Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > பிறரை ஏமாற்றுவதும் & நம்மை நாமே ஏமாற்றுவதும்!

பிறரை ஏமாற்றுவதும் & நம்மை நாமே ஏமாற்றுவதும்!

print
குறுக்கு வழிகளில் சென்று காரியங்களை சாதித்து கொள்பவர்கள் புத்திசாலிகள் என்றும் நேர்மையாக நடந்து காரியம் சாதித்துக்கொள்ள சிரமப்படுகிறவர்கள் ஏமாளிகள் என்றும் ஒரு அபிப்ராயம் பொதுவாக பலருக்கு இருக்கிறது.

சுவாமி விவேகானந்தர் கூறியது போல, குறுக்கு வழிகளில் சென்று அற்பமான காரியங்களை தான் சாதித்துக்கொள்ளமுடியுமே தவிர மகத்தான காரியங்கள் எதையும் நிச்சயம் சாதிக்க முடியாது.

மேலும் கஷ்டப்படாமல் ஒரு காரியத்தை சாதிக்கும் மனோபாவம் என்பது நாளடைவில் நம்மை முடக்கிபோட்டுவிடும். நமது திறமையும் விடாமுயற்சியும் நமக்கே தெரியாமல் போய்விடும்.

கல்லூரி மற்றும் பள்ளியிறுதி மாணவர்கள் பலர் மத்தியில் ஒரு வழக்கம் உண்டு. ரிவிசன் மற்றும் செமஸ்டர் தேர்வு எழுதும் போது ஆசிரியர் மற்றும் மேற்பார்வையாளரின் கண்களில் எப்படியோ மண்ணைத் தூவி பிட்டடித்துவிட்டு அதை பெருமையாக தங்கள் நட்பு வட்டத்தில் பீற்றிக்கொள்வது. அப்படி பிட் அடிக்கிறவர்கள் அந்தந்த தேர்வுகளில் பாஸ் செய்யும்போது, பிட்டடிக்க தைரியம் இல்லாத இது போன்ற செயல்களுக்கு அஞ்சுகின்ற மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் சொல்லி மாளாது.

இதுல கவனிக்கவேண்டிய விஷயம் என்னன்னா…. பிட்டடித்து நீங்கள் வெற்றி பெறும்போது, உண்மையில் வாழ்க்கையில் தோற்றுவிடுகிறீர்கள்.

ஏனெனில் அதற்கு பிறகு எப்படி பிட்டை தயார் செய்வது, எப்படி அதை ஒளித்துவைப்பது என்று தான் கவனம் போகுமே தவிர, படிப்பதில் கவனம் ஏறவே ஏறாது. செமஸ்டர் தேர்வு, ரிவிசன் தேர்வு போன்ற தேர்வுகளில் பிட்டடிப்பது சுலபம். ஆனால், அரசு மற்றும் பல்கலைக்கழக இறுதித் தேர்வில் அது சாத்தியமில்லை. ஒரு வேளை பிடிபட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்வே எழுத முடியாத அளவிற்கு செய்துவிடுவார்கள். அப்படி செய்து வாழ்க்கையை தொலைத்துக்கொண்ட மாணவர்களை கேளுங்கள்…

நான் பிளஸ்-2 படிக்கும்போது ரிவிஷன் டெஸ்ட் உள்ளிட்ட பள்ளிக்குள் நடக்கும் தேர்வுகளுக்கு சில மாணவர்கள் பிட்டடித்து அந்த முயற்சிகளில் வெற்றி பெற்றும் விடுவார்கள். அது பற்றி நண்பர்களிடம் ஆசிரியரையும் சூப்பர்வைசரையும் ஏமாற்றிவிட்டதாக பெருமையடித்துக்கொள்வார்கள். என்னைப் பொருத்தவரை இது போன்ற விஷயங்களில் எனக்கு தைரியம் இருக்கவில்லை. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை ஆயிற்றே.

நான் பிளஸ்-2 முடித்து சில ஆண்டுகள் கழித்து, ஒரு நாள் பஸ்ஸில் போகும்போது அப்படி பிட்டடிப்பதை பெருமையடித்துக்கொள்ளும் வட்டத்தை சேர்ந்த நண்பன் ஒருவனை பார்த்தேன். இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டு, பேச ஆரம்பித்தோம். இருவருக்கும் சற்று நேரத்தில் இருக்கை கிடைத்துவிட, அருகருகே உட்கார்ந்துகொண்டு கதைத்தோம். அவன் முகத்தில் ஒரு இனம் புரியாத வாட்டம் இருப்பதை கண்டேன். விசாரித்ததில் தான் தெரிந்தது, பிட்டடிக்கும் பழக்கம் கல்லூரி வரை தொடர்ந்ததும், யூனிவர்சிடி பரீட்சையின்போது பிட்டடித்து மாட்டிக்கொண்டதாகவும்… தம்மை பல்கலைக்கழகம் டி-பார் செய்துவிட்டதாகவும் கூறினான்.

“நான் ஒவ்வொரு முறையும் பிட்டடிக்கும்போது ஏமாற்றியது ஆசிரியரையோ தேர்வு-ஹால் சூப்பர்வைசரையோ அல்ல… என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன்….இப்போது என் வாழ்க்கையே பாழாகிவிட்டது” என்று கூறி அழுதான்.

“நான் ஒவ்வொரு முறையும் பிட்டடிக்கும்போது ஏமாற்றியது ஆசிரியரையோ தேர்வு-ஹால் சூப்பர்வைசரையோ அல்ல… என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன்….இப்போது என் வாழ்க்கையே பாழாகிவிட்டது” என்று கூறி அழுதான்.

ஒருவேளை இது போன்ற செயல்களுக்கு அஞ்சி, பரீட்சையில பாஸ் பண்ணனும்னா படிக்கிறது தான் ஒரே வழி என்று அவன் ஓரளவு படித்திருந்தால் கூட தப்பித்திருப்பான்.

வாழ்க்கையும் இப்படித் தாங்க தவறான வழிகளில் செல்பவர்கள் பெரும் குறுகிய ஆதாயத்தை பார்த்து சஞ்சலப்பட்டு நாமும் அவர்கள் வழிகளில் சென்று நமது வாழ்க்கையை தொலைக்கவேண்டாமே.

ரூல்ஸை ஃபாலோ பண்றவங்களுக்கு செய்யுற மரியாதையே அதை செய்யாதவங்களை தண்டிக்கிறது தான் என்பது நாலு பேரை கட்டி மேய்க்கிறவனுக்கே தெரியுது. அப்படி இருக்கும்போது உலகத்தையே கட்டி ஆளும் அந்த ஆண்டவனுக்கு தெரியாதா?

கவலையை விடுங்க… கடமையை செய்ங்க.. புதுப் புது விஷயங்களை கத்துக்கோங்க… முயற்சி தோத்துப்போனா அடுத்த முறை எப்படி பெட்டரா செய்றதுன்னு யோசிங்க. ஆண்டவன் நடத்துற பள்ளிக்கூடத்துலயும் பட்டறையிலயும் எந்நாளும் உழைச்சதுக்கு பொன்னான பலனிருக்குங்க!

தவறான வழிகளில் சென்று நம்மை நிரூபிப்பதை விட நேர்மையான வழிகளில் சென்று நமது தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் என்ன ஆகும் தெரியுமா?

ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ஓரிரு நாள் பொறுத்திருங்களேன்.

[END]

 

5 thoughts on “பிறரை ஏமாற்றுவதும் & நம்மை நாமே ஏமாற்றுவதும்!

  1. ரொம்ப சரியா சொன்னீங்க சுந்தர். சிலர் குறுக்கு வழியில் பெறும் பதவி உயர்வு மற்றும் சலுகைகளை பார்க்கும்போது மனது வருத்தமாக இருந்தது. இந்த பதிவை பார்த்தவுடன் எல்லாம் இறைவன் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.
    மிக்க நன்றி.

  2. சந்தோசம், மகிழ்ச்சி , பொறமை இவை நம் இதயத்தை பாதிக்கும். அதே போல் நாம் பிறரை ஏமாற்றுவதும் அல்லது நம்மை நாமே ஏமாற்றுவதும் நம்முடைய உடலில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் உஷ்ணம் , படபடப்பு மாதிரி …

    ஆகவே தவறு என்று நம் மனம் சொன்னால் உடனே நாம் திருந்தவேண்டும்.

    நன்றி

  3. வாழ்கையில் நேர்மையாக இருக்கும் போது நல்லது நடக்க கொஞ்சம் காலம் பிடிக்கும் ஆனால் அது நிரந்தரமானதாக இருக்கும் ,அதுவே குறுக்கு வழியில் நடக்கும் போது உடனே நல்லது நடப்பது போல் இருக்கும் ஆனால் அது நிரந்தரமானது அல்ல.

    நேர்மை என்பது கல்லில் கடிய வீடு போல நிரந்தரமாக இருக்கும்

    குறுக்கு வழி என்பது கடற்கரையில் கட்டிய மணல் வீடு போல சிறிது நேரம் இன்பம் தரும் அவ்வளவுதான்

  4. நீ எப்படிப்பட்டவர்களுடன் சேருகிறாயோ அப்படிப்பட்டவனகிறாய் , நீ எவரிடம் வேலை செய்கிறாயோ அவராகவும் ஆகிவிடுகிறாய் .நீ எப்படிப்பட்டவனாக ஆக விரும்புகிறாயோ அப்படிப்பட்டவனகிறாய் .

    -விதுரநீதி

    நன்றி
    மனோகரன்

    ————————————————–
    Wonderful quote and sharing.
    thanks
    – Sundar

  5. மிகவும் அருமையான பதிவு. நாம் அடுத்தவர்களை ஏமாற்றி முன்னேற நினனத்தால் அந்த சந்தோசம் வெகு நாள் நிலைக்காது

    //கல்லூரி மற்றும் பள்ளியிறுதி மாணவர்கள் பலர் மத்தியில் ஒரு வழக்கம் உண்டு. ரிவிசன் மற்றும் செமஸ்டர் தேர்வு எழுதும் போது ஆசிரியர் மற்றும் மேற்பார்வையாளரின் கண்களில் எப்படியோ மண்ணைத் தூவி பிட்டடித்துவிட்டு அதை பெருமையாக தங்கள் நட்பு வட்டத்தில் பீற்றிக்கொள்வது. அப்படி பிட் அடிக்கிறவர்கள் அந்தந்த தேர்வுகளில் பாஸ் செய்யும்போது, பிட்டடிக்க தைரியம் இல்லாத இது போன்ற செயல்களுக்கு அஞ்சுகின்ற மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் சொல்லி மாளாது//

    இந்த பதிவை படிக்கும் பொழுது நம் கல்லுரி நாட்கள் நியாபகம் வருகிறது.

    பரிட்சையில் தோற்கலாம் வாழ்கையில் தோற்க கூடாது

    நன்றி
    உமா

Leave a Reply to Sakthivel V P Cancel reply

Your email address will not be published. Required fields are marked *