Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > சிறியதாக இருந்தால் என்ன? வெளிச்சமாய் இருப்பதில் பெருமிதம் கொள்வோம்! – Rightmantra Prayer Club

சிறியதாக இருந்தால் என்ன? வெளிச்சமாய் இருப்பதில் பெருமிதம் கொள்வோம்! – Rightmantra Prayer Club

print
ருவன் ஒரு சிறு மெழுகுவர்த்திக்கு ஒளியேற்றி அதனை எடுத்துக்கொண்டு உயர்ந்த படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினான். அப்பொழுது மெழுகுவர்த்தி அம்மனிதனைப் பார்த்து, ‘‘என்னை எங்கு கொண்டு செல்கிறாய்?’’ என்று கேட்டது. அதற்கு அந்த மனிதன் ‘‘உன்னை நான் கலங்கரை விளக்கத்தின்  மேல் எடுத்துச் செல்கிறேன். நீ கப்பல்களுக்கு எல்லாம் வழிகாட்டப் போகிறாய்’’ என்றான்.

beacon_

அதற்கு மெழுகுவர்த்தி, ‘‘நானோ சிறு வெளிச்சம். நான்  எப்படி கப்பல்களுக்கு வழிகாட்ட முடியும்?’’ என்று கேட்டது.

அப்போது அவன், ‘‘நீ உன்னால்  முடிந்த மட்டும் வெளிச்சத்தை கொடு. மற்றதை நான்  பார்த்துக் கொள்கிறேன்’’ என்றான்.

அவன் அந்த மெழுகுவர்த்தியை மேலே கொண்டு சென்று அங்கிருந்த ஒரு ராட்சச விளக்கின் தீபத்தை ஏற்றினான். அப்பொழுது அது மிகப்பெரிய வெளிச்சமாகியது. அருகிலிருந்த ஒரு கண்ணாடி, அந்த வெளிச்சத்தை கடலில் பாய்ச்சியது. அதன்மூலம் கப்பல்களுக்கு வழிகாட்டப்பட்டது.

தேவன் நம்மை உலகில் ஓர் வெளிச்சமாக வைத்துள்ளார். நம்முடைய ஞானம், திறமை, அறிவு போன்றவை சிறியதாக இருந்தாலும் பிரச்னை இல்லை.

தேவன் நமக்கு கொடுத்த இந்த சிறு காரியங்களை தேவனுடைய கரத்தில் முழுமனதாய் கொடுப்போமானால் அவர் நம்மை உலகிற்கு ஆசீர்வாதமாய் பயன்படுத்துவார்.

“நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்'” (மத் 5: 14);

“விளக்கை கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல்,  விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள். அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.”  (நன்றி : பரமன்குறிச்சி பெ.பெவிஸ்டன், தினகரன் ஆன்மீகம்)

====================================================
இந்த வார கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா?

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன்!

m-c-comagan‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே’ என்கிற பாடலை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. அப்பாடல் காட்சியில் ‘மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும். அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்’ என்கிற உணர்ச்சி பொங்கும் வரிகளை பாடியவரை மறக்க முடியாது. அவ்வரிகளைத் தனது அடிமனதில் இருந்து உணர்ச்சி பொங்க பாடி, பலரது மனதிலும் ஆழப்பதிந்தவர் தான் கோமகன்.

இன்றைக்கு பார்வைத் திறன் சவால் கொண்டவர்கள் பல்வேறு துறைகளில் பரிமளிக்கலாம். ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு அப்படி அல்ல. அந்த நேரத்தில் அப்போது நிலவிய சூழலில், பார்வையற்றோர்கள் குறித்த சமூகத்தின் பார்வையை மாற்றி, அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு அழுத்தந்திருத்தமாக உணர்த்தியவர் கோமகன்.

கோமகன் அவர்களுடன் நமக்கு ஏற்கனவே அறிமுகம் உண்டு. பழகுதற்கு இனியவர். மிகச் சிறந்த பண்பாளர்.

comaganin-raaga-priya

கோமகன் எம்.ஏ. சமூகவியல் படித்தவர். பார்வைத்திறன் சவால் கொண்டவர்களை மட்டுமே முழுக்க முழுக்க வைத்து இவர் ‘கோமகனின் ராகப்ரியா’ என்கிற இசைக்குழுவை நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்தது 1000 திரைப்படப் பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும். இவர்கள் அனைவரும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடும் திறன் பெற்றவர்கள். பழைய புதிய பாடல்களை மிக எளிதாகப் பாடுகின்றனர்.

comaganin-raaga-priya-photo-gallery-full20

தேசிய பார்வையற்றோர் சங்க ஆசிரியையாகப் பணியாற்றிய அனிதாவுடன் இவருக்கு 1994-ல் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாகி, 1997-ல் திருமணம் நடைபெற்றது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கின்னஸ் சாதனைக்காக இவர் நடத்திய இவரது நிகழ்ச்சியை பார்த்து வியந்த பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்.பின் பொது மேலாளர் இவருக்கு ஐ.சி.எப்.பில் கிளார்க் பணி வாங்கித் தந்திருக்கிறார். வார இறுதிகளில் விடுமுறை நாட்களில் இசை நிகழ்சிகளை தனது குழுவினர் மூலம் நடத்தி வருகிறார் கோமகன்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி கூறியதுமே மிக்க மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு, நம் அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார். அவர் துணைவி அனிதாவும் தமது கணவருடன் இனைந்து பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார். கோமகனுக்கும் அவரின் துணைவியாருக்கும் நம் தளம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

(கோமகன் அவர்களை சந்தித்து விரைவில் அவரின்  பயணம், அவர் சந்தித்த சவால்கள், அவரின் விடாமுயற்சி, அவர் செய்துள்ள சாதனைகள், இன்றைய இளைஞர்களுக்கு அவர் கூற விரும்புவது இவைகளை பற்றி ஒரு விரிவான பேட்டி எடுக்கவிருக்கிறோம்!)

ஒரு மிகப் பெரிய முயற்சியில் தோல்வியுற்று நான் துவண்டு போயிருந்த நேரத்தில் ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இந்த பாடலை கேட்க நேர்ந்தது. நம்மாலும் சாதிக்க முடியும் என்று அந்த நேரத்தில் எனக்கு தைரியமூட்டிய பாடல் இது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே – Song Video

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு

(ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே)

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது

எந்த மனித நெஞ்சுக்குள்ள காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லம் மறைந்து போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்

யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அத தினம்முயின்றால் ஒரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு

(ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே)

வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சை போல ஸ்வாசிப்போம்

லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெள்ள யாரும்மில்லை உருதியோடு போராடு

வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானமளவு யோசிப்போம்
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போலே சுவாசிப்போம்

லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு

மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்

தோல்வியின்றி வரலாறா? துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு

====================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

முதல் கோரிக்கை அனுப்பியிருக்கும் உமா அவர்களுக்கு கடந்த ஒரு மாதகாலமாகத் தான் நமது தளம் பற்றி தெரியும். இந்த ஒரு மாதத்திலேயே தளத்தின் தீவிர வாசகியாக மாறிவிட்ட அவர் ஒவ்வொரு பதிவையும் படித்து பின்னூட்டமிட தவறுவதேயில்லை. திருநின்றவூரில் பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற நமது சமீபத்திய உழவாரப்பணியில் கூட  தனது மகனுடன் கலந்துகொண்டார். தாய் மற்றும் தனயன் இருவரும் வந்திருந்து மிகச் சிறப்பாக பணி செய்து அனைவரது பாராட்டையும் பெற்றுவிட்டனர். எதிர்காலத்தில் கூடுமானவரை நம் தளம் தொடர்புடைய ஆன்மீக சமூக நிகழ்சிகளில் நிச்சயம் கலந்துகொள்வதாக கூறியிருக்கிறார்.

அடுத்து திருமதி.அனிதா அவர்கள். தமது வாழ்க்கைத் துணையின் நலனுக்காக இங்கு மனு செய்திருக்கிறார். கணவர் மீது அவர் வைத்திருக்கும் அன்பை அவரது வார்த்தைகளிலேயே உணர்ந்துகொள்ளமுடிகிறது.

====================================================

செவியில் கேட்கும் திறன் மேம்படவேண்டும் & மகனுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும்!

Dear Mr Sundarji and Rightmantra friends,

Few weeks back i saw your website Rightmantra.com.  Very very nice.  I came to know that you are conducting prathana club.  Sir, the following is my pratana.

1.  I am Uma, working as a Sr Admin Executive in Chennai, aged 47 years.  Since  last 5 years, i am having hearing problem.  My hearing capacity is very low.  So i put hearing aid during office hours.  Kindly pray for me to solve my hearing problem.  Without hearing aid, i want to survive.

2.  I am having one son aged 24 years.  Please pray for him for his future and for his good job.

I hope, my problems will be solved by the Grace of Mahaperiyava.

Regards,

Uma Venkat

====================================================

அன்புக்குரியவர் நலம் பெறவேண்டும்!

சுந்தர் அவர்களுக்கும் ரைட் மந்த்ரா வாசகர்களுக்கும் வணக்கம்

எனது அன்புக்குரியவர் பெயர் செந்தில் குமார் தற்போது உடல்நலம் குறைவால் பாதிக்க பட்டுள்ளார் . அவர் எப்படி பட்ட குணம் உடையவர் என்பதை கூற வார்த்தைகள் இல்லை.

எனக்கு தோழன்  , காதலன்  , கணவன்  எல்லாம் அவர் ஒருவரே. ஒவ்வொரு நொடியும் அவருக்காக பிரார்த்தித்து கொண்டு தான் இருக்கிறேன் என்பது உண்மை .

இருப்பினும் கூட்டு பிரார்த்தனை மூலம் இறைவைனின் கருணை பெற வேண்டி இதை அனுப்புகிறேன் .

நன்றி
அனிதா
====================================================

நம் பொது பிரார்த்தனை

கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை ஏற்றம்!

நாட்டில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதை தடுக்க வழி தெரியாது மத்திய மாநில அரசுகள் விழித்து வருகின்றன. நமது விலைவாசி உயர்வுக்கு காரணம் பணவீக்கம் தான். அதாவது பணத்தின் மதிப்பு குறைவது. பணத்தின் மதிப்பு குறைந்தால் வாங்கும் பொருளுக்கு நிச்ச்சயம் கூடுதல் விலையை கொடுத்து தானே ஆகவேண்டும் ?

விவசாயி தான் உழுது பயிரிட்டு நமக்கு தரும் அரிசியை தவிர அனைத்த பொருட்களின் விலையையும் அதை தயாரிப்பவர்களே தீர்மானிக்கின்றனர்.  எரியும் வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம் என்கிற சிந்தனை தான் பல வர்த்தகர்களிடம் காணப்படுகிறது. சமீபத்திய உதாரணம் வெங்காய விலை ஏற்றம்.

onion

‘சமையலறையின் ராணி’ என்று கருதப்படும் வெங்காயத்தின் விலை தற்போது கிலோ ரூ.100/- எட்டியுள்ளது.  வெங்காயத்தை நறுக்கினால் மட்டுமே வரும் கண்ணீர், தற்போது அதன் விலையை கேட்டாலே தாய்மார்களுக்கு வருகிறது.

இந்நிலை மாறவேண்டும். விலைவாசி குறையவேண்டும். உற்பத்தி பெருகவேண்டும். விவசாயம் தழைக்கவேண்டும். பணத்தின் மதிப்பு அதிகரிக்கவேண்டும் என இறைவனை வேண்டுவோம். இதுவே இந்த வாரம் நமது பொது பிரார்த்தனை.

====================================================

வாசகி உமா வெங்கட் அவர்கள் செவித்திறன் மேம்படவும், அவரது அன்றாட பணிகளை அவர் சிரமமின்றி செய்யவும், அவரது மகன் ஹரீஷுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவும், வாசகி அனிதா அவர்களின் கணவர் செந்தில் குமார் அவர்கள் நலம் பெற்று சீரும் சிறப்புமாக தம்பதிகள் வாழவும், நடுத்தர மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ள விலைவாசி ஏற்றம் கட்டுக்குள் வரவும், வெங்காயம் போன்ற அத்தியாவசிய சமையலோ பொருட்களின் விலை குறையவும் இறைவனை பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

====================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : அக்டோபர் 27, 2013 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மஹா பெரியவாவின் ஆத்யந்த பக்தை திருமதி.ராஜலக்ஷ்மி விட்டல்!

6 thoughts on “சிறியதாக இருந்தால் என்ன? வெளிச்சமாய் இருப்பதில் பெருமிதம் கொள்வோம்! – Rightmantra Prayer Club

  1. சுந்தர்ஜி,

    வாசகி உமா வெங்கட், அவரது மகன் ஹரீஷ் , வாசகி அனிதா அவர்களின் கணவர் செந்தில் குமார் எல்லோருடைய பிரார்த்தனைகளும் நிறைவேற மஹா பெரியவா என்றென்றும் துணை இருப்பார் அவர்கள் எல்லாருடைய பிரார்த்தனைகளும் விரைவில் பலிதமாக பிரார்த்திப்போம்.

    ஒவொரு பூக்களுமே பாட்டு நமக்காகவே இயற்ற பட்டுள்ளது போலும். வாழ்கையில் உடைந்து போய் சோகமாக இருக்கும் ஒவொருவருக்கும் ஏற்ற பாட்டு. அருமையான வரிகள்.

    நன்றி.

  2. சுந்தர் சார்
    வணக்கம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்று நமக்காக பிரார்த்தனை செய்யவிருக்கும் திரு.கோமகன் சார் அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.
    ஒவ்வொரு பூக்களுமே பாட்டு யாராலும் மறக்க முடியாது. அந்த பாட்டை கேட்காதவர்களும். ரசிக்காதவர்களும் இருக்க மாட்டார்கள்.எத்தனையோ நெஞ்சங்களில் மன உறுதியையும் வாழ்க்கை பற்றையும் கொண்டுவந்த பாட்டு.
    பல நேரங்களில் நான் முணுமுணுக்கும் பாட்டு. இவர் நம் பிரார்த்தனை கிளப் மூலம் நம் தளத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
    கோமகன் சார் அவர்களுடன் உள்ள உங்கள் நட்பும், நம் தளத்தின் உறவும் மேலும் வளர வேண்டுகிறேன்.
    உமா அவர்களின் செவி குறைபாடு நீங்கி நலம் பெறவும், அனிதாவின் கணவர் விரைவில் குணமடையவும் ஹரிஷ்க்கு நல்லதொரு நிரந்தர வேலை கிடைக்கவும் பிரார்த்தனை செய்வோம்.

  3. dear sundarji

    Thank you for putting my prayer message in pratana club . Sir definitely my problems will be solved soon .

    i will also pray for Mrs.Anitha’s husband Mr Senthilkumar

    Definitely Mahaperiyava will hear our prayers and solve our problem

    i am also very much thankful to usha and parimalam .

    Thanks and regards

    Uma

  4. சுந்தர்ஜி,
    நம் தளத்திற்கு கோமகன் அவர்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன் . வாரத்திற்கு வாரம் நமது பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை தாங்குபவர்கள் எதாவது ஒருவகையில் மிகக் சிறந்தவர்களாக உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து அழைத்துவரும் உங்களுக்கு இறைவன் நிச்சயம் உதவுகிறார் என்பதற்கு அவர்களின் சிறப்புஇயல்பே சாட்சி.

    மேலே சொன்ன தேவனின் கதையில் வரும் சிறு மெழுகுவர்த்திக்கு ஒளியேற்றி கப்பலுக்கு வெளிச்சம் காட்டும் மனிதன் தாங்களே தான். உங்களுக்கு உள்ள சிறு ஓளி இப்போது ரைட் மந்திரா தளம் எனும் கலங்கரை விளக்கமாக மாறி எங்களுக்கு வழி காட்டுகிறது. எங்கள் வாழ்க்கை எனும் கடலில் நீந்தி வர நம் தளம் ஒரு கலங்கரை விளக்கம்.

    எப்போதும் போல் நம் பிரார்த்தனைக்கு வந்துள்ள அனைவர்க்காகவும் திரு கோமகன் தம்பதி உடன் நாமும் பிரார்த்திப்போம். நலம் பெறுவோம். நன்றி

  5. கோமான் சார் அவர்கள் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பு என்பது நமக்கெல்லாம் பெரிய நம்பிக்கைதான் ..அவர்களுடைய ஒவ்வொருபூக்கலுமே பாடலை கேட்டவர் யாராகினும் கண்கலங்காமல் இருக்க முடியாது ..அவ்வளவு ஒரு நம்பிக்கையான வார்த்தைகள் அந்த பாடலில் உள்ளது..இந்த பாடலை கேட்டாலே உடலில் பாதி நம்பிக்கை மற்றும் பலம் வந்துவிடும் …
    மேலும் இந்த வாரம் பிரார்த்தனை கோரி இருந்த வாசகி உமா வெங்கட் அவர்கள் செவித்திறன் மேம்படவும், அவரது அன்றாட பணிகளை அவர் சிரமமின்றி செய்யவும், அவரது மகன் ஹரீஷுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவும், வாசகி அனிதா அவர்களின் கணவர் செந்தில் குமார் அவர்கள் நலம் பெற்று சீரும் சிறப்புமாக தம்பதிகள் வாழவும், நடுத்தர மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ள விலைவாசி ஏற்றம் கட்டுக்குள் வரவும், வெங்காயம் போன்ற அத்தியாவசிய சமையலோ பொருட்களின் விலை குறையவும் இறைவனை பிரார்த்திப்போம். –

  6. சுந்தர் சார்

    நீங்கள் காட்டும் ஒளியில் மட்டுமே நடந்து செல்கிறோம்

    நன்றி

Leave a Reply to Gowri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *