Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > தாங்க முடியாத சுமையும் கிடைப்பதர்க்கரிய பொக்கிஷமும்!

தாங்க முடியாத சுமையும் கிடைப்பதர்க்கரிய பொக்கிஷமும்!

print
நாம் சாபமாக கருதும் பல விஷயங்கள் உண்மையில் ஆண்டவன் நமக்கு தரும் வரங்களே. ஆனால் அதன் பேக்கேஜிங்கை பார்த்து தான் நாம் ஏமாறுகிறோம்.

பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார்.

அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது.

கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதித் தான் அவள் கேட்டாள். ஆனால் கேட்டது அந்த மாயாவியிடமாயிற்றே ? அவன் சும்மா விடுவானா?

அந்த பெண்ணிடம் அவள் அதிர்சியடையும் விதம், ஒரு கோணிப்பையை கொடுத்து, “நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் இதை தூக்கி கொண்டு வா. அது போதும். நம் கண்களை தவிர வேறு யார் கண்ணிற்கும் இந்த கோணிப்பை தெரியாது!” என்கிறார்.

வேறு எதையோ எதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு கடும் அதிர்ச்சி. கிருஷ்ணர் இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டை தருவார் என்று அப்பெண் எதிர்பார்க்கவில்லை.

அவருடனே தூக்கி கொண்டு நடக்கும் அளவிற்கு அதனுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க அந்த பெண்ணிற்கு ஆசை. ஆனால் கட்டுக்களை அவிழ்த்து பார்க்க முடியாதபடி மிகவும் பலமாக அது கட்டப்பட்டிருந்தது.

எனவே தாம் அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க பகவான் விரும்பவில்லை என்று தெரிந்துகொள்கிறாள் அந்த பெண். திறந்து பார்க்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு கடவுளின் கட்டளைப்படி அதை தூக்கி சுமந்து அவர் செல்லுமிடங்கள் எல்லாம் செல்கிறாள்.

நேரம் செல்ல செல்ல, ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் அந்த மூட்டையை தூக்க முடியவில்லை.

“கிருஷ்ணா உன் கட்டளையை எதிர்பார்த்து உனக்கு பணி செய்ய வந்தேன். நீ என்னடாவென்றால் சுமக்க முடியாத ஒரு அழுக்கு மூட்டையை என்னிடம் தந்து விட்டாயே… கருணை கடலுக்கு இது அடுக்குமா??” என்று கோபித்துகொள்கிறாள்.

“உன் பலவீனத்தில் என் பலம் அடங்கியிருக்கிறது. கவலைப்படாதே உன் பக்கம் நானிருக்கிறேன். தைரியமாக நான் கூறும் வரை சுமந்துவா” என்கிறார் கிருஷ்ணர்.

மேலும் சில காலம் சென்றது.

சில இடங்களில் அவளால் தூக்க முடியாத போது கிருஷ்ணரும் தானும் தன் பங்கிற்கு ஒரு கை பிடித்து தூக்கி அந்த சுமையை பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாள் அவர்கள் போய் சேரவேண்டிய இடம் வந்தது.

“போதும் நீ சுமந்தது. அந்த மூட்டையை இறக்கி வை!!” என்று கிருஷ்ணர் கட்டளையிட, அந்த மூட்டையை பகவானின் முன் கீழே வைக்கிறாள் அந்த பெண்.

“மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா?” என்று பகவான் புன்முறுவல் செய்தபடி கேட்க, அந்த பெண் அதற்காகவே  காத்திருந்த அந்த பெண் “சீக்கிரம் கிருஷ்ணா” என்கிறாள் உரக்க.

கிருஷ்ணர் தனது புல்லாங்குழலை அசைக்க முடிச்சுக்கள் தானே அவிழ்ந்து மூட்டை தானே பிரிந்து கொள்கிறது. முதலில் கண்ணில் தெரிவது வைக்கோல் தான். ஆனால் வைக்கோல்களுக்கிடையே அரிய மாணிக்கங்களும் வைர வைடூரியங்களும், பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன. தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடிய பொக்கிஷம் அது!!

“இத்தனை காலம் பொறுமையுடன் நீ  காத்திருந்தமைக்காக உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள்!!”

அந்த பெண்ணுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சி இன்ப அதிர்ச்சியாகி கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

“கிருஷ்ணா……. என்னை மன்னித்துவிடு” என்று அவர் காலில் விழுகிறாள்.

“அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இந்த பாவி இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தை புரிந்துகொண்டு நான் இருந்திருந்தால் இந்த பொக்கிஷத்தின் பாரம் எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ புகார் செய்திருக்கவோ மாட்டேனே…” என்று அவள் உருக கிருஷ்ணர் தனக்கே உரிய சிரிப்பை உதிர்க்கிறார்.

ஒவ்வொரு சுமையும் அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் உங்கள் கைகளில் தான் அது உள்ளது. பார்க்கும் பார்வை தான் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும். எனவே அவனை நம்புங்கள். முழுமையாக.

தெய்வீகக் குழந்தை சபரி வெங்கட்!

குழந்தை கேட்டு தெய்வம் மறுக்குமா?

சமூக சேவகர் மணிமாறனை அடுத்து இந்த முறை பிரார்த்தனை கிளப்பில் நம்முடன் தெய்வீக குழந்தை ஒன்று இணையவிருக்கிறது. பெயர் சபரி. வயது 10.

சாட் சாத் சுவாமி விவேகானந்தரே விழிகள் இழந்த குழந்தையை வழி நடத்திக்கொண்டிருக்கிறார். ஆம் இந்த குழந்தைக்கு இரு கண்களிலும் பார்வை கிடையாது.

பார்வையில்லாவிட்டால் என்ன இறைவன் வழங்கிய ஞானம் இருக்கிறதே. கோவை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்துவரும் இந்த சிறுவன் ஆன்மீக சொற்பொழிவுகளில் பட்டையை கிளப்பி வருகிறார். (நமது தளம் சார்பாக செப்டம்பர் நடைபெறவுள்ள ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினர் இவர் தான்!) நமது விரைவில் தளத்தில் முழு தகவலும் வரவிருக்கிறது. (தெய்வீகக் குழந்தையை ‘அவன்’, ‘இவன்’ என்று ஒருமையில் அழைக்க எனக்கு எனக்கு என்னவோ போலுள்ளது.)

சபரியும் நானும் அடிக்கடி அலைபேசியில் பேசுவது வழக்கம். நம் பிரார்த்தனை கிளப் பற்றி சபரியிடம் சொல்லி அவரையும் இதில் இணைத்திருக்கிறேன். இனி வாரந்தோறும் சபரியும் நம்முடன் பிரார்த்தனை செய்யவிருக்கிறார்.

குழந்தை கேட்டு தெய்வம் மறுக்குமா?

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

=========================================================

நல்ல வேலையும் சுபிட்சமும் வேண்டும்!

நம் தளத்தின் வாசகி இவர். பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மிகுந்த போராட்டத்திற்கு இடையே என்ஜீனியரிங் படிப்பை சென்ற ஆண்டு முடித்துள்ள இவருக்கு தகுதிகேற்ப வேலை கிடைக்கவில்லை. ஒரு சாதாரண ஒப்பந்த வேலையில் தற்போது பணிபுரிந்து வருகிறார். இவரின் நிச்சயமற்ற எதிர்காலத்தால் இவரது பெற்றோரின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்பம் மிகவும் வறுமையில் வாடுகிறது. 3 ஆம் ஆண்டு என்ஜினீயரிங் படிக்கும் தனது தங்கையின் கல்விக்கட்டணத்தை கூட கட்ட முடியாது தவிப்பதாக தெரிகிறது.

இவருக்கு நல்ல வேலை கிடைக்கவும் அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீரவும் எல்லா வல்ல இறைவனை வேண்டுவோம்.

(இவரது வேலை தொடர்பாக நண்பர்களிடம்  பேசியிருக்கிறோம். இவருக்கு இவரது திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப நல்ல இடத்தில் வேலை பெற்று தர  ஐ.டி. துறையில் உள்ள நம் நண்பர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி! இறைவன் துணையிருந்து இவரது துயரை துடைக்க உதவ வேண்டும்).

=========================================================

மங்களம் பொங்கி மறுவாழ்வு அமையவேண்டும்!

அன்புள்ள சுந்தர் அவர்களுக்கு,

தங்கள் ரைட் மந்திரா மூலம் மஹா பெரியவரின் மகிமைகளை படிக்கும் பாக்கியம் பெற்றேன். மிக்க நன்றி.

நான் கணவனை இழந்து என் இரு சிறு குழந்தைகளை பெற்றோரிடம் விட்டு வேலைக்கு சென்று வருகிறேன்.  எனக்கு மறுவாழ்வு அமைய (என் குழந்தைகளை நன்றாக பார்த்துகொள்பவரோடு) மஹா பெரியவரிடம் கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு வேண்டி கேட்டுக்கோள்கிறேன்.

என் பெயர் : ராதா

குழந்தைகள் பெயர்கள் : ராகுல் , பிரீத்தி.

நன்றி,
ராதா

=========================================================

சகோதரி நலம் பெறவேண்டும் !

எனது சகோத்ரி திருமதி கீதா சந்திரன், கடந்த 4 வாரங்களாக  செட்டி நாடு மருத்துவ மனையில் ICU வில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்..

தீவிர் மருத்துவ சிகிச்சை மருத்துவர்கள் அளித்துவருகிறார்கள். அவர்கள் நலமடைந்து வீடு திரும்ப நமது பிரார்த்தனை கிளப் மூலமாக

பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்.

அன்பே சிவம்.
– சிவகுமார்
=========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

நம் வாசகிக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கவவும், ராதா அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்து அவரது குழந்தைகளுக்கு அன்பான ஒரு தந்தை கிடைக்கவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் திரு.சிவக்குமார் அவர்களின் சகோதரி திருமதி கீதா சந்திரன்நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : ஜூலை 14, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

 

18 thoughts on “தாங்க முடியாத சுமையும் கிடைப்பதர்க்கரிய பொக்கிஷமும்!

  1. அற்புதமான கதைமூலம் இறைவன் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் அளவிலா அன்பை புரிய வைத்துவிட்டீர்கள் சுந்தர். நானும் பல முறை அந்த ஏழை பெண்ணைப்போல் புலம்பி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு நிகழ்வின் மூலமாகவோ அல்லது மற்றவர்களின் அனுபவம் மூலமாகவோ கடவுள் என் மனதில் உள்ள கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறார். இந்த முறை ரைட் மந்த்ரா சுந்தர் மூலம் என்னை மீண்டும் தெளிவு பெற வைத்திருக்கிறார்.

    இந்த வாரம் கோரிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஆண்டவன் அருள்மூலம் நல்லது நடக்க பிரார்த்தனை செய்கிறேன்.

    சென்ற வாரம் என் நண்பர் கணபதி சுப்ரமணியம் அவர்களுக்க பிரார்த்தனை செய்த அனைத்த நல்ல உள்ளங்களுக்கும், சுந்தருக்கும் மனமார்ந்த நன்றி.

  2. சுமை என்று நினைத்தால் சுமை பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம் அருமையான வரிகள் என்றென்றும் என்மனதில் அழியாத வரிகள் வாழ்த்துக்கள் நன்றி சுந்தர் சார்

  3. இந்த வாரம் பிரார்த்தனையில் இடம் பெற்றுள்ள நம் வாசகிக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கவவும், ராதா அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்து அவரது குழந்தைகளுக்கு அன்பான ஒரு தந்தை கிடைக்கவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் திரு.சிவக்குமார் அவர்களின் சகோதரி திருமதி கீதா சந்திரன்நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவும் வேண்டி மனமுருக பிரார்த்தனை செய்வோம்.

    இறைவன் எல்லோருக்கும் அரும்பெரும் பொக்கிஷத்தை கொடுபதற்க்கு உள்ளார் எனவே நாமும் இறைவனை சந்தேகிக்காமல் நோக்கத்தை புரிந்துகொண்டு அவன் கொடுக்கும் பாரத்தை இன்பமாய் சுமப்போம்.

    சாக்ஷாத் கோகுல கண்ணனை போன்று உள்ளார் சபரி வெங்கட். கண்கள் பனிக்கின்றது. அந்த தெய்வ குழந்தை ஒளி பெற வேண்டியும் பிரார்த்தனை செய்வோம்.

