Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, November 9, 2024
Please specify the group
Home > Featured > பிறவி ஊமையை பேசவைத்த திருமலை தெய்வம் – உண்மை சம்பவம்!

பிறவி ஊமையை பேசவைத்த திருமலை தெய்வம் – உண்மை சம்பவம்!

print
து ஒரு உண்மை சம்பவம். இன்று ஆகஸ்ட் 10, 2014 ஞாயிற்றுக்கிழமை தினகரன் நாளிதழில் வெளியாகியிருக்கிறது. படித்தவுடன் சிலிர்த்துப் போனோம். திருப்பதியில் இருப்பது ஸ்ரீனிவாசன் விக்ரகம் அல்ல. சாட்சாத் ஸ்ரீனிவாசனே. ஆம்… அங்கே நிஜமாக நின்று கொண்டிருக்கொண்டிருக்கிறான் ஸ்ரீனிவாசன். தன்னை நாடி வருவோரின் துயர் தீர்க்க…!

ஆதாரம்… இதோ!

Tirupathi Balaji Real

வாய் பேச முடியாத வாலிபர் பேசிய அதிசயம் !

திருமலை: பிறவியிலேயே வாய் பேச முடியாமல் இருந்த லண்டனை சேர்ந்த பக்தருக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சு வந்தது. திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது இந்த அதிசயம் நடந்தது. டெல்லியை சேர்ந்தவர் பிரத்தீமா. இவரது மகன் தீபக் (18). இவர் பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். மேலும், பிரத்தீமாவுக்கு பூஜா என்ற மகளும் உள்ளார். பிரத்தீமா தனது குடும்பத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் குடியேறினர். நேற்று முன்தினம் இவர் குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். ஸி300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், மூலவர் சன்னதியில் இருந்து வகுலமாதா சன்னதிக்கு வந்தனர். அப்போது, தீபக் திடீரென பக்தி பரவசத்தில் “கோவிந்தா… கோவிந்தா” என கோஷமிட்டார்.

அதை சற்றும் எதிர்பாராத பெற்றோர், தங்கள் மகன் திடீரென பேசுவதை பார்த்து சில நொடிகள் திகைத்தனர். இந்த தகவல் கோயிலுக்கு வந்த பக்தர்களிடையே பரவியது. ஏழுமலையானின் அருளால் அற்புதம் நடந்துள்ளதாக பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பிரத்தீமா குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் கோயில் சார்பில் பிரசாதம், சுவாமி படங்களையும் வழங்கினர். பிரத்தீமா கூறியதாவது: தீபக்கிற்கு பிறவியில் இருந்தே வாய் பேச முடியாது. வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்தால் பக்தர்கள் குறைகளை தீர்த்து வைப்பார் என கூறினர். இதனால், 2002ம் ஆண்டு ஏழுமலையான் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தோம். அப்போது, எனது மகனுக்கு பேசும் சக்தியை கொடுக்கும்படி கடவுளிடம் வேண்டினேன். லண்டனில் தீபக்கிற்கு பேச்சு வருவதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் சரியான முறையில் பேச்சு வராமல் இருந்தது.

dn_100814_e1_14_vlr.pdf

அவன் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே உச்சரித்து வந்தான். இன்று திருப்பதி கோயிலில் வெங்டேஸ்வர சுவாமியை தரிசனம் செய்த பிறகு, ‘கோவிந்தா கோவிந்தா’ என பேசினான். இது கடவுள் அருளால் எனக்கு கிடைத்த வரம். இவ்வாறு பிரத்தீமா கூறினார்.

திருப்பதி கோயிலில் பேச்சு வந்ததை தொடர்ந்து, தனது தாயார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகளிடம் தீபக் மகிழ்ச்சியோடு பேசினார். அவர் கூறுகையில், ‘‘இதுவரை பேச முடியாமல் இருந்தேன். தற்போது சுவாமியின் அருளால் என்னால் பேச முடிகிறது’’ என ஆங்கிலத்தில் கூறிவிட்டு மீண்டும் ‘கோவிந்தா… கோவிந்தா’ என கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினார். –  (தினகரன் 10/08/2014)

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

[END]

11 thoughts on “பிறவி ஊமையை பேசவைத்த திருமலை தெய்வம் – உண்மை சம்பவம்!

  1. இந்த நிகழ்ச்சியை நாமும் நேற்று செய்தித் தாளில் படித்து பரவசமானோம். கடவுளை நம்பினோர் கை விடப் படார்.

    நன்றி
    உமா

  2. எல்லாம் அந்த ஏழுமலையானின் பரிபூரண அருளால் தான் கோவிந்தா… கோவிந்தா……கோ…………….விந்தா………..

  3. மருத்துவம் மட்டும்தான் நமால் பார்க்கமுடியும். குணப்படுத்த அவனால் மட்டுமே முடியும். திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் பெருமாளை தரிசனம் செய்யவரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதற்கு கோவிந்தனின் அருள்தான் காரணம். சிலிர்க்க வைத்த பதிவு.

  4. ஏடு கொண்டலவாடா வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா
    அனாத ரட்சகா ஆபத் பாந்தவா கோவிந்தா கோவிந்தா

  5. WOW WHAT A MIRACLE!!!Not only dis..another miracle has occurred!!!
    today morning only I had an unplanned visit to TTD temple in Venkatanarayana Road–awesome darshan!!
    and

    THE ALMIGHTY HAS SPOKEN TO ME THROUGH THIS ARTICLE!!–UNBELIEVABLE COINCIDENCE AND TIMING…
    FEELING BLESSED AND GRATEFUL TO THE ALMIGHTY!!

    Om Namo Narayananay!!
    Regards
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  6. Heartfelt Thanks to RIGHTMANTRA & RIGHTMANTRA SUNDAR anna..and the pic is simply superb..no words to describe the feeling I get when I see the eternal god!!

    Regards
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  7. கலி காலமாக இருந்தாலும் சரி எந்த காலமாக இருந்தாலும் சரி, மனிதனின் குணங்கள் மட்டும் தான் மாறுமே தவிர, இயற்கையின் குணங்களும், தெய்வத்தின் கல்யாண குணங்களும் மாறுவதேயில்லை என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி நமக்கு தெளிவுபடுத்துகிறது.

    அச்சுதா அனந்தா கோவிந்தா..

  8. இப்பதிவைப் படித்ததும்,
    கலி நாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
    நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா…………………
    குறையொன்றும் இல்லை ……..
    மறைமூர்த்திக் கண்ணா…………ஒன்றும் குறையில்லை
    மறைமூர்த்திக் கண்ணா…………………
    இப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. நன்றி!.

  9. டியர் சுந்தர்ஜி ,

    இந்த செய்தியை படித்தவுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    நாம் என்ன கேட்கிறோமோ அதை அவர் கொடுக்கும் கருணாமூர்த்தி.
    நான் என் வாழ்கையில் முதன் முதலில் விஸ்வரூப தரிசனத்தை என் தங்கையின் திருமண நிகழ்ச்சி திருமலையில் நடைபெற்ற பொழுது பார்த்தேன்.மெய் சிலிர்த்து போனது அந்த ஏழு மலையானை தரிசித்த பொழுது.

    ஓம் நமோ நாராயணாய

    Regards ,

    V ஹரிஷ்

  10. உண்மையான பக்திக்கு இறைவன் செவி சாய்க்கிறார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *