Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > யாருக்கில்லைப் போராட்டம், கண்ணில் என்ன நீரோட்டம்? ஓப்ரா வின்ஃப்ரே வாழ்க்கை உணர்த்தும் பாடம்!

யாருக்கில்லைப் போராட்டம், கண்ணில் என்ன நீரோட்டம்? ஓப்ரா வின்ஃப்ரே வாழ்க்கை உணர்த்தும் பாடம்!

print
ப்ரா வின்ஃப்ரே – அமெரிக்க தொலைகாட்சி மற்றும் உலகத் தொலைகாட்சி நேயர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர். இந்த உலகின் கோடீஸ்வர பெண்களில் ஒருவர். எந்த சூழ்நிலையில் ஒருவர் பிறந்தாலும் வளர்ந்தாலும் அவர்களும் ஒரு நாள் நிச்சயம் உலகம் போற்றும் சாதனையாளர்களாக வர முடியும் என்பதற்கு நேரடி உதாரணம் இவர்.

இன்று – ஜனவரி 29 – இவரது பிறந்த நாள்.

ஒரு வறுமையான கருப்பினக் குடும்பத்தில் பிறந்து, மிகத் துயரமான இளமைப் பருவத்தைக் கடந்து உலகின் பவர்ஃபுல் பெண்ணாக உயர்ந்திருக்கும் ஓப்ரா தனது வெற்றி ரகசியம் என்று கூறுவது  என்ன தெரியுமா?

“வாழ்வின் வெற்றி ரகசியம் ஒன்றும் பெரிய ரகசியம் அல்ல! அயராமல் உழைக்கத் தயாரென்றால் எந்த உயரத்தையும் எட்டலாம்” என்பது தான்!

உலகின் மிகுந்த செல்வாக்குள்ள பெண்ணாகக் கருதப்படுபம் ஓப்ரா, அமெரிக்க தொலைக்காட்சியில் “தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ “என்ற மிகப் பரபரப்பான டாக் ஷோ நடத்துபவர். திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், மனித நேயர், கொடை வள்ளல் மற்றும்  உலகின் மிகப் பவர்ஃபுல் பெண்களில் ஒருவர் என பன்முகம் கொண்டவர். பல விருதுகளைப் பெற்றுள்ள இவரது டாக் ஷோ உலக தொலைகாட்சி டாக் ஷோக்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பது.

ஒப்ரா குறித்தும் அவர் டாக் ஷோ நடத்தும் விதம் குறித்தும் அதில் அவர் சில சமயம் நடந்துகொண்ட விதம் குறித்தும் கூட சர்ச்சைகள் இருக்கின்றன. சர்ச்சைகள் இல்லாத பெரிய மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? விட்டுத் தள்ளுங்கப்பு!

சமீபத்தில் இந்தியா வந்து சென்ற ஒப்ரா இங்கு நடந்துகொண்ட விதமும் இந்தியர்களை பற்றிய அவர் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு அவரை பற்றிய செய்தியை தெரிந்துகொள்வோம். (நம்ம ஆளுங்க நம்மை நாட்டை கேவலப்படுத்துவதைவிட வெளிநாட்டினர் ஒன்றும் பெரிதாக கேவலப்படுத்திவிடவில்லை.)

இந்தியாவை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டவர்களுக்கு தெரியும் இங்கிருக்கும் தூசி கூட புனிதமானது என்று. ஓப்ரா  இதை ஒரு நாள் புரிந்துகொள்வார். மன்னிப்போமாக.

அவரிடம் உள்ள நல்லதை மட்டும் பார்ப்போம். அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளமுடியும் என்று பார்ப்போம். ஓகே?

ஜனவரி 29, 1954 இல் அமெரிக்காவில் மிசிசிப்பியில் ஒரு வறுமையான குடும்பத்தில் பரிதாபமான சூழலில் பிறந்தார். அவருடைய இளமைக்காலம் கொடுமையானது. திருமணமாகாத தாய் தந்தையருக்கு பிறந்த ஒபரா தனது பாட்டியின் பன்றி பண்ணையில் தான் வளர்ந்தார்.

வளரும்போது வறுமை வறுமையைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை ஒப்ரா. ஒரு கட்டத்தில் ஆடைகள் நைந்து கிழிந்து போக இவருக்கு புத்தாடைகள் வாங்கித் தர இவரது பாட்டியால் முடியவில்லை. எனவே உருளுக்கிழங்கு மூட்டை வரும் கோணியையே மேலாடையாக அணிந்துகொள்வாராம். இதன்மூலம் அக்கம்பக்கத்தில் வசிக்கும் குழந்தைகள் பலரின் கேலிக்கு பலமுறை ஆளாகியிருக்கிறார்.