  4. எதிர்பாராத சமயத்தில் எதிர்பார்த்த தகவல் அடங்கிய கருத்துக்கள்
    தாங்க முடியாத சுமையை ஏன் கொடுத்தாய் என்று பலமுறை கடவுளிடம் கேட்டதற்கு பதில் கொடுத்து விட்டிர்கள்.
    ஒவ்வொரு சுமையும் அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் உங்கள் கைகளில் தான் அது உள்ளது. பார்க்கும் பார்வை தான் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
    உண்மை உண்மை
    பொறுமைக்கு உள்ள பரிசாக இந்த கதையும் கருத்தும் அமைந்துள்ளது.
    இந்த வார பிரார்த்தனை உள்ள அனைவருக்கும் அவரவர் செயல் நல்லவிதமாக முடிய நானும் பிரார்த்திகிறேன்.

  5. ஆண்டு விழா சூப்பர் ஸ்டார் சூப்பர்.
    அந்த கண்ணனை போலவே இருக்கிறார்.
    தெய்வ கடாட்சம் நிரம்பிய குழந்தை

  6. “//அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இந்த பாவி இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தை புரிந்துகொண்டு நான் இருந்திருந்தால் இந்த பொக்கிஷத்தின் பாரம் எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும்.// .
    இந்த பொறுமை இல்லாத குணம்தான் சார் நம்மவரில் அனைவரிடமும் உள்ளது .ஆண்டவன் எப்போ எப்படி எதை கொடுக்க வேண்டுமோ அப்போ அதை அப்படி கண்டிப்பா கொடுப்பார்.. அதுவரை தேவை பொறுமை மற்றும் விடா முயற்சி மட்டும் தான் ..

    நம் வாசகிக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கவவும், ராதா அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்து அவரது குழந்தைகளுக்கு அன்பான ஒரு தந்தை கிடைக்கவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் திரு.சிவக்குமார் அவர்களின் சகோதரி திருமதி கீதா சந்திரன்நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் –

  7. சுந்தர்ஜி,

    போன வாரம் தலைப்பு …………………

    ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா….

    அதற்க்கு தகுந்த விடை இந்த வாரம் கிடைத்து விட்டது.

    nandri

  8. எதை நீ தேடி செல்கிறாயோ, அது உனக்கு கிடைக்கும்…

    என்னெனில், அப்படி…. நான் தேடியதும் இது தான்.

    அது Right mantra ……..

    நன்றி !!!

  9. சொல்லனும்னு நினைக்குற எல்லாமே நம்ம வாசகர்கள் சொல்லிட்டாங்க. இந்த வாரம் எல்லோருக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம். நம் எல்லோருக்கும் வேண்டும் எல்லாம் தர ஆண்டவனை வேண்டுவோம். ஆண்டு விழா பற்றி விவரம் தெரிவிக்கவும். மிக்க நன்றி.

    1. திருவருள் துணைக்கொண்டு நம் தளத்தின் ஆண்டுவிழா செப்டம்பர் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரம் நடைபெறவுள்ளது. நிச்சயம் ஞாயிற்று கிழமை மாலை தான் நடைபெறும். விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

      – சுந்தர்

  10. சார்
    ரொம்ப ரொம்ப உணர்வு பூர்வமான செய்திகள்.

    கடவுள் நமக்கு கஷ்டத்தை தரும் பொது ஏற்று கொள்ள வேண்டும். கண்டிப்பாக ஒரு நல்ல பலன் உண்டு. இனிமேல கஷ்டம் வந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன் கவலை பட மாட்டேன்.

    நம் வாசகிக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கவவும், ராதா அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்து அவரது குழந்தைகளுக்கு அன்பான ஒரு தந்தை கிடைக்கவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் திரு.சிவக்குமார் அவர்களின் சகோதரி திருமதி கீதா சந்திரன்நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் –
    அந்த கண்ணனை போலவே இருக்கிறார் சபரி வெங்கட் .

    நன்றி
    selvi

  11. டியர் சுந்தர்ஜி மற்ரும் ரைட் மந்த்ரா நண்பர்களுக்கு,

    பிரார்த்தனை க்ளப் பிரார்தனைகள் நிறைவேர நானும் என்னால் முடிந்த அளவு வேண்டிகொண்டு இருக்கேன். எனக்காக பிரார்த்தனை செய்யும் அனைவர்க்கும் குருவருளும் திருவருளும் ஒருங்கே சித்திக்கட்டும்.

    சபரியை பற்றி படித்ததும் என் பிராத்தனை இந்த வாரம் இடம்பெற்றதும் எனக்கு என் பிரார்த்தனை நிறைவேறி விட்டது போல் தெரிகிறது.

    சபரி படிக்கும் பள்ளியில் தான் என் மகனை(ராகுல் ) 6ம் வகுப்பு(ஆங்கில வழி ) ஒரு மாதம் முன்பு விடுதியில் தங்கி படிக்கும்படி நானும் என் தந்தையும் சேர்த்துள்ளோம். ஆனால் சபரியை பற்றி தெரியவில்லை. நன்றி சுந்தர். மீண்டும் விசிட் டே அன்று என் மகனை சந்திக்க செல்லும்போது விசாரிக்கிறன். காரணத்தோடு தான் என் குடும்பத்தை ரைட் மந்தராவில் பெரியவா இணைத்துள்ளார் என நினைக்க தோன்றுகிறது. மெய் சிலிர்க்கிறது. ஏன் என்றால் என மகன் அந்த பள்ளியில் சீட் கிடைக்க என்னுடன் அண்ணாமலை கிரிவலம் வந்தான். என் மகளும்(2ம் வகுப்பு) ஒரு தந்தைக்காக கிரிவலம் வந்தாள்.

    1. சிலிர்க்க வைக்கும் தகவல்.
      நன்றி ராதா அவர்களே

      குருவருளின்றி திருவருள் ஏது?
      எல்லாம் அவன் செயல்.
      – சுந்தர்

  12. Inspirational thought .
    Will try to face every happenings in my life with the same thought .

    Awesome Sabari Venkat.
    We inspired!!!

    May this prayer brings Good to all
    Awaiting for Annual day (Right Mantra )

    Thankyou sundar JI

  13. \\\ ஒவ்வொரு சுமையும் அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் உங்கள் கைகளில் தான் அது உள்ளது\\\

    எவ்வளவு பெரிய விஷயத்தை,ஆழ்ந்த கருத்துக்கள்,சிம்பிள் ஆகா சொல்லிவிட்டீர்.
    ==============================================================
    ஒரு நெய் வியாபாரி கலப்பட நெய் விற்றதாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். நீதிபதி அவருக்கு மூன்று விதமான தண்டனை விதித்தார். கலப்படம் செய்த நெய் முழுவதையும், வியாபாரியே குடிக்க வேண்டும், அல்லது 20 கசையடி பெற வேண்டும் , இரண்டும் முடியாவிட்டால் பத்து லட்சம் அபராதம் கட்ட வேண்டும்.
    “பத்துலட்சத்தை விடுவதாவது!’ என நினைத்த வியாபாரி, நெய்யைக் குடித்து விடுவதென முடிவெடுத்தார். ஓரளவு குடித்ததுமே நாற்றம் குமட்டியது. அதற்கு மேல் முடியவில்லை. எனவே, கசையடி வாங்கிக் கொள்வதாக அறிவித்தார்.
    கசையடி சுள் சுள்ளென விழவே, “”ஐயோ! அம்மா!” என அலறினார் . பதினைந்து அடி வாங்கியபிறகு, இறந்து விடுவோம் என பயந்து, அடியை நிறுத்தச் சொன்னார். பத்து லட்சத்தை அபராதம் கட்டிவிட்டு தப்பித்தால் போதுமென ஓடினார்.
    இப்படித்தான் அநேகர் இருக்கின்றனர். துன்பத்தின் ஆரம்பக்கட்டத்திலேயே, அதைப் போக்குவதற்கு கடவுளிடம் கேட்பதில்லை. தங்களால் தாங்க முடியாதென்ற நிலை வந்ததும், “கடவுளே! காப்பாற்று’ என கோயிலை நோக்கி ஓடுகிறார்கள் துன்பத்தின் துவக்க கட்டத்திலேயே “”கடவுளே! எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொள், ” என அவனிடம் சரணடைந்து விட வேண்டும். சரி தானே! எல்லாம் அவன் செயல் .அவன் நடத்தும் நாடகத்தில் அவன் கொடுக்கும் பாத்திரத்தில் நடித்துதான் ஆகவேண்டும்.சுந்தர் ஜி சென்ற பதிவில் சொன்னது போல் ஆனா பார்த்து… எனக்கு அதிகம் தெம்பில்லை” என்று அவனிடம் தஞ்சம் புகுவதை தவிர வேறு வழி இல்லை .

    -மனோகர்

    1. அருமையான கதை. பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த கதையில் உள்ள நெய் வியாபாரியை போலத் தான் நாமும் பல சமயங்களில் நடந்துகொள்கிறோம் என்பதில் மறுப்பேதும் இல்லை.
      – சுந்தர்

  14. கிருஷ்ணரை பற்றிய தகவல்கள்
    கிருஷ்ணர் நம்மிடம் அன்பையே எதிர்பார்க்கிறார்.
    கிருஷ்ணரிடம் நாம் அன்போடு எதை கொடுத்தாலும் அதை ஏற்று கொள்கிறார்.
    இதற்கு 2 உதாரணங்கள்:
    1) மகாபாரதத்தில் கிருஷ்ணர் விதுரரின் வீட்டில் விருந்துக்கு வந்த பொழுது விதுரரும் அவரது மனைவியும் மிகவும் பக்தியோடு(அன்போடு) கவனித்தார்கள். விதுரரின் மனைவி கிருஷ்ணருக்கு வாழைபழம் தோல் உரித்து பலத்தை கொடுபதற்கு பதிலாக கிருஷ்ணா உணர்வில் தோல் கொடுத்து விடுகிறாள். அந்த சமயம் விதுரர் அதை தடுக்க நினைக்க கிருஷ்ணர் விதுரரை தடுத்து வாழை பழ தோலை ஏற்றுகொள்கிறார்.
    2) இதே போல் கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும் பொழுது பழக்காரி ஒருத்தி கூடையில் பழங்களை கொண்டு வந்து விற்க வருகிறாள். அப்பொழுது கிருஷ்ணர் ஒரு பழத்தை கேட்க அவளும் அன்போடு கொடுக்கிறாள். உடனே அவள் பழக்கூடை முழுவதும் பொன்,மாணிக்கங்கள் என்று நிரம்பி விடுகிறது.

    கிருஷ்ணரை பற்றிய தகவல்களை கேட்க கேட்க மிகவும் ஆனந்தமாக இருக்கும். இதற்கு வெளியில் கோடி கோடி யாக பணத்தை செலவளித்தாலும் இவ்வளவு சந்தோசம் கிட்டாது.
    கிருஷ்ணரின் பற்றிய தகவல்கள்(ஸ்ரீமத் பாகவதம் ),கிருஷ்ணரின் அறிவுரைகள்(பகவத் geethai), அவரின் நாமத்தை சொல்ல வரியோ பணமோ தேவையில்லை. ஆனால் மகிழ்ச்சி அடைவோம்

  15. நமக்கான சுமைகளை இறைவன் பார்த்து பார்த்து வடிவமைக்கின்றான் – இதன் பொருள் அவர் நம்மை கஷ்டப்படுத்தி பார்க்கிறார் என்பதல்ல – நாம் இறைவன் மீது வைத்திருக்கும் பக்திக்கும் நம்பிக்கைக்கும் நடக்கும் சிறு சோதனை – புராண காலங்களில் ஒவ்வொரு முனிகளும் ரிஷிகளும் தாம் வேண்டிய வரத்தை பெற எத்தகைய தவங்கள் செய்திருக்கிறார்கள் என்று நாம் அனைவரும் படித்திருப்போம் – அவர்களுக்கு முன் அற்ப மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம் – சுமைகளையும் சோதனைகளையும் தடைக்கர்க்கலாக கருதாமல் படிக்கற்களாக மாற்றும் வழிமுறையை கண்டறிந்து முழுமனதோடும் நம்பிக்கையோடும் அந்த பரம்பொருளை மனதில் நினைத்து நமது கடமையை செய்வனே செய்வோமேயானால் எல்லாம் வல்ல அந்த இறைவன் நமக்கு என்றென்றும் துணை இருந்து சரியான தருணத்தில் நமக்கு அபயம் அளித்து நம்மை காப்பார்

    நம்பிக்கையோடு பக்தி செய்வோம்
    பரம்பொருளின் பாதம் பணிவோம்
    வரும் துயரை துரத்தி அடிப்போம் !!!

Leave a Reply to Udhaya Kumar R Cancel reply

Your email address will not be published. Required fields are marked *