Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > நாம் பேசுவதற்கு முன் அவசியம் செய்ய வேண்டிய ஒரு டெஸ்ட் – MONDAY MORNING SPL 42

நாம் பேசுவதற்கு முன் அவசியம் செய்ய வேண்டிய ஒரு டெஸ்ட் – MONDAY MORNING SPL 42

print
ந்த கதையை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம். ஆனால் தமிழில் படித்திருக்க மாட்டீர்கள் என்று கருதுகிறோம். படித்து மனதில் இருத்தி என்றும் பின்பற்ற வேண்டிய அற்புதமான கதை.

ஒரு முறை தத்துவ மேதை சாக்ரடீஸை காண அவரது நண்பர் ஒருவர் வந்திருந்தார். “சாக்ரடீஸ், உங்கள் மாணவன் பிளாட்டோவை பற்றி நான் கேள்விப்பட்ட விஷயம் ஒன்று தெரியுமா?”

Socratesவந்தவரை ஏற இறங்க பார்த்த சாக்ரடீஸ்…. “வெயிட்…. வெயிட்…. வெயிட்…. ஒரு நிமிஷம். நீங்க சொல்ல வர்றதை என்கிட்டே சொல்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன டெஸ்ட். அந்த டெஸ்டை பாஸ் பண்ணிட்டு அப்புறம் என்கிட்டே நீங்க தாராளமா சொல்ல வந்த விஷயத்தை சொல்லலாம்….”

வந்தவர் சற்று குழப்பத்துடனும் ஆச்சரியத்துடனும்…. “அது என்ன டெஸ்ட்?”

“அதுக்கு பேர் TRIPLE FILTER TEST”

“TRIPLE FILTER ?”

“ஆமா!”

“என் கிட்டே சொல்றதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் நீங்க சொல்றதை பில்டர் பண்ணிட்டு அப்புறம் சொல்ல்னும். அதனால தான் Triple Filter Test அப்படின்னு சொன்னேன்…”

“முதல் ஃபில்டர் ‘உண்மை’. அதாவது நீங்க சொல்லப்போற விஷயம் உண்மை தான்னு உங்களுக்கு தெரியுமா?”

“இல்லை… நான் ஜஸ்ட் கேள்விப்பட்டேன் அவ்வளவு தான்!”

“அப்போ நீங்க சொல்ல வர்ற விஷயம் உண்மையா இல்லையான்னு உங்களுக்கு தெரியாது. சரி… போகட்டும்… அடுத்து நீங்க அவனைப் பத்தி சொல்லப்போறது நல்ல விஷயமா?”

“அது வந்து… இல்லே… இல்லே….கெட்ட விஷயம்….”

“ஓஹோ… சொல்லப்போற விஷயம் உண்மையா பொய்யான்னு கூட தெரியாம அவனைப் பத்தி ஏதோ தப்பா சொல்லப்போறீங்க….”

இந்த முறை வந்திருந்த நபர் தர்மசங்கடத்தில் நெளிந்தார்.

Triple Filter

“பரவாயில்லை…. இன்னும் ஒரு ஃபில்டர் இருக்கு. இதுல பாஸ் பண்ணாக் கூட அந்த விஷயத்தை நீங்க என்கிட்டே சொல்லலாம். இந்த மூணாவது பில்டர் ‘உபயோகம்’. அதாவது நீங்க சொல்லப்போற விஷயம் எந்த விதத்திலாவது எனக்கு உபயோகமா இருக்குமா?”

“இல்லை… அப்படி எதுவும் இல்லை”

“ஓ… அப்போ நீங்க சொல்லப்போற விஷயம் நல்ல விஷயம் கிடையாது. தவிர அது உண்மையா இல்லையான்னு உங்களுக்கே தெரியாது. மேலும் அதை என்கிட்டே சொல்லப்போறதுனால எனக்கு எந்த பயனும் இல்லை…. இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நீங்க எனக்கு சொல்லனுமா என்ன? வேற ஏதாவது பேசலாமே…”

வந்தவர் வெட்கித் தலைகுனிந்தார்.

Socrates copy

பயனில்லாமல் பேசுவதையும் பிறரைப்பற்றி புறங்கூறுவதையும் அறவே விட்டொழிக்கவும். சாதனையாளர்களிடம் இந்த பழக்கங்கள் இருக்காது. இந்த வாழ்க்கை மிகவும் குறுகியது. ஆனால் சாதிக்க வேண்டிய விஷயங்களோ எண்ணற்றவை. பயனற்ற சொற்களிலும், பிறரைப் பற்றி புறம்பேசுவதிலும் நாம் ஏன் நேரத்தை செலவழிக்கவேண்டும்?

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. (குறள் 194)

==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==============================================================
[END]

11 thoughts on “நாம் பேசுவதற்கு முன் அவசியம் செய்ய வேண்டிய ஒரு டெஸ்ட் – MONDAY MORNING SPL 42

  1. வணக்கம் சுந்தர் சார்

    இந்த கதையை இப்போது தான் கேள்விபடுகிறேன்.

    மிக அற்புதமான விஷயங்கள். இன்று முதல்
    நான் நடைமுறை படுத்துகிறேன்.

    monday morning special சூப்பர் சார்.

    வாழ்க வளமுடன் ,,,,,,,

    நன்றியுடன்

    ராஜாமணி

  2. Very Nice.
    பேசிய வார்த்தைகள் உனக்கு எஜமான்.
    பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமான்.

  3. சுந்தர் சார் காலை வணக்கம்

    அனைத்து தகவலும் அருமை

    மிகவும் அருமையான பதிவு

    நன்றி

  4. monday morning spl super
    பயனில்லாமல் பேசுவதையும் பிறரைப்பற்றி புறங்கூறுவதையும் அறவே விட்டொழிக்கவும். சாதனையாளர்களிடம் இந்த பழக்கங்கள் இருக்காது. இந்த வாழ்க்கை மிகவும் குறுகியது. ஆனால் சாதிக்க வேண்டிய விஷயங்களோ எண்ணற்றவை. பயனற்ற சொற்களிலும், பிறரைப் பற்றி புறம்பேசுவதிலும் நாம் ஏன் அவற்றை செலவழிக்கவேண்டும்?
    நியாயமான கேள்வி . அதற்கான பதிலை நாம் நடைமுறைபடுத்துவோம்

  5. சுந்தர் ஜி ,

    இதைத்தான் “முன் பின் யோசிக்காமல் பேசக்கூடாது ? ” என்று சொல்வதா.

    monday spl சூப்பர் .

    -மனோகர்

  6. சுந்தர் சார்,

    மிகவும் அருமையான பதிவு.

    Monday spl. அருமை.

    -கோபிநாத்.

  7. மிகவும் அருமையான கதை. எல்லோரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சோதனைதான்.வாழ்த்துக்கள் .

Leave a Reply to Nagaraj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *