டூ-வீலர்ல போறதுக்கு கேக்குற லிப்ட் கூட நம்பிக்கையோட கேக்குறவங்களுக்கு தான் கிடைக்குது. பிரார்த்தனை எவ்ளோ பெரிய விஷயம்? அவநம்பிக்கையோட செய்யலாமா?
அரைகுறை நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைகள் பயனற்றவை. ஆண்டவனை நம்புங்க. உங்கள் பாரத்தை அவன் மேல இறக்கி வைங்க. அதுக்கு பிறகு நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையை செய்ங்க. அவனாச்சு நீங்க இறக்கி வெச்ச பிரச்னையாச்சு….
“வண்டியில தான் ஏறிட்டீரே… பாரத்தை இறக்கி வைக்க வேண்டியது தானே?”
தூக்க முடியாத பாரத்தை தூக்கிகிட்டு ஒருத்தரு வெயில்ல நடந்து போய்கிட்டுருந்தாரு. இன்னும் ரொம்ப தூரம் போகணும்…. வெயிலோ அடி கொளுத்துது. இதுல இவர் தூக்கிட்டு இருக்குற சுமை வேற…. எப்படியிருக்கும்?
“சர்வேஸ்வரா…. இப்படி என்னை வெயில்ல போட்டு வாட்டுறியே… என்ன பாவம் செஞ்சேன்?” அப்படின்னு புலம்பிகிட்டே நடக்குறாரு மனுஷன்.
வேகமா போன ஒரு மாட்டு வண்டிக்காரன் இவரை பார்த்து பரிதாபப்பட்டு வண்டியில இவரை ஏத்திக்கிறான். சந்தோஷமா வண்டியில ஏறி உட்கார்ந்தவரு அதுக்கு பிறகும் பாரத்தை இறக்கி வைக்காம இவரே சுமந்துகிட்டு வந்தாரு.
வண்டிக்காரன் இவரை விசித்திரமா பார்த்தான். “ஏனய்யா… வண்டியில தான் ஏறிட்டீரே… பாரத்தை இறக்கி வைக்க வேண்டியது தானே? அதை இன்னும் ஏன் சுமக்கிறீர்?” அப்படின்னு கேட்க….
அதுக்கு இவர் “ஐயா… நீங்க இடம் கொடுத்தது எனக்கு தானே தவிர என் பாரத்துக்கு இல்லை. அதை நான் தானே சுமக்கனும்?” அப்படினாராம்.
இப்படிதாங்க நம்மில் பலரும் செய்றோம்.
ஆண்டவனை நம்பினோமா? பாரத்தை அவன் மேல வெச்சிட்டு நாம பாட்டுக்கு போய்கிட்டே இருக்கணும். அவனை நம்பி பாரத்தை ஒப்படைச்ச பிறகும் நாம அதை தூக்கிட்டு திரிஞ்சா எப்படி?
நம்புனவங்களை கைவிடுறது எல்லாம் மனுஷனுக்கு தாங்க பொருந்தும். கடவுளுக்கு இல்லை. So, நம்பிக்கையோட பிரார்த்தனை பண்ணுங்க. எல்லாம் நல்லபடியா முடியும்!!
அடுத்த வாரம் பிரார்த்தனையை பத்தி இன்னொரு முக்கிய விஷயத்தை சொல்றேன்…. நிச்சயம் உங்களோட எண்ணங்களில் மிகப் பெரிய மாற்றத்தை அது ஏற்படுத்தும்.
நெகிழவைத்த மின்னஞ்சல்….
இந்த வாரத்திற்கான கோரிக்கைகளை தேர்ந்தெடுத்து இறுதி செய்து பதிவை டைப் செய்துகொண்டிருந்தபோது சரியாக காலை 6.05 மணிக்கு பிரேமவாசத்திலிருந்து (www.premavasam.org) மின்னஞ்சல் வந்தது. அவர்களிடமிருந்து அடிக்கடி மின்னஞ்சல் வரும். சிறிய, பெரிய சந்தோஷத்தை நெகிழ்ச்சியை நம்மிடம் பகிர்ந்துகொள்வார்கள்.
பிரார்த்தனைக்கான பதிவை தயார் செய்யும்போது சரியாக மின்னஞ்சல் வந்ததால் அதையும் சேர்த்து தந்திருக்கிறேன். அது தான் திருவுள்ளம் போல….
அந்த குழந்தையை பாருங்கள்…. நமக்கிருக்கும் பிரச்னைகள் எல்லாம் ஒரு பிரச்னைகளா?
(பிரேமவாசம் மற்றும் அவர்கள் ஆற்றி வரும் அருந்தொண்டு பற்றி விரிவான பதிவு வரும்!)
இந்த வார கூட்டுப் பிரார்த்தனைக்கான கோரிக்கைகள்
================================================================
இருதய அறுவை சிகிச்சை
என்னுடைய மாமியார் திருமதி.மாதா அம்மாள் அவர்களுக்கு சென்னை போத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வயது 65.
அவர்கள் நல்லபடியாக குணமாகி, உடல் நலமாக இருக்க வேண்டி பிராத்தனை செய்யவும்.
சௌ.சிவ சங்கர், சிவகாசி
விருதுநகர் மாவட்டம்
================================================================
Family harmony
Dear Sir,
My name – Saravanan.J and my wife name – Satya
Me and my wife are separated because of misunderstanding. My child’s future is in shambles.
My Child name – Srikawin.S
Please pray ( Sunday Schedule ) for our family unity and health. Expecting your help.
Saravanan.J
================================================================
Yet another flower in our garden!
Dear Sundar sir,
Best wishes from Prema Vasam!
On 15th of March, we have received one more special child Baranika hardly six months old, she is in that room under the care of Karpagamakka with a rare syndrome called “Lobstein Syndrome” or “osteogenesis Imperfecta”, we need to update ourselves in the internet how to look after her properly. One thing for sure she needs plenty of love and care. Further she has to be handled with much care because she is so fragile. Her bones are so tender, it breaks easily. Even we could see there are broken pieces in the right hand, when we touch her right hand she cries, so sad to see the tears rolling down from the angelic face. Though we repeatedly said no but after seeing her miserable condition trusting God we have accepted her happily.
One of our special children Sharmila needs cardiac care, do remember her during the moments of grace. The scan report reveals that Atrial Septal Defect (ASD) measures 9 mm in her heart. There is a rare chance of auto healing, please pray for her.
www.premavasam.org
================================================================
இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிவகாசியை சேர்ந்த திரு.சிவசங்கர் அவர்களின் மாமியார் திருமதி.மாதா அம்மாள் அவர்கள் பூரண நலம் பெற்று ஆரோக்கியத்துடன் மருத்துவமனையில் இருந்து திரும்ப வேண்டியும், பிரிந்து வாழ்ந்து வரும் சரவணன்-சத்யா தம்பதியினர் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையுடன் சேர்ந்து வாழவும், கேள்விக்குறியாய் உள்ள அவர்களின் குழந்தை ஸ்ரீகவினின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டியும், பிரேமவாசத்தின் பராமரிப்பில் புதிதாக சேர்ந்துள்ள குழந்தை பரணிகா மற்றும் இருதய கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை ஷர்மிளாவும் நலமோடு வாழ இறைவனை வேண்டுவோம்.
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
சைவ, வைணவக் கோட்பாடுகளை ஐக்கியப்படுத்தும் திருநாமமாகவும் `ராம’ நாமம் அமைந்துள்ளது. அஷ்டாக்ஷர மந்திரத்தில் நாராயணாய என்ற சொல்லில் இரண்டாவது எழுத்து “ரா”, சிவாக்ஷரத்தில் நமசிவாய என்பதில் இரண்டாவது எழுத்து `ம’ இரண்டையும் இணைத்து `ராம’ என்றாகிறது என்று சொல்வார்கள்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
முந்தைய பிரார்த்தனைகளில் நாம் பிரார்த்திக்கொண்டவர்களுக்கு சீக்கிரம் அனுக்ரஹம் செய்யும்படியும் பரம்பொருளை வேண்டிக்கொள்ளுங்கள்.
பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 14, 2013 ஞாயிறு
நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=============================================================
\\ஆண்டவனை நம்புங்க. உங்கள் பாரத்தை அவன் மேல இறக்கி வைங்க. அதுக்கு பிறகு நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையை செய்ங்க. அவனாச்சு நீங்க இறக்கி வெச்ச பிரச்னையாச்சு….\\
என்ன ஒரு அருமையான எளிமையான டச்சிங் .
தொடர்ந்து வராவராம் பிரார்த்தனை நேரத்தில் ஒன்றாக பிரார்த்தனை செய்வோம் .
பிரார்த்தனை நேரத்தில் நமக்குள்ளும் நிகழும் அற்புத உணர்வை அனுபவித்து மகிழுங்கள்.
“ராம…ராம….ராம”
‘ஓம் சிவ சிவ ஓம்’
‘ஓம் சிவ சிவ ஓம்’
‘ஓம் சிவ சிவ ஓம்’
அருமையான பதிவு. நன்றி சுந்தர்.
எல்லாம் வல்ல இறைவனின் கருணையினால் பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய உளமார பிரார்த்திப்போம் !!!