Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > விருப்பம் மந்த்ராலயத்தில்; திருப்பம் தில்லையில்! Rightmantra Prayer Club

விருப்பம் மந்த்ராலயத்தில்; திருப்பம் தில்லையில்! Rightmantra Prayer Club

print
1939 – 40 ஆண்டுகளில் நடந்தது இது. மகாராஷ்டிர மாநிலம் ஷோலாப்பூரில் கமாலகர ஜோஷி என்று ஒரு அந்தண இளைஞர் இருந்தார். பொதுவாகவே அந்தணர்களுக்கு மிதமாகவோ சற்று அதிகமாகவோ தெய்வ பக்தி இருக்கும். அது இல்லாவிட்டாலும் கூட, நம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்கிற எண்ணம் இருக்கும். விதிவிலக்காக கடவுள் நம்பிக்கையே சிறிதும் இல்லாத ஒரு சில அந்தணர்களும் இருப்பார்கள். மேற்கூறிய கமாலகர ஜோஷி அந்த கடைசி வகை.

கடவுளை வெறுப்பதோடு கடவுள் நம்பிக்கை கொண்டவர்களையும் ஏளனம் செய்யும் வழக்கம் உடையவன். ஆனால் படிப்பில் படுகெட்டி. அவனோடு பரீட்சையிலோ வாதங்களிலோ யாரும் போட்டிபோடமுடியாது.

சக மாணவர்களுக்கே இது ஆச்சரியமாக இருக்கும். ‘நாம் விழுந்து விழுந்து படிக்கிறோம். ஆனால் நாம் எப்படி படித்தாலும் இந்த கமாலகர் ஜோஷி மட்டும் நம்மைவிட அதிக மதிப்பெண்களை பெற்றுவிடுகிறானே எப்படி?’ என்று வியந்துபோவார்கள்.

இது பற்றி கமாலகரிடம் கேட்டால், “நான் கவனமாக படிக்கிறேன். அனாவசியமாக எனது கவனத்தை கடவுள் நோக்கி திருப்பி காலத்தை வீணாக்குவதில்லை” என்று பதில் வரும்.

அவன் சொன்னதைப் போலவே, அந்த ஆண்டு எம்.ஏ., எம்.எல்.பி. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றான். அதை விமரிசையாக கொண்டாடவேண்டும் என்று தன் பெற்றோரிடம் சொன்னபோது அவர்கள் மறுக்கவில்லை.

தனது மகனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையே என்ற வருத்தம் பெற்றோர்களுக்கு இருந்தாலும் தன் கடமைகளை சரி வரச் செய்கிறானே அதுவரைக்கும் சந்தோஷம் என்ற மனநிலையே அவர்களுக்கு இருந்தது.

தன் மகனின் விருப்பப்படி சிறப்பான விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர் அவர்கள்.

கமலாகர ஜோஷி ஆனந்தத்தின் எல்லையில் இருந்தான்.

அவன் கொள்கை பற்றி சரியாக தெரியாதவர்கள், “கடவுள் புண்ணியத்தில் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறாய்” என்றால், சிரித்துக்கொண்டே “கடவுள் புண்ணியத்தால் அல்ல. என் சொந்த முயற்சியினால்!” என்பான்.

பலர் இப்படி “கடவுள் புண்ணியத்தால் நல்ல மார்க்குகள் எடுத்து பாஸ் செய்துவிட்டாய்… கடவுள் புண்ணியத்தால் பாஸ் செய்துவிட்டாய்…” என்று திரும்ப திரும்பச் சொல்ல, கமலாகர் ஜோஷிக்கு ஒரு கட்டத்தில் ‘ஏண்டா இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தோம்’ என்றாகிவிட்டது.

விருந்து நல்லபடியாக நடந்துகொண்டிருந்தது. விருந்தினர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட, கடைசியாக ஜோஷியும் அவன் பெற்றோரும் சாப்பிடாமல் இருந்த வேறு சிலரும் சாப்பிட அமர்ந்தனர்.

“பகவான் புண்ணியத்துல விருந்து நல்லபடியா நடந்து முடிஞ்சுது” ஜோஷியின் அப்பா சொல்ல, உடனே அவரை இடைமறித்த ஜோஷி, “அதெப்படி கடவுள் புண்ணியத்துல விருந்து நல்லா நடந்திருக்கும்? நீங்க நல்லா ஏற்பாடு செஞ்சீங்க, நல்லா சமைச்சீங்க அதனால விருந்து பிரமாதமா நடந்தது.” என்றான்.

“சரி… சரி… அப்பாவும் பையனும் சண்டை போடுற நேரமா இது… சாப்பிடுற வழியை பாருங்க” அம்மா சமாதானப்படுத்தினாள்.

கமலாகர ஜோஷியும் மற்றவர்களும் விருந்து சாப்பாட்டை ஒரு பிடிபிடித்தனர். ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் கமலாகர ஜோஷி சாப்பிட்ட அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டான்.

பிள்ளைக்கு திருஷ்டி பட்டிருக்கும். அதான் இப்படி நடந்துவிட்டது என்று ஜோஷியின் தாயார் தனக்குள்ளே எண்ணிக்கொண்டார்.

ஆனால், அடுத்த நாளும் இப்படியே ஆகியது. சாப்பிடுவான்…. சற்று நேரத்திற்கெல்லாம் சாப்பிட்டது வாந்தியாக வெளியே வந்துவிடும்.

தூக்கமின்மையும் அலைச்சலுமே காரணம் என்று ஜோஷியின் பெற்றோர் நினைத்து அவனை நன்கு ஓய்வெடுக்கச் செய்தனர். ஆனாலும் பயனில்லை. அதற்கடுத்த நாள் சாப்பிட்டதும் வாந்தியாக வந்துவிட்டது.

இரண்டு மூன்று நாட்களிலேயே ஜோஷி இளைக்கத் தொடங்கிவிட்டான்.

ஜோஷியின் பெற்றோர்களுக்கு பயம் கவ்வத் தொடங்கியது. இப்படியே போனால் பையன் துரும்பாக இளைத்துப் போய்விடுவானே.

டாக்டரிடம் கொண்டு போய் காட்டினார். அவர் மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்தார். நோ யூஸ். அதுவும் சேர்ந்து வாந்தியாக வெளியே வந்தது. “என்ன டாக்டர் இந்த நோயைச் சரி செய்யவே முடியாதா? என் பிள்ளையை முன்னைப் போல கலகலப்பாக பார்க்க முடியுமா?”

“நாங்களும் எங்களால முடிஞ்ச ட்ரீட்மென்ட்டை கொடுத்துட்டுதானே இருக்கோம். எதுக்கும் பகவானை வேண்டிகோங்க!”

அந்த நேரம் பார்த்து ஜோஷியின் வீட்டுக்கு ஒரு அந்தணர் வந்தார். இவர்கள் வாட்டத்தின் காரணத்தை அவர் கேட்க, அவரிடம் நடந்தது அனைத்தையும் சொல்கின்றனர் ஜோஷியின் பெற்றோர்.

“இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்? உங்கள் மகனை மந்த்ராலயத்திற்கு அழைத்துச் சென்று சேவை செய்யுங்கள். கைமேல் பலன் கிடைக்கும்!!!”

அவர் அப்படி சொன்னதும் பெற்றோர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“சுவாமி… நாங்கள் தயார் ஆனால் எங்கள் மகன் சம்மதிக்கவேண்டுமே?”

“நான் சம்மதிக்க வைக்கிறேன்” என்று கூறிய அந்த அந்தணர், ஜோஷியிடம் வந்தார்.

“கமலாகர், நன்கு படித்தாய். நன்கு தேர்வு எழுதினாய். பட்டமும் பெற்றாய். வாழ்த்துக்கள். இது முழுக்க முழுக்க உன் முயற்சியின் பலன் தான். உனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும் இதே போல படித்து, தேர்வு எழுதி பட்டம் பெற்றுத் தானே இன்று மருத்துவம் பார்க்கின்றனர்?”

“ஆமாம்…”

“அப்படியிருக்க, திடீரென்று உனக்கு ஏற்பட்ட இந்த பிரச்னையை ஏன் அவர்களால் தீர்க்க முடியவில்லை? அதுவும் மருத்துவ தொழில்நுட்பம் அபாரமாக வளர்ந்திருக்கும் இந்த காலத்தில்?”

“அது தான் எனக்கும் புரியவில்லை”

“அதனால் தான் சொல்கிறேன். உனக்காக இல்லாவிட்டாலும் உன் பெற்றோருக்காக உன் கொள்கைகளை சிறிது மூட்டை கட்டி வைத்துவிட்டு அவர்கள் மனமாற்றத்திற்காக அவர்கள் கூப்பிடும் இடத்திற்கு போய்விட்டு வாயேன்”

“மந்த்ராலயத்திற்கா…???”

“ஆமாம்… ஆனால் உன்னை பக்திமானாக மாறச்சொல்லவில்லை. வெறுமனே மந்த்ராலயம் மட்டும் சென்றுவிட்டு வா. அங்கே துங்க்பத்ராவில் ஸ்நானம் மட்டும் செய். அது கூட ராகவேந்திரருக்காக இல்லை. தினமும் வீட்டிலே நீ குளிக்கமாட்டாயா அது போல துங்கபத்ராவில் நீராடு. என்ன சொல்கிறாய்?”

கமலாகர ஜோஷியின் மனதில் லேசான சலனம் ஏற்பட்டது. அவர் கூறுவது போல, நமது கடவுள் மறுப்பு கொள்கைக்கு சிறிதும் குந்தகமில்லாமல் மந்த்ராலயம் சென்றுவிட்டு வரலாமே என்கிற சிந்தனை அவனுக்கு அரும்பியது.

“சரி… உங்கள் சொற்படியே மந்த்ராலயம் செல்கிறேன். ஆனால் என்னை எந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்தக்கூடாது.”

அப்பாடா… இந்தளவாவது இறங்கி வந்தானே என்று கருதிய கமாலகர ஜோஷியின் பெற்றோர் உடனே மந்த்ராலயம் செல்ல ஏற்பாடுகளை செய்தனர்.

மந்த்ராலயத்தில் காலடி எடுத்து வைத்ததும் மந்த்ராலயம் அப்படி ஒன்றும் பிரமாதமானதாக தெரியவில்லை ஜோஷிக்கு.

அங்கேயே அறை எடுத்து தங்கியவர்கள், மகன் பொருட்டு சங்கல்ப சேவை செய்வதற்காக துங்கபத்ராவில் நீராடிவிட்டு பிருந்தாவனம் வந்தனர் மூவரும்.

Ragavendra Brindavan

ஜோஷியின் பெற்றோர் பரவசத்துடன் ராயரை தொழுதபோது, ஜோஷி மட்டும் எந்தவித சலனமும் இன்றி நின்றுகொண்டிருந்தான். தீர்த்தத்தைக் கூட வாங்காமல் வெளியே வந்தான்.

மஹா மங்கள ஆரத்தி முடிந்ததும் அனைவரும் போஜனத்திற்கு சென்றனர்.

அந்த சாதத்தை பார்த்ததுமே ஜோஷிக்கு வெறுப்பாக இருந்தது. அது மந்த்ராலய பிரசாதம் என்பதால் அல்ல. இதை சாப்பிட்டால் அடுத்த நொடி வாந்தியாக வந்துவிடுமே என்கிற அச்சத்தினால் ஏற்பட்ட வெறுப்புணர்வு அது.

தாய் தந்தையர் எவ்வளவோ கேட்டுக்கொண்டபோதும் பந்தியில் அமர மறுத்தவன், மடத்து சிப்பந்திகளின் கட்டாயத்தின் பேரில் அரைமனத்துடன் ஒரு வித அச்சத்துடன் அமர்ந்தான்.

நீண்ட நாள் பசி… வாய்க்கு ருசியான உணவு. உண்ண உண்ண உள்ளே இறங்கிக்கொண்டே இருந்தது. அதுவும் மாத்வ சமையல் என்றால் கேட்கவேண்டுமா? பசி வந்தால் பத்தும் பறந்து போகுமல்லவா? அவனது நாத்திக கொள்கையும் தற்காலிகமாக பறந்துபோனது.

வேண்டமட்டும் சாப்பிட்டுவிட்டு ஏழுதான். பின்னர் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வேக வேகமாக சென்றன. சில நிமிடங்களில் வாந்தி வந்துவிடுமே. ஆனால், நிமிடங்கள் மணியானது. இந்த வித இன்னலும் இல்லை. வாந்தியும் இல்லை. அன்றிரவு நிம்மதியாக உறங்கினான்.

அடுத்த நாளும் உணவுண்டான். அதற்கடுத்தநாளும் கூடம். இது தொடர்ந்தது.

கமலாகர ஜோஷிக்கு ஒன்றுமே புரியவில்லை. நமக்கு ஒரு வியாதி வந்து அதைத் தீர்த்து வைக்கும் டாக்டருக்கே கூட, அவர் பணம் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்தாலும் அவருக்கு நம் நன்றியை சொல்கிறோம். ஆனால் இந்த ராகவேந்திரருக்கு நாம் என்ன செய்தோம். தினந்தோறும் போஜனமளிப்பதோடு, என் வியாதியும் குணமாகிவிட்டதே…

இதன் பின்னர் ஜோஷி, ராயரின் தீவிர பக்தராக மாறியதோடு ஒரு மண்டலம் மந்த்ராலயத்தில் தங்கி சேவை செய்தான். அதன் பின்னர் சொந்த ஊருக்கு திரும்பியவன், வக்கீல் தொழில் மேற்கொண்டு, பின்னர் மாஜிஸ்திரேட்டாக பதவி உயர்வு பெற்று பின்னர் ஜில்லா ஜட்ஜாகவும் பதவி உயர்வு பெற்றார்.

ஆக… மந்த்ராலயம் போன்ற ஷேத்ரங்களின் பிரசாதம் சஞ்சீவினிக்கு நிகரானது. ஜோஷி போல நீண்ட நாள் நோயால் வாடுபவர்கள் மந்த்ராலயம் ஒரு முறை சென்று அங்கு சில நாட்கள் தங்கி ராயரை தரிசித்துவிட்டு அங்கு நடைபெறும் அன்னதானத்தில் பங்கேற்று அந்த மஹா பிரசாதத்தையும் சாப்பிட்டு வாங்களேன். உங்கள் நோய் இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.

(ஆக்கத்தில் உதவி : ஸ்ரீ ராகவேந்திர மகிமை – 2)

===============================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : சிதம்பரத்தில் உள்ள பிரபல மருத்துவரும் புவனகிரி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மடத்தின் டிரஸ்ட்டியுமான டாக்டர் திரு.வி.நடராஜ் அவர்கள்.

Dr thiru natarajபுவனகிரியை பூர்வீகமாக கொண்டவர் திரு.வி.நடராஜ் எம்.பி.பி.எஸ். இவர் தந்தை திரு.வெங்கட்ரமணைய்யர், காஞ்சி ஸ்ரீமடத்தின் முத்ராதிகாரியாக பணியாற்றியவர்.

1990 களில் புவனகிரியில் இயற்கை எண்ணை வளமிருப்பதை மத்திய அரசு கண்டுபிடித்த பின்னர் அங்கு ONGC (Oil and Natural Gas Commission) சார்பாக துரப்பன பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அங்கு (ONGC) மெடிக்கல் ஆபீசராக பணியாற்றும் வாய்ப்பு திரு.நடராஜ் அவர்களுக்கு கிடைத்தது. கிடைத்த பணியை கண்ணும்கருத்துமாக பார்த்துவந்தார். இதற்கிடையே புவனகிரியில் ராகவேந்திர ஸ்வாமிகள் அவதாரம் செய்த இடத்தில், அவருக்கு மிருதிக்கா பிருந்தாவனம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அதில் பலவிதங்களில் உறுதுணையாக இருந்தார் திரு.நடராஜ்.

சிதம்பரத்தில் வடக்கு சன்னதி வீதி எதிரே இவரது இல்லம் உள்ளது. சிதம்பரத்திலும் புவனகிரியிலும் கிளினிக் வைத்திருக்கிறார்.

நடராஜ் அவர்கள் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் தீவிர பக்தர். அவர் மீது இவர் 21 பாடல்களை கொண்ட ஒரு ஸ்லோகத்தையே இயற்றியிருக்கிறார். (அதை ஸ்ரீ ராகவேந்திரரரே நேரில் வந்து அனுக்ரஹித்து கடாக்ஷித்த சம்பவம் கூட உண்டு. அது பற்றி பின்னர் பார்க்கலாம்.)

70 களில் மஹா பெரியவாவை ஆந்திர மாநிலம் ஹூந்திரி என்கிற இடத்தில இவர் குடும்பத்தோடு சந்தித்தபோது இவரை சரியாக அடையாளம் கண்டுகொண்ட பெரியவா, இவர் பெயரைச் சொல்லி அழைத்ததோடு, இவர் தந்தையைப் பற்றியும் விசாரித்திருக்கிறார்.

இவர் தந்தை வெங்கட்ரமணைய்யர் புவனகிரி பகுதியில் காஞ்சி மடத்தின் முத்ராதிகாரியாக பணியாற்றியவர். (மடத்துக்கான காணிக்கைகளை திரட்டி மடத்தில் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு). தந்தை வெங்கட்ரமணைய்யர்ஸ்ரீமடம் செல்லும்போதெல்லாம் சிறு குழந்தையான இவரையும் அழைத்துச் செல்வாராம்.

பலமுறை பெரியவாவை தரிசித்திருப்பதாக கூறும் இவர், சேவை மனப்பான்மையோடு மருத்துவப் பணி ஆற்றி வருவதை கண்டு ஆசீர்வதித்தா பெரியவா இவர் தந்தைக்கு அளித்த ‘கைங்கர்ய ஸ்ரீ’ என்ற பட்டத்தை இவருக்கும் அருளினார்.

தினமும் தில்லை சென்று நடராஜரை தரிசிக்கும் வழக்கமுடைய இவர், இதுவரை நூற்றுக்கனாகன மேடைகளில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பற்றியும் தேவார திருப்பதிகங்கள் பற்றியும் சொற்பொழிவாற்றியிருக்கிறார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் வாரந்தோறும் இவர் சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம்.

தில்லையில் சொற்பொழிவில் டாக்டர் திரு.நடராஜ் அவர்கள்...
தில்லையில் சொற்பொழிவில் டாக்டர் திரு.நடராஜ் அவர்கள்…

நமது பிரார்த்தனை கிளப் பற்றி இவரிடம் எடுத்துக்கூறி நமக்காக பிரார்த்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இவருடனான நமது சந்திப்பை பற்றி விளக்கி நாம் அளித்த DOCTORS DAY SPL II பதிவை படித்தவர், என்னை மிகவும் உயர்த்தி சொல்லியிருக்கிறீர்களே… அந்தளவு நான் தகுதியுடையவன் அல்ல என்று அடக்கமாக கூறினார்.

தகுதி இருப்பதினால் தான் சார்.. தில்லை அம்பலத்தான் உங்களை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறான் என்றோம்.

பிரார்த்தனை கிளப் பிரார்த்தனை நேரமான ஞாயிறு மாலை 5.30 – 5.45 PM சிதம்பரம் நடராஜர் சன்னதியில் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். மேலும் அடுத்த வாரம் தாம் மந்த்ராலயம் செல்லவிருப்பதாகவும் அங்கு ஒரு வார காலம் தங்கி சங்கல்ப சேவை செய்யப்போவதாகவும் கூறினார். “எங்கள் பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்திருக்கும் வாசகர்களுக்காகவும் ராயரிடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டோம். நிச்சயம் செய்வதாக கூறினார்.

ஆக நம் வாசகர்களுக்காக இரு மகத்தான ஷேத்ரங்களில் (மந்த்ராலயம் & சிதம்பரம்) பிரார்த்தனை நடைபெறவிருக்கிறது.

===============================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த வாரம் பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருக்கும் மூவரும் நமக்கு புதியவர்கள். இப்போது தான் அறிமுகமாகிறார்கள். இதில் முதல் கோரிக்கையான பிள்ளை காணமல் போனதை பற்றி சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் கோரிக்கை உண்மையில் கண்கலங்கைவைக்கிறது. ஒரு தாய்க்கு தான் தெரியும் அதில் உள்ள வேதனை. இருந்தாலும் தில்லை நடராஜரிடம் இந்த வார பிரார்த்தனை நேரடியாக சமர்ப்பிக்கப்படவிருப்பதால் நிச்சயம் விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்பலாம்.

அடுத்து சகோதரிக்கு புத்திர பாக்கியம் வேண்டி அனுப்பியுள்ள கோரிக்கை வாசகி. ஸ்ரீ ராகவேந்திரரின் பரிபூரண கடாக்ஷத்தால் விரைவில் இவர்களுக்கு புத்திர சம்பத்து கிடைக்கும். ஆண் குழந்தை பிறந்தால் குருராஜன் என்றும் பெண் குழந்தை பிறந்தால் ஸ்ரீ ராகவேந்திரரின் தாயாரின் பெயரான கோபிகா என்பதையும் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தெய்வத்தை நம்புங்கள் நல்லதே நடக்கும்.

அடுத்து லக்ஷ்மி ப்ரீத்தி என்பவர் உத்தியோகம் மற்றும் குடும்ப நலன் குறித்து அனுப்பியிருக்கும் கோரிக்கை. மனதுக்கு இனிய உத்தியோகம் எல்லாருக்கும் அமைவதில்லை. வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனையில் இவர் பெயர் இடம்பெற்றதா என்று நமக்கு நினைவில் இல்லை. இருப்பினும் எறும்பீஸ்வரர் பதிகத்தை இவர் தினமும் படித்து வர, நல்ல வேலை கிடைத்து குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வரும். அதன் பின்னர் திருவெறும்பூர் சென்று எறும்பீஸ்வரருக்கு அபிஷேகம் செய்துவிட்டு வரவேண்டும். நம்பிக்கை தான் வாழ்க்கை.

===============================================================================

* திருமண வயது தாண்டியும் திருமணமாகாமல் தவிக்கும் ஆண்களுக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனை மிக மிக அற்புதமான ஒரு மனிதரை கொண்டு நடைபெறவிருக்கிறது. அநேகமாக ஜூலை கடைசி வாரம் அந்த பிரார்த்தனை கிளப் பிரார்த்தனை இடம்பெறக்கூடும். எனவே இது தொடர்பாக ஏற்கனவே கோரிக்கை அனுப்பி வெளியாகாதவர்களும் சரி… புதிதாக அனுப்ப விரும்புகிறவர்களும் சரி உடனே நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சலில் தங்கள் (மகன்) பெயர், வயது, ஊர் உள்ளிட்ட விபரங்களை மின்னஞ்சல் (பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் கூடுதல் சிறப்பு) அனுப்பவும்.

நம் தளத்தில் வெளியிட பிரார்த்தனை கோரிக்கை தனியாகவும், பெயர், ராசி நட்சத்திர விபரங்கள் தனியாகவும் அனுப்பவும். பெயர், ராசி, நட்சத்திரம் எதற்காக என்றால், நாம் திருமண பரிகாரத் தலங்களுக்கு செல்லும்போது அர்ச்சனை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

**  பிரார்த்தனைக்கு வேறு கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

===============================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Missing son should reunite with family!

My eldest son Prathap Chakravarthi alias Nithish where abouts not known for the past six  years. He is  aged 34 years at present. We are  totally  shattered. We request the blessings and  prayer  from right mantra.com.

My husband has become mentally thinking of my eldest every second and his health has been psychologically affected.of course i am too much paralysed mentally as  his  mother. We humbly  request to pray on behalf of our family. We  expect our son eagerly.

– Thayammal Kailasam

===============================================================================

Bless my sister’s family with a child!

Sir, Vanakkam. I am from Bodinayakanur. Now i come across your website. your service is a sacred one. please pray for my sister.

Sister Name: Kruthika Gnanasoundari
Husband name:Sankaralingam

They want a child. Please pray for her. They have some other problems also. Married for one year.

Thanks & Regards

Sugantha G,
Bodinayakkanur

===============================================================================

Want a Good job and happy married life!

Respected Sir,

I am Laxmi Preethi from Bangalore. I worked as a software engineer for 2 years and 10 months.Due to my marriage, I was forced to leave my previous job in August 2013. Till now I am unable to get the right job.

I kindly request you to pray for me in your Prarthana club, so that I can get a good job soon and a happy married life.

Thank you,

Laxmi Preethi.M,
Bangalore

===============================================================================

பொது பிரார்த்தனை

மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்!

கடந்த ஒரு வாரகாலமாக எங்கள் ஐயப்பன்தாங்கல் பகுதியில் மெயின்ரோட்டில் உள்ள டாஸ்மாக்கில் கூட்டம் அலைமோதுகிறது. (போரூர் ரெட்டேரியில் உள்ள டாஸ்மாக்கிலும் கூட்டம் அலைமோதியது.) சாதாரணமாக இங்கு டாஸ்மாக் முன்பு இரவு 8.00 மணியளவில் சுமார் 50 முதல் 100 பேர் காணப்படுவர். ஆனால், கடந்த ஒரு வாரகாலமாக கி.மீ கணக்கில் க்யூ நீளுகிறது. கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது வரிசையை ஒழுங்குபடுத்தி அனுப்ப போலீஸ் பாதுகாப்பு வேறு.

Tasmac 1

நான் பைக்கிலிருந்தபடி ஒரு சில படங்கள் தான் எடுக்க முடிந்தது. இரண்டாம் புகைப்படத்தில் ஒரு சிலர் முகத்தை கையால் மூடிக்கொள்வதை பாருங்கள். இவர்களில் கூலித் தொழிலாளர்கள் மட்டுமின்றி கார்பரேட் ஊழியர்களும் நின்று கொண்டிருப்பது வரிசையை பார்த்தாலே புரிகிறது.

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாரய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிற்பான் குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்.

Tasmac 2

இந்த வேதனையை எங்கே போய் பகிர்ந்துகொள்வது? ஏற்கனவே நமது பிரார்த்தனை கிளப்பில் மதுவிலக்கு தமிழகத்தில் வரவேண்டி பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டிருந்தாலும் இந்த முறை சைவ சமயத்தில் முதன்மை ஷேத்ரமாக விளங்கும் சிதம்பரத்திலேயே நேரடியாக பிரார்த்தனை சமர்ப்பிக்கடவிருப்பதால் இங்கே மீண்டும் இந்த கோரிக்கையை பதிவு செய்கிறோம்.

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமாக தமிழகம் மாறவேண்டும். மது அரக்கன் பிடியிலிருந்து சமுதாயம் மீளவேண்டும். பாட்டாளியின் வீட்டில் அடுப்பெரியவேண்டும். அவர்களின் இல்லத்தரசிகள் வயிறு குளிரவேண்டும்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை !

===============================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநம் வாசகி தாயம்மாள் அவர்களின் காணாமல் போன மகன் திரு.பிரதாப் சக்ரவர்த்தி திரும்ப கிடைக்கவும், வாசகி சுகந்தாவின் சகோதரி கிருத்திகா ஞானசௌந்தரி மற்றும் சங்கரலிங்கம் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவும், வாசகி லக்ஷ்மி ப்ரீத்திக்கு நல்லதொரு வேலை நிறைவான சம்பளத்துடன் கிடைக்கவும், அவரது குடும்ப வாழ்க்கை இனிமையாக மகிழ்ச்சி மிக்கதாக இருக்கவும் இறைவனை பிரார்த்திப்போம். மதுவின் படியிலிருந்து தமிழகம் மீண்டு, பூரண மதுவிலக்கு விரைவில் மாநிலத்தில் அமலுக்கு வர இறைவனை பிரார்த்திப்போம். இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் ‘கைங்கரிய ஸ்ரீ’ டாக்டர்.திரு.நடராஜ் அவர்கள் மேன்மேலும் தனது மருத்துவத் தொழிலில் சிறந்து விளங்கவும், தனது தெய்வீகத் தொண்டை திருப்பணியை தொய்வின்றி தொடரவும், அவரும் அவர்தம் குடும்பத்தினரும் அனைத்து நலனும் வளமும் பெற்று வாழவும் இறைவனை பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூலை 5, 2015 ஞாயிற்றுக்கிழமை | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

===============================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

===============================================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W: www.rightmantra.com

===============================================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

===============================================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :  ‘மந்த்ராலய முரசு’ அமரர் மானாமதுரை திரு.சேதுராமன் அவர்களின் துணைவியார் திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள்

5 thoughts on “விருப்பம் மந்த்ராலயத்தில்; திருப்பம் தில்லையில்! Rightmantra Prayer Club

  1. இந்த வார பிரார்த்தனை கிளப்பின் தலைப்பே அருமை. திரு கமலாகர் கதையை படிக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது. சாட்சாத் ராயரே அந்தணராக வந்து அவரின் ”தான் ” என்ற அகந்தையை அடக்கி அவரைத் தடுத்தாட் கொண்டு இருக்கிறார். மிகவும் பரவசமாக உள்ளது.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு நடராஜ் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். நம் வாசகர்களுக்கு இரண்டு யோகம். ஒன்று சிதம்பரத்தில் மற்றொன்று ராயரின் பிருந்தாவனத்தில் நம் பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனை . கண்டிப்பாக நம் வாசகர்களின் கோரிக்கை அந்த ஈசன் அருளாலும், மற்றும் ராயரின் அருள் மழையாலும் கண்டிப்பாக நிறைவேறும் . திரு நடராஜ் அவர்களை பார்ப்பதற்கு நடுக் காவேரி ”கனு ” அவர்கள் போல் உள்ளார்

    பூரண மதுவிலக்கு உள்ள மாநிலமாக நம் தமிழ் நாடு மாற வேண்டும் என பிரார்த்தனை செய்வோம்.

    மற்றும் தங்கள் தந்தை பூரண குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    புதுவை ராகவேந்திர பிருந்தாவனத்திற்கு போன வருடம் போட்ட பிளான் படி உழவார பணி செய்வதற்கு ஏற்பாடு பண்ணவும்., மிகவும் ஆவலாக உள்ளேன்.

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    வாழ்க …. வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  2. இந்த பதிவை படித்த பிறகு ஒருமுறையேனும் மந்த்ராலயத்திர்க்கும், தில்லைக்கும் சென்று வர வேண்டும் என்று நினைக்கிறேன். அவரின் அருள் இருந்தால் என் ஆசை கண்டிப்பாக நிறைவேறும். ராயரின் பிருந்தாவன போட்டோ அருமை

    ஒரு முறை முடிந்தால் தாங்கள் சாலிக் கிராமத்தில் இருக்கும் ராயரின் பிருந்தாவனத்திற்கு சென்று வரவும். மிகவும் அழகிய கோவில். எங்களுக்கும் ஒரு அழகிய பதிவு கிடைக்கும்.

    வாழ்க வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  3. வணக்கம் சுந்தர் சார்

    மிகவும் அருமையான பதிவு

    நன்றி

  4. ஹெல்மெட் சட்டம் மட்டும் உடனடியாக கொண்டுவரப்பட்டு “கோடிகளை” எடுத்து விட்டார்கள், இன்னும் எடுக்க வழி வகை செய்வார்கள். ஆனால், மக்களை கொத்து கொத்தாக, எதிர்கால தலைமுறையினரை ஒழுக்கம் கெட்டவர்களாக, எல்லாத் தீங்கிற்கும் காரணமான மது (டாஸ்மாக்) ஒழிக்க ஏன் எந்த நீதியரசர்களும் உடனடி ஆணை பிரபிக்கவில்லை. அங்கே தினமும் கோடிகள் கிடைக்கறது அரசாங்கத்துக்கு. இப்படிப்பட்ட பணம் தேவையா? ஆன்மீகத்தை நம்புவதாக கூறும் முதல்வர் ஆளும் மாநிலத்தில் இந்த அவலம். குரு ராகவேந்திர சுவாமிகள், மகா பெரியவா, இன்னும் பல மகான்கள் எல்லோரயும் பிரார்த்திப்போம், நம் தலைவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று.

  5. ஜோஷி மிகவும் கொடுத்து வைத்தவர்.ராயரின் அருள் பரிபூர்ணமாக கிடைக்க என்ன புண்ணியம் செய்து இருக்க வேண்டும்

    பலமுறை மந்த்ராலயம் வழியாக இரயிலில் சென்று இருந்தபோதும், இதுவரை அந்த புண்ணிய பூமியில் அவரை சேவிக்கும் பாக்கியம் கிட்டவில்லை.

    விரைவில் அந்த பேறு பெற்றிட, ராயர் அருள் புரிய வேண்டும்.

    ஹெல்மெட் மற்றும் மது பற்றிய திரு சிவகுமார் அவர்களின் கருத்தை முழுமையாக ஆமோதிக்கிறேன்

    இன்று புதுவை,பஞ்சவடி ஜெயமங்கள பஞ்சமுக ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயத்தில், நமது பிரார்த்தனை குழுமத்தின் வேண்டுதல்களுக்காக பிரார்த்தனை செய்ய உள்ளேன்.

    நன்றி

Leave a Reply to Gowri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *