Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > மகா பெரியவா கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு; மறுப்பதிலும் அர்த்தம் உண்டு – குரு தரிசனம் (3)

மகா பெரியவா கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு; மறுப்பதிலும் அர்த்தம் உண்டு – குரு தரிசனம் (3)

print
“இறைவன் கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு. கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் உண்டு” என்று கூறுவார்கள். நாம் வருந்தி வருந்தி கேட்பது நமக்கு நன்மை தருமா என்பதை  நாம் அறியமாட்டோம். அவன் ஒருவனே அறிவான். எனவே நமது அபிலாஷைகளை அவன் பாதார விந்தங்களில் சமர்பித்துவிட்டு நமது கடமையை நாம் செய்துவரவேண்டும். குருவருளும் அப்படித்தான். குரு கொடுத்தால் நூறு நன்மை. மறுத்தால் இருநூறு நன்மை. கீழ்கண்ட சம்பவமும் உணர்த்துவது அதைத் தான். கிரி ட்ரேடிங் ஏஜென்ஸி வெளியிட்டுள்ள ‘அலகிலா விளையாட்டுடையான்’ என்கிற நூலில் நாம் படித்து உருகிய சம்பவத்தை உங்கள் பார்வைக்கு  தருகிறோம்.

மகான்கள் மறுப்பதிலும் அனுக்கிரகம் உண்டு!

ஒரு குக்கிராமத்தில் முகாமிட்டிருந்த மஹானை தரிசிக்க ஒரு மிராசுதாரும் அவரது உதவியாளரும் வந்திருந்தனர். வந்த  பக்தர்கள் அனைவரிடமும் அன்பொழுக பேசி அருள் செய்யும் கருணைத் தெய்வம் காஞ்சி மாமுனி, அன்று வித்தியாசமாக உடன் வந்த உதவியாளரிடம் மட்டுமே கொள்ளைப் பேச்சு பேசினார்.

அழைத்து வந்த எஜமானரை ஒரு வார்த்தை  கூட விசாரிக்கவில்லை. இது மிராசுதாருக்கு வருத்தமாக இருந்தது. காரணமும் புரியவில்லை. தன்னிடம் பேசாமல் இருக்குமளவிற்கு தான் தவறு செய்ததாகவும் தெரியவில்லை. எனினும் யார் காரணம் கேட்க முடியும்? வருத்தம் வாட்டவே விடைபெற்றுச் சென்றார்.

483

முகாமிட்டிருந்த இடத்திலிருந்து ரயில் நிலையம் தள்ளி இருந்ததால், மடத்து வண்டியில் அவர்களை கொண்டு விடும்படி  உடனிருந்த தொண்டருக்கு உத்தரவிட்டார் ஞான மாலை. ரயில் நிலையம் சென்று வழியனுப்பிவிட்டு வந்த தொடரை அழைத்து, “வண்டியில் போகும்போது மிராசுதார் என்ன பேசினார்? தன்னைப் பற்றி  என்ன சொன்னார்?” என்று கேட்க, “அவர் ரொம்ப  குறைப்பட்டுக்கொண்டார். பெரியவா அவரிடம் பேசாதது அவருக்கு ரொம்ப வருத்தமாய் இருந்ததாம். வழியெல்லாம் பெரியவாளை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். எப்பொழுதும் தன்னிடம் அன்பாய் பேசும் பெரியவா இன்று பேசாத காரணம் புரியவில்லை என்று அதே சிந்தனையில் இருந்தார்.” என்று கூறினார் தொண்டர்.

உடனே ஞானக்கடல், “எல்லாம் முடிஞ்சி போச்சி. போனப்புறம் பேச என்ன இருக்கு?” சொல்லிவிட்டு நகர்ந்தது ஞான மலை.

மறுநாள் மாலை தந்தி வந்தது. அதில் மிராசுதார் இறைவனடி சேர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த மடத்து சிப்பந்திகள் மேலும் பிரமிக்கும்படி பெரியவா சொன்னார்: “நான் அவனோட நேத்திக்கு பேசாததன் காரணம் கடைசியா அவனுக்கு என் நினைவாகவே இருக்கட்டும்னு தான். நான் பேசாததாலேயே அவன் என் நினைவாகவே இருந்தான்.” என்று கூறிய பிறகு தான் அவர்களுக்கு புரிந்தது “எல்லாம் முடிஞ்சி போச்சி. போனப்புறம் பேச என்ன இருக்கு?” என்று பெரியவா கூறியதன் அர்த்தம்.

பகவான் கீதையில் “கடைசி நேரத்தில் தன நினைவாகவே இருந்து உயிர் பிரிந்தால் தன்னையே வந்து அடைவதாக” சொல்கிறார் அல்லவா? அதனால் தான், தன் பக்தன் கடைசியில் தன நினைவாகவே இருந்து தன்னையே அடைந்து பிறவிப் பெருங்கடலை தாண்டட்டும் என்று அருள் செய்தார் போலும் நம் கீதாசார்யரான பெரியவா. பிறக்கும் போதும், வாழும்போதும், இறக்கும்போதும் எப்பொழுதும் அருள் செய்யும் கருணைக் கடல் நம் காஞ்சி மாமுனிவர்.

(நன்றி : கிரி ட்ரேடிங் ஏஜென்ஸி வெளியிட்டுள்ள ‘அலகிலா விளையாட்டுடையான்’ | தட்டச்சு : www.rightmantra.com )

[END]

7 thoughts on “மகா பெரியவா கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு; மறுப்பதிலும் அர்த்தம் உண்டு – குரு தரிசனம் (3)

  1. குருவடி சரணம்………..

    குருவின் மகிமையே மகிமை. நம்மால் குருவை நேரில் தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

    எப்பொழுதும் உடனிருந்து நம்மை அவர் காப்பற்றட்டும்.

    சமீப காலங்களில் ரைட் மந்த்ரா தளமே நமக்கு உற்ற தோழமையாக இருந்து வருகிறது.

    என்றென்றும் தங்கள் பணி சிறக்க குருவை வேண்டிக் கொள்கிறோம்.

    வாழ்த்துக்கள்.

    தாமரை வெங்கட்

  2. குரு வாரத்தில் குருவின் பெருமையை கேட்டகவும் , அவரை பார்க்கவும் நாம் பேறு பெற்றவர்கள் ஆனோம் . மேற்கண்ட சம்பவம் உள்ளத்தை நெகிழ வைத்துவிட்டது ….
    குருவருள் கிடைக்க செய்த rightmantra சுந்தர்ஜிக்கு நன்றிகள் பல..

  3. குருவின் மகிமையை குருவாரத்தில் படிப்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது. தனது பக்தனுக்கு , அந்திம காலத்தில் கூட தான் வணங்கும் குருவின் நினைவு இருக்க வேண்டும் என்று நினைக்கும் குருவின் மகிமையை என்னவென்பது.

    குருவின் மகிமையை தட்டச்சு செய்த ரைட் மந்த்ராவிற்கும் குரு அருள் புரியட்டும்.

    //அலகிலா விளையட்டுடை யாரவர் தலைவர்
    அன்னவர்க்கே சரணாங்களே //

    இந்த பாடலின் முதல் இரண்டு வரிகள் ஞாபகம் வரவில்லை. தெரிந்தால் பதிவு செய்யவும்

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    // ஓம் நமசிவாய //

    ந ன்றி
    உமா

  4. எண்ணுத்தில் நினைக்கும் ஒவ்வொரு கணமும் நம்மைச் சிலிர்க்க வைக்கும் சிறப்புடைவர் மகாப்பெரியவா அவர்கள். அவ்வனுபவத்தை மீண்டும் அனுபவிக்க வைத்த தங்களுக்கு நன்றிகள் பல.

  5. குருவாய் வருவாய் சங்கரா …..சிவாய சிவ

  6. “இறைவன் கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு. கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் உண்டு” – என்ன ஒரு அருமையான மேற்கோள்.

    மகா பெரியவரின் ஒவ்வொரு செயலின் பின்னேயும் ஒரு ஆழ்ந்த பொருள் இருக்கும் போல.

    தேனம்பாக்கம் கோவிலில் மகா பெரியவர் திருவுர்வம் கொள்ளை அழகு. உட்னனே அங்கு சென்று அந்த மகானை தரிசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

    பகிர்வுக்கு நன்றி,

    – பிரேமலதா மணிகண்டன்
    மேட்டூர், சேலம்

  7. என்ன ஓர் அற்புதமான தலைப்பு சார்….. குருவருளும் திருவருளும் அடியேனுக்கும் வாய்பதற்கு என்னை மேம்படுத்தி கொள்ள வேண்டும் அதற்கும் குருவருள் தேவை. உங்களின் அற்புதமான பதிவிற்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகள்.

    நன்றி
    கார்த்திக்

Leave a Reply to V UMA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *