Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > அழுக்குகளை தள்ளுங்கள்; தங்கத்தை அள்ளுங்கள் – MONDAY MORNING SPL 58

அழுக்குகளை தள்ளுங்கள்; தங்கத்தை அள்ளுங்கள் – MONDAY MORNING SPL 58

print
வம்பர் 25,  1835 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் ஒரு ஏழை நெசவாளியின் குடும்பத்தில் பிறந்தவர் ஆண்ட்ரூ கார்னகி.  குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பு வரை தான் கார்னகியால் படிக்க முடிந்தது. அதுகூட பாதிவரை தான். பொருளில் தான் கார்னகியின் குடும்பத்தாருக்கு வறுமையே தவிர சிந்தனையில் அல்ல. எனவே நல்ல நல்ல நூல்களை படிப்பதை அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். கார்னகியின் குடும்பத்தினர் வறுமையில் உழன்றபடியால், பெரும்பாலும் தன் பள்ளி புத்தகங்களை இரவல் வாங்கித் தான் அவர் படித்தார். அவர் குடும்பத்தினரும் அக்கம் பக்கத்து வீடுகளில் இரவல் வாங்கித் தான் படித்தனர். ஆனால் இன்று? பதிவின் கடைசியில் பாருங்கள்!

1848 இல் கார்னகி அமெரிக்காவில் குடியேறினார். அப்போது அவருக்கு வயது 13. அப்போது அவருக்கு ஒரு தொழிற்சாலையில், வாரம் ரூ.10/- சம்பளத்தில் வேலை கிடைத்தது. அதற்கு பிறகு பென்சில்வேனியா ரயில்வே நிர்வாகத்தில் தபால் தந்தி துறையில் ஆப்பரேட்டர் வேலை கிடைத்தது. தனது உழைப்பால் படிப்படியாக SUPERINTENDENT நிலைக்கு கார்னகி உயர்ந்தார்.

அப்போது பல துறைகளில் முதலீடு செய்தார் கார்னகி. மிகுந்த சாதுரியத்துடன் முதலீடு செய்த கார்னகி, கச்சா எண்ணையில் செய்த முதலீடு மட்டும் பன்மடங்கு லாபத்துடன் திரும்ப கிடைப்பதை உணர்ந்துகொண்டார். அதற்கு பிறகு ரயில்வே வேலையை உதறிவிட்டு வேறு பல திட்டங்களில் கால் பதிக்க தொடங்கினார்.

பத்தாண்டுகளின்  முடிவில், அப்போது நன்கு வளர்ந்து வந்த ஸ்டீல் (எஃகு) தொழிலில் கால்பதித்தார். அவரின் முயற்சியால் கார்னகி ஸ்டீல் கம்பெனி என்கிற மிகப் பெரிய ஸ்டீல் சாம்ராஜ்ஜியம் உருவானது. அமெரிக்காவில் ஸ்டீல் உற்பத்தியில் ஒரு மிகப் பெரிய புரட்சியையே அவரது நிறுவனம் கண்டது. நாடு முழுதும் பல ஸ்டீல் தொழிற்சாலைகளை கார்னகி துவக்கினார். அப்போதிருந்த நவீன தொழில்நுட்பத்தையும் உற்பத்தி முறையையும் பின்பற்றி தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். ஒவ்வொரு முறை அவர் தனது சிறகை விரிக்கும்போதும், அவருக்கு என்ன தேவையோ அதை அவர் வைத்திருந்தார். உதாரணத்துக்கு மூலப் பொருட்கள், மூலப் பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல  கப்பல்கள், ரயில் தடங்கள், ஏன் பர்னசை எரிக்க நிலக்கரி சுரங்கம் கூட வைத்திருந்தார்.

Andrew Carnegie

எதற்காகவும் அவர் பிறரை சார்ந்திருக்கவில்லை. இந்த சூட்சுமமானது அவரை உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாற்றியது. அவரால் அமெரிக்காவின் பொருளாதாரம் நன்கு உயர்ந்தது. இன்றைய அமெரிக்காவை வடிவமைத்த நவீன சிற்பிகளில் கார்னகியும் ஒருவர் என்றால் மிகையாகாது. 1889 வாக்கில் கார்னகி ஸ்டீல் கார்ப்பரேஷன் உலகிலயே மிக பெரிய நிறுவனமாக திகழ்ந்தது.

65 வயதை நெருங்கும் வேளையில், பணமும் பகட்டும் கசக்க, தனது எஞ்சியுள்ள வாழ்நாளை பயனுள்ளதாக கழிக்க விரும்பிய கார்னகி, ஜே.பி.மார்கனிடம் 200 மில்லியன் டாலருக்கு தனது ஸ்டீல் நிறுவனத்தை விற்றுவிட்டார். அதன் பிறகு தனது வாழ்நாளை அறப்பணிகளிலும் மக்கள் சேவைகளிலும் செலவிட ஆரம்பித்தார்.

இவரின் நன்கொடையால் பல நூலகங்கள் புத்துயிர் பெற்றன. நியூயார்க் பொது நூலகத்துக்கு மட்டும் 5 மில்லியன் டாலர் நன்கொடை  அளித்தார். இதன் மூலம் அது பல இடங்களில் கிளை நூலகத்தை தொடங்க முடிந்தது. அதற்கு பிறகு அவர் துவக்கியது தான் உலகப் புகழ் பெற்ற கார்னகி மெலான் பல்கலைக்கழகம். (இங்கு பல்கலைக்கழங்களை யார் துவக்குகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்??!) அமைதி விரும்பியான கார்னகி சமாதானத்தை வளர்க்கும் விதமாக கார்னகி சர்வதேச அறக்கட்டளையை துவக்கி அமைதிப் பணிகளுக்கு உதவலானார். ஒரு காலத்தில் புத்தகங்களை வாங்க காசின்றி இரவல் வாங்கி படித்த கார்னகியின் நன்கொடையால் மட்டும் பிற்காலத்தில் அமெரிக்காவில் 2,800 நூலகங்கள் தொடங்கப்பட்டனவாம்.

Gold Treasureஒரு முறை கார்னகியிடம் கேட்கப்பட்டது :

“எத்தனையோ பேரை உங்கள் வாழ்நாளில் சந்தித்திருப்பீர்கள்… இப்படி ஒரு உச்சத்தை தொட மனிதர்களை எப்படி டீல் செய்தீர்கள்? அது சவாலான விஷயமாயிற்றே?”

அதற்கு பதிலளித்த கார்னகி கூறியதாவது:  “மனிதர்களிடம் டீல் செய்வது என்பது தங்க சுரங்கம் தோண்டுவதை போல. சுரங்கம் தோண்டும்போது ஒரு அவுன்ஸ் தங்கம்  கிடைக்க, டன் கணக்கில் அழுக்குகளை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. இங்கு ஒரு விஷயத்தை நினைவில்  வைத்துக்கொள்ளவேண்டும். சுரங்கம் தோண்டும்போது நாம் தங்கத்தை தான் எதிர்பார்த்து செல்கிறோம். அழுக்குகள் நிறைய கிடைக்கும் என்பதால் அழுக்குகளை அல்ல!”

எத்தனை சத்தியமான வார்த்தைகள்! அந்த பதிலில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்…!!

(கார்னகியின் பதிலிலிருந்து நீங்கள் புரிந்துகொண்டதை கொஞ்சம் சொல்லுங்கள் பார்ப்போம்!)

==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==============================================================

[END]

 

 

 

13 thoughts on “அழுக்குகளை தள்ளுங்கள்; தங்கத்தை அள்ளுங்கள் – MONDAY MORNING SPL 58

  1. Sundarji,
    தங்கத்தை தான் எதிர்பார்த்து செல்கிறோம்.
    அழுக்குகளை அல்ல!”

    Morning spl Super sir!

  2. Monday Morning Spl, as usual super. The story gives a positive energy and enriched the confident level.

    Thanks & Regards,
    S.Narayanan.

  3. வணக்கம்…………

    நாம் வாழும் சூழலிலும் நாம் பழகும் மனிதர்களிடமும் நிறை, குறை இரண்டுமே கலந்திருக்கும். அவற்றில், குறைகளை புறந்தள்ளி நிறைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும், நல்ல விடயங்களை மட்டுமே கற்று கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம்…….

    நன்றிகள் பல……….

  4. Monday மோர்னிங் ஸ்பெஷல் மிகவும் அருமை. சிந்திக்க வைத்த பதிவு.

    தான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தாலும் பழைய வாழ்கையை மறக்காமல் தான் கோடீஸ்வரராக ஆன பிறகும் துளியும் பந்தா இல்லாமல் நூலகங்களைத் திறக்க நன்கொடை அளித்து .மற்றும் பல அறப்பணிகளுக்கும் உதவி செய்து புரட்சி செய்துவிட்டார்

    திரு கார்னகியிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் சுபெர்ப் :

    //“மனிதர்களிடம் டீல் செய்வது என்பது தங்க சுரங்கம் தோண்டுவதை போல. சுரங்கம் தோண்டும்போது ஒரு அவுன்ஸ் தங்கம் கிடைக்க, டன் கணக்கில் அழுக்குகளை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. இங்கு ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். சுரங்கம் தோண்டும்போது நாம் தங்கத்தை தான் எதிர்பார்த்து செல்கிறோம். அழுக்குகள் நிறைய கிடைக்கும் என்பதால் அழுக்குகளை அல்ல!”// எவாளவு சத்தியமான வார்த்தைகள்

    நாமும் ஒரு வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டுமென்றால் நம்மை உதாசீனப்படுத்தும் எந்த விசயத்தையும் காதில் போட்டுக்கொள்ளாமல் வெற்றி படிக்கட்டை நோக்கி பயணிக்க வேண்டும்.

    வெரி energetic article திரு கார்ணகியைப் பற்றி இப்பொழுதான் கேள்விபடுகிறோம்/ தெரியாதவர்களை பற்றி தேடி கண்டு பிடித்து பதிவாக போட்டு சாதனை செய்வதில் தாங்கள் புரட்சி ஏற்படுத்தப் போகிறீர்கள்

    நன்றி

    உமா

  5. சுந்தர் சார் வணக்கம்

    நமக்குன்னு விதிக்கப்பட்டது கண்டிப்பா கிடைக்கும் அதற்கு முதலில் நம் மனதில் உள்ள ஒரு சில அழுக்குகளை அப்புறப்படுத்த வேண்டும்.

    நன்றி

  6. மிகப்பெரிய தொழில் நுணுக்கத்தை சுலபமாக உணர்த்திவிட்டது கார்னகி அவர்களின் வரிகள்…! நான் சில நேரங்களில் சிலரின் குணம் மற்றும் பேச்சு பிடிக்காத காரணத்தினால் தொழில் ரீதியான பேச்சுக்களை தவிர்த்து வந்தேன்…..அதனால் சில நல்ல ப்ராஜெக்ட்-களை இழந்தும் இருக்கிறேன்…அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்திவிட்டது இந்தப் பதிவு…இன்று முதல் என் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளப் போகிறேன்…சரியான நேரத்தில் வழிகாட்டியமைக்கு நன்றிகள்…!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்:

    விஜய் ஆனந்த்

  7. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது
    துர்நாற்றத்தினை போக்கவேண்டுமேன்றால் அசுத்தங்களை களைவது அவசியம்
    நம்பிக்கையை செடியாக விதைப்போம்
    அவமானங்களை உரமாக இடுவோம்
    விட முயற்சியை நீராக பாய்ச்சுவோம்

    கனி கிடைக்காமலா போய்விடும்?
    நிச்சயம் நிழலாவது மிஞ்சும் !!!

  8. இங்கு பல்கலைக்கழங்களை யார் துவக்குகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்??!
    மக்களிடம் கொள்ளை அடித்த (அதற்கு மக்களாகிய நாமும் காரணம் தான்) பணத்தில் தான் சொகுசு காரில் வந்து இறங்குகின்றனர். மக்களும் அங்கே படிக்க தங்கள் சொத்தை அடகு வைத்து இந்த நவீன கல்வி வள்ளல்களுக்கு கொட்டுகிறார்கள். இந்த நிலை மாற, சமூதாயம் துப்புரவாக நீங்கள் ஏன் சுந்தர் ஒரு நல்ல முயற்சியை தொடங்கக் கூடாது. இதுதான் உண்மையில் இறைவனுக்கு செய்யும் சேவை. கடினமான “கல்லும் முள்ளும்” காலுக்கு மெத்தை என்ற பாதை. ஆனால் இந்த சமூகத்திற்கு உடனடி தேவை. அதற்கு வேறு யாரோ இருக்கிறார்கள் என்று கைவிட்டால், இப்போது செய்யும் பணி “விழலுக்கு இரைத்த நீராகும்”. என்ன செய்யலாம் என விதையுங்களேன். இங்கே யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றி.

    1. கார்னகி அளவுக்கு ஆண்டவன் என்னை உயர்த்தினால் நிச்சயம் செய்வேன். நன்றி.

      – சுந்தர்

      1. திரு சோழன் நடராசன் கருத்தை ஆமோதிக்கிறேன்.
        தங்கள் கார்னகி அளவுக்கு உயர்ந்து சமுதாயம் நல்ல நிலையை அடைய முயற்சி செய்யும் தங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் . ஆண்டவன் தங்களுக்கு துணை நிற்பார்.

        நன்றி
        உமா

  9. நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த நேர்மறையான எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்! இதற்க்கு ஒரு எடுத்துகாட்டாய் வாழ்ந்து இருக்கிறார் ஆண்ட்ரூ கார்னகி. தான் சிறுவயதில் புத்தகம் இரவல் வாங்கி படித்தவர், பின்னாளில் பல நூல் நிலையம் நிறுவ காரணமாக இருந்து இருக்கிறார்.

    நாம் வந்த பாதையை திரும்பி பார்த்தாலே..தலைகனம் என்பது நம்மில் துளி கூட எட்டி பாக்காது.

    Monday Special Super as usual Sundar Sir!

Leave a Reply to A. Arunothayakumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *