Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ஆலய தரிசனம் & சாதனையாளர் சந்திப்பு – நம் திருவாரூர், கோவிந்தபுரம், திருக்கடவூர் பயணம்!

ஆலய தரிசனம் & சாதனையாளர் சந்திப்பு – நம் திருவாரூர், கோவிந்தபுரம், திருக்கடவூர் பயணம்!

print
ரைட்மந்த்ரா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நெருங்கிய நண்பர் ஒருவரின் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள வியாழன் இரவு (பிப்ரவரி 6) பொள்ளாச்சி கிளம்புகிறோம். இது போன்று BREAK  நமக்கு கிடைப்பது மிகவும் அபூர்வம் என்பதால் இந்த பயணத்தை அப்படியே நமது தளத்திற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதை தொடர்ந்து இறையருளால் ஆலய தரிசனம், சாதனையாளர் சந்திப்பு உள்ளிட்ட நமது தளத்தின் முக்கிய அம்சங்களை இந்த பயணத்தில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

பயண விபரம்

நாளை இரவு (பிப்ரவரி 6) சென்னையில் இருந்து கிளம்பி கோவை வந்து பின்னர் அங்கிருந்து பொள்ளாச்சி. அங்கு சற்று ஓய்வெடுத்துவிட்டு பின்னர் நண்பர்களுடன் வால்பாறை பயணம். வால்பாறையில் (பிப்ரவரி 7, வெள்ளி) பகல் முழுதும் சுற்றிப் பார்த்துவிட்டு மாலை பொள்ளாச்சி திரும்பி வந்து திருமண வரவேற்பில் கலந்துகொண்டுவிட்டு, பின்னர் அங்கிருந்து இரவு திருவாரூர் பயணம்.

 திருவாரூர் கமலாலயம் & தியாகராஜர் கோவில்

திருவாரூர் கமலாலயம் & தியாகராஜர் கோவில்

பிப்ரவரி 8 காலை திருவாரூரில் கமலாம்பிகை சமேத தியாகராஜரை தரிசித்துவிட்டு பின்னர் நம் தளத்தின் சாதனையாளர் சந்திப்பு.

இரு பெரும் சாதனையாளர்களை திருவாரூரில் சந்திக்கவிருக்கிறோம். அவர்களை சந்தித்து கௌரவித்த பின்னர் அவர்களை பேட்டி எடுக்கவிருக்கிறோம். நமது ‘1000 சாதனையாளர் சந்திப்பு’ இலக்கில் இவர்களும் அடக்கம்.

IMG_5741

பின்னர் அங்கிருந்து நேரே மயிலாடுதுறையை அடுத்துள்ள கோவிந்தபுரம் பயணம். அங்கு பாண்டுரங்கன் கோவிலையும், கோவிந்தபுரம் கோ-சாலையையும் தரிசிக்கவிருக்கிறோம்.

அப்படியே அருகில் அமைந்துள்ள காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் 59-வது பீடாதிபதியாக விளங்கிய ஜகத்குரு ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானத்தையும் தரிசிக்க ஆவல் கொண்டுள்ளோம்.

Govindapuram Ko Sala

பின்னர் அங்கிருந்து திருக்கடவூர் பயணம். திருக்கடவூருக்கு நாம் வரவேண்டும் என்பது அன்னையின் விருப்பம் என்றே கருதுகிறோம். காரணம், திருக்கடவூர்  நம் பயணத்திட்டத்தில் முதலில் இல்லை. எதிர்பாராமல் திடீரென்று கடைசி நேரத்தில் முடிவானது. அங்கு அபிராமியன்னையையும் அமிர்தகடேஸ்வரரையும் தரிசித்துவிட்டு கோவிலின் முதன்மை குருக்கள் திரு.விஸ்வநாத சிவாச்சாரியார் அவர்களை ஒரு சிறப்பு பேட்டி காணவிருக்கிறோம். அன்னை  பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய பல்வேறு அற்புதங்கள் குறித்தும் திருக்கடவூர் ஆலயம் குறித்தும் பல்வேறு தகவல்களை கூறுவதாக விஸ்வநாத குருக்கள் உறுதியளித்திருக்கிறார்.

சந்தர்ப்ப சூழ்நிலையும் நேரமும் அனுமதித்தால் இறையருளுடன் மேலும் சில ஆலயங்களையும் தரிசிக்க எண்ணியிருக்கிறோம்.

பின்னர் இரவு மீண்டும் திருவாரூர் திரும்பி, அங்கிருந்து ரயில் ஏறி, பிப்ரவரி 9 ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறோம்.

இதை ஏன் இங்கு பதிவு செய்கிறோம் என்றால், நம் வாசகர்கள் எவரேனும் இந்த ஆலய தரிசன பயணத்திலும், சாதனையாளர் சந்திப்பிலும் இணைய விரும்பினால் தாரளமாக வரலாம். மேற்படி நகரங்களில் நம் வாசகர்கள் எவரேனும் இருந்தால் நம்மை தொடர்புகொள்ளவும்.

ஆலய தரிசனத்திற்கும், சாதனையாளர் சந்திப்புக்கும் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

திருவருள் துணையோடு திட்டமிட்டபடி அனைத்தும் இனிதே நடந்தேறவேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

==============================================================
இந்த வார பிரார்த்தனை குறித்த முக்கிய அறிவிப்பு :

2 நாட்கள் விடுமுறைக்கு அப்ளை செய்திருப்பதால் அலுவலகத்தில் கூடுதல் நேரம் செலவிட்டு பணிகளை முடித்துவிட்டு வரவேண்டிய ஒரு சூழல். எனவே புதிய  பதிவுகள் எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை. பயணத்திற்கான ஏற்பாடுகளையும் இதர பணிகளையும் வேறு செய்யவேண்டி இருப்பதால் இந்த வார பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறாது.

வழக்கமாக நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனை நேரமான ஞாயிறு மாலை 5.30 pm – 5.45 pm மணிக்கு இந்த வாரம் நம் வாசகர்கள் அனைவரும், அவரவர் நண்பர்கள் மற்றும் உறவுகளின் நலனை வேண்டி பிரார்த்தனை செய்யவும். (உங்கள் அன்புக்குரியவர்களின் தேவைகளையும் துயரங்களையும் நீங்கள் அறிவீர்கள் தானே?)

அடுத்த வாரம் வழக்கம் போல பிரார்த்தனை பதிவு சிறப்பு விருந்தினருடன் இடம்பெறும்!

(சந்தர்ப்ப சூழ்நிலை அனுமதித்தால் ஏற்கனவே நாம் தயார் செய்து வைத்துள்ள பதிவுகளுள் ஏதேனும் ஒன்று வெள்ளியன்று நம் மொபைல் மூலம் பதிவிடப்படும்!)

என்றென்றும் நன்றியுடன்,
சுந்தர்,
9840169215
==============================================================

12 thoughts on “ஆலய தரிசனம் & சாதனையாளர் சந்திப்பு – நம் திருவாரூர், கோவிந்தபுரம், திருக்கடவூர் பயணம்!

  1. அன்பு சகோதரா
    மிக்க மகிழ்ச்சி …கோவிந்தா புறம் என்றதுமே நினைவுக்கு வருவது…மஹா பெரியவாவின் உடன் இருந்து தொண்டுகள் செய்த தெய்வத் திரு மேட்டூர் சுவாமிகள்…அவர் சமீபத்தில்தான் இறைவனடி சேர்ந்தார்….அவரைப் பற்றி நிறைய பதிவுகள் படித்திருக்கிறேன்…உங்களுக்கும் இவரைப் பற்றி தெரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை …இயன்றால் அன்னாரது அதிஷ்டானதுக்கு சென்று எங்கள் சார்பாகவும் பிரார்த்தனைகள் வைக்கவும் தம்பி….உங்கள் பயணம் சிறப்பாகவும், பதுகப்பகவும் இயந்தேற மஹா பெரியவாவிடன் என்னுடைய பிரார்த்தனைகளை சமர்பிக்கிறேன்…வாழ்க வளமுடன். _/|\_

    1. கோவிந்தபுரத்தில் அமைந்துள்ள ஜகத்குரு ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானத்தையும் தரிசிக்க ஆவல் கொண்டுள்ளேன். அது பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன். மன்னிக்கவும்.
      – சுந்தர்

  2. ஆலய தரிசனம் & சாதனையாளர் சந்திப்பு சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள். திருவண்ணமலை அருணாச்சலேஸ்வரர் துணை நிச்சயம் உண்டு .

    வாழ்த்துக்களுடன்
    -மனோகர்

  3. சுந்தர் அவர்களுக்கு ,உங்களின் பயணம் திட்டமிட்டபடிய நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நான் கோவையில் இருந்தால் கட்டாயம் உங்க கூட வந்து இருப்பேன் .

  4. Dear சுந்தர்ஜி

    Agenda மிக அருமை.

    உங்கள் ஆலய தரிசனம் மற்றும் சாதனையாளர் சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.

    Happy Journey

    Regards
    Uma

  5. சுந்தர்ஜி,

    தங்களது பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

    நன்றி

  6. டியர் சுந்தர்,

    உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துகள்.வால்பாறை எனக்கு மாமனார் ஊரு 🙂 கடந்த வாரம் தான் மச்சான் கல்யாணத்திற்கு சென்று விட்டு வந்தேன்.அங்கு பாலாஜி கோவிலுக்கு சென்று வரவும்.

    நன்றி ,
    பாலு

  7. சுந்தர்ஜி
    உங்கள் பயணத்திட்டம் படிப்பதற்கே இனிமையாக இருக்கிறது. நிச்சயம் பயணம் நல்லபடி நடந்து நம் தளத்திற்கும் உங்களுக்கும் நல்ல திருப்பங்கள் நேரட்டும். குருவருள் துணையுடன் இந்த திட்டம் அமைந்து இருப்பதே பெரும் கொடுப்பினை. wish you happy darshan! thanks!

  8. சுந்தர் சார் வணக்கம் ………உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் …… நன்றி தனலட்சுமி ……

Leave a Reply to Keeran Nalina Cancel reply

Your email address will not be published. Required fields are marked *