறாள்? அதுபோல், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்லனவற்றைத் கூட்டியும் தீயவற்றை குறைத்தும் தருகிறார் கடவுள்!

IMG_5356

‘இறைவா! எனக்கு நீ எதைக் கொடுத்தாயோ அதற்காக ஒரு முறை நன்றி கூறுகிறேன். எதைக் கொடுக்கவில்லையோ, அதற்காக நான் நூறு முறை நன்றி கூறுகிறேன்’ என்பது உள்ளார்ந்த அர்த்தமுள்ள பிரார்த்தனை.

வேத- இதிகாச, புராணங்களில் அற்புதமான பிரார்த்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன. ‘நல்ல எண்ணங்கள், நாலாபக்கத்தில் இருந்தும் நம்மை வந்தடையட்டும்’ என்பது வேதத்தில் உள்ள பிரார்த்தனைகளில் ஒன்று!

‘இறைவா! என்னால் எவற்றை மாற்ற முடியாதோ அவற்றை ஏற்கும் பக்குவமும், மாற்றக் கூடியவற்றை மாற்றும் ஆற்றலும், மாற்றக்கூடியது- மாற்ற முடியாதது குறித்த பகுத்தறிவையும் அருள்வீராக!’

============================================================

இந்த வார கூட்டு பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்:  நேதாஜி இருமுறை தங்கிய GANDHI PEAK வீட்டைச் சேர்ந்த திரு.தனஞ்ஜெயா அவர்கள்.

திரு.தனஞ்ஜெயா அவர்கள் நமது பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்பது நம்மை பொருத்தவரை ஒரு சுவாரஸ்யமான + எதிர்பாராத ஒன்று.

DSCN0753

மேற்கூறிய பதிவில் குறிப்பிட்டுள்ளபடி, அவருடனான சந்திப்பு நிறைவடைந்து கிளம்பும் தருவாயில் அவருடைய வீட்டின் பூஜை அறையை (1935 ஆம் ஆண்டு டாக்டர்.பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இடம்) பார்த்தோம். ஒரு வித DIVINE VIBRATION இருந்ததை உணர முடிந்தது.

DSCN0759திருப்போரூர் முருகனின் அற்புத படம் ஒன்றும் அங்கிருக்க, நம்மையுமறியாமல் கரங்கள் குவிந்து முருகனை வணங்கியது. சில விநாடிகள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தோம்.

அவரது பாட்டி தனம்மாள் அவர்களின் படத்தை காட்டி “அவங்களையும் கும்பிட்டுக்கோங்க. இந்த வீட்டில் வாழ்வாங்கு வாழ்ந்து சுமங்கலியாக மறைந்தவங்க அவங்க!” என்றார். அவர்களையும் வணங்கினோம். ஆத்மார்த்தமாக அவர்கள் அளித்த ஆசிகளுக்கு நன்றி கூறினோம்.

ஒரு நல்ல குடும்பத்துல இருந்து வந்த ஒருத்தர் நம்ம கூட நிற்கிறார். மகத்துவமான, தியாக சீலர்களின் மூச்சுக்காற்று பட்ட இந்த இடத்துக்கு சொந்தக்காரர் வேற. அவர் நமக்கு அறிமுகமும் ஆயிட்டார். ஏன் அவரையே இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கச் சொல்லிக் கேட்கக் கூடாது… என்று தோன்றியது. உடனே நமது தளத்தின் பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். திரு.தனஞ்ஜெயா அவர்களுக்கு நாம் நன்றி!

அடையாளம் காட்டிய இறைவனுக்கும் நன்றி!

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

============================================================

URGENT KIDNEY TRANSPLANT

Sir

I am Krishnamurthy (48) suffering kidney Failure and for thrice a week dialysis for the last five years. I do not have related donors and I have registered for Cadaver Kidney (Diseased / Brain death donor) Transplantation in ApolloChennai Hospital as per the hospital guidelines.

I placed a Prayer Request few months ago already. A few opportunities came after my previous prayer request but it didn’t work out. (kaikku ettiyadhu vaaikku ettavillai) I am struggling in life for life. Thousands of rupees is being spent for treatment.

I wanted to join this club for all and GOD Grace for my kidney transplant take place soon.

Namaskar
Krishnamurthy,
Nanganallur

============================================================

குடும்பத்தில் அனைவருக்கும் அடுத்தடுத்து நோய்

வணக்கம்…….

இந்த வெப்சைட்டை நான் கடந்த 3 மாதங்களாக பார்த்து வருகிறேன். நண்பர்களுக்கும் பகிர்ந்துவருகிறேன். எனக்கு இருக்கும் பிரச்னைகளில் வாழ்க்கையில் கொஞ்சமாவது ஒரு பிடிப்பு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் RIGHTMANTRA தான். இன்னும் சிறிது காலத்துக்கு முன்னரே இந்த தளத்தை நான் பார்திருக்கூடாதா என்று வருந்துகிறேன். இங்குள்ள அனைவருக்குமே தொண்டுள்ளமும், பிறர் நலம் விழையும் மனமும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

என் வீட்டில் அடுத்தடுத்து யாருக்காது ஏதாவது உடல் உடம்பு சரியில்லாமல் போகிறது. எனக்கு முடிந்தால் என மனைவிக்கு, என் மனைவிக்கு முடிந்தால் என் குழந்தைகளுக்கு, பிறகு என் பெற்றோருக்கு இப்படி யாராவது ஒருவர் பின் ஒருவராக நோய்வாய் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் செலவு கட்டுக்கடங்காமல் அதிகரித்து மனஉளைச்சல் ஏற்படுகிறது. நாங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கஷ்டம்? எங்கள் குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் இந்த நோய் தீர்ந்து, அனைவரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

– ராஜேஷ்,
திருப்பத்தூர்

============================================================

பொது பிரார்த்தனை

சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் சிறப்பு பெறவேண்டும்!

நாட்டை காட்டிக்கொடுப்பவர்களும், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களும் பதவியும் பணமும் பெற்று ஒய்யாரமாக வாழ்ந்து கொண்டிருக்க, தேசத்துக்காக இன்னுயிரை ஈந்த பல சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் இன்று வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் வாரிசுகள் உரிய அங்கீகாரமோ உதவியோ இல்லாது தவிக்கின்றனர்.

Thiruppoor freedom fighter house
நாட்டுக்காக 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் கொடுத்தவரின் குடும்பத்தினர் இன்று இருக்கும் குடிசை!

திருப்பூர் நகராட்சியின் முதல் தலைவர் விட்டல்தாஸ் ஆனந்த்ஜி சேட் குடும் பத்தை சேர்ந்த, தியாகி கோவிந்ததாஸ் மனைவி ரமாபாய், வாடகை வீட்டில் வசிக்கிறார். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு இடமும், கால்நடை மருத்துவமனைக்கும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை தானமாக வழங்கியவரின் குடும்பத்தினர், வசிக்க வீடின்றி வாடகை வீட்டில் இறுதி காலத்தை கழித்து வருகின்றனர்.

இன்னொரு சுதந்திர போராட்ட தியாகியான ஆறுமுகநேரி தங்கவேல் உடன்குடி மந்திரம் என்பவற்றின் குடும்பத்தின் நிலை தெரியுமா?

சுதந்திரம் பெற்ற பிறகு அப்போதைய முதல்வர் ராஜாஜியால் உடன்குடி மந்திரத்திற்கு பத்திரிக்கை அலுவலகத்தில் ஏரியா இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது. தியாகி பென்ஷனும் கிடைத்தது. அவரது மறைவிற்குப் பிறகு அவரது மனைவி ராமு அம்மாள் வாரிசு அடிப்படையில் தியாகி பென்ஷன் பெற்று வந்தார். இவர்களது மகள் இசக்கிஅம்மாள்(60) காசநோயால் அவதிப்பட்டு வருகிறார். கணவர் வன்னியன்(65) சிறுநீரகக் கோளாறால் எந்த தொழிலும் செய்ய இயலாமல் உள்ளார். இவர்களது மகள் விஜயகுமாரி(22) பிளஸ் 2 படித்துள்ளார். வறுமையின் காரணமாக மேற்கொண்டு படிக்க வைக்க இயலாததால் திருமணம் முடித்து வைத்தார். மணவாழ்க்கையும் மூன்று வருடத்தில் முடிந்து விட்டது. இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கே வந்து விட்டார். உறவினர்கள் ஒருசிலரின் உதவியுடன் மருத்துவசிகிச்சை எடுத்துக் கொண்டு வறுமையில் வாடுகின்றனர். இவர்களது வறுமை நிலை கண்ட சமூக ஆர்வலர்கள் அங்கன்வாடி அமைப்பாளர் வேலை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறினர். கலெக்டர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் விதிமுறைகளுக்கு (??!!!) உட்பட்டு கட்டாயம் உதவிசெய்வதாகக் கூறினார்களாம்.

இதை விட கொடுமை வேறு ஏதேனும் உண்டா?

ஒரு சாதாரண கௌன்சிலர் கூட கோடிகளில் புரளும் இந்த காலத்தில், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் பேத்தி முத்து பிரம்ம நாயகி என்ஜினீயரிங் படிக்க உதவி கிடைக்காது வங்கிக் கடன் பெற்று படித்து வரும் கொடுமை பற்றி நாம் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தோம். (அவருக்கு ஏதேனும் உதவி புரிய எண்ணி முத்து பிரம்ம நாயகியின் குடும்பத்தினரை தொடர்புகொண்டோம். ஆனால், அவர்கள் சங்கோஜத்துடன் மறுத்துவிட்டனர்!! குறைந்தது ஆண்டு விழாவிற்கு அழைத்து முத்து பிரம்ம நாயகியை மேடை ஏற்றி கௌரவிக்க விரும்பினோம். அதற்கும் மறுத்துவிட்டனர்!)

தங்கள் இளமைக்காலத்தில் வீட்டை துறந்து குடும்பத்தை  மறந்து சுதந்திரத்துக்காக போராடி சிறை சென்று காலம் கழித்தவர்கள் எத்தனையோ பேர். அவர்களின் குடும்பங்கள் இன்று ஆதரவின்றி இருக்கின்றன. தங்கள் 10 தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதில் குறியாய் இருந்தவர்கள் மத்தியில் நாட்டுக்காக உழைத்தவர்கள் இன்று மறக்கப்பட்டுவிட்டார்கள்.

இந்நிலை மாறவேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகம் மதிக்கப்படவேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான பொருளாதார உதவிகள், நிதி உதவிகள் செய்யப்படவேண்டும்.

==================================================================
http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgசிறுநீரக நோயால் அவதிப்பட்டு வரும் திரு.கிருஷ்ணமூர்த்தி (48) அவர்களுக்கு மாற்று சிறுநீரகம் கிடைத்து அவர் நலமடையவும், பரிபூரண ஆரோக்கியத்துடன் இனி வாழ்நாளை கழிக்கவும், திரு.ராஜேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நோய்கள் உடல்நலமின்மை ஆகியவை நீங்கி அவர்கள் சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவும், நமது தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் ஏற்றம் பெறவும் அவர்கள் வாழ்வு சிறக்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜனவரி 26,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வடபழனியில் மலர் மாலை கடை வைத்திருக்கும் மணிகண்டன்!

14 thoughts on “கொடுத்ததற்கு ஒரு முறை… கொடுக்காததற்கு 100 முறை! ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

 1. ியர் சுந்தர்ஜி

  இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் நேதாஜி இருமுறை தங்கிய GANDHI PEAK வீட்டைச் சேர்ந்த திரு.தனஞ்ஜெயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

  சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வரும் திரு.கிருஷ்ணமூர்த்தி (48) அவர்களுக்கு மாற்று சிறுநீரகம் கிடைத்து அவர் நலமடையவும், பரிபூரண ஆரோக்கியத்துடன் இனி வாழ்நாளை கழிக்கவும், திரு.ராஜேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நோய்கள் உடல்நலமின்மை ஆகியவை நீங்கி அவர்கள் சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவும், நமது தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் ஏற்றம் பெறவும் அவர்கள் வாழ்வு சிறக்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.

  . திருஅங்கமாலை

  திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
  (நான்காம் திருமுறை)

  தலையே நீவணங்காய் – தலை
  மாலை தலைக்கணிந்து
  தலையா லேபலி தேருந் தலைவனைத்
  தலையே நீவணங்காய்.

  கண்காள் காண்மின்களோ – கடல்
  நஞ்சுண்ட கண்டன்றன்னை
  எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
  கண்காள் காண்மின்களோ.

  செவிகாள் கேண்மின்களோ – சிவன்
  எம்மிறை செம்பவள
  எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
  செவிகள் கேண்மின்களோ.

  மூக்கே நீமுரலாய் – முது
  காடுறை முக்கணனை
  வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
  மூக்கே நீமுரலாய்.

  வாயே வாழ்த்துகண்டாய் – மத
  யானை யுரிபோர்த்துப்
  பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
  வாயே வாழ்த்துகண்டாய்.

  நெஞ்சே நீநினையாய் – நிமிர்
  புன்சடை நின்மலனை
  மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
  நெஞ்சே நீநினையாய்.

  கைகாள் கூப்பித்தொழீர் – கடி
  மாமலர் தூவிநின்று
  பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
  கைகாள் கூப்பித்தொழீர்.

  ஆக்கை யாற்பயனென் – அரன்
  கோயில் வலம்வந்து
  பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
  வாக்கை யாற்பயனென்.

  கால்க ளாற்பயனென் – கறைக்
  கண்ட னுறைகோயில்
  கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
  கால்க ளாற்பயனென்.

  உற்றா ராருளரோ – உயிர்
  கொண்டு போம்பொழுது
  குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
  குற்றார் ஆருளரோ.

  இறுமாந் திருப்பன்கொலோ – ஈசன்
  பல்கணத் தெண்ணப்பட்டுச்
  சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
  கிறுமாந் திருப்பன்கொலோ.

  தேடிக் கண்டுகொண்டேன் – திரு
  மாலொடு நான்முகனுந்
  தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
  தேடிக் கண்டுகொண்டேன்.

  திருச்சிற்றம்பலம்

  நோய்கள் நீங்க
  நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
  நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
  அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
  சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
  ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
  பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
  ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
  முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.
  இதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

  நன்றி
  uma

 2. ‘இறைவா! எனக்கு நீ எதைக் கொடுத்தாயோ அதற்காக ஒரு முறை நன்றி கூறுகிறேன். எதைக் கொடுக்கவில்லையோ, அதற்காக நான் நூறு முறை நன்றி கூறுகிறேன்’ என்பது உள்ளார்ந்த அர்த்தமுள்ள பிரார்த்தனை.

  .நூறு சதவிதம் உண்மை
  அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன்

 3. சார், கடந்த 3 மாதங்களாக, இத்தளத்தை படித்துவருகிறேன். மிக அருமையான தகவல்களும், கருத்துக்களும் உள்ளது. மிக்க நன்றி. தங்களது சேவை தொடர வாழ்த்தும் உங்கள் சகோதரி.

 4. அன்புள்ள ராஜேஷ்

  உங்களை போல் எனக்கும் ஒரு சமயத்தில் எங்கள் குடும்பத்தில் ஒன்றன் பின் ஒன்றாக யாருக்கேனும் உடல் உபாதைகள் தந்துகொண்டே இருந்தன. இதற்காக நீங்கள் கவலை பட வேண்டாம், முடிந்தால் ஒரு முறை திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்டு அங்குள்ள குளத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக வெல்லக்கட்டியை கரைத்து வாருங்கள். நிச்சயம் உங்கள் பிணி தீரும். மேலும் முடிந்தால் திருப்தி சென்று உடல் போன்ற பொம்மு வாங்கி அதை ஸ்ரீ வாரி உண்டியலில் சேர்த்திடுங்கள்.

  முடிந்தால் தற்பொழுது உள்ள இடத்தை மாற்றி வேறு இடத்திற்கு மாறமுடியுமா என்று உங்கள் நலம் விரும்பிகளிடம் கேடு அதை செயுங்கள். நிச்சயமாக இட மாற்றம் ஒரு நல்ல திருபத்தை தரும்.

  கவலை வேண்டாம் இறைவன் அருள் நல்லவர்கள் பக்கம்.

  – tveraajesh, vellore

  1. நல்ல அற்புதமான எளிய பரிகாரம் TVE ராஜேஷ். இந்த கோரிக்கையை படிக்கும்போது உங்கள் நினைவு தான் வந்தது.

   நன்றிகள் பல!

   – சுந்தர்

 5. சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வரும் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மாற்று சிறுநீரகம் கிடைத்து அவர் நலமடையவும், பரிபூரண ஆரோக்கியத்துடன் இனி வாழ்நாளை கழிக்கவும்,

  திரு.ராஜேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நோய்கள் உடல்நலமின்மை ஆகியவை நீங்கி அவர்கள் சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவும்,

  நமது தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் ஏற்றம் பெறவும் அவர்கள் வாழ்வு சிறக்கவும் பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

 6. சுந்தர்ஜி

  “இறைவா! என்னால் எவற்றை மாற்ற முடியாதோ அவற்றை ஏற்கும் பக்குவமும், மாற்றக் கூடியவற்றை மாற்றும் ஆற்றலும், மாற்றக்கூடியது- மாற்ற முடியாதது குறித்த பகுத்தறிவையும் அருள்வீராக!’” – இதுதான் நமக்கு வேண்டிய சுருக்கமான ஆனால் அழுத்தமான ஆழமான பிரார்த்தனை! மிக சரியான வார்த்தைகளை கோர்த்து இருக்கிறீர்! நன்றி

  இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.தனஞ்செயா அவர்களோடு நாமும் அனைவருக்கும் பிரார்த்தனை செய்வோம்.

  தலைமைக்கும் பொது பிரார்த்தனைக்கும் சம்பந்தமுள்ள மாதிரியாகவும் உன்னதமான தலைமையும் வாரத்திற்கு வாரம் அமைந்து விடுவது நமது தளத்தின் சிறப்பு. சுந்தர்ஜியின் பெரும் உழைப்புக்கு கிடைக்கும் வெற்றி! நன்றி

 7. சுந்தர்ஜி,

  ிரு DHANAJAYAN AVARKALUKKU IN PANIVAANA VANAKKANGAL. AVAR INDHA VAARA THALAIMAI ERPATHU KURITHU MIKKA MAGIZHCHI.

  சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வரும் திரு.கிருஷ்ணமூர்த்தி (48) அவர்களுக்கு மாற்று சிறுநீரகம் கிடைத்து அவர் நலமடையவும், பரிபூரண ஆரோக்கியத்துடன் இனி வாழ்நாளை கழிக்கவும், திரு.ராஜேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நோய்கள் உடல்நலமின்மை ஆகியவை நீங்கி அவர்கள் சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவும், நமது தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் ஏற்றம் பெறவும் அவர்கள் வாழ்வு சிறக்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.

  Faith & Prayer both are invisible . But they make impossible things possible .

  நல்லதே நடக்கும்.

 8. அனைவருக்கும் என் மனமார்ந்த பிரார்த்தனைகளை ஆண்டவனின் பாதத்தில் வைக்கிறேன். நல்லதே நடக்கும்.

 9. தொடர்ந்து குடும்பத்தில் யாருகானும் உடல் பிணிகள் வருவது விலக :

  முதலில் குலதெய்வ பூஜை பண்ணுங்க.அதுக்கு மஹா சிவராத்திரி [27-2-14]உகந்த நாள் ……அப்புறம் முன்நோர் பூஜா பண்ணுங்க …மூதாதையர் பூஜை பண்ண தை அம்மாவாசை [30-1-14]ரொம்ப நல்ல நாள் ….அப்புறம் டெய்லி சாப்பிடும் முன் காக்கைக்கு உணவிடுங்க [அதில் எள் கலந்து வைங்க ]…

  உங்க ஊர் திருப்பத்தூர் திருதளி நாதர் திருகோயில் யோகா பைரவருக்கு திங்கள் கிழமை மாலை 7 மணி அளவில் வெண் பூசணியில் நெய் விட்டு தொடர்ந்து 8 வாரம் தீபம் ….

 10. சிறுநீரக நோயால் படும் அவதி நீங்க :

  அப்புறம் ஊட்டத்தூர்[திருச்சி சமயபுரம் அருகில் உள்ளது ] அகிலாண்டேஸ்வரி சுத்தரத்னேஸ்வரர் திருகோயில் சென்று சுவாமி அம்பிகை ,பின்பு பஞ்சநதக் கல்லால் செய்யப்பட்ட நடராஜப்பெருமானை தரிசித்து, வெட்டிவேர் மாலை சாத்தி தினமும் அந்த வெட்டிவேர் போட்ட நீரை அருந்த நோய் குணமாகும் .மரணத்திற்கு அஞ்சி வாழ்வோர், கடுமையான நோய்க்கு ஆட்பட்டோர்,ஊட்டத்தூர் ஸ்ரீ பைரவருக்கு சந்தன காப்பிட்டு அதில் மாதுளை முத்துக்களை பதித்து ஸ்ரீகாலாஷ் டகத்தை ஓதி,முழு முந்திரி கலந்த உணவை தானம் அளித்து நிவர்த்தி பெறலாம்.

  அப்புறம் திருச்சி ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோயிலில் உள்ள தன்வந்திரி பகவானுக்கு அபிசேகம் செய்து ,நெய் தீபம் ஏற்றி வழி படுங்கள் .சிறுநீரக நோயிலிருந்து விடு படலாம் …

 11. குடும்பத்தில் தொடர்ந்து வரும் உடல் பிணிகள் நீங்க :

  குலதெய்வ
  பூஜை
  பண்ணுங்க
  ..சிறந்த
  நாள்
  27-2-14 சிவராத்திரி
  அன்று….
  .
  பிதுரு பூஜை பண்ணுங்க…சிறந்த நாள் 30-1-14 தை அம்மாவாசை அன்று…டெய்லி காக்கைக்கு எள் கலந்து உணவிடுங்க ….

  உங்கள் ஊர் திருப்பத்தூர் பைரவரை 8 வாரம் திங்கள் அன்று மாலை வெண் பூசணி யில் தீபம் இயற்றி வழிபடுங்கள் .

  சிறுநீரக நோயால் படும் அவதி நீங்க :

  இந்த திருமுறை பாடலை 48 நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வாங்க ….
  “அடியேன் படுதுயர் களையாய்
  பாசுப தாபரஞ் சுடரே”

  திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
  சீருடைக் கழல்களென் றெண்ணி
  ஒருவரை மதியா துறாமைகள் செய்து
  மூடியும் உறைப்பனாய்த் திரிவேன்
  முருகமர் சோலை சூழ்திரு முல்லை
  வாயிலாய் வாயினால் உன்னைப்
  பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
  பாசுப தாபரஞ் சுடரே.

  கூடிய இலயம் சதிபிழை யாமைக்
  கொடியிடை உமையவள் காண
  ஆடிய அழகா அருமறைப் பொருளே
  அங்கணா எங்குற்றா யென்று
  தேடிய வானோர் சேர்திரு முல்லை
  வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
  பாடிய அடியேன் படுதுயர் களையாய்
  பாசுப தாபரஞ் சுடரே.

  விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
  வெருவிட வேழமன் றுரித்தாய்
  செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
  வாயிலாய் தேவர்தம் மரசே
  தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
  சங்கிலிக் காஎன்கண் கொண்ட
  பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
  பாசுப தாபரஞ் சுடரே.

  பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
  பொறிவரி வண்டிசை பாட
  அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
  அலவன்வந் துலவிட அள்ளல்
  செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
  வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
  பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
  பாசுப தாபரஞ் சுடரே.

  சந்தன வேருங் காரகிற் குறடுந்
  தண்மயிற் பீலியுங் கரியின்
  தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
  கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
  வந்திழி பாலி வடகரை முல்லை
  வயிலாய் மாசிலா மணியே
  பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
  பாசுப தாபரஞ் சுடரே.

  மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
  வள்ளலே கள்ளமே பேசிக்
  குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
  கொள்கையால் மிகைபல செய்தேன்
  செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
  திருமுல்லை வாயிலாய் அடியேன்
  பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
  பாசுப தாபரஞ் சுடரே.

  மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
  வார்குழல் மாமயிற் சாயல்
  அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
  அருநடம் ஆடல றாத
  திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
  செல்வனே எல்லியும் பகலும்
  பணியது செய்வேன் படுதுயர் களையாய்
  பாசுப தாபரஞ் சுடரே.

  நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
  நாயினேன் தன்னையாட் கொண்ட
  சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்
  தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
  செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
  தேடியான் திரிதர்வேன் கண்ட
  பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
  பாசுப தாபரஞ் சுடரே.

  மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
  மாணிதன் மேல்மதி யாதே
  கட்டுவான் வந்த காலனை மாளக்
  காலினால் ஆருயிர் செகுத்த
  சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
  செல்வனே செழுமறை பகர்ந்த
  பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
  பாசுப தாபரஞ் சுடரே.

  சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
  சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
  டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
  டருளிய இறைவனே என்றும்
  நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
  நாதனே நரைவிடை ஏறீ
  பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
  பாசுப தாபரஞ் சுடரே.

  விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
  வெருவிட நீண்டஎம் மானைத்
  திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
  செல்வனை நாவலா ரூரன்
  உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்
  உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
  நரைதிரை மூப்பும் நடலையு மின்றி
  நண்ணுவர் விண்ணவர்க் கரசே.

  திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *