வரவிருக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படியிருந்தாலும் கவலை வேண்டாம். குரு பெயர்ச்சியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிகளவு நற்பலன்களை பெற உதவும்பொருட்டு குரு பெயர்ச்சியை குறித்த வித்தியாசமான உபயோகமுள்ள பதிவுகள் நம் தளத்தில் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.
வரும் குரு பெயர்ச்சி எல்லாருக்கும் எல்லா நலன்களையும் வளங்களையும் தரவேண்டும் என்று அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறோம்.
குருவருள் நம் தள வாசகர்கள் அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும். எந்த நிலையிலும் நல்லதே நினையுங்கள். நல்லதே பேசுங்கள். நல்லதே நடக்கும்.
இப்போதைக்கு குரு பகவான் குறித்து தினகரன் – ஆன்மீகமலரில் நாளிதழில் வெளியான சில தகவல்களை அளித்திருக்கிறோம். மற்ற பதிவுகள் அடுத்தடுத்து வெளிவரும்.
நன்றி….!
====================================================================
* குரு பகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9ம் இடங்களை நோக்குவார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
* புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குரு பகவானின் நட்சத்திரங்கள்.
* குரு தசை 16 வருடங்கள் கொண்டது. ஜோதிடத்தில் முழு சுப கிரகம் எனும் அமைப்பையும் பெருமையும் பெற்ற ஒரே கிரகம் இதுவே.
* வாழ்வின் ஆதாரமான தனம், குழந்தை வரம் இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு ஒருவரே.
* குரு பகவான் திருவருள் பெற்றால் மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்ற அனைத்தையும் பெறலாம்.
* முழு சுப கிரகமாக இருப்பதால் அவருக்கு ஸ்தான, கேந்திர தோஷம் உண்டு. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது சிறப்பல்ல.
* ராசி, அம்சத்தில் பலம் பெற்ற குரு அமர்ந்து விட்டால் அந்த ஜாதகருக்கு அந்த பலமே போதுமானது. கௌரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாகவே தேடி வரும். ஆன்மிக விஷயங்களில் ஜாதகர் ஆத்மார்த்தமாக ஈடுபடுவார்.
* மத போதகர்கள், சொற்பொழிவாளர்கள், கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வோர், தர்ம ஸ்தாபனம் அமைத்திருப்பவர்கள், தலை சிறந்த வக்கீல் கள், நீதிபதிகள் போன்றோர் பரிபூரண குருவின் திருவருள் பெற்றவர்களே.
* குருவருள் கிட்ட முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை மாலை சாற்றலாம்.
* நம் கை விரல்களில் ஆள்காட்டி விரல் குருவிரல் என்றும் அதன் அடியில் உள்ள மேடு குருமேடு என்றும் அழைக்கப்படும். அந்த மேட்டில் வளை யம் போன்ற (சாலமன் ரிங்) அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த உன்னத பதவி, செல்வாக்கு, சொல்வாக்கு கொண்டவர்களாய்த் திகழ்வார்கள்.
* வியாழக்கிழமையும் 3, 12, 21, 30ம் தேதிகளும் மஞ்சள் நிறமும் குருவின் அம்சங்களாகக் கருதப்படுகின்றன.
* குரு அருள் இல்லையேல் திருவருள் இல்லை. குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று வாக்குகள் உண்டு.
* வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து, மாலை ஐந்து மணிக்கு மேல் வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வைத்து குரு பகவானை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும்.
* காசியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாயிரம் தேவ வருடங்கள் அதை நியமத்துடன் பூஜித்து ஈசனால் ஜீவன் எனும் பெயரால் அழைக்கப் பட்டு தேவேந்திரனுக்கே குருவாகும் வரத்தையும் பெற்றவர் குருபகவான் என காசிகாண்டம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* தனுசு ராசிக்கும் மீன ராசிக்கும் தலைவரான குருவிற்கு தானியங்களில் கடலையும் ரத்தினங்களில் புஷ்பராகமும் மலர்களில் முல்லையும் சமித்தில் அரசும் சுவைகளில் இனிப்பும் உலோகங்களில் தங்கமும் சித்ரான்னங்களில் தயிர்சாதமும் உரியவை.
* சுராசார்யார், வாகீசர், பீதாம்பரர், யுவர், த்ரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிகாரகர், தாராபதி, கிரஹபீடாபஹாரகர், ஸௌம்யமூர் த்தி என பல்வேறு திருநாமங்கள் குருவிற்கு உண்டு.
* குருபகவானின் மனைவி தாரை. மகன்கள் பரத்வாஜர், யமகண்டன், கசன்.
* அன்னப்பறவையும் யானையும் குருவின் வாகனங்களாகத் திகழ்வதாக புராணங்கள் கூறுகின்றன.
* சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் குருபகவானைக் குறித்து இயற்றிய ‘பிரஹஸ்பதே….’ என்று துவங்கும் கீர்த்தனை புகழ் பெற்றது.
* பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி எனும் நான்கு வகை வாக்குகளாகத் திகழ்பவர்; கருணைக்கடல், நீதிமான், களங்கமற்றவர் குருபகவான். வஜ்ராயு தம் தாங்கிய இவர் கற்பக விருட்சம் போல் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குபவர்.
[END]
வரும் குரு பெயர்ச்சி எல்லாருக்கும் எல்லா நலன்களையும் வளங்களையும் தரவேண்டும் என்று அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறோம்.
Dear sundarji,
Thanks for your valuable information.
Regards
Harish.V
சார் ஒரு சிறிய திருத்தம் குரு பெயர்ச்சி 13.6.2014 அன்று நிகழ்கிறது பதிவில் 18,6.2014 என்று இருக்கிறது, திருத்தவும்
குரு பகவன் எல்லோருக்கும் நல்லதே செய்வார். ஒவொரு வியாழனும் குருவிற்கு விளக்கேற்றி வழிபட்டால் நல்லதே நடக்கும்.
திருஞான சம்பந்தர் அவர்களே நாளும் கோலும் நமக்கு நல்லதே செய்யும் என்று சொல்லி இருக்கிறார். நாமும் குரு பெயர்சிக்கு முன்னரே மஞ்சள் வஸ்திரம் சாற்றி குருவை வழிபடலாம்.
”’வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தன் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே””
மற்ற பதிவுகளை எதிர்பார்கிறோம்
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ!!!
நன்றி
உமா
நாம் சொன்னது திருக்கணித பஞ்சாக்கப்படி. இருப்பினும் சரியான தேதி குறித்து மாறுபட்ட தகவல்கள் உலவுகின்றன. விரைவில் விளக்குகிறோம். நன்றி.
– சுந்தர்
குருவின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்