வளரும்போது வறுமை வறுமையைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை ஒப்ரா. ஒரு கட்டத்தில் ஆடைகள் நைந்து கிழிந்து போக இவருக்கு புத்தாடைகள் வாங்கித் தர இவரது பாட்டியால் முடியவில்லை. எனவே உருளுக்கிழங்கு மூட்டை வரும் கோணியையே மேலாடையாக அணிந்துகொள்வாராம். இதன்மூலம் அக்கம்பக்கத்தில் வசிக்கும் குழந்தைகள் பலரின் கேலிக்கு பலமுறை ஆளாகியிருக்கிறார்.

இவரது பாட்டி வெர்னிடா லீ அக்கம் பக்க வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வந்தமையால் இவரை ஒரு கட்டத்துக்கு மேல் கவனித்துக்கொள்ள முடியாது அவரது பெற்ற தந்தையிடமே ஒப்ராவை கொண்டு போய் விட்டுவிட்டார். அங்கு ஒப்ராவை அவரது தந்தை சரியானபடி கவனித்துகொள்ளத் தவறியதால் அவர்கள் வீட்டுக்கு வரும் நெருங்கிய உறவினர்களாலேயே ஒப்ரா எண்ணற்ற முறை செக்ஸ் கொடுமைக்கும் பாலியல் பலாத்காரத்துக்கும் ஆளானார். இதனால் பல முறை பயந்து வீட்டை விட்டு ஓடியிருக்கிறார் ஒப்ரா. அப்போது ஒப்ராவுக்கு வயது என்ன தெரியுமா? 9.

அங்கு ஒப்ராவை அவரது தந்தை சரியானபடி கவனித்துகொள்ளத் தவறியதால் அவர்கள் வீட்டுக்கு வரும் நெருங்கிய உறவினர்களாலேயே ஒப்ரா எண்ணற்ற முறை செக்ஸ் கொடுமைக்கும் பாலியல் பலாத்காரத்துக்கும் ஆளானார். இதனால் பல முறை பயந்து வீட்டை விட்டு ஓடியிருக்கிறார் ஒப்ரா. அப்போது ஒப்ராவுக்கு வயது என்ன தெரியுமா? 9.

பதினான்காம் வயதில் ஒரு குழந்தைக்குத் தாயாகும் துரதிர்ஷ்டமும் நேர்ந்தது. குழந்தை இறந்து போக, சிறுவர் இல்லத்தில் ஒப்ரா சேர்க்கப்படும் அபாயம் இருந்தது. இதனிடையே வேறு வழியின்றி மீண்டும் தனது தந்தையருடன் வசிக்க துவங்கினார். அவரது தந்தை அவரை பள்ளியில் சேர்க்க அந்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட ஒப்ரா படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். தனது செலவுகளுக்காக பள்ளிப் பருவதிலேயே வானொலி நிலையத்தில் பணிக்கு சேர்ந்தார் ஓப்ரா.

சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கினார் ஓப்ரா. ஸ்டீவென் ஸ்பீல்பெர்கின் ‘தி பர்பிள்’ என்ற படத்தில் சோஃபியாவாக நடித்தார், பிலவட் என்ற படத்தை இயக்கி நடத்தினார். சார்லோட்டஸ் வெப் ,பீ மூவி, தி ப்ரின்செஸ் அண்ட் தி ஃப்ராக் மேலும் பிபிசி யின் நேசர் புரோகிராம் லைஃப் ஃபார் டிஸ்கவரி என்ற நிகழ்ச்சிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

சி.என்.என் (CNN)  ஓப்ராவை ”Arguably the World’s Most Powerful Woman” (சர்ச்சைகளுக்கு உட்பட்டு உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணி) என்கின்றது. TIME  “Arguably The Most Influential Woman in the World” (சர்ச்சைகளுக்கு உட்பட்டு உலகின் செல்வாக்கான பெண்மணி) என்கிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா “இவரே உலகின் மிகுந்த செல்வாக்கான பெண்ணாக இருக்கலாம்” என்கிறார்.

ஓப்ரா வின்ஃப்ரேவின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? 11 இலக்கம். அதாவது, ஆயிரத்து நானூறு கோடி. இதன் மூலம் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் பெண்களில் ஒருவர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார் வின்ஃப்ரே. தான் நடத்தும் பத்திரிகை, இணையதளம் மூலம் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்குவதில் வெளிப்படுகிறது ஓப்ராவின் மனித நேயம்.

ஒப்ரா மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணியாக உருவெடுத்துள்ள இந்நேரம் அவர் அனுபவித்த கஷ்டங்களே அவருக்கு ஒரு ஆசானாக அமைந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மற்றவர்களை காப்பியடிக்காமல் தன் சொந்தக் காலில் நிற்பது எப்படி என்பதை அவருடைய வறுமை அவருக்கு கற்றுத் தந்தது. அவருக்கு நிகழ்த்தப்பட்ட செக்ஸ் கொடுமைகள், அமெரிக்காவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் குழந்தைகளை பற்றி விழிப்புணர்வை தந்தது.

ஓப்ராவின் புகழ் பெற்ற வாசகங்கள் சில:

*இந்த உலகில் மிகப் பெரிய கண்டுப்பிடிப்பு எது தெரியுமா? ஒருவர் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் தங்கள் வாழ்க்கையையே மாற்றிக்கொள்ளலாம் என்பது தான்.
The greatest discovery of all time is that a person can change his future by merely changing his attitude.

*நடப்பவை எல்லாமே காரண காரியத்தோடு தான் நடக்கின்றன நமக்கு அவற்றைப் புரிந்து கொள்ள முடிவதில்லை அவ்வளவே.

*ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்ந்தால் வாழ்வின் மகத்துவம் நன்கு புரியும்.

*Surround yourself with only people who are going to lift you higher.
உங்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துபவர்களுடன் மட்டுமே நீங்கள் எப்போதும் இருக்க வேண்டும்.

*Where there is no struggle, there is no strength.
போராட்டம் இல்லையேல் வலிமையும் நமக்கு இருக்காது

*Do the one thing you think you cannot do. Fail at it. Try again. Do better the second time. The only people who never tumble are those who never mount the high wire. This is your moment. Own it.
உங்களால் முடியாது என்று நினைக்கும் ஒரு காரியத்தை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் முயற்சி செய்யுங்கள். தோற்றுப் போனால் கவலைவேண்டாம். இரண்டாம் முறை அதை கொஞ்சம் பெட்டராக செய்யுங்கள். முயற்சிகளுக்கு அசராதவர்களே மிகப் பெரிய உயரங்களை எட்ட முடியும். இது உங்கள் நேரம். அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————–
இவர்களால் முடிந்த போது ஏன் நம்மால் முடியாது என்று நாம் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வதற்காகவே விதிகளை உடைத்து விதிவிலக்குகளாக நிற்கும் எண்ணற்ற சாதனையாளர்களை இந்த உலகம் முழுதும் வைத்திருக்கிறான் இறைவன். இல்லையெனில் எங்கோ வறுமையான சூழலில் அதுவும் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தில் பிறந்து வளர்ந்த ஓப்ரா இப்படி உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் முன் கால் மேல் கால் போட்டு உட்கார முடியுமா?

Happy Birthday to Oprah Winfrey!

[End]

10 thoughts on “யாருக்கில்லைப் போராட்டம், கண்ணில் என்ன நீரோட்டம்? ஓப்ரா வின்ஃப்ரே வாழ்க்கை உணர்த்தும் பாடம்!

  1. Tough times never last, but tough people do. Oprah Winfrey is a perfect example for this quote. Though I had a brief idea about Oprah and her talk show, I never knew she had such a terrible and unforgettable past. No doubt hard work combined with grit and determination has done wonders in her life. As you have rightly pointed, let us look at the positive side of Oprah and derive the benefit for uplifting ourselves. Happy Birthday to Oprah Winfrey!

  2. தன்னம்பிக்கை தந்த கட்டுரை .முயன்றால் முடியாதது உலகத்தில் இல்லை.பகீரத முயற்சி என்று மகாபாரதத்தில் வரும் கதை உணர்த்துவதும் இதை தான். நன்றி

  3. “நடப்பவை எல்லாமே காரண காரியத்தோடு தான் நடக்கின்றன நமக்கு அவற்றைப் புரிந்து கொள்ள முடிவதில்லை அவ்வளவே”

    இது மிகப்பெரிய உண்மை. காரணமில்லாமல் காரியமில்லை.

  4. இந்த கட்டுரையை படித்த பிறகு வாழ்க்கையில் சாதிப்பதற்கு எந்த ஒரு சூழ்நிலையும் தடையல்ல. தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் மேலோங்குகிறது. கதைகளில் படிப்பதை விட நம் கண் முன்னே இருக்கும் இந்த நிஜ சாதனையாளர்கள் தான் உண்மையில் ரோல் மாடல்.

  5. இந்த நிஜ சாதனையாளர்கள் தான் உண்மையில் ரோல் மாடல்

  6. சாதிப்பதற்கு ஏழ்மை வறுமை எதுவும் தடையில்லை என்பதை இந்த அற்புதமான கட்டுரை வெளிப்படுத்துகிறது.

  7. ” நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே”
    “நீ தருமம் செய்ய ஆசைப்படு”
    “நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே”

    கண்டிப்பாக முன்னேற முடியும் .

    நல்ல தன்னம்பிக்கை தொடர் .

    நன்றியுடன் .

    மனோகரன்.

  8. சில நாட்களாக மன குழப்பங்களுடன் இருந்தேன். இந்த வரிகளால் –“போராட்டம் இல்லையேல் வலிமையும் நமக்கு இருக்காது” மனம் தெளிவானது

    மிக்க நன்றி

    அருண், அரியலூர்

  9. This message gives an excellant encouragement for the persons who like to
    become distinguished in the world.

    we thank you for the presentation at your site.

    k.paramasivam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *